Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

சிறுகதை : எங்கேயும் காதல்

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
681
சிறுகதை :

பிரதிலிபியில் நடைபெற்ற சிறுகதை போட்டியில், "எங்கேயும் காதல்" என்ற தலைப்பிற்காக எழுதிய சிறுகதை இது.

நான் என் தாய்மடிக்கு சென்று கொண்டிருக்கிறேன். ஆம் நான் பிறந்து தவழ்ந்து வளர்ந்து ஓரளவு வாழ்ந்த என் சொந்த ஊருக்கு சென்று கொண்டிருப்பதை தான் அப்படிச் சொன்னேன்.

திருமணத்திற்குப் பின் 12 ஆண்டுகள் வடநாட்டு வாசம். இரண்டு குழந்தைகளுக்கு தாயான பின்பு தான் இதோ என் தாய் மண்ணை நோக்கி.

தாய் இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டாலும் பெற்றெடுத்த தாய் மீது இருக்கும் அதே பாசம் என்னை தூக்கி சுமந்த நான் பிறந்த மண்ணின் மீதும் அப்படியே உள்ளது.

நான் பிறந்த ஊர் கிராமமும் இல்லாமல் பெரு நகரமும் இல்லாமல் இடைப்பட்ட நிலப்பரப்பைக் கொண்டது.

இன்னும் சொல்லப்போனால் 108 திவ்யதேசங்களில் ஒன்று. கோவில் இல்லாமல் சிறு தெருவைக் கூட கடந்துவிட முடியாது.

சிறு வயதில் என் தாயின் கரம் பற்றிக்கொண்டு கோவிலுக்கு செல்வதில் அப்படி ஒரு அலாதி உண்டு .

கோவில் திருவிழாக்கள் என்றால் சொல்லவே வேண்டாம். அந்தப் பத்து நாட்கள் உற்சவதத்தில் உறவினர்கள் நண்பர்கள் புடைசூழ கடைத்தெருக்களில் புதிதாய் முளைத்திருக்கும் சிறுசிறு கடைகளை பார்வையிட்டுக் கொண்டே வலம் வந்தது, இன்று நினைத்தாலும் சர்க்கரை நிமிடங்களாய் அடித்தொண்டையில் இனிக்கும் .

கைப்பேசிகள் கைக்குள் வராத காலம் அது.

அப்போது எனக்கு இருபது வயதை தொடப்போகும் யவ்வனம். இப்பொழுது கழுத்தைத் தாண்டி கூட கூந்தல் இல்லை. ஆனால் அப்போது இடை தாண்டிய கூந்தல், காதுகளில் குதித்தாடும் ஜிமிக்கி, அந்த பருவத்திற்கே உரிதான ஆடையான
பளபளக்கும் பாவாடை தாவணி சகிதமாக தோழிகளோடு நகர்ப்புற பேருந்தில் கல்லூரிக்கு சென்று வந்த நாட்கள் எல்லாம் வாழ்வின் பொக்கிஷ தருணங்கள்.

தற்போது என் அன்புக் கணவர் , ஆசை குழந்தைகளோடு, எங்கள் இல்லம் நோக்கி காரில் பயணம்.

ஒவ்வொரு தெருவையும் கடக்கும் போது ஏதோ ஒரு நிகழ்வு அந்த தெருவை தொடர்புபடுத்தி உதயமாகிக்கொண்டே இருந்தது .

நான் படித்த பள்ளி கல்லூரிகளை என் குழந்தைகளுக்கு காட்டினேன்.
என் காதல் கணவருக்கும் தான்.

ஏனோ கல்லூரியை கடக்கும் பொழுது, அந்த தெருவின் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும் பேருந்து நிறுத்தத்தை கண்டதும் திடீரென்று ஒரு நிகழ்வு மனதில் மின்னல் போல் வந்து போனது.

அதுவும் ஒரு பிப்ரவரி மாதம் தான்.
பிப்ரவரி மாதம் காதல் மாதமாக அங்கீகரிக்கப்பட்டு இங்கொன்றும் அங்கொன்றுமாய் காதல் நிகழ்ச்சிகள் தொலைக்காட்சி மற்றும் வானொலியில் புத்தம் புதிதாய் களை கட்டிய காலம் அது.

எனக்கு இரண்டு உயிர் தோழிகள் உண்டு

நாங்கள் மூவரும் ஒரே பேருந்து நிறுத்தத்தில் ஏறி கல்லூரிக்கு வருவோம் . கல்லூரியிலும் ஒரே பிரிவு.
வகுப்பறையில் அமர்வதும் ஒரே மேஜையில்.

கல்லூரி படிப்பு இறுதி ஆண்டை நெருங்கிக் கொண்டிருந்த சமயம் அது.

அப்போது சில மாதங்களாக,
ஒரு இளைஞன் தன் இரு சக்கர வாகனத்தில் எங்கள் மூவரையும் தொடர்வதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்..

இதை என்னுடைய தோழிகள் கண்டுபிடித்து அவனைப் பற்றி விவாதிக்க ஆரம்பித்தனர்.

எங்கள் மூவரில் யாரை பார்க்க வருகின்றான் என்பதுதான் அந்த விவாதத்தின் கரு ..

காதல் கத்திரிக்காய் என்று எதுவுமே இல்லை என்றாலும்,அந்த வயதுக்கே உரித்தான சுவாரசியம் அதில் கூடிப்போக, விவாதம் ஒரு வாரம் தொடர்ந்து நடைபெற்றுக் ஒருமனதாக ஒரு முடிவுக்கு வந்தனர்.

அதாவது அவன் என்னை பார்க்க வருகின்றான் என்பது தான் அந்த முடிவின் சாராம்சம் .

அதற்கு அவர்கள் கூறிய காரணமானது,
நான் இரண்டு நாட்கள் எதேச்சையாக விடுப்பு எடுத்து இருந்த சமயத்தில் அந்த இளைஞனின் கண்கள் என்னை தேடித்தேடி களைத்தனவாம்...

எப்படியோ சா பூ த்ரீ போட்டு நான்தான் அந்த இளைஞனின் கதாநாயகி என்று முடிவுகட்டி அன்றிலிருந்து, ஊர் பேர் எதுவுமே தெரியாத அந்த இளைஞர்கனோடு என்னை சம்பந்தப்படுத்தி பேசுவதை அவர்கள் வழக்கமாக்கிக் கொண்டனர்.

காதல் என்ற வார்த்தையை பெரு நோய்த்தொற்று என்று சொல்லி சொல்லி வளர்க்கப்பட்டவள் நான் .

அவர்களின் கேலிப் பேச்சுகளை நான் ரசிக்கவும் இல்லை அதே நேரத்தில் அதனை புறம் தள்ளவும் இல்லை.

அதே சமயம் என் தோழிகள் என்னை நன்கு அறிவர், என்னுடைய சிந்தனை எல்லாம் மாவட்ட ஆட்சியர் ஆக வேண்டும் என்பதுதான் என்று .
ஆதலால் பொழுதுபோக்குகக்காக அவர்கள் இணை கூட்டிப் பேசி மகிழ்ந்தனர் .

இந்நிலையில் ' வேலன்டைன்ஸ் டே' என்னும் காதலர் தினம் வந்தது.

எப்பொழுதுமே இருசக்கர வாகனத்தில் வரும் அந்த இளைஞன் அன்று, எங்களுக்கு நேர் எதிராக தன் இரு நண்பர்களோடு நடந்துவர,

நாங்கள் மூவரும் வழக்கம் போல் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடக்க, எங்களை கடந்த அந்த இளைஞன்
திடீரென்று நான் எதிர்பாராத வேளையில் என் கைகளில் இருந்த என் புத்தகத்தைப் பற்றி எடுத்து அதில் ஒரு வாழ்த்து அட்டையை சொருகி விட்டு விலகி நடந்தான்.

ஒரு கணம் செய்வதறியாமல் நான் உறைந்து நிற்க, உடனே என் தோழி
அவன் சொருகி விட்டுச் சென்றிருந்த வாழ்த்து அட்டையை எடுத்து பிரித்துப் பார்த்தாள்.

பார்த்தவள் உடனே அவனை கண்டமேனிக்கு வசை பாட ஆரம்பித்துவிட்டாள்.

காரணம் புரியாமல் நானும் என் மற்றொரு தோழியும் விழித்து வினவ

" சேற்றில் முளைத்த செந்தாமரை நீ... உனக்கான ஆதவன் நான் ..." என்று அந்த வாழ்த்து அட்டையில் எழுதப்பட்டிருந்தது தான் காரணமாம்.

படித்துப் பார்த்தும் அந்த தோழியின் கோபத்திற்கு காரணம் விளங்காமல் போக,

" உன் பேரு பத்மா ... அதனால அவன் உன்னை செந்தாமரைனு கூப்டுகிட்டு போகட்டும் ... ஆனா எங்களை ஏன் சேறுனு சொல்லணும்...." என்று அவள் அந்த இருவரிக்கு பொருள் சுவை நல்க,
கேட்டுக்கொண்டிருந்த நாங்களிருவரும் குலுங்கி சிரித்தோம் ....

இதோ இப்போது அந்த இடத்தை தான் கடந்து கொண்டிருக்கிறேன்.

அதன்பின் அன்றொரு நாள் அந்த இளைஞன் நேரடியாக என்னிடம் வந்து

"உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் பத்மா ..." என்று பேச்சை தொடங்கும் போதே அவன் அடுத்த கூறப்போவதை அனுமானித்து என் லட்சிய பதவியான மாவட்ட ஆட்சியர் ஆவதற்காக என்னை தயார் படுத்திக் கொண்டிருப்பதை கூறி, அதற்கு மேல் அவன் எண்ணத்தை கூற விடாமல் நான் தடைசெய்ய, அனைத்தையும் கேட்டு முடித்தவன்,

" நீ உன் படிப்புல கவனம் செலுத்து... ஒருவேளை ஒன் ஆசைப்படி நீ கலெக்டர் ஆயிட்டா என்னை கல்யாணம் பண்ணிப்பியா..." என்றான் கண்ணில் காதலோடு.

என்னிடம் அதற்கு பதில் இல்லை.
பதில் இருந்தாலும் கூற விருப்பமும் இல்லை.

" பார்க்கலாம் ..." என்ற ஒரே வார்த்தையில் அவனைக் கடந்து வந்துவிட்டேன்.

அதற்குமேல் அவன் என்னை சந்திக்க விழையவில்லை. பிறகு வந்த நாட்களில் என் தாய் உடல்நலம் மோசமாகி ஒரு கட்டத்தில் படுத்த படுக்கையாய் இருந்து இறைவனது திருவடி நிழலில் இளைப்பாற சென்றுவிட்டார்.

அதற்குப்பின் வாழ்க்கை வாழ்க்கையாக இல்லை. வெறும் வெறுமையாக தான் இருந்தது.

பிறகு மேல்படிப்புக்காக பெருநகரம் சென்றேன். பல்கலைக்கழக சிறந்த தரவரிசையில் மேற்படிப்பை முடித்து
கணினித்துறையில் கால் பதித்தேன்.

பிறகு கண்டம் விட்டு கண்டம் நாடு விட்டு நாடு என மூன்று வருட அஞ்ஞான வாசம்.

அதன்பின் திருமணம். பிறகு வடநாட்டில் வாழ்க்கை.

இதோ என் சொந்த ஊரில் நடைபெறும்
பத்து நாட்கள் உற்சவத்தில் ஒன்றான தேர்த்திருவிழா இன்று.

ஊர் கூடி தேர் இழுக்கும் என்ற வார்த்தையை கேள்விப்பட்டுள்ளேன்.
இன்றுதான் அதன் உட்பொருளை உணர்ந்தேன்.

மக்கள் வெள்ளம் அலை மோத,
தேரில் வீற்றிருந்த மாயோனை வடம் தொட்டு இழுத்தனர் பக்தி வெள்ளத்தில் திளைத்த பக்தகோடிகள்.

கூட்டத்தில் குழந்தைகள் தொலைந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் என் கணவர் இரு குழந்தைகளையும் தன் இரு கைகளில் ஏந்திக்கொண்டார். என்னையும் பாதுகாப்போடு பற்றியபடி
வடத்தை தொட்டு வான்நோக்கி வலம் வந்த வாசுதேவனை இருவரும் மனமார வழிபட்டோம்.

அப்பொழுது என் மகள் ஏதோ ஒரு விளையாட்டு பொம்மையை காட்டி வாங்க வேண்டும் என்று அடம் பிடிக்க, என் கணவர் அவளை அழைத்துக்கொண்டு முன்னே செல்ல, அப்பொழுது என்னை யாரோ " பத்மா" என்று அழைத்தது போல்
தோன்றி திரும்பிப் பார்த்தால் அதே இளைஞன் , இப்போது சற்று நடுத்தர வயதில் வளர்ந்த ஆண் மகனாய்.

அது அவன் தான். அவன் மூக்கு நுனி மச்சமும் , எப்பொழுதுமே அவன் நெற்றியில் இருக்கும் விபூதி கீற்றும் அதே துறுதுறு கண்களும் அவனை அடையாளம் காட்டின.

ஒரு கணம் உறைந்து போய் நான் நிற்க,

" உங்க அம்மா இறந்ததுக்கு அப்புறம் மாஸ்டர்ஸ் படிக்கப்போன... அப்புறம் ஆன்சைட்ல வொர்க் பண்ண போன...
திரும்பி வந்ததும் கல்யாணம் பண்ணிக்கிட்ட ... இல்ல ..."என்றான்
என்னைப் பற்றி அனைத்து தகவல்களையும் மொழிந்து.

அதுவரை உறைந்து நின்றவள், உணர்வு பெற்று , மரியாதை நிமித்தமாக

" நீங்க இப்ப எங்க இருக்கீங்க..? எங்க ஒர்க் பண்றீங்க ..." என்றேன்
எதையாவது விசாரித்தே ஆகவேண்டும் என்ற
காரணத்தால்.

ஒரு பிரபல நிறுவனத்தின் பெயரை கூறி, அதில் ஒரு பெரும் பதவியை குறிப்பிட்டுவிட்டு

" உன்னை இப்படி பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு பத்மா ... உன் ஹஸ்பண்ட் ரொம்ப கேரிங் டைப் போல .... ரெண்டு குழந்தையும் உன்னையும் ரொம்ப நல்லா பாத்துக்குறாரு... தூரத்திலிருந்து உங்களையே தான் பார்த்துக்கிட்டு இருந்தேன் ... " என்றவன் ஒரு கணம் நிறுத்தி

" நீ ஐஏஎஸ் பாஸ் பண்ணல அதனால என்னை கல்யாணம் பண்ணிக்கல இல்ல..."என்றவனின் பேச்சு ஹாஸ்யமா ஆதங்கமா என புரியாமல் விழித்த நான் பேச்சை மாற்றும் முயற்சியில்

" உங்க பேமிலி வரலையா ..." என்றேன்.

" ம்ம்ம், வந்திருக்காங்க ..." என்றவன் கூறி முடித்து அந்த வாக்கியத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.
அதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல்
நான் கிளம்பலாம் என்று முடிவெடுக்கும் போது என் கணவரும் வந்துவிட,

" வா பட்டு, போலாம் ..." என அழைத்தவர், அவனை சினேகமாய் பார்த்து ஒரு புன்னகை பூக்க, அவனும் என் கணவரைப் பார்த்து நட்போடு
ஹலோ சொல்ல,
அப்போது பார்த்து எங்கள் இரு குழந்தைகளும் எங்களை கூட்டத்திலிருந்து வெளியேறுமாறு
பெருங்குரலெடுத்து விளிக்க,

" சரி நாங்க கிளம்பறோம் ..." என்று
அவனிடம் நாங்கள் விடைபெற்று வெளியேறும் போது என் மகன்

"யாருமா இது , அவர் பேர் என்ன ..." என்று கேட்கும் பொழுது தான், எனக்கு அந்த இளைஞனைப் பற்றி எதுவுமே தெரியாது என்ற எண்ணமே முதன் முறையாய் உரைத்தது.

கல்லூரி காலங்களில் பல தருணங்களில் சந்தித்திருக்கிறேன். ஒரே ஒரு முறை உரையாடி இருக்கிறேன்.

அதன்பின்பு இதோ இன்று தான் சிறு உரையாடல்.

ஆனால் அவன் பெயர் என்ன என்று நானும் கேட்டதில்லை அவனும் சொன்னதில்லை.

நான் பதில் தெரியாமல் முழிக்க, என் கணவர் என்ன என்று கேட்க, என் கல்லூரி கால நிகழ்வுகள் அனைத்தையும் அவரிடம் பகிர்ந்தேன்.

கேட்டு குலுங்கி சிரித்தவர்,

" மே பி அவன் பேரு சூர்யா, கதிரவன் , ஆதவன், கதிரேசன்.... அப்படின்னு ஏதாவது இருக்கலாம் ...

இதே நம்ம ஊரா இருந்தா சூரஜ், கர்ணா அப்படி இருக்கும்..." என்றார் அவருக்கு தெரிந்ததை வைத்து அனுமானித்து.

" அப்படி ஏதாவது தான் இருக்கும் ..." என்று ஒத்து பேசிய என் மனம் முதன் முதலாய்

" அவன் பேர் என்னவாயிருக்கும் ..." என்று என்னிடமே கேட்டது.

Back
Top