- Joined
- Jul 21, 2025
- Messages
- 681
- Thread Author
- #1
அத்தியாயம் 103
உறக்கம் விழித்த மாதவிக்கு ,
முந்தைய இரவில் நடந்த கலவி நினைவுக்கு வந்து அவள் தடிதுடித்து அழும் காட்சி அங்கு அரங்கேறியது ...
பிறகு கணவன் மனைவிக்கிடையே நடந்த வாக்குவாதம் ...
அதன்பின் கீழ் தளத்திற்கு வந்தவன்
தன் வீட்டுப் பெண்களின் வசைப்பாட்டிலிருந்து
தன் மனையாளை காப்பாற்ற எண்ணி, குழந்தை பிறக்காததற்கு தன் உடம்பில் இருக்கும் குறை தான் காரணம் என உளறி கொட்ட....
அந்தக் காட்சியை பார்த்துக் கொண்டிருந்த மாதவிக்கு,
தன் கணவனின் ஆத்மார்த்தமான நேசம் புரிய, விழிகள் கலங்கி
அருகில் இருந்தவனை பாசத்தால் ஸ்பரிசித்தாள் ....
அடுத்து, காணாமல் போன சரளாவை தேட செர்ரி அழைக்க,
கிருஷ்ணா கிளம்பி சென்றது...
அவன் கிளம்பியதும் , தன் அறையில் இருந்த சிவசாலிகிராமத்தை பார்த்து,
" கடந்த ஆறு மாசமா குழந்தை வேணும் குழந்தை வேணும்னு கேட்கிறேன் ...நீ கொடுக்கல ....
நேத்து ராத்திரி நடந்த சேர்க்கையால நான் குழந்தை உண்டாக விரும்பல...
இனிமே எனக்கு குழந்தையே வேண்டாம் ....
எனக்கு என் கிருஷ்ணா நல்லபடியா இருந்தா போதும் ..." எனக் கைகூப்பி
கண் கலங்கி வாய்விட்டே அவள் வேண்டுதல் வைக்க,
திடீரென்று பித்து சித்தரின் குரல் அசரீரியாய் அவள் காதுகளுக்குள் ஒலிக்க தொடங்கியது.
" தேவி, கர்ம வினையினை கழிப்பது அவ்வளவு சுலபம் அன்று ....
நேற்றைய கலவியின் வித்து , நாளைய சிசுவாய் உருவெடுத்தே தீரும்....
நின் மன்னவன் கர்மவினை என்னும் மாய வலையில் சிக்கிக் கொண்டிருக்கிறான்....
நின் அரசனை மீட்டெடுக்கும் சக்தி
தாங்களே தேவி ...."
" இல்ல ...இல்ல... இல்ல ...நேற்றைய கூடல்ல வர்ற குழந்தை என் கர்ப்பத்துல தறிக்க வேண்டாம் ....
இனிமே நான் குழந்தை வரமே கேட்க மாட்டேன் ....
என் வாழ்நாள் முழுசும் குழந்தையே வேணாம் எனக்கு ...." என அவள் கதறி அழ,
" மீட்டெடுக்கும் சக்தியான தாங்களே
மனம் நொந்து அழலாமா தேவி...."
" ஆறு மாசமா குழந்தை உண்டாகல ... ஒருவேளை இந்த மாசமும் கரு தரிக்காமலே போயிட்டா ... உன் வார்த்தை பலிக்காமலே போயிடுமில்ல..."
" வீண் நப்பாசையை விடுங்கள் அரசி ...நின் கணவனின் கர்ம வினையின் பயன் அந்த வித்து ....
அது வந்தே தீரும் ...." எனக் கூறி அந்த குரல் அடங்கியது.
சித்தரின் வார்த்தை பலிக்க கூடாது என சிவபிரானிடமே வேண்டுதல் வைக்கத் தொடங்கினாள்...
பித்து சித்தர் அவ்வளவு கூறியும்
கடந்த ஆறு மாதம் கர்ப்பம் தரிக்காமல் போனது போல், இந்த மாதமும் நடந்தால் ....
என்ற நப்பாசை அவளுள் இருக்கவே செய்தது ....
பயமும் நப்பாசையுமாய் ஒவ்வொரு நாளாய் கடந்தாள்....
இதற்கிடையில் சரளா திருமணத்திற்கு முன்பாக காணாமல் போனது மாதவியை ஆழிப்பேரலையாய் அடித்து வீழ்த்தி இருக்க,
சதா கர்ப்பத்தை பற்றியும், தொலைந்து போன சரளாவை பற்றிய
சிந்தனையிலேயே சிக்கி தவித்தாள் ...
கட்சி அலுவலக வாசலில் கிருஷ்ணாவுக்கும் சூரிய கிரனுக்கும் இடையில் நடந்த மோதல் காட்சியாய் விரிந்தது ...
நடந்த மோதலை கேள்விப்பட்ட விசாலம், கிருஷ்ணா தனக்கு குறை இருப்பதாக சொன்னதைக் கேட்டு,
அறிவுரை கூற,
" வேணாம் அப்பத்தா.... அவ உடம்புல குறை இல்லன்னா நிச்சயம் எங்களுக்கு குழந்தை பொறக்கும்...
ஒருவேளை குறை இருந்து குழந்தை பொறக்கலன்னா, இந்த உலகம் என்னைய தப்பா சொல்லிட்டு போவட்டும்.... அவளை யாரும் ஒரு வார்த்தை சொல்ல நான் உடமாட்டேன் ..."
" அதில்லைய்யா... வம்சம் விளங்க வாரிசு வேணாமா...."
" எனக்கு வாரிசை விட என் மாதவி தான் முக்கியம் ....
அவளுக்கு குழந்தையா நானும் எனக்கு குழந்தையா அவளும் நாங்க வாழ்க்கை ஓட்டிடுவோம் ..."
என்ற காட்சியை பார்த்து ஆனந்தத்தால் கண் கலங்கினாள் மாதவி....
எப்பொழுதுமே அவளுக்கு தான் தன் கணவனை அதிகம் நேசிக்கிறோம், பூஜிக்கிறோம் .... என்ற கர்வம் உண்டு
ஆனால் இந்தக் காட்சியை கண்டதும்,
எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்
தன் மீது பாசத்தை பொழிந்து இருக்கின்றானே ...... என்றெண்ணியவளின் மனதில் அவன் இமயமலையாய் உயர்ந்து நின்றான் ...
அடுத்து...
மூடி இருந்த அவர்களது படுக்கை அறை கதவை அவன்
தட்ட முயலும் போது, அசரீரியாய் அவளுக்குள் ஒலிக்கும் பித்து சித்தரின் குரலுக்கு அழுது துடித்தபடி அவள் பதில் அளித்து கொண்டிருக்கும் காட்சியை தற்போது அவன் மன திரையில் கண்டான் ...
அதில் அவள்
" சர்வேஸ்வரா, என் மனசு சதா தரிக்கப் போற கர்ப்பத்தை பத்தியே சிந்தனையிலேயே இருக்கு ...
ஒரு வேளை கர்ப்பம் தரிச்சதும்
உண்டான கருவை கலைச்சிட்டா ...
எல்லாம் மாறிடும் தானே...
என் கணவருக்கு ஒன்னும் ஆகாது தானே..." என ஆசையாய் பிரச்சனைக்கு தீர்வு கண்டுவிட்டதாக எண்ணி அவள் கேள்வி எழுப்ப
" மழலை கரையும் .... மாந்திரீகம் எப்படி கரையும் ....
நினைவில் கொள்ளுங்கள் தேவி...
தங்கள் வயிற்றில் ஜனிக்க போகும் வித்து மழலை அல்ல மாந்திரீகம் ...."
கண்கள் சிவந்து கண்ணீர் வடிய
" நானே செத்துப் போய்ட்டா ..
என் வயித்துல இருக்க குழந்தையும் செத்துப் போயிடும் தானே ..." என்றாள்
லேசான கேவலுடன் .
" அப்படிப் பார்த்தால், தங்கள் மூச்சு நின்ற மறு நொடி, தங்கள் மன்னவனின் மூச்சும் நின்றுவிடும் ...
சம்மதமா ...."
அவள் தலையில் அடித்துக் கொண்டு
" எல்லா வழியும் அடை பட்டு போச்சே... நான் என்ன செய்வேன் சர்வேஸ்வரா ...." என குமுறி அழ
" கலங்காதீர்கள் ... நான் தங்களுக்கு எழப்போகும் இன்னல்களை உரைப்பேன் ... உபாயத்தை தேடுவது தங்களது பொறுப்பு ...
நின் கொற்றவனை காக்கும் சக்தி
தங்களிடம் தான் உள்ளது தேவி ...
மதியை பயன்படுத்துங்கள் ..."
என்று முடித்துக் கொண்டது அந்த குரல்.
அந்தக் காட்சி அவன் மனையாள் பட்ட துன்பத்தை அணு அணுவாக விளக்க,
இம்முறை அவன் கண் கலங்கினான்.
குழந்தை குழந்தை என்று அலைந்தவள், எனக்காக
குழந்தையை அழிக்க எண்ணியதோடு,
ஒரு கட்டத்தில் தானே அழிய எண்ணியதும், அவன் இதயத்தில் குருதியை கசிய செய்தது....
பிறகு ஹசீனா மாயமாவது ...
சரளாவின் கொடூர மரணம் ....
ஆகியவை ஒன்றின் பின் ஒன்றாக நடந்தேற, ஏற்கனவே கணவனின் உயிருக்காக திக்கு திசை தெரியாமல் எதிரிகள் புரியாமல் தன்னுள்ளேயே போராடிக்கொண்டிருப்பவளுக்கு ,
நடந்தேறிய இந்த கொடூரங்கள் அவள் பயத்துக்கு மேலும் உரம் ஊட்ட,
தன்னுள்ளேயே மருகித் தவித்தாள்.
ஹசினா மாயமானதால் மைதீன் தொகுதி வேட்பாளர் பதவியில் இருந்து பின்வாங்க, மற்ற மூத்த
உறுப்பினர்களும் பின்வாங்க,
கடைசியில் கிருஷ்ணாவை மூர்த்தியார் தொகுதி வேட்பாளராக தேர்ந்தெடுத்து அறிவிக்க
என.... காட்சிகள் வேகமாக விரிவடைந்து கொண்டே சென்றது ....
கிருஷ்ணாவை வேட்பாளராக மூர்த்தியாரால் அறிவிக்கப்பட்டது மாதவியின் செவிகளை அடையும் முன்பே மாதவியின் மசக்கை உறுதியாகிக் போனது.
சித்தர் சொன்னது பலித்து விட்டது ...
தான் கர்ப்பம் தரித்து விட்டோம் ....
தன் கணவன் இந்த உலகை விட்டுப் போகப் போவது உறுதி ...
என்ற செய்தியே அவளின் சப்த நாடியை
அடக்கி ஒடுக்கி இருந்த நிலையில்,
கிருஷ்ணாவின் அரசியல் பிரவேசம் அவளை ஆட்டிப் படைக்க,
அது குறித்துப் பேச மூர்த்தியாரை
சந்திக்க அவள் மேல் தளம் செல்லும் போது, தன்னை மறந்து வேதாச்சலமும் சுதாகரனும் சன்னமாக உரையாடிக் கொண்டிருந்தது அவள் காதுகளில் விழுந்தது.
" வாசு வேட்பாளரா களம் இறங்கினா நிச்சயமா ஜெயிச்சிருவான் ...." --- வேதாசலம்.
" களம் இறங்கினா தானே ....
அவன் வேட்பு மனு தாக்கல் செய்யறதுக்கு முந்தியே அவனை பரலோகத்துக்கு பேக் பண்ணிடனும் ...
என் கிருபா மாமாக்கு இல்லாத பதவியும், பவுசும்.... இவனை அனுபவிக்க விட்டுடுவோமா ....
என் மாமா சொன்ன படி வேலிகாத்தான் தோப்புக்கு எதையாச்சும் சொல்லி அவனை கூட்டிக்கிட்டு போய் காத்துகிட்டு இருங்க .... நான் ஆளுங்களோட வரேன் ... அவன் கழுத்து அறுத்து காணா பொணம் ஆகிடலாம் ...." --- சுதாகரன்
கேட்டுக் கொண்டிருந்தவளுக்கு அதிர்ச்சியில் கை கால்கள்
நடுங்க,
உடலெங்கும் தொப்பலாய் வியர்வையில் நனைய, நாக்கு வறண்டு போக, துக்கம் தொண்டையை அடைக்க, சரிய போனவள் மிகுந்த சிரமத்தோடு சுதாரித்துக் கொண்டு வந்த தடம் தெரியாமல் கண்கள் பொங்க தன் அறைக்கு வந்து சேர்ந்தாள் .....
நடந்ததை மூர்த்தியாரிடம் சொன்னால்
தம்பிடிக்கு நம்ப மாட்டார் .
சுதாகரனையாவது ஒரு சதவிகிதம் சந்தேகப்படுவார் .... வேதாசலத்தின் மீது அவருக்கு எக்காலத்திலும் சந்தேகம் வராது ....
இவ்வளவு ஏன் கிருஷ்ணாவே நம்ப மாட்டான் ....
அரசியல் பிடிக்காத காரணத்தால் அடுத்தவர்களின் மீது அவதூறு பரப்புவதாக தான் கூறுவான் ....
சித்தர் சொன்னது ஒன்றன்பின் ஒன்றாக நடந்தேறிக் கொண்டிருக்கும் நிலையில்
தன்னவன் மர்மம் அறிய நேர்ந்தால் மரணம் நிச்சயம் என்பதும் நடந்தேறும் அல்லவா .... என்ற எண்ணமும் உதிக்க
செய்வதறியாது மீண்டும் சிவசாலிகிராமத்திடமே அவள் சரணடைந்து,
" என் கணவருக்கு தானே விஷயம் தெரிய கூடாது .... என் தாத்தா பாட்டி கிட்ட சொல்லலாம் இல்ல ...."
" மீண்டும் உரைக்கிறேன் தேவி ....
விசுவாச கோட்டையை உடைப்பது இயலாத ஒன்று ...
ஆதாரத்தோடு இயம்பினாலே
ஏற்க மறுப்பர் ....
ஆதாரமில்லா செவி செய்தி ,
நின் மன்னவன் அறிகையில் அற்ப ஆயுளுக்கே வழிவகுக்கும் .....
இன்னும் ஒன்று கொற்றவையே.....
ஒட்டுண்ணியான இந்த சிசு உன்னவன் அருகில்
வீரியமாய் செழித்தோங்கும்....
உடலாலும் மனதாலும் நின்னவன்
விலக விலக, மாந்திரீகம் பூசிய
இந்த குருதி பிண்டம் கரைந்து காணாமல் போகும் ...."
அதனைக் கேட்டு அவள் துடித்து அழ
" நான் வெறும் தூதுவன் தாயே ....
கர்ம வினையை முன்னறிய செய்வது மட்டும் என் கடமை ....
தங்களது கர்ம வினைக்கேற்ப தங்கள் மதியை செலுத்தி உபாயத்தை கண்டுபிடிக்க வேண்டியது தங்கள் செயல் தாயே ...." என அந்த குரல் முடித்துக் கொண்டது .
அன்றிரவு அவள் கிருஷ்ணாவிடம்
அரசியல் குறித்து உரையாட, வாக்குவாதங்கள் முற்ற,
" ப்ளீஸ் கிருஷ்ணா .... நாம ரெண்டு பேரும் இந்த ஊரை விட்டு எங்கேயாச்சும் ..." என்றவள்
உடனே அதனை மாற்றி
"நீங்க இந்த ஊரை விட்டு எங்கேயாச்சும் போயிடுக ...." என்றாள் கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வடிய, உதடுகள் துடித்தபடி அவன் கால்களில் விழ போனாள்...
பதறி விலகியவன்,
"பைத்தியக்காரி ...
நாம ரெண்டு பேரும் இந்த ஊரைவிட்டு போயிடலாமான்னு நீ கேட்டிருந்தா கூட ஓரளவுக்கு சந்தர்ப்ப சூழ்நிலைக்கு சரியா பொருந்தி வந்திருக்கும் ... ஆனா என்னைய மட்டும் ஊரை விட்டு போக சொன்ன பாத்தியா .... அங்கதான் நீ முழு பைத்தியம் ஆயிட்டயோனு தோணுது ...
உன்னை விட்டுட்டு எங்கடி போவேன்....
நான் வேணுமா.... இல்ல அரசியல் வேணுமானு கேட்டு என்னை இக்கட்டுல நிறுத்தி பார்க்காதே ...
இப்போதைக்கு தாத்தாகாக எனக்கு அரசியல் வேணும் ....
நீ என் வாழ்நாள் முழுக்க வேணும் டி .... அதோட ஷில்லாங்ல நீ தானே சொன்ன , நீங்க எந்த முடிவெடுத்தாலும் சரியா இருக்கும்னு... இப்ப என்ன ஆச்சு " என்று கண் கலங்கியவன் அதற்கு மேல் தாமதிக்காமல் அவளை இழுத்து தன்னோடு இறுக்கிக் கொண்டான்.
உள்ளுக்குள் சிசு துடிக்க,
மனதோடும் மணாளனோடும் ஒரே வேளையில் அவள் மல்லு கட்டிக் கொண்டிருக்கும் போது , மசக்கை தலை தூக்க
வாயை பொத்திக்கொண்டு குளியல் அறைக்குள் ஓடினாள்.
" என்னாச்சு மது ...." என்று பதறியபடி
அவன் பின்னே வந்து பார்க்க, அடி வயிறே தொண்டையை முட்டும் அளவிற்கு வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள்.
உடன் இருந்து அவள் தலைப்பற்றி வாந்தி எடுக்கும் வரை உதவியவன், அவளை
சுத்தப்படுத்தி அழைத்து வந்து,
" என்னாச்சு..." என்ற படி அவள் நெற்றியை தொட்டுப் பார்க்க,
அது தணல் போல் கொதிக்க ,
" ஏய், காய்ச்சல் அடிக்குதடி ..." என்றான் பதறி.
அவள் மௌனமாக இருக்க, உடனே
அலமாரியிலிருந்து ஒரு பாராசிட்டமால் மாத்திரையை தேடி எடுத்து அவளை உட்கொள்ள செய்து,
" இங்க பாரு மது, நீ தேவையில்லாத விஷயத்தை மனசுல போட்டு குழப்பிக்கிட்டதால இப்ப காய்ச்சலே வந்திருச்சு ....
திரும்பவும் சொல்றேன் என்னைய யாரும் எதுவும் செய்ய முடியாது ...
இந்த தடவை நான் அரசியல்ல களம் இறங்குறது இறங்குறது தான் ...."
என்றவன் தன்னவளை மார்போடு அணைத்துக் கொண்டான்.....
இந்த காட்சியை காண காண, தன்னவளின் பொறுமையும், தியாகத்தையும் கண்டு மெய் சிலிர்த்துப் போனான்.....
உடன் காட்சிகளை கண்டு கொண்டிருந்தவளுக்குள்ளும் அன்றைய தாக்கம் தோன்றி,
நெஞ்சில் பாரம் ஏற்றியது ...
பிறகு நாட்கள் கழிய, பயத்தோடு காலம் தள்ளினாள் ....
மறு தினம் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் என்ற நிலையில்,
மீண்டும் சிவபிரானிடம் முறையிட்டு உதவி கேட்டாள்....
" கவலை வேண்டாம் தேவி .....
நாளை தாங்கள் எதிர்பார்த்து அஞ்சும் சம்பவம் நடைபெறாது ....
அதற்குக் காரணம்
மூத்த உயிர் ஒன்று ஈசனின் திருவடியில் இளைப்பாற சென்று விடும் ....." என முடித்துக் கொண்டது.
அப்போது மூர்த்தியாரின் உடல்நிலை லேசாக மோசமடைய, உடன் விசாலத்தின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டிருக்க,
மூத்த உயிர் ஈசனின் திருவடிக்குச் செல்லும் என்ற வார்த்தை .... அவள்
சித்தத்தை கலங்கச் செய்து கவலையுறச் செய்ய .... முதியவர்களின் அருகேயே இருந்து
சேவக வேலையில் ஈடுபட்டாள்....
மறுநாள் காலை பரிமளம் பாட்டி வழுக்கி விழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாக கிருஷ்ணாவுக்கு தகவல் கிட்ட,
அதை அவன் விசாலத்திடம் பகிர்ந்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள் நாயகி ....
ஐந்து நாட்கள் தள்ளிப் போய், மறு தினம் மீண்டும் வேட்பு மனு தாக்கல் என்ற நிலையில்
மீண்டும் ஆறா கவலையோடு ஈசனிடம் அவள் முறையிட ...
" தேவி... இம்முறையும் கவலை வேண்டாம் .....
நாளையும் தாங்கள் எதிர்பார்த்து அஞ்சும் சம்பவம் நடைபெறாது ....
அதற்குக் காரணம் இத்துணை காலம் காவல் தெய்வமாய் வலம் வந்த ஐந்தறிவு ஆத்மா தன் உலக உறவை முடித்துக் கொள்ளும்...."
என முடித்துக் கொண்டது.
அதேபோல் அன்று கிருஷ்ணா, வேட்பு மனு தாக்கல் செய்ய கிளம்புகையில் ,
காலா தன்னால் முயன்றவரை தடுக்க பார்க்க .....
ஒரு கட்டத்தில் அவன் கிளம்பி செல்வதை தடுத்து நிறுத்த வழி இல்லாமல் கிணற்றில் தாவி குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டது .....
அதற்குப் பின்பு தான் கிருஷ்ணா
நடந்து சம்பவங்களை வரிசைப்படுத்தி பார்த்து, இயற்கை ஏதோ ஒரு வகையில் தன் அரசியல் பிரவேசத்தை தடுக்க பார்க்கிறது என்பதை உணர்ந்து மூர்த்தியாரிடம் சென்று பேசினான்.
- மாயோனின் மாயங்கள் தொடரும்