Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

எபி லாக்-1

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
640
எபி லாக்-1

மருமகன் மற்றும் மகளை , மனைவியோடு பின் தொடர்ந்த திவாகரன்,

" எப்படிம்மா போறீங்க ... நம்ம கார்லயா... இல்ல ட்ரெயின்லயா..." என்றபடி படி இறங்க,

" கேப் புக் பண்ணிட்டோம் பா ... அது இன்னும் பத்து நிமிஷத்துல வந்துடும் ..." என்ற ஜோதி, தாய் தந்தையை ஒருசேர பார்த்து சன்னமாக,

"உங்க ரெண்டு பேருக்கும் ஒரு சர்ப்ரைஸ் வீட்ல காத்துக்கிட்டு இருக்கு ... நாங்க கிளம்பி போனதும் போய் பாருங்க ..."
என விஷமமாக கண் சிமிட்ட,

" என்னடா ... ஏ..ஏதாவது ... கி... கிறுக்குத்தனம் செஞ்சு வச்சிருக்கியா ..."
லேசாக இருமிய படி , திவாகரனும் குறும்பாக வினவ,

" என்னப்பா இருமறிங்க... என்ன ஆச்சு ..."
என மகள் உடனே அக்கறைப்பட,

"ரொம்ப நேரம் ஐயரு அக்னி முன்னாடி உட்கார வச்சுட்டாரு இல்ல ... அதான் தொண்டை கொஞ்சம் கரகரப்பா இருக்கு..."
என்றவன் ,

" மேஜர் , பரமு அக்கா , கர்னல், மாமிகிட்ட எல்லாம் சொல்லிட்டீங்களா ..."
என ஆர்வமாய் கேட்க,

" எப்பவோ சொல்லிட்டேன் பா ... மேஜர் அங்கிள் தான் டாக்ஸியே புக் பண்ணினாரு..." என மகள் கூடுதல் தகவல் கொடுத்துக் கொண்டிருக்கும் போது டாக்ஸி வேகமாக வந்து நின்றது.

திவாகரன் அவசரமாக மகளின் பயணப் பொதிகளை கையில் எடுக்க,

"மாமா விடுங்க ... நான் எடுத்து வச்சிக்கிறேன் ..." என்ற சூர்யா பயணப் பொதிகளை டாக்ஸியில் துரிதமாக அடுக்கி முடித்துவிட்டு , தங்களது வீட்டு வாயிலில் நின்றபடி அளவளாவிக் கொண்டிருந்த மேஜர் , பரமு , கர்னல் , இந்திரா ஆகியோரிடம் மீண்டும் ஓரிரு வார்த்தைகள் தன் மனைவியோடு சென்று பேசிவிட்டு அவர்களது ஆசியை பெற்றுக் கொண்ட பின்னரே இனிதே விடை பெற்றான்.

அவர்களது கார் புறப்பட்டதும், இந்திரா திவாகரன் தம்பதியரை ஒருசேர பார்த்து,

"நான் உங்க ரெண்டு பேருக்குமே சேர்த்து டின்னர் பண்ணிட்டேன்.... வாங்க சாப்பிடலாம் ..." என வாஞ்சையாக அழைக்க,

" ரெண்டு நிமிஷத்துல நான் டின்னர் செஞ்சிடுவேன் மாமி... "

"நாளையிலிருந்து எப்படியும் நீ தான் உங்க ரெண்டு பேருக்கும் செய்ய போற... இன்னைக்கு மட்டும் நம்ம ஆத்துல வந்து சாப்பிடுங்க..."

அதற்கு மேல் அவரது பேச்சை மறுக்க மாட்டாமல், ஆவி பறக்க அவர்களுக்காக காத்துக் கொண்டிருந்த ருசியான இரவு உணவினை வீட்டுப் பெரியவர்களிடம் அளவளாவிய படி
உண்டு முடித்து விட்டு இருவரும் தங்கள் குடியிருப்பு பகுதிக்கு திரும்பும் போது, திவாகரனுக்கு வேம்புவிடமிருந்து தொழில் ரீதியான அழைப்பு வர
வேகமாக படி ஏறி வீட்டு பால்கனியை அடைந்து , அதில் நடை பயின்ற படி உரையாட தொடங்கினான்.

ஒரு கட்டத்தில் பேச்சு முடிவுக்கு வர, மகள் சொல்லிச் சென்ற விஷயமும் நினைவுக்கு வர, அதனை மனதில் நிறுத்தியபடி அவன் வீட்டை ஆய்வு செய்ய ஒவ்வொரு அறையாக செல்லும் போது, இடது பக்கமாக அமைந்திருந்த இரண்டாவது பெரிய படுக்கையறை புதுமண தம்பதிகளுக்கான அலங்காரத்தில் இருக்க,
ஒரு கணம் அசந்து போனவனுக்கு மகளும் மருமகனும் திருமண மண்டபத்தில் இருந்து ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே கிளம்பியதும் ஞாபகத்திற்கு வர, மனதிற்குள் சிரித்துக் கொண்டவன் மனைவியை தேடி அடுக்களைக்குச் சென்றான்.

அங்கு அவள் கருப்பு நிறத்தில் ஏதோ ஒரு திரவத்தை தயார் செய்து கொண்டிருந்தாள்.

" என்னது டி இது .... டீ மாறி இருக்கு .... இப்ப எதுக்கு டீ ... " அவன் யோசனையோடு வினவ,

"இது டீ இல்ல ... கஷாயம் ... நீங்க இருமனீங்க இல்ல ... அதுக்கு தான் தயார் பண்றேன் ... இத குடிச்சா இருமல் போயிடும் ... நிம்மதியா தூக்கம் வரும் ..."

" அடிப்பாவி ... என்னை தூங்க வைக்க நீ முடிவு பண்ணிட்டியா .... ஆறு வருஷம் மூணு மாசம் 20 நாள் எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு இருக்கேன் தெரியுமா .... "

" நாட்டுக்காக கஷ்டப்பட்டீங்களா ..."
அவள் சிரித்துக் கொண்டே வினவ,

" உனக்கு நக்கல் டி... "
என்றபடி அவன் அவளது இடையை இறுக்கமாக பற்றி இழுத்து தன்னோடு சேர்த்தணைக்க, சிருங்கார ரசத்தில் திளைத்த அவனது துருதுரு விழி வீச்சை ரசித்தபடி அவள் அவனது நுனி மூக்கை பற்றி திருகி,

" வசி ......" என கொஞ்ச,

" ஏய்... ஏய்... அது என்ன வசி ... சொல்லு ... சொல்லு "
நினைவு வந்தவனாய் அவளது விழிக்குள் பிரவேசித்தபடி அவன் தன் புருவங்களை ஒன்றன்பின் ஒன்றாக உயர்த்தி கேட்க அதில் மேலும் கிறங்கியவள், அவனது அடர்ந்த மீசையை மேல் உதட்டோடு பற்றி இழுத்து ,

" வசீகரன் ... வசி ...." என்றாள் கண்களில் காதல் மின்ன.


இப்படி எல்லாம் அவள் கொஞ்சி குலாவி காதல் புரிந்து அவன் கண்டதே இல்லை ...

அவனுக்கு மனைவியாக இருந்திருக்கிறாள்.... தோழியாக இருந்திருக்கிறாள் .... ஏன் பல சமயங்களில் அவனைத் தாங்கிப் பிடிக்கும் தாயாக கூட இருந்திருக்கிறாள் ...

ஆனால் இப்பொழுது தான் காதலியாக இருக்கிறாள் .... என்பதை புரிந்து கொண்டவனுக்கு அந்தப் புதிய பெயருக்கான காரணத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் உண்டாக,

" இப்ப சொல்லியே ஆகணும் ... அது என்ன... வசி ... வசீகரன் ..." என்றான் கண்களில் பிரேமம் பொங்கி வழிய.

" கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு முன்னாடி எனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு எழுத்தாளரோட கதை படிச்சேன் .... அந்தக் கதை இப்ப வரைக்கும் என் மனச விட்டு போகவே இல்ல .... அவ்ளோ அருமையான கதை ... அந்தக் கதைல வர்ற ஹீரோ பேரு வசீகரன் .... நீங்க என்னை பொண்ணு பார்க்க வரும் போது அந்தக் புக்கோட அட்டை படத்துல இருந்த அந்த ஹீரோ மாதிரியே இருந்தீங்க .... எனக்கு உங்கள பார்த்ததும் ரொம்ப புடிச்சு போச்சு ... அப்ப இருந்து உங்களை மனசுக்குள்ள வசினு தான் கூப்பிடுவேன் ..."

அவள் நாணி கோணியபடி கூச்சத்தோடு சொல்லி முடிக்க, மனைவியிடம் தெரிந்த காதலியின் பரிமாணத்தை கண்டு முற்றிலும் கிறங்கிப் போனவன்,

" வாரே வா ... அந்த பேர்ல இவ்ளோ விஷயம் இருக்கா .... இத தெரிஞ்சுக்க இவ்ளோ வருஷம் ஆயிடுச்சே....
திவாகரன் பேர விட வசீகரன் நல்லா இருக்குல்ல ... ஆமா அந்த அட்டை படத்துல ஹீரோ என்னை மாதிரி இருப்பான்... ஓகே ... ஹீரோயின் எப்படி இருப்பா ..."

அவன் வேண்டுமென்றே கண்களில் விஷமத்தை தேக்கி கேட்க,

" ம்க்கூம்.... என்னை மாதிரி தான் இருப்பா.." அவள் வெடுகென்று கோபத்தில் கழுத்தை திருப்பிக் கொண்டு,

" கைய எடுங்க ...." என்றபடி அவனது அணைப்பிலிருந்து விலக முயல,

"அடியேய், இந்த ஜென்மம் மட்டுமில்ல எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ தான் டி எனக்கு ஹீரோயின் .... ஆறு வருஷம் கஷ்டப்பட்டு அமைதியா இருந்துட்டேன் ... இனிமே அதிரடி தான் ..." என்றபடி அடுப்பை நிறுத்திவிட்டு அவளை அள்ளிக்கொண்டு, அலங்கரித்த அறைக்குச் சென்றான்.

" ஐயோ இப்படி பண்ணா எப்படி .... கஷாயம் போட்டு வச்சிருக்கேன் ... அதை கொஞ்சம் குடிக்கலாம் இல்ல ..."

"அடியேய் நீ ஒரு திட்டத்தோட தான் இருக்கேனு தெரிஞ்சு போச்சு .... நானும் ஒரு பெரிய திட்டத்தோட தான் வந்து இருக்கேன் .... கஷாயமாவது காபியாவது காலையில பாத்துக்கலாம் ..."
என்றபடி அவளை படுக்கையில் கிடத்தி அவளது இதழை அதிரடியாய் ஆக்கிரமித்தான்.

பூவின் மென்மையும் தீயின் வெம்மையுமாய் இருந்தவள் அவனது தேகத்திண்மையில் சிக்குண்டு மெழுகாய் உருகத் தொடங்கினாள் ...

ஆதாம் ஏவாள் மிச்சம் வைத்ததை , மிச்சமில்லாமல் ஆரம்பித்தான் ....

அவளது தேகப் பள்ளங்கள் எங்கும் உதடுகளால் ஒத்தடம் கொடுத்தான் ...

அவளது மூச்சுக்காற்றும் , முனகல்
இசைகேற்பவும் மெல்லிடையில் மெட்டு கட்டினான் ....

வியர்வை வேர்த்தெடுக்க போர்வைக்குள் போர் தொடுத்தான்....

இரக்கமே இல்லாமல் கிறக்கம் மூட்டியவன், கடைசியில் குறை ஏதுமில்லாமல் கூடி தீர்த்தான் ...

சொன்னது போலவே அவனது ஆட்டம் அதிரடியாக இருக்க, அதற்கு ஈடு கொடுக்க முடியாமல் மங்கையவள் திணற
அதனைப் புரிந்து கொண்டு வன்மையிலும் மென்மையை கடைப்பிடித்து மெல்லிடையாளின் பெண்மைக்குள் மூழ்கி போனான்.

.......


பல ஆயிரம் இரவுகள் அவனுடன் திகட்ட திகட்ட மஞ்சத்தில் கழித்தவள் தான் என்றாலும் , முதல் கூடலில் இருந்து கடைசியாக முற்றுப்பெற்ற கூடல் வரை அவளது மனம் எங்கும் குழப்பமும் கேள்விகளுமாய் வலம் வந்ததால் , காமத்திற்கு அவளது கட்டுடல் கச்சிதமாய் எதிர்வினை ஆற்றி இருந்ததே ஒழிய , நெஞ்சம் மட்டும் நிம்மதி இல்லாமல் அல்லாடிக் கொண்டு தான் இருந்தது ...

ஆனால் இவ்விரவில் ....

மன கழிவுகள் காதலாற்று வெள்ளத்தால் கச்சிதமாய் கழுவி சென்று விட்டதால் ...

மோகத்தாலும்..... தாபத்தாலும் ...... காமத்தாலும் ........
நேசத்தாலும் தொடங்கிய இந்தப் புணர்ச்சியின் போது ...
அவளது கண்கள் பனித்தன...
உணர்ச்சிகள் துடித்தன...
உயிர் உருகின ....
உணர்வுகள் பெருகின ....

கடைசியாய் அவளது பெண்மை பல சோதனைகளுக்குப் பிறகு திகட்ட திகட்ட மேன்மை அடைய,
ஜென்ம சாபல்யம் போல்
பெண்மை சாபல்யம் அடைந்து தீர்த்தாள் அந்த பேரிளம் பெண் ...


அதிகாலையில் முதலில் அவனுக்கு விழிப்பு வர, அருகில் உடலைக் குறுக்கிக் கொண்டு அயர்ந்து உறங்கும் மனையாளை கண்டவனுக்கு முந்தைய இரவின் இணக்கங்கள் படக்காட்சியாய் விரிய,
உடன் அவளது திணறல்களும் நினைவுக்கு வர,

" சாரி தாமரை ...." என கூச்ச உணர்வும் குற்ற உணர்வுமாய் தனக்குள்ளே சொல்லிக் கொண்டவன், மனையாளின் கன்னத்தில் மென் முத்தம் ஒன்றை பதித்து விட்டு, என்றுமில்லாத சுறுசுறுப்போடு புத்துணர்வு பெறுவதற்காக குளியல் அறைக்குள் புகுந்து கொண்டான்.

சற்று நேரத்திற்கு எல்லாம் தாமரைக்கு விழிப்பு வர,

"இவரை எங்க காணோம் ... அதுக்குள்ள எங்க போனாரு ...." என்றபடி படுக்கையை விட்டு எழுந்தமர்ந்தவளுக்கும் முந்தைய இரவின் மிச்ச சொச்சங்கள் நினைவுக்கு வர, உடன் தான் இருக்கும் நிலையை பார்த்து லேசாக வெட்கியவள், துரிதமாக எழுந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்.

வேக வேகமாக குளித்து முடித்து, பாசி பச்சை நிறத்தில் அரக்கு பார்டர் போட்ட சுங்குடி பருத்தி புடவையை அவசர அவசரமாக உடுத்தி கொண்டு அடுப்படிக்கு சென்றவள், அங்கு அவளவன் நின்று கொண்டு அடுப்பில் ஏதோ செய்து கொண்டிருப்பதைப் பார்த்து,

"இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ...." என்றாள் ஆச்சரியமாய்.

"நம்ம ரெண்டு பேருக்கும் காபி போட்டுக்கிட்டு இருக்கேன் ... உனக்கு கஷாயம் போடத்தான் தெரியும் ... ஆனா எனக்கு காபியே போட தெரியும்னு உனக்கு காட்டணும் இல்ல அதுக்கு தான் ..."

அவன் மிடுக்காக சொல்ல ,

" ஐயோ , அதுக்கு எதுக்கு மூணு பெரிய பெரிய குண்டானை எடுத்து இருக்கீங்க .... ரெண்டு பேருக்கு காபி போட சின்ன பாத்திரமே போதுமே ..." என்றவள் அவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு,

" அதுவும் குளிக்காம கொள்ளாம அடுப்படிக்கு வந்து கலாட்டா பண்ணிக்கிட்டு இருக்கீங்க ..."

என பற்களை நறநறவென்று கடித்த படி குமுற ,

" உன்னோட குளிக்கலாம்னு தான் குளிக்கல ..." சரசமாய் மொழிந்த படி முந்தைய இரவு போல் அவளை அள்ளிக்கொள்ள,

" ஐயோ நான் குளிச்சிட்டேன் ... என்னை விடுங்க... " அவள் கூச்சத்தோடு கை கால்களை உதற,

" மறுபடியும் குளிக்கலாம் தப்பு இல்ல ... இந்த ஊர்ல தண்ணி பஞ்சம் எல்லாம் கிடையாது ம்மா ...." என்றபடி அவன் குளியலறை நோக்கி முன்னேற,

" உங்களுக்கு என்ன புது மாப்ளனு நெனப்போ...."

" சொன்னாலும் சொல்லாட்டாலும் நமக்கு நேற்று தான் டி கல்யாணம் ஆயிருக்கு ... "
என்றவன் மனைவியுடன் ஆசை தீர ஜலக்ரீடை நடத்தி முடித்தான் ....

Real life starts after 40 என்பது போல் வாழ்க்கை கொண்டாட்டமாகவும் அர்த்தமுள்ளதாகவும் மாற , ஆற அமர அனுபவிக்க தொடங்கினர் ...

தன் தொடக்க கால திருமண வாழ்க்கையில், எதை எதையெல்லாம் எதிர்பார்த்து ஏமாந்திருந்தாளோ, அவைகள் எல்லாம் தெவிட்டத் தெவிட்ட கிடைக்க மனம் குளிர்ந்து போனாள் மங்கை .

வழக்கமான புதுமண தம்பதிகளுக்கு இடையே நிகழும் சிறு சிறு ஊடல்கள் , கூடல்கள் , உணர்வு உச்சங்கள் என நாட்கள் கழிய, அது அவர்களது உடலிலும் உள்ளத்திலும் வெளிப்பட ,

"திவா, இந்த 30 வயசு கல்யாணத்துக்கு அப்புறம் டைரக்டா 60 வயசுல கல்யாணம் பண்ணாம , நடுவுல உன்ன மாதிரி 40 வயசுல ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும்னு தோணுது ...

ஆள் ஏற்கனவே ஆணழகனாட்டம் இருப்ப ... இப்ப பேரழகனா இருக்க... குஷியாவும் இருக்க... அதனால தான் ...

என்ன ஒன்னு, அதே பொண்ண கட்டிக்காம வேற பொண்ண கட்டியிருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு தோணுது ..."

என மேஜர் முடித்தது தான் தாமதம், அவரது முதுகில் பரமு ஓங்கி ஒன்று வைத்துவிட்டு,

" நீ நல்லா இருக்கிறது இவருக்கு பொறுக்கல திவா ..." என குற்றப் பத்திரிக்கை வாசிக்க , குலுங்கி சிரித்தான் நாயகன் ...

பிறகு வந்த நாட்கள், நொடிகளாய் கரைய,
இந்திராவின் வீட்டு பக்கத்து வீடு விலைக்கு
வருவதாய் மேஜர் மூலம் செய்திக்கிட்ட ,
எதையும் யோசிக்காமல் மறுக்கணமே
அந்த வீட்டை விலைக்கு வாங்கி, தாமரையின் ரசனைக்கேற்ப ஓரிரு மராமத்து வேலைகளை மும்மரமாக செய்து முடித்து புதுமனை புகு விழாவிற்காக அவன் தேதி குறித்த போது ,
பொள்ளாச்சிக்கு சென்றிருந்த மகளிடமிருந்து அவள் தாயாகப் போகும் சர்க்கரைச் செய்தி கிடைக்க, மகிழ்ச்சியில் திக்கு முக்காடி போனான் திவாகரன்.

செய்தி அறிந்ததும் தன்னவளோடு புறப்பட்டு பொள்ளாச்சிக்கு சென்று மறுவாரம் நடைபெறவிருக்கும் புதுமனை புகு விழாவிற்கு தன் தாய் தந்தை , தமக்கை குடும்பத்திற்கு அழைப்பிதழ் வைத்து அழைத்துவிட்டு, மனம் கொள்ளா மகிழ்ச்சியோடு மழலை தாங்கி நிற்கும் மகளை மருமகனுடன் அழைத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

அடுத்தடுத்த விசேஷ செய்திகளால் விவரிக்க முடியாத பேரின்பத்தில் மூழ்கி திளைத்த திவாகரன் தம்பதியர் , புதுமனை புகு விழாவை வெகு விமர்சையாக நடத்த எண்ணி, அந்தக் காலனி வாசிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்தனர்.

புதுமனை புகுவிழா தினமும் வந்தது ....

அவனது அழைப்பை ஏற்று உற்றார் உறவினர்கள் அனைவரும் வந்திருந்து விழாவை வெகுவாக சிறப்பித்தனர்.

அப்போது அகல்யா,

"திவா, நான் ஜோதியை பார்த்துக்க அவங்களோடவே வர வாரம் அமெரிக்கா போலாம்னு இருக்கேன்.... நீயும் தாமரையும்
சீமந்தம் சமயத்துல வந்தா போதும் ...."

என்று சொல்ல , அது திவாகரனுக்கும் சரி என்று பட , மறுவாரமே ஜோதி , சூர்யாவுடன் அகல்யாவை அமெரிக்காவிற்கு அனுப்பி வைத்தான்.



---- பெண்மை மலரும் ...
 
Back
Top