- Joined
- Jul 21, 2025
- Messages
- 681
- Thread Author
- #1
அத்தியாயம் 86
" ஐ அம் சாரி.... கொஞ்சம் கூட எதிர்பார்க்கல .... ரொம்ப சின்ன குழந்தை, இவனுக்கு போய் கேன்சர்னா ரொம்ப கஷ்டமா இருக்கு ..." என்றான் அதிர்ச்சியும் கவலையுமாய்.
அதற்கு விரக்தி புன்னகை பூத்தவள், தரையில் சிதறிக் கிடந்த குழந்தையின் மருத்துவ அறிக்கைகளை தேடி எடுத்து கோப்புகளில் கோர்க்க, உடன் உதவியவனுக்கு
அதற்கு மேல் என்ன பேசுவது என்றே தெரியவில்லை.
அவள் மாதவி போல் இருப்பதே
அவனுக்கு முதல் அதிர்ச்சி , இப்போது அவளது சின்னஞ்சிறு குழந்தைக்கு புற்று நோய் என்பது அதைவிட பலத்த அதிர்ச்சியை கொடுத்திருக்க, ஏதோ ஒரு வகையில் அவளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் தோன்ற தயங்கி தடுமாறி நின்றவன்
ஓரிரு கணத்திற்கு
" கேக்க மறந்துட்டேன்... உங்க பேர்.. "
" மித்ரா ..... நீங்க ..?"
" வாசு தேவ கிருஷ்ணன் ..."
"தமிழ்நாட்டுல எங்க இருக்கீங்க ..."
" மாயோன் மங்கலம் .... சேலம் டிஸ்ட்ரிக்ட் ...." என்றதும் அவள் தன் கண்களை அகல விரித்து ஆச்சரியமாக பார்க்க,
" என்ன அப்படி பாக்கறீங்க .... அந்த ஊரை பத்தி கேள்விப்பட்டிருக்கீங்களா ..... எங்க ஊர்ல இருக்கிற மோகினி மாயோன் கோயில் ரொம்ப ஃபேமஸ்.... நம்ம இந்தியன்ஸ் மட்டும் இல்ல, ஃபாரினர்ஸ் கூட டூரிஸ்டா வருவாங்க.... "
அதற்கு நேரடியாக பதில் ஏதும் சொல்லாமல்,
" நீங்க இங்க எங்க இருக்கீங்க... என்ன பண்றீங்க ..." என்றாள் அவனைப் பற்றி தகவல்களை சேகரிக்க எண்ணி.
அவன் தன்னுடைய பணி, தான் தங்கியிருக்கும் இடம் அனைத்தையும் பகிர்ந்ததும்,
" இஃப் யூ டோன்ட் மைன் .... உங்க போன் நம்பர் கிடைக்குமா ...."
" ஒய் நாட் ..." என்றவன் தன் அலைபேசி எண்ணுடன் வீட்டு முகவரியையும் பகிர்ந்தான்.
அப்போது அவளது அலைபேசி சிணுங்க,
" எக்ஸ்க்யூஸ் மீ " என்றபடி அதனை காதுக்கு கொடுத்தவள்
" நாங்க இன்னும் ஹாஸ்பிடலுக்குள்ளயே போகல ...
நீங்க ஹாஸ்பிடல்லயே இருங்கப்பா... நான் குழந்தையோட இப்ப அங்க வந்துடறேன் ..."
என அவள் அழைப்பை துண்டித்ததும்,
" டு யூ நீட் எனி ஹெல்ப் ..." என்றான்.
" நோ நோ .... குழந்தைக்கு மெடிசன் வாங்கணும்னு என்னை மெடிக்கல் ஷாப்ல இறக்கி விட்டுட்டு அப்பா பெட்ரோல் போட போயிருந்தாரு ...
மெடிசன் வாங்கிக்கிட்டு ரோட கிராஸ் பண்ணி ஹாஸ்பிடல் போகலாம்னு நினைக்கும் போது தான் குழந்தை ஓடி வந்துட்டான் ....
இப்ப அப்பா பெட்ரோல் போட்டு கிட்ட டைரக்டா ஹாஸ்பிடல் போய் இருக்காரு போல.... என்னை அங்கு காணலன்றதும் , எனக்கு போன் பண்ணிட்டாரு ..."
" ஓகே.... நீங்க கிளம்புங்க ..."
" உங்களை எங்கேயாவது ட்ராப் பண்ணனுமா... சொல்லுங்க... அப்பா ட்ராப் பண்ணுவாரு...."
" வேணாம் .... இங்க யூ டர்ன் எடுக்கிறது கஷ்டம்னு , என் காரை அந்த புக் ஷாப்ல நிறுத்தி இருக்கேன் ..."
" தென் ஓகே .... என் குழந்தையை காப்பாத்தியிருக்கீங்க... அவன் உயிருக்காக நான் எவ்ளோ போராடிக்கிட்டு இருக்கேனு எனக்கு தான் தெரியும் .... வர சண்டே நிச்சயம் நீங்க எங்க வீட்டுக்கு வரணும்... அட்ரஸ் நோட் பண்ணிக்கோங்க ..."என்று தன் வீட்டு முகவரியை மிகுந்த ஆர்வத்தோடு கொடுத்துவிட்டு
" நீங்க மறந்துடகூடாதுன்னு, அன்னைக்கு மார்னிங் போன் பண்ணி உங்களுக்கு ரிமைண்ட் பண்றேன் ..." என ஏகப்பட்ட நன்றியை கண்களில் தேக்கி மொழிந்தவள்
" பாய் ... மீட் யு ஆன் சண்டே ..." என்று மென் புன்னகையோடு விடை பெற்றாள்.
அவள் சாலையைக் கடந்து, அந்த புற்றுநோய் மருத்துவமனைக்குள் நுழைவதை பார்த்துவிட்டு, தன் காரை எடுத்துக் கொண்டு வீடு வந்து சேர்ந்தவனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லாமல் பலவற்றை சிந்திக்கத் தொடங்கியது.
சிலர் சிலர் சாயலில் இருப்பார்கள் ...
அது இயல்பு ....
ஆனால் அந்தப் பெண் மித்ரா, மாதவியின் மறு பதிப்பாக இருந்தது அவன் சிந்தனையை தூண்டி விட,
ஞாயிற்றுக்கிழமைக்காக காத்திருக்கலானான்.
அந்த வாரம் இயல்பாக முடிய,
ஞாயிறு அன்று காலை மித்ரா கிருஷ்ணாவை தொடர்பு கொண்டு
" ஹலோ, நான் மித்ரா பேசறேன் ...
ஞாபகம் இருக்கா... இன்னிக்கு நீங்க என் வீட்டுக்கு வரேன்னு சொல்லி இருக்கீங்க ...."
" ம்ம்ம்...." என்றான் மென் புன்னகையோடு.
" உங்களோட லன்ச் இன்னிக்கு எங்களோட தான் .... சோ சீக்கிரம் ... கிளம்பி வாங்க ....உங்களுக்கு ஒரு சர்ப்ரைசும் காத்துக்கிட்டு இருக்கு..."
" சர்ப்ரைஸா ...."
" ஆமா... சீக்கிரம் வந்தீங்கன்னா சர்ப்ரைஸை சீக்கிரம் தெரிஞ்சுக்கலாம் ...." என்றவளின் பேச்சில் சற்று உரிமை கூடி இருப்பது போல் தோன்ற,
" ஷூர் .... இன்னும் ஒன் ஹவர்ல அங்க இருப்பேன் ...." என்று முடித்தான்.
அவன் சொன்னது போல் அடுத்த ஒரு மணி நேரத்தில் அவள் வீட்டில் இருந்தான்.
சற்று பெரிய தனி வீடாக முன்புற தோட்டத்துடன் இருந்தது அவளது இல்லம்.
அவள் கூறிய அடையாளங்களை வைத்து, வீட்டை சுலபமாக கண்டுபிடித்து
வந்தவனை, வாயிலிலேயே எதிர்கொண்டு வரவேற்ற அவளது தாயும் தந்தையும் ஆச்சரியத்தில் கண்களை அகல விரிக்க,
அவர்களது முக பாவத்தை அவன் வித்தியாசமாக நோக்க,
" வாசு .....?" என்றார் மகிழ்ச்சியாக மித்ராவின் தாயார்.
" ஆமா என் பேரு வாசு தான் ...
என்ன... என்னை எப்படி தெரியும் ...."
என்றவனுக்கு மித்ராவின் தாயார் பார்ப்பதற்கு இறந்து போன விசாலத்தை நினைவுபடுத்த,
" உங்களுக்கு விசாலம்னு யாராச்சும் தெரியுமா ..." என்றான் எதிர்பார்ப்போடு.
" விசாலம் என் அம்மா, மூர்த்தியார் என் அப்பா ...." என்றார் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
" அப்ப நீங்க ...கலைச்செல்வி .... இவரு சுப்பிரமணியம்..... ரைட் " என்று அவன் இழுக்க,
" ஆமா வாசு...."
" சரி ... எப்படி என்னை பார்த்ததும் கண்டுபிடிச்சீங்க ...."
" போட்டோல பாத்திருக்கேன்.... உனக்கும் என் பொண்ணு மாதவிக்கும் நடந்த கல்யாணத்தை
ரிஜிஸ்டர் பண்ண போட்டோ எடுத்து
மூர்த்தியாருக்கு அனுப்பினீங்களே ஞாபகம் இருக்கா ... அந்த போட்டோ நம்ம ஊர் கோவில் ட்ரஸ்டீக்கு கிடைக்க, அவர் அதை சங்கையா கிட்ட எதேச்சையா காட்ட, அவர் அதை மொபைல்ல போட்டோ எடுத்து எனக்கு அனுப்பி இருந்தாரு..." என்றார் வெகு இயல்பாக.
அவருக்கு மாயோன் மங்கலத்தில் சமீபத்தில் நடந்தவைகள் அனைத்தும் தெரிந்திருப்பதாகத் தெரிய
உடனே மித்ரா
" நீங்களும், என் அப்பா அம்மாவும் ஒரே ஊர்க்காரங்கனு சர்ப்ரைஸ் கொடுக்கலாம்னு தான் கூப்பிட்டேன் .... ஆனா இப்ப பாத்தா உறவுக்காரங்களாயிட்டீங்க...
நீங்க மாயோன் மங்கலத்திலிருந்து வந்திருக்கீங்கனு நான் சொன்னதுமே அப்பா உங்க பேர கேட்டாரு.... உங்க பேர நீங்க பெருசா சொன்னீங்களா .... எனக்கு கடைசியா இருந்த கிருஷ்ணா மட்டும் தான் மனசுல ரிஜிஸ்டர் ஆச்சு.... அதனால அதை தான் சொல்லி இருந்தேன் ... ஒருவேளை உங்க முழு பேரை சொல்லி இருந்தா , அன்னைக்கே அப்பா கண்டு பிடிச்சு இருப்பாரோ என்னவோ .... உங்களயும் மாதவியும் போட்டோல கூட பார்த்து இருக்கேன் ... ஆனா அப்ப நான் மாதவியை தான் ஆச்சரியமா பார்த்தேன் உங்களை சரியா பாக்கல ... அதனால உங்க முகம் ஞாபகத்துல இல்ல ...
ஆமா .... உங்க முழு பெயர் என்ன ... மறந்து போச்சு ..." என்றவளை பார்த்து
குலுங்கி சிரித்தவன்
" வாசுதேவ கிருஷ்ணன் ...."
" அப்பாடா, எவ்ளோ பெரிய பேரு ..."
" இவ சிவ சுப்பிரமணியன்ற என் பேரையும் பெருசுன்னு தான் சொல்லுவா ப்பா ..." என்றார் சுப்பிரமணியம் புன்னகைத்து.
அதற்கு லேசாக சிரித்தவன் ,
" நீங்க ரெண்டு பேரும் இறந்து போயிட்டதா ...... சங்கையா ......." என்றான் இடைவெளி விட்டு இழுத்து.
" மாயோன் மங்கலத்த பொறுத்த வரைக்கும் ..." என்றதும்
அங்கு ஒரு ஆழ்ந்த அமைதி நிலவ,
ஒரு பெருமூச்சு ஒன்றை ஆழ்ந்த வெளியேற்றிவிட்டு
" முதல்ல சாப்பிடுங்க ... அப்புறம் எல்லாத்தையும் பேசலாம் ..." என முடித்தார் சுப்பிரமணியம்.
அவனுக்கு தடபுடலாக விருந்து உபச்சாரம் வழங்கப்பட, அசந்து போனான் கிருஷ்ணா.
அப்போது தான் நினைவு வந்தவனாய் ,
" குழந்தை எங்க ..."
" மெடிசன் கொடுத்திருக்கேன் ....
அந்த ரொம்ப தூக்கத்தை கொடுக்கும்... தூங்கிட்டு இருக்கான் ...." என்றாள் மித்ரா அதுவரை இருந்த ஸ்ருதி குறைந்து.
அனைவரும் உண்டு முடித்ததும்,
" நீங்க கேட்ட கேள்விக்கு இப்ப பதில் சொல்றேன் " என்று ஆரம்பித்தார் சுப்ரமணியம் குரலை செருமிக் கொண்டு.
" உங்ககிட்ட பல விஷயத்தை சொன்ன சங்கையா சில விஷயத்தை மறைச்சுட்டாரு .... அதுக்கு காரணம் இருக்குது .....
உங்க தாத்தா மூர்த்தியார் அடிப்படையில ரொம்ப நல்ல மனுஷன் ... ஆனா உங்க அப்பா கிருபாகரன் பக்கா கிரிமினல் ....
மூர்த்தியார் சிங்கம் மாதிரி நேரடி அரசியல் செய்யறவரு... ஆனா கிருபாகரன் நரி ...
அவனுடைய செயல்பாட்டுல எப்பவும் உண்மையும் நேர்மையும் இருக்கவே இருக்காது ....
சண்முகம் அவன் ஒரு நச்சு பாம்பு ...
மூர்த்தியார் மேல எனக்கு வருத்தம் உண்டு .... ஆனா இவங்க ரெண்டு பேர் மேலயும் எனக்கு வன்மமும் கோவமும் உண்டு .
கிருபாகரனுக்கு சேலத்தை தாண்டி
வடநாடு, வெளிநாடுனு பல இடங்கள்ல ஆட்கள் பரிச்சயம்...
கலை உங்க வீட்ல இருக்கிற வரைக்கும் தான், அவன் என்னைய பத்தி அதிகம் விசாரிக்க மாட்டான் ...
நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா ஊரை விட்டு போய்ட்டோம்னு தெரிஞ்சாலே , நாங்க எங்க இருந்தாலும் தேடி கண்டுபிடிச்சு போட்டு தள்ளிடுவானு எங்களுக்கு நல்லாவே தெரியும் ....
அதனாலதான் அவனை ஏமாத்தணும்னு முன்கூட்டியே தலைவர் சங்கையா அருமையான ஒரு திட்டம் போட்டாரு.... அதுல சில விஷயங்கள் ரொம்ப எதேச்சையா ஈசனோட அருளால திட்டம் போடாமலே நடந்துச்சு...
அப்படி குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இரண்டு முக்கியமான விஷயம் என்னன்னா
ஒன்னு , கிருபாகரன் பொதுத்திடல்ல போட்ட அந்தத் தாலிக்கழற்றும் போராட்டம். அதை நாங்க கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ....
ஆனா கலை புத்திசாலி ...
அதை கடைசி நேரத்துல தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்டா ....
இரண்டாவது விஷயத்தை பற்றி சொல்றதுக்கு முன்னாடி,
அன்னைக்கு நடந்த சில முக்கிய விஷயங்கள நீங்க தெரிஞ்சுக்கணும் ....
மூர்த்தியார், சண்முகம் , கிருபாகரன்
மூணு பேரையும் ஒண்ணா நிறுத்தி, பகிரங்கமா கலைச்செல்வி தன் முடிவ அறிவிச்சிட்டு என் கூட கிளம்பி வர்றதா தான் முதல்ல பிளான் பண்ணினோம் ....
நாங்க ரெண்டு பேரும் அந்த ஊரை விட்டு கிளம்பிட்டோம்னு தெரிஞ்சாலே , ஏதாவது ஒரு வழில கிருபாகரன் எங்களை போட்டு தள்ளிடுவானு எங்களுக்கு நல்லாவே தெரியும் .... அதனால தான் கிரைம் மூவிஸ்ல வர்ற மாதிரி நாங்களும் கிரிமினலா யோசித்தோம்...
தலைவர் சங்கையா கிட்ட டிரைவரா வேலை பாக்குற முத்துவோட மகன் பன்னீர்,
நம்ம ஊர் கவர்மெண்ட் ஹாஸ்பிடல்ல மார்ச்சரில அப்ப வேலை பார்த்துகிட்டு இருந்தான் ...
அவன் கிட்ட ஆணும் பெண்ணுமா ரெண்டு அனாதை பொணம் வேணும்னு
தலைவர் சங்கையா முன்கூட்டியே சொல்லி வச்சிருந்தாரு..... அவனும் பக்காவா ரெண்டு பொணங்கள ஏற்பாடு பண்ணி இருந்தான்...
அதோட உங்க வீட்டில வேலை செஞ்ச பாண்டியம்மா கிட்ட கலைச்செல்வி என் கூட வர அன்னைக்கு கட்டிக்க வேண்டிய புடவைய கொடுத்து அனுப்பிச்சோம் ...
ஏன்னா நாங்க அன்னைக்கு போட்டுக்க போற டிரஸ் மாதிரியே
அந்தப் பிணங்களுக்கும் போட்டு தயார் பண்ணி இருந்தாரு சங்கையா....
அன்னைக்கு நாங்க பிளான் போட்டபடி எல்லாம் தயாரானதும் , எதிர்பாராம கிருபா
பொதுத்திடல்ல தாலி கழற்றும் கூட்டம் போட, அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கிட்ட கலைச்செல்வி, பகிரங்கமா எல்லாரும் முன்னாடியும் தானும் தனக்கு திணிக்கப்பட்ட திருமணத்திலிருந்து
வெளியேறறதா சொல்லிட்டு என் கூட கார்ல கிளம்பிட்டா.....
கூட்டம் முடிஞ்சதுக்கப்புறம் தான்,
அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சு ஆளுங்கள வச்சி எங்களை தேடுவாங்கன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும் ....
நாங்க அதுக்கு முன்னாடியே நான் வந்த கார் மாதிரியே ஒரு பழைய அம்பாசிடர் காரை வாங்கி ,
அதுல அந்த ரெண்டு அனாதை பொணங்களையும் வச்சு,
மலை இறங்கும் போது ஹேர் பின் பென்ட்ல மோதி ஆக்சிடென்ட் ஆனா மாதிரி
செட்டப் செய்துட்டு ஆம்புலன்ஸ்ல சேலம் போயிட்டோம் ....
அங்கிருந்து ஃபிளைட்டில ஹைதராபாத் போயிட்டோம்....
மறுநாள் நாங்க ரெண்டு பேரும் ஆக்சிடென்ட்ல இறந்து போனதா
ஊர்ல செய்தி பரவி, பிணங்களை தேட ஆரம்பிச்சிட்டாங்க ....
ரெண்டு நாள் கழிச்சு தான் அந்த பொணங்கள் கிடைச்சது....
நாங்க எதிர்பார்த்த மாதிரியே நாய் நரிங்க கொதறி வச்சதால பாடி கம்ப்ளீட்டா டீ கம்போஸ் ஆகி அடையாளமே தெரியாம போயிடுச்சு .... கடைசில
அன்னைக்கு போட்டு இருந்த டிரஸ வச்சு அடையாளம் கண்டுபிடிச்சாங்க....
ஈசனோடு அருளால அந்த ஆண் பொணத்து கையிலயும்
' ஓம் நமசிவாய ' னு பச்சை குத்தி இருந்ததால, இறந்தது நான் தானு போலீஸ் தரப்பு முடிவு எடுத்துடுச்சி....
கலைச்செல்வியோட மோதிரத்தை
அந்த பெண் பொணத்துக்கு போட்டதால, டிரஸையும் மோதிரத்தையும் வச்சு இறந்தது அவ தானும் முடிவெடுத்து கேச க்ளோஸ் பண்ணிட்டாங்க ....
ஆனா கிருபா மட்டும் அத நம்பல ...
எங்கள பல இடத்துல தேடினான்...
முக்கியமா தலைவர் சங்கையா,
பட்சி சங்கையா, சிவகாமினு எல்லாரோட போக்குவரத்தையும்
பல வருஷம் வேவு பார்த்து ஒரு துப்புமே கிடைக்கலைனு தான்
இறந்து போனது நாங்க தான்னு முடிவு பண்ணி தேடுதல் வேட்டையை நிறுத்தினான்..." என்று அவர் முடித்ததும் ,
" எனக்கு என் அப்பா அம்மா மேல அதிகபட்ச வருத்தமும் கோபமும் உண்டு ....
என்னதான் எங்க அப்பா நேர்மையானவருனாலும், என் கல்யாண விஷயத்துல அவர் எடுத்த முடிவு முழுக்க முழுக்க சுயநலமானது .... என் அம்மாவும் என் கல்யாண விஷயத்துல ரொம்ப சுயநலமா தான் நடந்துக்கிட்டாங்க ...
அதனால தான் கடைசி வரைக்கும் அவங்களை மன்னிக்கிற பக்குவம் எனக்கு வரல ....
அதோட நாங்க ரெண்டு பேரும் உயிரோட இருக்கிற விஷயம் தெரிஞ்சா, மூர்த்தியார் என்ன முடிவு எடுப்பார்னு எங்களால அனுமானிக்க முடியாத நிலை.... அதான் என் அப்பா அம்மாவுக்கு கூட நாங்க உயிரோடு இருக்கிறத தெரியப்படுத்தல...
தலைவர் சங்கை உட்பட யார் கூடயும்
கிட்டத்தட்ட பத்து வருஷம் நாங்க தொடர்புலயே இல்ல ....
ஹைதராபாத்துல இருந்து மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ் நிறைய இடங்களில் ட்ரான்ஸ்பர்ல மாறிக்கிட்டே இருந்தோம்....
மாதவி டென்த்துல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வரும் போதுதான் அவளோட போட்டோவை எங்களுக்கு முதன் முதல்ல அனுப்பி வச்சாரு சங்கையா ....
மித்ரா மாதிரியே இருக்காளேனு பார்த்து அசந்து போயிட்டேன்.... இவர் கூட அடிக்கடி சொல்லுவாரு.....
மாதவியை சண்முகத்து கிட்ட நீ கொடுத்துட்டு வந்தது தப்புன்னு...
அப்புறம் மாதவி பெரிய மனுஷியாகும் போது சடங்குக்கு எடுத்த போட்டோவை, போட்டோகிராபர் கிட்ட ஏதேதோ கதை சொல்லி வாங்கி
அனுப்பியிருந்தாரு சங்கையா ....
மனசு மாதவியை பார்க்கும் போதெல்லாம் பதறும் ....
என் ரெண்டு பொண்ணுங்க என் கூட இருக்கும் போது, என் முதல் பொண்ணு மாதவி மட்டும் அங்க தனியா அனாதையா கஷ்டப்படறத நினைச்சு நான் வருந்தாத நாளே இல்ல .....
ஆனா கிருபாகரன் கம்சன் மாதிரி ....
அவன் உயிரோடு இருக்கிற வரைக்கும் எந்த காலத்துலயும் எனக்கும் என் குழந்தைகளுக்கும் ஆபத்துங்கிறதால இத்தனை காலம் அடக்கி வாசிக்க வேண்டியதாயிடுச்சு...
என்னைக்காவது ஒரு நாள் என் அப்பா அம்மாவ சந்திச்சு உண்மைய சொல்லனும்னு நினைச்சுகிட்டு இருந்தேன் .... கடைசி வரைக்கும் அது நடக்காமலே போயிடுச்சு ...." என கலைச்செல்வி சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
" ஹாய் மா, ஹாய் பா ..." என்ற படி விளையாட்டு உடையில் புயல் போல்
வீட்டிற்குள் நுழைந்த மதுரா கிருஷ்ணாவை பார்த்து,
" யார் இந்த ஹேண்ட்ஸம் ...." என்றாள் குரலில் குறும்பு கொப்பளிக்க.
" மது ... முதல்ல கை கால் கழுவிட்டு சாப்பிட வா .... அப்புறம் சொல்றேன் ..." என கலைச்செல்வி சொன்னதும், அவள் குளியலறை நோக்கி செல்ல,
" இவ பேரு மதுரா .... இவளும் மித்ராவும் ட்வின்ஸ் ....
மாதவிக்கும் இவங்களுக்கும் ஒரு வயசு தான் வித்தியாசம் ..."
" டுவின்ஸா.....?
ரெண்டு பேரும் பார்க்க வேற வேற மாதிரி இருக்காங்க ...
மித்ரா உங்கள மாதிரியும், மதுர இவரை மாதிரியும் இருக்காங்க ..." என்றான் கிருஷ்ணா கலைச்செல்வி மற்றும் சுப்பிரமணியத்தை குறிப்பிட்டு.
- மாயோனின் மாயங்கள் தொடரும்