- Joined
- Jul 21, 2025
- Messages
- 681
- Thread Author
- #1
அத்தியாயம் 100
" வாசு இந்த ஊருக்கு வர்றதுக்கு மூணு மாசத்துக்கு முந்தியே மாதவி இங்கன வந்துட்டா ....
அப்புறம் தான் வாசு குழந்தையோட இங்க வந்தான் ...
என் வீட்டு வேலைக்காரி தாமரை
அவனையும் அவன் குழந்தையும்....
அதான் உன் குழந்தைனு அப்ப எங்களுக்கு தெரியாது ....
பார்த்துட்டு வந்து சொன்னா ....
நேத்துதான் வாசு ஊருக்கு வந்திருக்காரு போல... அவர்கிட்ட இருக்கிற குழந்தை பார்க்க ,
மாதவி மாதிரியே இருக்குனா.....
அது சாத்தியமில்லை ...
ஏன்னா மாதவி விவாகரத்து வாங்கி இரண்டரை வருஷத்துக்குள்ளயே டாக்டரை கல்யாணம் கட்டிகிட்டானு அவளோட சித்தி சாந்தி சொல்லி இருக்கானு சொன்னேன் ...
ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரி மாதவிய பத்தி பேசுகிறாங்கனு தாமரை சொன்னா..
சிலர் டாக்டரை மாதவி கல்யாணம் கட்டிக்கிட்டானு சொல்றாங்க ....
சிலர் கல்யாணம் எல்லாம் கட்டிக்கல, கவர்மெண்ட் வேலையில இருக்கிறதால இந்த ஊருக்கு வேலை விஷயமா வந்திருக்கா ... சித்தி சாந்தி கூட தங்க புடிக்காம டாக்டர வீட்டுல தங்கி இருக்கானு சொல்றாக...
இன்னும் என்னென்னமோ......." என்றவரின் பேச்சை இடைவெட்டி
" ஏய்..... வெயிட்... மாதவிக்கும் வாசுதேவுக்கும் விவாகரத்து ஆயிடுச்சுனு ஊர்ல ஒரு அளவுக்கு அறிஞ்சவங்க தெரிஞ்சவங்களுக்கு தெரியும்..... அப்புறம் மாதவி டாக்டரை கல்யாணம் கட்டிக்கிட்டா என்ன.... கட்டிக்காம போனா என்ன .... வேற யாரையாச்சும் கல்யாணம் கட்டிக்கிட்டா உங்களுக்கு என்ன.... "
ஓரிரு கணம் அங்கு அமைதி நிலவ,
" சொல்லுடி .." என்று அரற்றினாள் மதுரா.
" பிரம்ம பௌர்ணமி வருது .... அது 50 வருஷத்துக்கு ஒருமுறை வர்ற பௌர்ணமி....
இந்த பிரம்ம பௌர்ணமில தான் மரகத லிங்கம் நவ பாஷாண லிங்கம் வெளியே வரப்போறதா பிரசன்னம் சொல்லுதுன்னு உக்ர நாயர் நம்பூதிரி சொன்னாரு...
இவ்வளவு வருஷமா ஊருக்குள்ள வராத மாதவியும் வாசுவும் திடீர்னு வந்ததைப் பார்த்து, ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியோனு எங்களுக்கு சந்தேகம் வந்துடுச்சு ....
அதோட பிரம்ம பௌர்ணமில ஜோடியா
ரகசிய அறையில நுழைஞ்சி லிங்கங்களை எடுக்கத்தான் வந்திருக்காங்களோனும் யோசித்தோம் ...
உடனே மாதவிக்கும் வாசுக்கும் தொடர்பு இருக்குதான்னு வேவு பார்த்தோம் ....
கடைசில ரெண்டு பேரும் தனி தனியா தான் இருக்காங்கன்னு தெரிஞ்சு போயிடுச்சு ...."
" சரி .... ஒரு பேச்சுக்கு வச்சுக்குவோம் ... ரெண்டு பேருமே புருஷன் பொண்டாட்டியா இருந்தா என்ன செஞ்சிருப்பீங்க ..."
" வாசுவை கொலை செஞ்சிருப்போம் ..."
மதுரா அதிர்ந்து நோக்க,
" ஆமா, அவங்க ரெண்டு பேரும் புருஷன் பொண்டாட்டியா இருந்து
அவன் கையில இருக்கிற குழந்தை அவங்க ரெண்டு பேத்தோட குழந்தையா இருந்துச்சின்னா ,
வாசுவை போட்டு தள்ளிட்டு,
குழந்தையை மட்டும் எடுத்துக்கிட்டு
ரகசிய அறையில பிரவேசிச்சி,
லிங்கங்களை எடுத்து இருப்போம் ..."
மஞ்சள் குங்குமத்தோடு மங்களகரமாக வலம் வந்து கொண்டிருந்த தனலட்சுமியின் இன்னொரு முகம் நிழலுலக தாதாவை விட மோசமாக இருக்க,
" அடி கொலைக்கார பாவி ....
எதுக்கு இப்படி இரத்தவெறி பிடிச்சு அலையுற ..." என்றவள்,
தனலட்சுமியை ஆசை தீர கன்னம் கன்னமாய் அறைந்து விட்டு
" உன்னை எல்லாம் சட்டத்து முன்னாடி நிறுத்தி சரியான தண்டனை வாங்கி கொடுக்கிறேன் பாரு.. அப்பதான் உன்னால இறந்து போனவங்களோட ஆத்மா சாந்தி அடையும் ..."
என்று கறுவிக்கொண்டே விடை பெற்றாள்.
மதிய உணவு வேலைக்குப் பிறகு,
தனசேகரன் சுதாகரன் கைது செய்யப்பட்டு கொண்டு வர, முதலில் தனசேகரனிடம்
விசாரணை தொடங்கியது.
முதலில் மறுத்துப் பேசினார் ....
அப்படி ஒன்றும் நடக்கவில்லை என அடித்தும் பேசினார் ...பிறகு
தனலட்சுமி கொடுத்த முழு வாக்குமூல காணொளியை போட்டுக்காட்டியதும் வேறு வழி இன்றி
ஒருவாறு ஒத்துக் கொண்டு விட்டார் ....
" கடைசி கேள்வி .... உங்களுக்கு பலவிதத்துல கரண்ட் சிட்டிங் எம்எல்ஏ வேலாயுதம் தான் ஹெல்பிங்
ஹேண்டாமே... எப்படி .... நீங்க மூர்த்தியார் கட்சி தானே .... உங்க தங்கச்சிக்கு மூர்த்தியார் மகனை தானே கல்யாணம் பண்ணி இருக்காங்க ...." என்றாள் மதுரா.
தனசேகரனிடம் சிறு தயக்கம் .... பிறகு
" நான் வியாபாரிங்க ....மூர்த்தியார் இறந்ததுக்கு அப்புறம் தொகுதி யார் யார் கைக்கோ போயிடுச்சு .... அரசியல்வாதிங்க ஆதரவு இல்லாம வியாபாரம் பண்ண முடியாதுங்க ... அதனால
எதிர்க்கட்சில ஜெயிச்சு வந்த வேலாயுதத்தை போய் பார்த்தேன் ...
எனக்கு பல விதங்கள்ல உதவறேனு சொன்னாரு உதவிகிட்டும் இருக்காரு...."
" ஓ..... அவருக்கும் இந்த நரபலிக்கும் சம்பந்தம் உண்டா ...."
" இல்ல இல்ல அவருக்கு இத பத்தி எதுவும் தெரியாது .... குவாரி சம்பந்தமான விஷயம்,
கவர்மெண்ட் வேலை ஏதாச்சும் இருந்தா ஈசியா முடிச்சு கொடுப்பாரு... அதான் ..." என சுருக்கமாக முடித்துக் கொண்டார்.
மேலும் காவல்துறை எழுப்பிய ஓரிரு கேள்விகளுக்கும் தனலட்சுமி அளித்த பதிலையே அவரும் அளித்தார்.
பிறகு மதுரா கிருஷ்ணா மற்றும் செர்ரியை தொடர்பு கொண்டு,
" சுதாகரன் , சூரிய கிரன் கூட இன்வெஸ்டிகேஷன் தொடங்க போறோம் ... சீக்கிரம் வாங்க..." என்றாள்.
20 நிமிடத்தில் இருவரும் , அங்கு வர வழக்கம் போல் காவல் ஆய்வாளர் பாண்டித்துரை உடன் இருக்க
சுதாகரனிடம் விசாரணை தொடங்கியது ....
" மரகதலிங்கம், நவபாஷாண லிங்கம்
வேணும்னு நரபலி கொடுத்திருக்கீங்க ... ரைட்..." என்றாள் மதுரா .
" இல்ல மேம் ... அதெல்லாம் சுத்த பொய்... நான் எங்க தாத்தா மூர்த்தியார் மாதிரி.... இந்த சாமி நம்பிக்கை எல்லாம் எனக்கு கிடையாது ..."
" அடிங்.....**** , ஆசாமி நம்பிக்கை மட்டும் உண்டோ..." என்று அவன் முகத்திலேயே ஓங்கி குத்திய கிருஷ்ணா
"சாமிய கும்பிட மாட்டீங்க ... ஆனா
மாந்திரீகம் பண்ற நம்பூதிரியை மட்டும் கும்பிடுவீங்க ....
ஒரு சாமானியன் கோவிலுக்கு போயி பெண்டு புள்ளைங்களுக்கு கல்யாணம் பண்ணனும், வீடு வாசல் கட்டணும்னு வேண்டுதல் வச்சு
பத்து காசு கற்பூரம் ஏத்தினா, அது அவனோட நம்பிக்கைனு கூட உணராம மூடநம்பிக்கைனு கண்டமேனிக்கு விமர்சனம் செய்ய வேண்டியது ....
ஆனா நீங்க அடுத்தவன் அழிஞ்சு போவணும், பல கோடி ரூபாய் கிடைக்கணும், பதவி கிடைக்கணும்னு லட்சக்கணக்குல செலவழிச்சு கார்ப்பரேட் சாமியாரையும், கேரள நம்பூதிரிய வச்சி யாகம் செஞ்சா யாரும் எதுவும் கேட்டுக்க கூடாது.... ஏன்னா அது உங்க நம்பிக்கை.... உங்க வீட்டு பொம்பளைங்களோட நம்பிக்கை ....
அடுத்தவங்களுக்கு நல்லது செய்யி நல்லது நடக்கும் .... கெட்டது செஞ்சா சாமி கண்ண குத்தும்னு சொல்ற ஆன்மீகம் உங்களுக்கு புடிக்காது ....
அடுத்தவங்க அழிஞ்சு போகணும்... செத்துப் போகணும்னு.... சின்னஞ்சிறு குழந்தைங்கள பலி கொடுத்தா அசுர சக்தி கிடைக்கும்னு சொல்ற மாந்திரீகம் மட்டும் உங்களுக்கு புடிக்கும் ....
என் தாத்தா மூர்த்தியாரோட உன்ன சேர்க்காத டா பொறம்போக்கு ....
அவருக்கு சாமி நம்பிக்கை இல்லாட்டாலும் மனுஷங்களை நம்பினாரு.... நியாயதர்மத்தை நம்பினாரு..." என மீண்டும் கிருஷ்ணா தாக்க,
" கொஞ்சம் பொறுங்க அத்தான்... ரெக்கார்ட் பண்ண போறேன் இப்ப அடிக்காதீங்க ..." என்ற மதுரா
அவன் குடும்ப உறுப்பினர்கள் கொடுத்த வாக்கு மூல காணொளியை இயக்கி காட்ட,
வேறு வழியில்லாமல் சுதாகரன்
நடந்ததை ஒப்புக்கொண்டு விவரிக்க ஆரம்பித்தான்.
" எதுக்கு இத்தனை குழந்தைகளை நரபலி கொடுத்து மரகதலிங்கம் நவபாஷாண லிங்கத்தை எடுக்கணும்னு ஆசைப்படறீங்க .... அப்படி அதுல என்னதான் இருக்கு ..."
" மரகதலிங்கம், நவபாஷாண லிங்கம் எங்க இருக்குதோ அங்க பணத்துக்கு பஞ்சம் இருக்காது .... நெனச்ச பதவியை அடைய முடியும் ...
நோய் நொடி வராது ...குறிப்பா சாவே வராது .... அப்படியே வந்தாலும் சாவுக்கு அப்புறம் சொர்க்கம் தான் கிடைக்கும் ..." என தனலட்சுமி சொன்னதையே அவன் மறுஒளிபரப்பு செய்ய,
அவனுடைய பேச்சு முழுக்க முழுக்க
நீண்ட காலமாக மூளை சலவை செய்யப்பட்ட மனநோயாளியின் பேச்சு போல் இருக்க
அவன் முடித்ததும் மதுரா காணொளி படுத்துவதை நிறுத்திக் கொண்டாள்.
" வாழற காலத்துல அடுத்தவனை சந்தோஷப்படுத்தி பார்த்தாலே சொர்க்கம் கிடைக்குமே ....
இத்தனை உயிர்களை அடிச்சு கொன்னு, அதுவும் செத்ததுக்கு அப்புறம் கிடைக்கிற சொர்க்கம் யாருக்கு டா வேணும் .... அப்படி கொலை பண்ணிட்டு செத்துப் போனவன் வந்து சொன்னானா நான் இப்ப சொர்க்கத்துல இருக்கேன்னு ....
நீங்க செய்யறதெல்லாம் சுத்த முட்டாள்தனமா தெரியல ....
மனிதத்தை விட அப்படி என்ன டா மாந்திரீகம் முக்கியம் ....
வாடிய பயிர்களை கண்ட போதெல்லாம் வாடினேனு சொன்ன வள்ளலார் வாழ்ந்த நம்ம தேசத்துல தான், அடுத்தவன போட்டு தள்ளினா சொர்க்கம் கிடைக்கும்னு சொல்ற உன்ன மாதிரியான ****** இருக்கத்தான் செய்யறீங்க .... எதுக்குடா இப்படி ரத்த வெறி புடிச்ச அலையறீங்க ...." என கோபத்தில் பொரிந்து தள்ளியபடி செர்ரி அவனைத் தாக்க,
" மேம், இவனோட அடிப்படையிலேயே தப்பு இருக்கு .... பேசித் திருந்தற ஸ்டேஜை எல்லாம் இவன் தாண்டியாச்சு ...... இவன் சுத்த சைக்கோ.... பேசாம இவனை என்கவுண்டர்ல போட்டு தள்ளிட்டு
கமிஷனை பேஸ் பண்ணிக்கலாம்னு தோணுது ..." என பாண்டித்துரை இடை மொழிய,
" நீங்க இவங்க ரெண்டு பேருக்கு மேல இருப்பிங்க போல .... " என்றவள்,
சுதாகரனை பார்த்து
" சூரிய கிரனோட எவ்ளோ நாளா பழக்கம் ...."
" அவனோட கல்யாணத்திலிருந்து பழக்கம் ...."
" அப்ப நீயும் அவனும் சேர்ந்து தான் சரளா, ஹசீனாவை ஸ்நஃப் மூவிஸ் எடுத்து கொன்னுருக்கீங்க -- மதுரா.
அவன் பதிலளிக்காமல் அமைதியாக மதுராவையே பார்க்க,
" சொல்லுடா ******* ..." என்ற செர்ரி
எதிர்பாராத நேரத்தில் அவன் வயிற்றிலேயே ஓங்கி குத்தினான்.
வலியில் அவன் இரு கண்களும் செந்தணலாய் சிவந்து கண்ணீர் வடித்தபடி வெளியே விழும் அளவிற்கு விரிய,
" அ....அமா...
" மேற்படி சமாச்சாரத்துக்கு தானே அன்னைக்கு நீயும் அவனும் சேர்ந்து என் மாதவியை கடத்த பாத்தீங்க ...
இந்த கை தானே என் பொண்டாட்டிய புடிச்சு இழுத்துச்சு ..." என்றவன் கரத்தை வளைக்க, சுதாகரன் பெருங்குரல் எடுத்த அலறி துடித்தான்...
" போதும் அத்தான் நிறுத்துங்க ....
அவன் செத்து கித்து போயிட்டா லாக்கப் டெத் ஆயிடும் ... ப்ளீஸ் .. கிளம்பலாம் ..." என்றாள்.
சூரிய கிரனை காவல்துறை தங்களது விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து 12 மணி நேரத்திற்கு மேலாகியும் அவன் வாய் திறவாமல் இருக்க, காவல்துறை தன் பாணியில் விசாரிக்க தொடங்க,
ஒரு கட்டத்திற்கு மேல் வலி பொறுக்க முடியாமல், அவன் கொடூரமாக வன்புணர்வு செய்த பெண்களின் எண்ணிக்கை , எங்கு, எந்த ஊரிலிருந்து எப்படி எல்லாம் பெண்களை கடத்தினார்கள் என்றெல்லாம் விவரிக்க ஆரம்பித்தான் ....
கிருஷ்ணா கணித்தது போல் மைதீன்
வேட்பாளராக களம் இறங்கக் கூடாது
என்ற கிருபாவின் எண்ணத்தின் படி
தான் மைதீனின் மகள் ஹசீனாவை கடத்தி வன்புணர்வு செய்து கொலை செய்து வீடியோ எடுத்ததாக ஒப்பு கொண்டவன், சுதாகரன் மற்றும் வேதாச்சலம் கடத்துவதற்கு உறுதுணையாக இருந்தார்கள் என்றும் ஒப்புக்கொண்டான்.
" அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சரளான்னு ஒரு பெண்ணை ரேப் பண்ணி கொலை பண்ணீங்க... ஞாபகம் இருக்கா ... "
" எப்படி மறக்க முடியும் .... எனக்கு அதிக பணம் சம்பாதிச்சி கொடுத்த முதல் வீடியோ அந்த பெண்ணோடது தானே ...." என்று தெனாவட்டாக மொழிந்தவனை ரத்தம் வரும் அளவிற்கு செர்ரி நையப் புடைக்க,
மற்ற மூவருக்கும் அவனைக் கட்டுப்படுத்துவதற்குள் பெரும் பாடாகி போனது.
" சரளா உடம்புல மூணு பேரோட கைரேகை இருந்ததா ரிப்போர்ட் சொல்லுது .... ஒன்னு நீ இன்னொன்னு சுதாகரன், அந்த மூணாவது ஆளு யாரு ..." என்றாள் மதுரா.
" சைமன் ..."
கிருஷ்ணா, செர்ரி இருவருக்குமே அந்த பதில் லேசான அதிர்ச்சியை கொடுக்கத்தான் செய்தது.
ரஷ்யாவை சேர்ந்த பெண் லாரா மற்றும் உதய்பூரை சேர்ந்த அவளது தோழி ஷில்பா இருவரும் ஸ்நஃப் மூவிஸ் எடுப்பதற்காக பயன்படுத்தப்பட்டு பிறகு அவர்களது சடலம் கல்குவாரிக்கு அருகில் புதைக்கப்பட்டதாக சுதாகரன் அளித்த வாக்குமூலத்தை உறுதி செய்தான் சூரிய கிரன்.
சரளா மற்றும் ஹசீனாவை பற்றி கேட்கும்போது
" என்னதான் மைதீன் பொண்ணு ஹசீனாவை அரசியல் காரணங்களுக்காக கடத்தினாலும்,
விர்ஜின் பொண்ணுங்களோட ஸ்நஃப் மூவிஸ்க்கு மார்க்கெட்ல விலை அதிகம் ...
அதுக்கு தான் சரளாவயும் கல்யாணத்துக்கு முன்னாடியே கடத்தினோம் ...." என அவன் மேற்கொண்டு நடந்தவைகளை சொல்லிக் கொண்டே
செல்ல , உடனே செர்ரி பாண்டித்துரை அசந்திருக்கும் நேரத்தில் அவனுடைய துப்பாக்கியை பற்றி எடுத்து
சூரிய கிரனின் நெற்றி பொட்டில் வைக்க, துடித்துப் போய்விட்டாள் மதுரா .
" செர்ரி ப்ளீஸ்..... எனக்கு நீ வேணும் ...
நான் நம்ப வாழ்க்கையை பத்தி நிறைய கனவு கண்டு வச்சிருக்கேன் ....
அதைக் கெடுத்துடாதே ..." என்று அவள் நயந்து பேசிய பிறகு தான் நிலைக்கு வந்தவனிடம்
" நீங்க ரெண்டு பேரும் கிளம்புங்க... நான் மத்த விசாரணையை முடிச்சுட்டு வந்துடுறேன் ..." என்றாள் மதுரா.
பிறகு சூரிய கிரன் கொடுத்த வாக்குமூலத்தின் படி வேதாச்சலமும்
கைது செய்யப்பட்டு விசாரணை வட்டத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.
" உங்களை எதுக்காக அரெஸ்ட் பண்ணி இருக்கோம் தெரியுமா .... உங்க பதவி ஆசைக்காக
க்ளோஸ் ஃப்ரெண்ட்டோட பொண்ணுனு கூட பார்க்காம ஹசீனாவை
கடத்தி ரேப் கொலை செஞ்சு இருக்கீங்க..." என்றாள் மதுரா உண்மையை வரவழைப்பதற்காக.
" யார் சொன்னது ..." வேதாச்சலம் வெளிரிய முகத்தில் கேட்டார்.
" கிருபாகரன் ..." என்று பொய் சொன்னாள் மதுரா .
" சுத்த பொய் .... கிருபாகரன் தான் பதவிக்கு வரணுங்குறதுக்காக,
மைதீன் பொண்ணு ஹசீனாவை தூக்க என்னை பயன்படுத்திக்கிட்டான்...
நான் அந்த பெண்ணை ஆம்னி வேன்ல கூட்டிட்டு வர மட்டும் தான் உதவி செஞ்சேன் மத்தபடி எனக்கு எதுவும் தெரியாது ..."
" இல்ல நீங்க தான் கடத்தி வன்புணர்வு செஞ்சு அந்த பொண்ண கொலை செஞ்சதா கிருபாகரன் சொல்றாரு...."
" இது அபாண்டம் ...
மைதீனை பயம் காட்டுறதுக்காக கடத்துறாங்கனு நினைச்சு தான் நான் ஒத்துழைச்சேன்....
கடைசியில இப்படி அந்த பொண்ண கொலை பண்ணுவாங்கன்னு நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ..
சூரிய கிரன், கிருபாகரன் , சுதாகரன் இவங்க மூணு பேரும் தான் அந்த பொண்ணோட கொலைக்கு காரணம் ..."
" க்ளோஸ் ஃப்ரெண்ட்டோட பெண்ணை கடத்திக் கொலை செஞ்சிட்டு, கிருபாகரன் மேல பழியை போடறீங்களே வெக்கமா இல்ல..." என்றாள் வேண்டுமென்றே.
" கிருபா பொய் சொல்றான் .... நான் ஒன்னும் அவன மாதிரி கேடுகெட்டவன் இல்ல .... அவன் தான் சொந்த மகனையே போட்டுத் தள்ள என் மூலமா ஏற்பாடு செஞ்சான் ...
நான் முதல்ல அந்த விஷயத்துக்கு பயந்தேன் .... செய்ய மாட்டேன்னு சொல்லிட்டேன் ... கடைசில கட்சில இருக்கிற அடிப்பொடிகளை வச்சு ஏற்பாடு செய்துட்டான் ..."
" அப்ப நீங்களும் மறைமுகமா ஒத்துழைச்சி இருக்கீங்கனு சொல்லுங்க ..."
" நான் என்ன பண்ண முடியும் ....
என்னை மிரட்டினாங்க வேற வழி இல்லாம ஒத்துக்கிட்டேன் .."
" சூரிய கிரனை எதுக்காக கிருபாகரன் போட்டு தள்ளனும் ...?" தெரியாதது போல் கேட்டாள்.
" நான் பேசுறது அஞ்சு வருஷத்துக்கு முந்தியான சமாச்சாரம் மேம்...
இப்ப நாங்க ரெண்டு பேரும் பரம எதிரியா ஆயிட்டோம் ...
அப்ப அவரோட மூத்த சம்சாரத்தோட மகன் வாசுனு ஒரு பையன் இருந்தான்... அப்ப அந்த வாசு அரசியல்ல இறங்குறதா இருந்தது ... அது புடிக்காம
அவனை போட்டு தள்ள ஏற்பாடு செஞ்சான் கிருபா ..."
" இப்ப வாசு எங்க .... உயிரோட இருக்கானா இல்ல செத்துட்டானா ...." என்றாள் ஏதும் அறியாதது போல்.
" இல்ல ... அந்த வாசு வேட்பு மனு தாக்கல் பண்ணிட்டு வீட்டுக்கு உசுரோட திரும்பக் கூடாதுன்னு முடிவெடுத்து, அவன் வேட்பு மனு தாக்கல் பண்ற நாளுக்காக காத்துக்கிட்டு இருந்தோம் ...
மொத முறை அவன் வேட்பு மனு தாக்கல் பண்ண குறிச்ச தேதியில திடீர்னு
கிருபாவோட மாமியார் செத்துப் போச்சு ....
அதனால அந்த வாசு வேட்பு மனு தாக்கல் பண்றத தள்ளி வச்சான் ....
திரும்பவும் கொஞ்ச நாள் கழிச்சு,
மறுபடியும் வேட்பு மனு தாக்கல் பண்ண அவன் கிளம்பின அப்ப அவன் வளர்த்த நாய் கிணத்துக்குள்ள குதிச்சு உயிரை மாய்ச்சிகிச்சு...
அந்த நாய் மட்டும் அன்னைக்கு சாவலன்னா அவன் செத்து இருப்பான் ... ஏன்னா
வாசுவை போட்டு தள்ள கனக்கச்சிதமா
அன்னைக்கு ஆட்களை ஏற்பாடு செய்து வச்சிருந்தான் கிருபா ....
வாசு என்னைய நம்பி எங்க வேணாலும் வருவான் ....
அதனால ஊருக்கு ஒதுக்கு புறமான பகுதிக்கு வாசுவை கூட்டிகிட்டு போய்விடணுங்கிறது எனக்கு கொடுத்த வேலை ... அங்க வாசுவை போட்டு தள்ளி காணா பிணமாக்கணும்னு திட்டம் போட்டிருந்தான் கிருபா ....
ஆனா நாங்க போட்ட எந்த திட்டமும் நடக்கல ....
அப்ப அவன் குடும்பத்துலயே திடீர்னு ரொம்ப பிரச்சனை ஆயிடுச்சு .... அவன் பொண்டாட்டி விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு போயிட்டா .... அதோட அவன் அரசியலுக்கு முழுக்கு போட்டுட்டு ஊரை விட்டே போய்ட்டான் ...." என்றவர் ஐந்தாண்டுகளுக்கு முன்பு நடந்து முடிந்த அனைத்து அரசியல் கூத்துக்களை கூறி முடித்தார்.
கிருபாகரன் ராஜலட்சுமியிடம் நடத்திய விசாரணையில், அவர்களும்
வழக்கம் போல் முதலில் மறுத்தனர்.
காவல்துறையினர் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்ததும், வலி தாளாமல்
ஸ்நஃப் மூவிஸ் உட்பட அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டனர்.
" நீங்க தான மாயோன் கோவிலுக்கு
எந்த மகிமையும் இல்லன்னு அடிக்கடி பேட்டி கொடுப்பீங்க மேடையிலும் பேசுவீங்க .... பின்ன எதுக்கு இந்த மரகத லிங்கம் நவபாஷன லிங்கத்து மேல மட்டும் உங்களுக்கு நம்பிக்கை இருக்கு .... அதுக்காக நரபலி வரைக்கும் போய் இருக்கீங்க ..."
" மரகதலிங்கம் நவபாஷாண லிங்கத்தை அந்த கோவிலில் இருந்து எடுத்து வெளிநாட்டுக்காரங்களுக்கு விற்கணும்னு ஆசைப்பட்டேன் ... அதுக்காக பல வழிகளை கையாண்டு பார்த்தேன் ... ஆனா எதுவும் உதவல.... அப்புறம் தான் வேற வழி இல்லாம
என் மனைவி தனலட்சுமி....
நரபலி கொடுத்தா அது நடக்கும்னு நம்பூதிரி சொன்னதா சொன்னா....
அதனாலதான் அந்த வழியை ஃபாலோ பண்ணோம் ..."
- மாயவனின் மாயங்கள் தொடரும்