- Joined
- Jul 21, 2025
- Messages
- 681
- Thread Author
- #1
அத்தியாயம் 87
" நான்-ஐடென்டிக்கல் ட்வின்ஸ்... அதான் இப்படி இருக்காங்க ... இவங்கள அக்கா தங்கச்சினு ஒத்துக்குவாங்க .... ட்வின்ஸ்ன்னா யாருமே நம்ப மாட்டாங்க.... " என்று சொல்லிக் கொண்டே கலைச்செல்வி மதுராவுக்கு உணவு பரிமாற, அவள் சாப்பிட்டபடி,
" போட்டோல மாதவியும் உங்களையும் பார்த்து இருக்கேன் ....
போட்டோவை விட நேர்ல ........." என இழுத்து
" சுமாராத்தான் இருக்கீங்க ...." என முடிக்க
நீண்ட நாட்களுக்கு பிறகு, மனம் விட்டு ரசித்து சிரித்தான் கிருஷ்ணா.
" நீங்க என்ன பண்றிங்க ...." என்றான் கிருஷ்ணா.
" பிஎஸ்சி கிரிமினாலஜி முடிச்சிட்டு
CBIல சப் இன்ஸ்பெக்டர் போஸ்ட்டுக்காக SSC -CGL எக்ஸாம் எழுதி ஃபர்ஸ்ட்
2 ரவுண்ட்ஸ் கிளியர் பண்ணிட்டேன்... இன்னும் 2 ரவுண்ட்ஸ் பாக்கி இருக்கு ...." என்றாள் தன் சட்டை காலரை தூக்கி விட்டு பெருமையாக.
" வாவ் குட் ...." என்றவன் மித்ராவை பார்க்க , அவள் லேசான கூச்சத்தோடு
" நான் பிஎஸ்சி பயோ கெமிஸ்ட்ரி தேர்ட் இயர் படிக்கும் போதே கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.... அதனால படிப்பை முடிக்க முடியல ..."
என்றாள்.
அவள் கணவனைப் பற்றி கேட்க நினைத்து தவிர்த்து விட்டு, குழந்தையை பற்றி கேட்டான்.
" குழந்தை பேர் என்ன ..."
" மாதேஷ் ...."
" அன்னைக்கு நீங்க குழந்தைக்கு கேன்சர்னு சொன்னதும், ஒரு மாதிரி ஆயிடுச்சு எனக்கு ...."
"நீங்கனு சொல்ல வேண்டாம் ... நான் உங்களை விட ரொம்ப சின்னவ... பேர் சொல்லியே கூப்பிடுங்க ..." என்றவள் தன் தாய் தந்தையை
ஒரு கணம் பார்த்துவிட்டு,
" எல்லாம் என் தலையெழுத்து .... நான் செஞ்ச பாவம்.... இப்ப என் குழந்தைய இப்படி தாக்குது .... அவன் மூச்சு விட முடியாம, உடம்பு வலில துடிக்கிறப்ப என்னால தாங்கிக்கவே முடியாது... சில நேரத்துல இதையெல்லாம் பார்க்காம செத்துட்டா என்னன்னு தோணும் ..." என்று அவள் கண் கலங்க, அவளை தேற்றும் வழி தெரியாமல் திணறியவன்
" டாக்டர் என்ன சொல்றாங்க .... இப்ப என்ன மாதிரியான ட்ரீட்மென்ட் போய்கிட்டு இருக்கு ..."
" இப்ப அவன் ஹெல்த் கண்டிஷன் கொஞ்சம் சிக்கல் தான் இருக்கு .... பிறந்ததிலிருந்து
குழந்தை நல்லா தான் இருந்தான்...
இப்ப திடீர்னு ஆறு மாசத்துக்கு முந்தி தான், கை கால் வலி, வயித்த வலினு ரொம்ப துடிச்சான்... மூச்சு விட முடியாம, சரியா சாப்பிடாம
ரொம்ப கஷ்டப்பட்டான்.... அப்பதான் டாக்டரை போய் பார்த்தோம் ... முதல்ல பயாப்ஸி பண்ண சொன்னாரு... அதிலேயே ஓரளவுக்கு தெரிஞ்சிருச்சு இவனுக்கு லுக்கீமியானு(Blood cancer) ...
அப்புறம் பிளட் கவுன்ட், CT Scan, MRI, sonographyனு எல்லாம் எடுத்து பார்த்து கன்ஃபார்ம் பண்ணிட்டாரு...
அப்பத்தில் இருந்து ட்ரீட்மெண்ட்ல தான் இருக்கான் ... Induction stageல Oral chemotherapy, blood transfusion எல்லாம் பண்ணி பார்த்தாச்சு ...
எதிர்பார்த்த ரிசல்ட் இல்ல ... ஆனாலும் முன்னதுக்கு மோசம் இல்லை... இப்ப நெக்ஸ்ட் intensive stage... அதுக்கு high doses radiation therapy
அதுக்கப்புறம் Stem cell transplant பண்ணனும்னு டாக்டர் சொல்லி இருக்காரு....
என்னோடதும், எங்க வீட்ல இருக்கிறவங்க எல்லாரோட Stem cellம் எடுத்து Match பண்ணி பாத்துட்டோம்... என்னோடது மட்டும் ஓரளவுக்கு பொருந்திச்சு.... மத்தவங்களது சுத்தமா பொருந்தல ...
ஆலோஜெனிக் டிரான்ஸ்பிளான்ட்க்கு Outside donorsசோட Stem cell மேட்ச் ஆச்சுன்னா யூஸ் பண்ணலாம் ...
ஆனா stem Cell transplant முடிஞ்சதும் சில சமயம், வெளி ஆளுங்களோட செல்ச ஏத்துக்க முடியாம Transplant rejection ஆக சான்ஸஸ் அதிகம் ...
அதுவும் இவனுக்கு வந்திருக்கிற இந்த லுக்குமியா ஸ்பெசிபிக்கலி ஜெனிடிக் வைட் பிளட் செல்ஸ் மியூட்டேஷனாலனு டாக்டர் சொன்னாரு ... அப்புறம் வேற என்னென்னவோ காம்ப்ளிகேஷன் இருக்கிறதாவும் சொன்னாரு அதெல்லாம் எனக்கு புரியல ...
அதனால Siblingsசோட umbilical cord blood transplant( புதிதாக உடன்பிறந்த சகோதர சகோதரிகளின் தொப்புள் கொடி மூலம்) பண்ணா குணமாக 100% சான்சஸ் இருக்குனு சொல்லி இருக்காரு.... அதுக்குதான் யோசிச்சுக்கிட்டு இருக்கோம்..."
என முடித்தாள்.
அவள் பேசியது பாதி தான் புரிந்தது.
அதற்கு மேல் தோண்டி துருவி கேட்க மனம் இல்லாமல், விடைபெற்றவனை வீட்டு வாயிலுக்கு வந்து
" அடிக்கடி வந்துட்டு போ வாசு ....
எனக்கு கிருபாவ தான் புடிக்காது .... உன்னைச் சின்ன வயசுல இருந்தே ரொம்ப பிடிக்கும்... உனக்கும் கிருபாவை பிடிக்காதுனு கேள்விப்பட்டேன் .... " என்ற கலைச்செல்வி தன் குடும்ப உறுப்பினர்களோடு வழி அனுப்பி வைத்தார்.
வீட்டிற்கு வந்ததும் அவன் செய்த முதல் வேலை, மித்ரா பேசிய விஷயங்களை இணையத்தில் தேடியது தான்.
அப்போதுதான் அவள் சொல்ல வந்ததே அவனுக்கு விளங்கியது .
அதாவது குழந்தை மாதேஷுக்கு
தம்பி அல்லது தங்கை பிறக்கும் பட்சத்தில், அவர்களது தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் குருத்தணுக்களில்,(Stem cell) வெள்ளை ரத்த அணுக்கள், சிவப்பு ரத்த அணுக்கள், பிளேட் லெட்டுகள்
இருக்கும் ...
அதனை மாதேஷ்க்கு பயன்படுத்தினால், புதிய ஆரோக்கியமான அணுக்களை உருவாகி அவைகள்
மிக எளிதாக பல்கிப் பெருகும்.
அத்தோடு ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் என்பதால், சிகிச்சைக்குப் பிறகு புதிய செல்களை உடல் வேகமாக ஏற்றுக்கொண்டு துரிதமாக குணமடையவும் வாய்ப்புகள் மிக அதிகம் என்பதை அறிந்து கொண்டான்.
உறக்கம் வராமல் புரண்டு படுத்தவனுக்கு, மீண்டும் கலைச்செல்வியின் இல்லத்தில் நடைபெற்ற உரையாடல்கள் மனக்கண் முன் விரிய, அனைத்தையும் அவசரகதியில் அசை போட்டுப் பார்த்தான்.
அவர்கள் இல்லத்தில் அனைவரும் இயல்பாக உரையாடினாலும், ஏதோ ஒரு விலகல் , அழுத்தம் , லேசான சோகம் இருப்பது போல்
தோன்ற, உடனே அவனுக்கு சங்கையாவின் நினைவு வர,
அவரைத் தொடர்பு கொண்டான்.
" சொல்லுங்க வாசு .... எப்படி இருக்கீங்க ...." என்றார் சங்கையா
மகிழ்ச்சியுடன்.
" நான் என் அத்தை கலைச்செல்வியை இங்க பார்த்தேன் ..." என்றான் அமர்த்தலாக.
" தெரியும், இப்பதான் கொஞ்ச நேரத்துக்கு முந்தி சுப்ரமணியம் சார் போன் பண்ணி எல்லாம் சொன்னாரு...."
"............"
" ஏன் வாசு, அமைதி ஆயிட்டீக.... என்ன ஆச்சு ..."
" உங்க மேல எனக்கு ரொம்ப கோவம் .... நீங்க ஏன் என் அத்தை உயிரோட இருக்கிறதை சொல்லல ..."
" சுப்பிரமணியம் சார் உங்களுக்கு நடந்த எல்லாத்தையும் சொல்லி இருப்பாரு.... நாங்க மொத்தம் ஏழு பேர் எங்க உயிரை பணயம் வச்சு செஞ்ச வேலை அது.... யார் மூலமாச்சும் லேசா விஷயம் கசிஞ்சா கூட, நாங்க மட்டும் இல்ல எங்க வம்சமே இருக்காது ....
எங்க தலைவர் சங்கையா சாகும் போது , எங்க எல்லார்கிட்டயும் சத்தியம் வாங்கிக்கிட்டாரு....
இப்ப அந்த ஏழு பேர்ல நான் ஒருத்தன் தான் உயிரோட இருக்கேன் .... என்னோட இந்த ரகசியம் பொதஞ்சி போயிடட்டும்னு நினைச்சு தான் சொல்லல ....
இப்ப நீங்களாவே விஷயத்தை தெரிஞ்சுகிட்டு கேக்குறீக ....அதனால
சில விஷயங்களை தெளிவுபடுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்கு ..." என்றவர் எதையோ யோசித்து விட்டு தொடர்ந்தார்....
" நீங்க ஒன்னு புரிஞ்சுக்கணும் வாசு .... உங்களுக்கு என்னைய ரொம்ப வருஷமா தெரியும் .... உங்க அத்தை கலைச்செல்விய எனக்குத் தெரியும்னு உங்களுக்கும் தெரியும் ....
ஆனாலும் கலைச்செல்வியை பத்தி என்கிட்ட ஒரு வார்த்தை நீங்க பேசினதோ , விசாரித்ததோ கிடையாது.....
சமீபத்துல தான் விசாரிச்சீங்க.....
அன்னைக்கு நான் கலைச்செல்வியை பத்தி சொன்னதுல உங்க புரிதல் என்னன்னு எனக்கு தெரியாது ....
அதோட கலைச்செல்வி, சுப்பிரமணியம் ரெண்டு பேரும் இறந்து போயிட்டாங்கனு நம்ம ஊர் காரங்க கிட்டத்தட்ட 20 வருஷத்துக்கு மேலயா நம்பிகிட்டு இருக்காங்க ... அப்படி தான் நம்ப வச்சிருக்கோம் ...
அப்படி இருக்க சொல்ல, உங்க கிட்ட மட்டும் எப்படி உண்மையை சொல்ல முடியும் ....
ஒருவேளை நான் உண்மையை சொல்லப் போய் அது உங்க தாத்தாவுக்கோ அப்பாவுக்கோ தெரிய வந்துச்சுன்னா,
இவ்ளோ நாளா நாங்க பாடுபட்டது எல்லாம் வீணா போயிடுமே ....."
" என் தாத்தா ரொம்ப நல்ல ....." என்றவனின் பேச்சை இடைவெட்டி
" வாசு , தயவு செஞ்சு நான் சொல்றத புரிஞ்சிக்குங்க ....
கிருபா, சண்முகம் ரெண்டு பேரும் எதிரணில இருக்கிறவங்க .... அதனால நீங்க அவங்க கிட்ட ஜாக்கிரதையாகவே இருப்பீக .... ஆனா உங்க தாத்தா மூர்த்தியாரை பத்தி உங்களுக்கு சரியா தெரியாது ....
அவரை பொறுத்த வரைக்கும்,
பொண்ணு இறந்து போயிட்டாளேனு ஒரு அனுதாபத்துல தான் கலைச்செல்வி மேல ஒரு பரிதாபம் இருந்துச்சே ஒழிய, மத்தபடி
தான் செஞ்சு வெச்ச கல்யாணத்த கலைச்செல்வி மதிக்கலங்கிற கோவம் அவருக்கு இருக்கத்தான் செஞ்சது ....
கலைச்செல்வி உயிரோடு இருக்கிறது அவருக்கு தெரிஞ்சிருந்தா, நிச்சயம் அவரோட இன்னொரு முகத்தை நீங்க பார்த்து இருப்பீக....
அவர் அப்படி இருந்ததுக்கும் காரணம் இருக்கு ...
கிரபாகரனும் சண்முகமும் சேர்ந்து கலைச்செல்வி வாழ்க்கையை கெடுத்து குட்டிச்சுவராக்கினது அவருக்கு தெரியாது ...
அவரை பொருத்தவரைக்கும், கலைச்செல்வி ஒருத்தனோட வாழ்ந்து, அவனுக்கு குழந்தைய பெத்ததுக்கு அப்புறம் , காதலனை பார்த்ததும் பெத்த
குழந்தையை விட்டுட்டு ஓடிப் போயிட்டானு தான் அவர் மனசுல இருந்துச்சு ....
இது எப்படி எனக்கு தெரியும்னா, நம்ம ஊர் கோவில் டிரஸ்டி கிட்ட ஒருமுறை ஏதோ பேச்சு வர சொல்ல மூர்த்தியார்
கலைச்செல்வியை பத்தி அப்படி சொல்லி இருக்காரு.... ...
பொறந்த குழந்தையை விட்டுபோட்டு காதலிச்சவன் கூட வாழனும்னு ஓடிப்போனா.... ஆனா ஒரு நாள் கூட வாழ முடியாம அவனோடவே ஆக்சிடென்ட்ல செத்துப்போயிட்டா ....
அவ காதலுக்கு நான் எதிர்ப்பு தெரிவிச்சது தப்புதேன்...
ஜாதிக்காக கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத சண்முகம் மாதிரி ஒரு ஆளை பார்த்து கட்டி வச்சதும் தப்புதேன்... இப்ப வரைக்கும் அது தான் என் மனசாட்சிய உறுத்திக்கிட்டே இருக்கு ....
ஆனா அவ
கட்டிக்கிட்டவனோட வாழ்ந்து ஒரு குழந்தையை பெத்ததுக்கு அப்புறம்
பெத்த குழந்தையை விட்டுட்டு காதலனோட ஓடி போனது பச்சை அயோக்கியத்தனம் ....
நல்ல வேளை அவ ஆக்சிடென்ட்ல செத்து போயிட்டா.... இல்லாட்டி போனா அவளை நானே தேடிக் கொன்னு போட்டிருப்பேனு சொன்னாராம் ....
எப்ப சொன்னாரு தெரியுமா .... மாதவி பெரிய மனுஷி ஆனதுக்கு அப்புறம் கோவில் திருவிழாவுக்கு வருஷ கொடை போடும் போது சொல்லி இருக்காரு....
நீங்க உங்க தாத்தாவ ரொம்ப நம்பறீங்க, அப்படி இருக்க சொல்ல நான் எப்படி உங்க கிட்ட உண்மையை சொல்லுவேன் ... அதோட
இப்படி விதி உங்கள கொண்டுகிட்டு போய் கலைச்செல்வி இருக்கிற இடத்துல நிப்பாட்டும் நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கல ...
நீங்க எப்படியும் அவங்களை சந்திக்க போறதில்ல ....
அவங்களும் இந்த ஊருக்கு வர போறது இல்ல .... எதுக்கு தேவையில்லாம இத்தனை வருஷமா கட்டி காப்பாத்தி வந்த விஷயத்தை
சொல்லனும்னு சொல்லல....
மூர்த்தியார் மேலயும் தப்பு சொல்ல மாட்டேன்..... சாதாரண அப்பாக்களே காதல் விஷயத்துல ஜாதி பார்த்து கௌரவ கொலை செய்யும் பொழுது ,
மூர்த்தியார் மாதிரி சமூகத்துல பெரிய அந்தஸ்துல இருக்கிற மனுஷனோட பொண்ணு இப்படி நடந்துக்கிட்டா அவருக்கு கோவம் வரத்தானே செய்யும் ...
ஒருவேளை கலைச்செல்வி எல்லா உண்மையும் ஆதிகாலத்துலேயே மூர்த்தியார் கிட்ட சொல்லி இருந்தா, அவரே கலைச்செல்விக்கு சப்போட்டா இருந்திருப்பாரோ என்னவோ ....
ஆனா அப்ப இருந்த சூழ்நிலையில கலைச்செல்விக்கு மட்டுமல்ல, எங்க யாருக்குமே கூட மூர்த்தியார் மேல நம்பிக்கை இல்ல... இருந்தாலும் கலைச்செல்வி ஊரை விட்டு போறதுக்கு முந்தி, மூர்த்தியார், சண்முகம், கிருபாகரன் மூணு பேத்தையும் கூப்பிட்டு உண்மைய சொல்லிட்டு போவணும்னு தான் நினைச்சுகிட்டு இருந்தா ...
ஆனா அதுக்குள்ள என்ன என்னமோ நடந்து போக, கடைசி நேரத்துல வீட்டை விட்டு வெளியேறினா போதும்னு , கிருபாவோட தாலிக்கயிற்றும் போராட்டத்தை பயன்படுத்திக்கிட்டு வெளியேறிட்டா ..." என்றவர்
ஓரிரு கணம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு
" எப்படியும் தான் சாவறதுக்குள்ளயாச்சும் தன் அப்பா கிட்ட
நடந்த உண்மையை சொல்லிடனும்னு கலைச்செல்வி ஆசைப்பட்டா.... ஆனா அதுக்குள்ள
மூர்த்தியார் இறந்து போவாருனு அவ கொஞ்சம் கூட எதிர்பார்க்கல...
அதைவிட முக்கியமா மூணு வருஷத்துக்கு முன்னாடியே அவர்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிட்டு,
தன் பொண்ணு கல்யாணத்துக்கு அவரை கூப்பிடனும்னு சொல்லிக்கிட்டு இருந்தா ....
ஆனா அவளுக்கு அந்த அதிர்ஷ்டமும் இல்லாம போயிடுச்சு ... " என்றார்.
அவர் பேசியதில் ஏதோ ஒரு பூடகம் இருப்பது போல் தோன்ற,
அது என்ன என்று அவன் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் போதே
" ஒன்னு மட்டும் புரிஞ்சுக்குங்க வாசு...
ஒரு விஷயத்தை நான் மறைக்கிறேன்னா, அதுல நிச்சயம்
ஏதாச்சும் நல்லது இருக்கும்...." என தன்னிலை விளக்கம் கொடுத்து முடித்தார்.
ஓரிரு நொடி அங்கு அமைதி நிலவ,
" மூணு வருஷத்துக்கு முந்தியே தாத்தா கிட்ட உண்மைய சொல்லனும்னு நினைச்சவங்க எதுக்காக சொல்லல .... ஏன் அவங்க பொண்ணு கல்யாணத்துக்கும் கூப்பிடல ...."
" அது ஒரு பெரிய கதை வாசு...
மாயோன் மங்கலத்தை விட்டு ஹைதராபாத்துக்கு போனதும்
கலைச்செல்வியும் சுப்பிரமணியம் சாரும் கல்யாணம் கட்டிக்கிட்டாங்க ....
கொஞ்ச நாளிலேயே கலைச்செல்வி மாசமானா.... ரெட்டை குழந்தைங்கனு தெரிஞ்சதும் ரெண்டு பேருக்கும் அவ்ளோ சந்தோஷம் .... அப்பதான் குழந்தை மாதவியை விட்டுட்டு வந்துட்டோமேங்கிற ஏக்கம் அவளுக்கு அதிகமாச்சு ....
ஆனா அப்ப இருக்கிற சூழ்நிலையில அவங்களால
தலைவர் சங்கையாவை கூட தொடர்பு கொள்ள முடியாத நிலைமை...
ஏன்னா உங்க அப்பா எங்க எல்லாரையும் தீவிரமா கண்காணிச்சுக்கிட்டு இருந்த நேரம் அது ....
அந்த நிதர்சனத்தை சுப்பிரமணியம் சார் எடுத்து சொல்லி, கலைச்செல்விக்கு புரிய வச்சாரு ...
அதுக்கு மேல வாழ்க்கையோட எதார்த்தத்தை புரிஞ்சுகிட்டு, கலைச்செல்வி இயல்பா இருக்க ஆரம்பிச்சிட்டா ....
கொஞ்ச நாளைக்கு அப்புறம் மித்ரா மதுரா ரெண்டு பேரும் பொறந்தாங்க ....
அப்ப சுப்ரமணியம் சார் கலைச்செல்விய போஸ்ட்டல்ல மாஸ்டர் டிகிரி படிக்க வச்சாரு ....
அதுக்கப்புறம் பி ஹெச் டியும் படிக்க வச்சாரு ....
அப்ப அவங்க மும்பையில் இருந்தாங்க ....
குழந்தைங்க ஓரளவுக்கு நல்லா வளர்ந்ததுக்கு அப்புறம், கலைச்செல்வியும் காலேஜ்ல ப்ரொபசரா வேலைக்கு சேர்ந்தா ....
வாழ்க்கை ரொம்ப நல்லா போய்கிட்டு இருந்தது ....
மித்ரா, மதுரா ரெண்டு பேரும் நம்ம மாதவிய விட ஒரு வயசு தான் சின்னவங்க....
மதுரா பார்க்க மாதவி மாதிரி இல்லாட்டாலும் படிப்புல மாதவி மாதிரியே படு புத்திசாலி .... உழைப்பாளி ... மாதவி கொஞ்சம்
வெளி ஆளுங்களோட அதிகம் பேசி பழக மாட்டா.... ஆனா மதுரா எல்லாரோடயும் கலகலன்னு பழகுற
ரகம் ....
ஆனா மித்ரா பார்க்க அப்படியே மாதவி மாதிரி இருப்பா ... ஆனா படிப்புல சுமார் ரகம் ..... தெரிஞ்சவங்களோட நல்லா பேசுவா .... மத்தபடி தான் உண்டு தன் வேலை உண்டுனு இருப்பா....
மதுரா பன்னிரண்டாம் கிளாஸ்ல ஸ்கூல் ஃபர்ஸ்ட் வந்தா ....
நிறைய மார்க் இருந்தும் மெடிக்கல் இன்ஜினியரிங் ரெண்டுமே அவளுக்கு பிடிக்கல ....
கிரிமினாலஜி படிக்கணும்னு ஆசைப்பட்டு யுனிவர்சிட்டி ஆஃப் லக்னோல சேர்ந்தா ....
மித்ரா கலைச்செல்வி வேலை பார்க்கிற அதே காலேஜ்ல பிஎஸ்சி
பயோ கெமிஸ்ட்ரி சேர்ந்தா ....
முதல் 2 வருஷம் மித்ரா அடிச்சு பிடிச்சு பாஸ் பண்ண, மதுரா லக்னோல யுனிவர்சிட்டி ஃபர்ஸ்ட் வந்தா ...
சின்ன வயசுலயிருந்தே ரெண்டு பேரும் இப்படித்தான் படிப்பாங்கன்னு தெரியுங்கிறதால பெத்தவங்க ரெண்டு பேரும் அத ரொம்ப இயல்பா எடுத்துக்கிட்டாங்க ....
கலைச்செல்வி நல்ல ப்ரொபசரா மட்டுமில்லாம, அந்தக் காலேஜோட ஸ்டூடண்ட்ஸ் கிரெவென்சஸ் செல்லோட ஹெட்டா இருந்ததால கண்டிப்பாகவும் இருந்திருக்கா ....
அவ Msc பைனல் இயர்க்கு கிளாஸ் எடுக்கும் போது , மூணு பசங்க கஞ்சா அடிச்சுட்டு வந்து கிளாஸ்ல தகராறு பண்ணி இருக்காங்க .... அவ அந்த பசங்கள தனியா கூப்பிட்டு வார்ன் பண்ணி இருக்கா...
மத்தா நாளும் அதே மாதிரியே வந்து கிளாஸ்ல தகராறு பண்ணி இருக்காங்க ....
உடனே பிரின்ஸிபல், சேர்மன் பார்வைக்கு கொண்டு போய் இருக்கா ... அப்ப அந்த பசங்க ரொம்ப அழுது சேர்மன் கிட்ட மன்னிப்பெல்லாம் கேட்டு இருக்காங்க....
சரி ஃபர்ஸ்ட் டைம்னு சேர்மனும் மன்னிச்சு, அப்பாலஜி லெட்டர் எழுதி கொடுத்துட்டு போக சொல்லிட்டாரு....
அந்த மூணு பசங்கள ஒருத்தன் பேரு தாமஸ் .... மறுநாள் அவன் காலேஜுக்கு வந்ததும் கலைச்செல்வியை போய் பார்த்து
எல்லார் முன்னாடியும் என்னை அசிங்கப்படுத்தி அழ வச்சி என் கையாலேயே அப்பாலஜி லெட்டர் எழுத வச்சிட்ட இல்ல ....
இனிமே நீ நித்தம் நித்தம் அழுவ...
உன்னை அழ வைப்பேனு .... சவால் விட்டுட்டு போய்ட்டான்.
- மாயோனின் மாயங்கள் தொடரும்