- Joined
- Jul 21, 2025
- Messages
- 640
- Thread Author
- #1
எபிலாக் (தொடர்ச்சி...)
சரியாக ஓராண்டுக்கு பிறகு.......
" இப்ப எதுக்குடி மூஞ்ச தூக்கி வச்சுக்கிட்டு வர...." என்றான் அர்ஜுன் கார் ஓட்டிக்கொண்டே.
" அத்தான் ...என்கிட்ட பேசாத கடுங்கோவத்துல இருக்கேன் ...."
" நான் என்னடி பண்ண ...."
" ம்ம்ம்,நீ தான் எல்லாத்தையும் பண்ண..." என்றவளின் குற்றச்சாட்டை கேட்டு உல்லாசமாக சிரித்தவன்
" உனக்கு புருஷனை பார்த்ததும் பிரசவ வைராக்கியமெல்லாம் பறந்து போயிடுச்சு.... அதுக்கு நான் என்ன பண்றது ..." என வம்புக்கு இழுக்க, அவள் சுற்றி முற்றி எதையோ தேட ,
" என்னத்த டி தேடற ...."
" ஏதாவது கட்டை கிடைக்குமான்னு பார்க்கறேன்... உன் மண்டைலயே இரண்டு போட...." என்றாள் கோபத்துடன்.
பலமாக சிரித்தவன்,
" இஃப் ஐ அம் நோட் ராங் .... டாக்டர் சொன்ன டேஸை கால்குலேட் பண்ணி பார்த்தா, அன்னைக்கு மழை கொட்டிச்சே.... அன்னைக்கு நடந்தது தானே ....இது...." என அவள் வயிற்றை பார்த்து அவன் சரசமாகக் சிரிக்க, அவள் கோபத்தில் அவன் காதை பிடித்து திருகி விட்டு
" அன்னைக்கு நான் வெறும் கையை மட்டும் தான் பிடிச்சேன்..." என்றாள்.
"பொய் சொல்லாதடி அல்லிராணி ... நீ எனக்கு முத்தம் கொடுக்கல ..."
" ஆமா முத்தம் மட்டும் தான் கொடுத்தேன் ..."
" அவ்ளோ தான்.... முடிஞ்ச்...வைஃப் முத்தம் கொடுத்தா, மொத்தமும் கொடுக்கணும்னு எழுதப்படாத விதி ...
அதான் மொத்தம் கொடுத்துட்டேன் ..." என ஒற்றைக் கண் சிமிட்டியவன்,
" இப்ப என்னடி பிரச்சினை .... மறுபடியும் ட்வின்ஸ் உண்டாயிருக்க ...
சந்தோஷப்பட வேண்டிய விஷயம் தானே ..."
" ம்ம்ம்ம், முதல் ட்வின் பேபிஸ்க்கு ஒரு வயசுதான் ஆகுது .... அதுக்குள்ளேயும்
இன்னும் ஒரு ஜோடி ..." என அவள் அலுத்துக் கொள்ள
" டெலிவரியை நெனச்சு பயப்படறியா அம்மு ..." என்றான் யோசனையாக.
" அதில்ல .... இந்த தடவையாவது இரண்டும் பொண்ணா பொறக்காதான்னு இருக்கு ..." என எதிர்பார்ப்போடு கூறியவள் உடனே கோபத்தை தத்தெடுத்துக் கொண்டு
" இது ரெண்டும் பையனா பொறந்தது, அப்புறம்
நான் நம்ம குழந்தைகளை கூட்டிக்கிட்டு என் மாமா வீட்டுக்கு கொடைக்கானலுக்கு போயிடுவேன் ... திரும்பியே வரமாட்டேன்..." என அவள் மிரட்ட
அதனை ரசித்து சிரித்தவன்,
" நீ அங்க போய் சேரு டி.. உனக்கு
முன்னாடி நான் அங்க இருப்பேன் உன்னையும் நம்ம குழந்தைகளையும் ரிசீவ் பண்ண ..."
" ம்க்கும்....அதையும் பார்க்கலாம் ..." என்றாள் கழுத்தைத் திருப்பிக் கொண்டு சவால் விடுவது போல்.
ஸ்ரீராம்-ஜானவி, ஸ்ரீ- விஷ்ணுவிற்கு பெண் குழந்தைகள் பிறந்ததால் அக்னியின் பெண் குழந்தை எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகி போக, அது மேற்கண்ட வழியில் கோபமாக வெளிப்பட்டது.
வழக்கம் போல் அர்ஜூனை சந்திக்க வந்த விஷ்ணு,
" கங்கிராட்ஸ் அண்ணி ...." என
தாய்மை அடைந்திருந்த அக்னியிடம் வாழ்த்துக் கூற, அப்போது பூஜை அறையில் இருந்து வெளிப்பட்டான் அர்ஜுன்.
அவனை அப்படி கண்டதும் ஆச்சரியப்பட்ட விஷ்ணு,
" என்னண்ணே, இப்படி பக்தி பழமா மாறிட்ட ..... "
" ஆமாண்டா பக்தி மார்க்கத்துல தான் இருக்கேன்...."
" எதுக்கு அண்ணி இப்படி மாறிட்டாரு ...."
" பெண் குழந்தை பொறக்கணுங்கிறதுக்காக இப்படி எல்லாம் வேண்டுதல் வைக்கிறாரு....இப்ப எல்லாம் ஒரு அம்மனை விடறதில்ல.... அங்காளம்மன்ல ஆரம்பிச்சு அகிலாண்டேஸ்வரி வரைக்கும் டெய்லி பூஜை தான்...."
" ப்ரோ, நீயா இப்படி நம்பவே முடியல .." என ஆச்சரியப்பட்டவன், அங்கு விளையாடிக் கொண்டிருந்த
அஷ்வத், ஆத்விக், ஆதித்யாவை ஆசையாக பார்த்துவிட்டு
" அண்ணி, உங்க வீட்டுக்குள்ள வந்தாலே ஏதோ க்ளோனிங் லேப்குள்ள வந்த மாதிரி இருக்கு .... உங்களைத் தவிர மத்த நாலு பேரும் ஒரே மாதிரி இருக்காங்க ..... இப்ப பொறக்கப் போற ட்வின்ஸ்ம் பையனா பொறந்தா, முடிஞ்ச்...."
" அனாவசியமா என்கிட்ட அடிவாங்கி சாகாத டா.... இப்ப எதுக்குடா
நெகட்டிவா பேசற.... " என அர்ஜுன் எகிற
" சரி பாசிட்டிவா சொல்றேன் ரெண்டும் பொண்ணா பொறக்கும் போதுமா ....
நான் வந்த விஷயமே வேற சீனியர் ...."
" சொல்லுடா ..."
" பேப்பரை பார்த்தியா ப்ரோ ...."
" பார்த்தேன் பார்த்தேன்.... அபூவை இன்னைக்கு காலையில ரெண்டு மணிக்கு சிரியால இஸ்ரேல் மொசாட்
போட்டுட்டாங்க ... "
" எஸ் ..... அவன் போட்டோ சர்க்குளேட் ஆனவுடனே, எப்படியும் தன்னை போட்டு தள்ளி விடுவாங்கன்னு தெரிஞ்சுகிட்டு,
கவர்மெண்ட் ரேடார்ல கூட சிக்கக் கூடாதுன்னு பக்காவா ப்ளான் பண்ணி
சிரியால அண்டர் கிரவுண்ட்ல பதுங்கியிருந்திருக்கான்.... விடுவோமா..... நாம ஒரு பக்கம் தேட, இஸ்ரேல் மொசாட் ஒரு பக்கம் தேட, அமெரிக்கா CIA ஒரு பக்கம் தேட,
கடைசில மொஸாட் நேரோ டவுன் பண்ணி, அவன் பதுங்கி இருந்த இடத்து மேல பாமிங் பண்ணி காலி பண்ணிட்டாங்க .....இதுல கடுப்பான மத்த டெரரிஸ்ட் குரூப்ஸ்
ஏகத்துக்கு சவுண்டுவிடறானுங்க... இதிலிருந்து என்ன தெரியுதுன்னா அபூவோட கடைசி அடி விழுது இருக்கிறவரைக்கும் , டெரரிஸம் இருந்துக்ககிட்டே இருக்கும்னு புரியுது ப்ரோ ...
அதோட அவனை எப்படி போட்டு தள்ளினாங்கனு ஒரு டீடைல்டு சீக்ரெட்
டாக்குமெண்ட் எங்களுக்கு அனுப்பி இருந்தாங்க .. படிச்சு பார்த்தேன் ரொம்ப சுவாரசியமாவும் சந்தோஷமாவும் இருந்தது ...
" நாம முடிச்சா என்ன... அவங்க முடிச்சா என்ன.... அபூ கதை முடிஞ்சா சரி .... அதோட நீ சொல்ற மாதிரி இவங்க எல்லாம் வெட்ட வெட்ட காளான் மாதிரி முளைச்சுகிட்டே இருப்பாங்க .... அடியோட புல் பூண்டு இல்லாம அழிச்சா தான் சரிவரும் ..." என்றான் அர்ஜுன் ஆக்ரோஷமாக.
சில மாதங்களுக்குப் பிறகு.......
அக்னி பிரசவ வலியில் துடித்துக்கொண்டிருந்தாள்.
" பேபியோட பொசிஷன் சரியில்ல ....
ட்வின்ஸ் வேற ... சிசேரியன் பண்றதுதான் சேஃப்..."
என மருத்துவர் அறிவுறுத்தியதும்,
அர்ஜுன் ஒப்புக்கொண்டு கையொப்பமிட்டான்.
இந்த முறை அவனும் மருத்துவர்களோடு பிரசவ அறையில்
அவர்கள் கொடுத்த உடையை அணிந்து கொண்டு மனையாளின் அருகிலேயே இருக்க,
அக்னிக்கு முதுகுத்தண்டில் போடப்பட்ட ஊசியானது, அவளது இடுப்புப் பகுதிக்குக் கீழே அனைத்தையும் மரத்துப்போக செய்திருந்தது.
வலி தெரியவில்லை என்பதால் அருகில் நின்றிருந்த கணவனின் கரம் பற்றிக்கொண்டு பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை அவள் கடவுளிடம் வைத்துக் கொண்டிருக்க, அர்ஜுனும் உள்ளுக்குள் அதனையே வழிமொழிந்து கொண்டிருந்தான்.
மருத்துவர் அறுவை சிகிச்சை செய்து
முதல் குழந்தையை வெளியே எடுத்தார்.
அது நல்ல அழுத்தமான குரலில் அழுதுகொண்டே வெளிவர, குழந்தை பிறந்த சந்தோஷத்தோடு எதிர்பார்ப்பும் கூட
" இட்ஸ் அ பேபி பாய் ..." என்றார் மருத்துவர் புன்னகையோடு.
அர்ஜுனின் முகத்தில் ஏமாற்றத்தோடு சோகம் அப்பிக் கொள்ள, அவன் மனையாள் அவனை ஆழ்ந்து முறைக்க
" அம்மு ப்ளீஸ், டென்ஷன் ஆகாத.... பிபி ரைஸ் ஆயிடும் ..." என அவன் பயப்பட,
ஏமாற்றத்தை தாள முடியாமல் அவள் கண்களில் ஒரு துளி கண்ணீரே வந்துவிட்டது .
அடுத்த ஐந்து நிமிடத்திற்குப் பிறகு, மற்றொரு குழந்தையை வெளியே எடுத்த மருத்துவர், அர்ஜுனின் முகத்தை ஆழ்ந்து நோக்கிவிட்டு
" இட்ஸ் அ......." என்று இழுத்தவர்
" பேபி கேர்ள் ....." என முடித்து அட்டகாசமாக சிரிக்க,
" என்ன அத்தான்...." என்றாள் தன் காதுகளை நம்ப முடியாமல் .
" பொண்ணு பொறந்திருக்கு டி...." என பெருத்த நிம்மதியோடும் ஆர்ப்பரிக்கும் சந்தோஷத்தோடும்
மனையாளின் கரத்தை தன் இரு கரங்களுக்குள் கொண்டு வந்து அவள் முகம் பார்த்து காதலோடு கூற,
"தேங்க் காட்....." என்றாள் அளவற்ற ஆனந்தத்தில்.
அவளது கிழித்த வயிற்றிலிருந்து குழந்தைகளை எடுக்கும் பொழுது ஒருவித தவிப்பு மட்டுமே இருந்தது.
ஆனால் நேரம் செல்ல செல்ல,
எந்த ஒரு வலிநிவாரணிக்கும் கட்டுப்படாமல் இரவெல்லாம் அவள் அனத்திய அனத்தல், தவித்த தவிப்பு, துடித்த துடிப்பு , அவளின் மகத்துவத்தை தாண்டி தாய்மையின் மகத்துவத்தை அவனுக்கு உணர்த்தியது.
அப்பொழுது உறுதிபூண்டான். இனி பிள்ளை என்ற பேச்சுக்கே இடமில்லை, என்ற பிரசவ வைராக்கியத்தை தீர்க்கமாக சங்கல்பம் செய்து கொண்டான்.
3 நாட்களுக்கு பிறகு, மருத்துவர் காலை கடன்களுக்காக அவளை எழுந்து நடக்கச் சொல்ல,
நகரக்கூட முடியாமல் தவித்தவளை கையோடு அவன் அள்ளிக்கொள்ள,
அதனை செவ்வனே கண்டித்தார் மருத்துவர்.
கடந்த முறை சுகப்பிரசவம். பிரசவிக்கும் பொழுது அவன் பிரசவ அறையில் இல்லை.
இரண்டாவது நாள் இயல்பாக அவள் நடக்க ஆரம்பித்ததால், பிரசவத்தின் தாக்கம் அவனுக்கு அதிகம் தெரியாமலே போயிற்று.
ஆனால் இந்த முறை அவள் படும் அனைத்து வேதனைகளையும் கண்கூடாக கண்டான்.
வேதனைகள் விளைப்பொருட்கள் போலிருந்தால் பாதி என்ன அனைத்தையுமே பெற்று சுமந்திருப்பான்.
இயற்கை அதற்கான வழி வகுக்கவில்லை என்பதால், சமயம் கிடைக்கும் போதெல்லாம் மனையாளை மனதாலும் உடலாலும் சுமந்தான் மனமுவந்து.
பெயர் சூட்டு விழாவிற்கு அனைவரையும் அழைத்து கோலாகலமாக நடத்தினான்.
புதிதாய் பிறந்த ஆண்குழந்தைக்கு அனிருத், பெண் குழந்தைக்கு அக்ஷிதா என்று பெயரிட்டு மகிழ்ந்தான்.
விஷ்ணுவின் குழந்தைகள் இரண்டும் ஏறக்குறைய ஒரே தருணத்தில் அவதரித்ததால் பார்ப்பதற்கு இரட்டைப் பிறவிகள் போலவே காட்சியளித்தது.
மகன் முழுக்க முழுக்க விஷ்ணுவின் சாயல்.
மகள் நெற்றி, மூக்கு மட்டும் ஸ்ரீயை கொண்டிருக்க, மற்றவை விஷ்ணுவே.
குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என்றாலும் பெண் குழந்தை என்பதால்,
ஆண் குழந்தைக்கு நிகராக சூட்டிகையாக இருந்தது .
பெண் குழந்தையைக் காட்டிலும், மகனின் மீது தான் ஸ்ரீக்கு பற்றுதல் அதிகம். அவனும் அவள் இடுப்பை விட்டு இறங்க மாட்டான்.
குழந்தைகள் பிறந்து ஒரு வருடத்திற்குள்ளாகவே , விஷ்ணுவிற்கு இணை இயக்குனராக பதவி உயர்வு கிடைக்க,
அலுவலக வேலை பளுவும் கூடிப் போனது.
ஒரு ஞாயிறு, விஷ்ணு ஆழ்ந்த உறக்கத்தில் ஒருக்களித்துப் படுத்திருந்தான் .
அவன் பெண்ணரசி துருதுருவென்று அவனை நெருங்கி, தன் பட்டு கைகளால் அவன் கன்னத்தை வருட,
அதில் சுகம் கண்டவன் மேலும் தன் தூக்கத்தை தொடர, உடனே குனிந்து அவன் காதுகளை அவள் வெடுக்கென்று கடிக்க,
" ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.... " என்று அலறியபடி எழ முற்படும் போது தான் , தன் மகன்
தலைமாட்டு பக்கம் அமர்ந்து கொண்டு தலை முடியை இழுத்துக் கொண்டிருப்பது தெரியவந்தது.
" டேய் ரெண்டு பேரும் என்னை தூங்கவே விடமாட்டீங்களா...." என பொய்க் கோபம் கொண்டபடி தன் இரு மகவுகளை கைகளில் ஏந்திக்கொண்டு கொஞ்ச ஆரம்பித்தான் .
அப்போது அறைக்குள் ஸ்ரீ நுழைய,
" சின்ன சொட்ட முக்கீயும், உன்னை மாதிரிதான் டி , மனுஷனை தூங்கவிடாம காத கடிக்கிறா ..."
அவன் குற்றப்பத்திரிகை வாசிக்க,
குழந்தைகளோ, அதனை கண்டுகொள்ளாமல் அவன் தோள்களில் ஏறி சறுக்கு மரம் விளையாடிக்கொண்டிருந்தனர்.
" வைஷ்ணவ் கண்ணா... அப்படி செய்ய மாட்டான் .... இல்லடா பட்டு ...." என தன் மகனை பார்த்து அவள் கொஞ்ச,
" இவனும் ஈக்குவல் கல்பிரிட் தான்.... என்
தலை முடியை பிடிச்சி இழுத்துகிட்டு இருக்கிறான் ...." என்றவனின் இருபுறமும் விளையாடிக்கொண்டிருந்த குழந்தைகளை நகர்த்திவிட்டு ஸ்ரீ அவன் மடியில் ஏறி அமர்ந்துகொண்டாள்.
" ஏய் குண்டம்மா இறங்கு டி .... " அவன் கூவிக்கொண்டிருக்க, மகனும் மகளும் வழக்கம் போல் அவனது காது, தலைமுடியை பிடித்து விளையாட ஆரம்பிக்க, அதற்கு மேல் விலகி நிற்காமல் அவனும் கோதாவில் குதித்து அவர்களோடு ஐக்கியமானான்.
ஏறக்குறைய 3 ஆண்டுகளுக்குப் பிறகு, மாதவனின் மகன் பிறந்தநாளுக்கு தமிழ், ஷீலா தங்கள் குழந்தைகளோடு வருகை தந்திருந்தனர்.
வெங்கடேஷ், விஷ்ணு , அர்ஜுன் என அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தான் மாதவன் .
" இங்க பாரு அத்தான், நீ அப்படியே இருக்க, நான் மட்டும் வெயிட் போட்டுட்டேன் ..." என்றாள் நிலைக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டே அக்னி .
" இப்பதாண்டி இன்னும் அம்சமா அழகா இருக்க .... நான் கூடத்தான் வெயிட் போட்டிருக்கேன் ..." என தன் லேசான தொப்பையை பார்த்தபடி சொன்னவன்
" 5 குழந்தைகளுக்கு அப்பா....இந்த தொப்பை இருக்கலாம் தப்பில்ல..." என்றான் தனக்குத்தானே.
காரில் ஏறி அமர்ந்ததும்,
" நமக்கு இனிமே கார் பத்தாது .... பெரிய வேன் தான் வாங்கணும் ....
இப்படி 5 குழந்தைகளோடு போகும் போது,
மத்தவங்க சகஜமா பார்த்தா கூட எனக்கு ஒரு மாதிரி இருக்கு அத்தான் ..."
" இதுல வெட்கப்பட என்னடி இருக்கு ....
நீயும் நானும் சந்தோஷமா இருக்கோம்னு அர்த்தம்.... அதைவிட நம்ம குழந்தைகள் நம்ம எதிர்காலத்துக்கு ஆதாரமா இருக்காங்கன்னு அர்த்தம் ....
இன் ஃபேக்ட் அவங்க எல்லாம் பொறாமைதான் படுவாங்க உனக்கு தான் புரியல ..... " என்றான் தெளிவாக.
வழக்கம் போல் விழா களை கட்டியது.
மாதவனின் மகள் பிறந்தநாளின் போது
தமிழ் அர்ஜுனை முதன்முதலாக மும்பையில் சந்தித்தான். அதன் பிறகு பணி நிமித்தம் காரணமாக சந்திப்புகள் ஏற்படவில்லை. தற்போது ஏறக்குறைய 3 வருடங்கள் கழித்துக் இப்பொழுதுதான், அவன்
அர்ஜுனை அவனது 2 இரட்டை குழந்தைகளுடன் சந்திக்கிறான்.
" மச்சான், நாம கோழிப்பண்ணையை தான் பார்த்திருப்போம், ஆனா அவன் குழந்தை பண்ணையையே வச்சிருக்கான் டா...." என தமிழ் தன் ஐந்து குழந்தைகளோடு வரும் அர்ஜுனை பார்த்து மாதவனிடம் சன்னமாக கூறியதோடு
" இவன் உன்னை விட வாழ்க்கையில ரொம்ப பாதிக்கப்பட்டிருப்பான் போல இருக்கே ... எட்டு வருஷம் பிரிஞ்சி இருந்து சேர்ந்த மாதிரி அன்னைக்கு ஏதோ சொன்னான் டா...
இவனோட வரலாறை தெரிஞ்சுகிட்டே ஆகணும் .... " என்றவனுக்குத் தெரியாது எதிர்காலத்தில் அவனுடைய வரலாறை தெரிஞ்சுக்க வேண்டிய நிலைமை வரப்போகிறது என்று.
" இப்ப எதுக்கு இப்படி பொறாமைப்பட்டு பொங்க வச்சிக்கிட்டு இருக்க ...." என்றான் மாதவன் மெல்ல குலுங்கி சிரித்து.
" இவன் என்ன ரெம்ப டிஸ்டர்ப் பண்றான் டா .... ஒன்னுக்கு ரெண்டு ட்வின்ஸ் வச்சிருக்கான் டா... மச்சான் உன் மனசாட்சி தொட்டு சொல்லு, உனக்கு பொறாமையே வரலனு ..."
" அப்படின்னு சொல்ல முடியாது எனக்கு லைட்டா இருக்குது ... " என மாதவன் சுதாரிக்க
" பாத்தியா நீ வழக்கம் போல அழுத்தம் டா நான் தான் வெள்ளந்தி ..."
"இங்க பொறாமைப்பட்டு பொங்க வைக்கிறதோட நிறுத்திக்கோ.... ஷீலா கிட்ட போய் பொலம்பின உன்னை போட்டு தள்ளி விடுவா..." என மாதவன் அறிவுறுத்த
" சரியா சொன்ன மச்சான், நிச்சயமா செய்வா..." என்று தமிழ் பேசி முடிப்பதற்கும், அவர்களை தொலைவிலிருந்தே பார்த்துக்கொண்டே வந்த அர்ஜுன்
" என்ன, என்னை பத்தி பெரிய காசிப் போய்க்கிட்டிருக்குனு நினைக்கிறேன்..."
என்றவனை பார்த்து மாதவன் சிரிப்பை அடக்க முயல,
" நீங்க நாட்டுக்காக உழைச்சது மட்டும் தான் எங்களுக்கு தெரியும் இப்பதான் பாக்கறேன் நீங்க வீட்டுக்கும் நிறைய உழைச்சு இருக்கீங்கன்னு .." என்ற தமிழின் பார்வை அர்ஜுனை தாண்டி அவன் குழந்தைகளின் மீது படிவதை கண்ட அர்ஜுன்
" கூடிய சீக்கிரம் இன்னும் ஒரு ட்வின்ஸ்க்கு ட்ரை பண்ணலாம்னு ஐடியா இருக்கு.... பார்க்கலாம்..." என்றான் குறும்பாக சிரித்தபடி.
" அடப்பாவி ..." என தமிழ் வாய்விட்டே புலம்ப மாதவனும் அர்ஜுனும் குலுங்கி நகைத்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சி முடிவடைந்ததும்,
ஆண்கள் குழு, பெண்கள் குழு குழந்தைகள் குழு என தனித்தனியே பிரிந்து பேச்சும் அரட்டையும் அரங்கேறிக் கொண்டிருந்த சமயத்தில்,
ஏதோ சத்தம் கேட்க பெரியவர்கள் குழந்தைகள் குழுவை நோக்கி செல்ல அங்கு
" டேய் டேய் எதுக்குடா சண்டை போடறீங்க .... " என கட்டிப்புரண்டு சண்டையிட்ட குழந்தைகளை தேவரும் வேதாவும் மாறிமாறி தடுத்து கொண்டிருந்தனர்.
அங்கு கட்டிப்புரண்டு சண்டை விட்டது வேறு யாருமல்ல.
தமிழின் மகள் நிலா, அர்ஜுனின் மகன் அஷ்வத் .....
நிலா அஷ்வத்தை பற்றி தமிழில் தன் தந்தையிடம்
குற்றச்சாட்டுகளை அடுக்க, அஷ்வத் ஹிந்தியில் தன் தந்தையிடம் நிலாவைப் பற்றி குறை கூறிக் கொண்டிருந்தான்.
ஒன்றுமில்லாத உப்பு பெறாத விஷயம்.
அஷ்வத்தின் ஐஸ்கிரீம் நிலாவின் ஆடையில் கொட்டிவிட்டது அவ்வளவு தான். அதுதான் பிரச்சனை.
மாதவனின் மகன் ரிஷி வழக்கம் போல் நிலாவிற்கு ஆதரவு கரம் நீட்ட, அவன் தன்னை விட பெரியவன் என்றாலும் அவனை துணிந்து எதிர்த்து சண்டையிட்டான் அஷ்வத்.
மாதவனின் மகள் ரக்ஷிதா மட்டும் அஷ்வத்தின் கரம் பற்றி இழுத்து சண்டையை நிறுத்த முயற்சித்தாள்.
விஷ்ணுவின் குழந்தைகள் உட்பட மற்ற குழந்தைகள் அனைவரும் மிகச்
சிறியவர்கள் என்பதால் வெறும் பார்வையாளர்களாக இருந்தனர் .
ஒரு வழியாக இரு தரப்பையும் சண்டைக்கு காரணமான ஐஸ்கிரீமை கொடுத்தே சமாதானம் செய்வதற்குள், பெரியவர்களுக்கு போதும் போதும் என்றாகி போனது.
குழந்தைகளின் சண்டைகளுக்கு ஆயுசு கம்மி என்பது போல், ஐஸ்க்ரீம் உண்டு முடித்ததும் வழக்கம் போல் அவர்கள் அனைவரும் ஒன்றாக ஒட்டி விளையாட தொடங்கினர்.
முதல் சந்திப்பை காட்டிலும், இந்த சந்திப்பில் நட்பு வட்டம் பலப்பட்டது என்றே சொல்லலாம்.
விழாவும் இனிதே முடிவடைந்தது.
சில வாரங்களுக்குப் பிறகு .....
தனக்கு பதவி உயர்வு கிடைத்த நற்செய்தியை மனையாளிடம் பகிர்ந்து கொள்ளும் ஆவலில் வீட்டிற்கு வந்த அர்ஜுன் அவளை தேட,
" எங்க போனா இவ...." என யோசித்துக் கொண்டிருக்கும் போதே , லானிலிருந்து சத்தம் வர, அங்கு சென்று பார்த்தால் மனையாளோடு அவன் மக்களும் இருந்தனர்.
" குழந்தைகளை எதுக்குடி ரேஷன் கடை கியூல நிறுத்தற மாதிரி, நிறுத்தி வச்சிருக்க ..."
" ம்ம்ம்ம், உன் பசங்கள்ல யாரோ ஒருத்தர் , ஃபிளவர் வாஸை ஓடச்சிருக்காங்க ... யாருன்னு கேட்டா சொல்ல மாட்டேங்குறாங்க .... அதான் கியூல நிறுத்தி விசாரிச்சிகிட்டு இருக்கேன் ...." ----அக்னி.
உயர வாரியாக பிள்ளைகள் நிறுத்தி வைக்கப் பட்டிருக்க, முதலில் இரட்டை சிண்டுகளோடு கையில் பொம்மையுடன், உதட்டைப் பிதுக்கி அழுகையை அடக்கியபடி நின்றிருந்த அவன் பெண்ணரசி அக்ஷிதாவை கண்டதும்,
" ஐய்யோ , என் பிரின்சஸ்சும் , இந்த கியூல நிற்கறாளா...." என்றவன்
விரைந்து சென்று அவளை கையில் அள்ளிக்கொள்ள, தந்தையின் ஆதரவு கிடைத்ததும் அவள் உயர்ந்த குரலில் அழ ஆரம்பிக்க,
" உன் அப்பா வந்ததும் நடிக்க ஆரம்பிச்சிட்டியா ...." என அக்னி
வசைப் பாடியபடி நெருங்க
" இந்த நாலு பேரை என்ன வேணாலும் பண்ணிக்கோ... என் பொண்ண விட்டுடு ..." என அர்ஜுன் தூக்கிக் கொண்டு ஓட, அவனை அக்னி துரத்த,
மற்ற குழந்தைகளும் அந்த ஜோதியில் ஐக்கியமாயினர்.
வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரமில்லை என்ற போது
கஷ்டங்கள் மட்டும் நிரந்தரமா என்ன ....
வாழ்க்கையில் அளவுக்கு அதிகமான கஷ்டங்களை சந்தித்த இந்தக் காதல் ஜோடியின் வாழ்க்கை இனிமேல் நிச்சயம் அமோகமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை ....
நமது தேசத்தின் பாதுகாப்பிற்காக உழைத்த, உழைத்துக் கொண்டிருக்கும் அனைத்து நேர்மையான அதிகாரிகளுக்கும் இக்கதை சமர்ப்பணம்.
ஜெய்ஹிந்த்.
சுபம் .