- Joined
- Jul 21, 2025
- Messages
- 681
- Thread Author
- #1
அத்தியாயம் 88
அப்புறம் முதல் ஒரு மாசம் எந்த பிரச்சனையும் இல்லாம வாழ்க்கை சாதாரணமா போயிருக்கு ....
பிரின்ஸ்பல், சேர்மன் கிட்ட கம்பளைண்ட் பண்ணினதால, ஏதோ ஒரு கோவத்துல அந்த பையன் தாமஸ் சத்தம் போட்டுட்டு போய் இருக்கான்....
இப்ப அவனே அதை மறந்துட்டான் போலனு.... நெனச்சு
அவ வழக்கம் போல தான் உண்டு தன் வேலை உண்டுன்னு இருக்க ஆரம்பிச்சிருக்கா ...
அதுக்கு காரணம், அந்த தாமஸ் கலைச்செல்விக்கு சந்தேகம் வரக்கூடாதுனு அவ கிளாசஸ்ஸ மட்டும் கட் பண்ணாம ஒழுக்கமா
அட்டென்ட் பண்ணி இருக்கான் ....
அதுக்கப்புறம் ஒரு நாள் திடீர்னு மித்ராவோட கிளாஸ் ப்ரொபசர்,
கலைச்செல்வியை பார்த்து ,
மித்ரா சரியாவே கிளாசஸஸ் அட்டென்ட் பண்றது இல்லனு கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காங்க ....
அப்படியா, நானும் அவளும்
ஒன்னாத்தான் ஒரே கார்ல டெய்லி காலேஜுக்கு வரோம்... பின்ன எப்படி அவ கிளாஸஸ் அட்டென்ட் பண்ணாம இருக்கா... சரி நான் அதை விசாரிக்கிறேனு அவங்களுக்கு தேங்க்ஸ் சொல்லி அனுப்பிட்டு,
மித்ராவோட கிளாஸ்க்கு போய் பார்த்தா, அவ அங்க இல்ல ...
அப்பதான் பிரச்சனை பெருசுனு கலைச்செல்விக்கு புரிய ஆரம்பிச்சது .....
மித்ராவோட ஃப்ரெண்ட்ஸ கூப்பிட்டு விசாரிச்சா, எல்லாரும் மழுப்பலான பதிலையே சொல்லி இருக்காங்க...
கொஞ்சம் மிரட்டறா மாதிரி அவ விசாரிக்கும் போது தான்.... உண்மை வெளியே வந்து இருக்கு ....
அந்த தாமஸ் ஒரு பைக் ரேசர் ....
அவனுக்கு படிப்பு பொழுதுபோக்கு ....
பைக் ரேசிங் தான் பிரதானம் ....
அது மட்டும் இல்ல காலேஜ்ல பெரிய ரோமியோனு தன்னை காட்டிக்க,
கேர்ள் ஃப்ரெண்ட், லவ்வருனு ஏகப்பட்ட பொண்ணுங்களோட சகவாசம் வேற ....
கலைச்செல்வியை பார்த்து அவன் சவால் விட்டுட்டு போனதுக்கு அப்புறம், கொஞ்சம் கொஞ்சமா மித்ராவை லவ்ங்கிற பேர்ல தன் வலையில சிக்க வச்சிருக்கான் ....
மித்ராவும் கலைச்செல்வியோட காலேஜுக்கு வர்ற மாதிரி வந்துட்டு
அவனோட வெளியே சுத்த போயிடறானு அப்பதான் கலைச்செல்வி தெரிஞ்சுகிட்டா...
அன்னைக்கே எல்லாத்தையும் சுப்பிரமணியம் சார் கிட்ட சொல்லி இருக்கா ...
அதுக்கு அவரு... அவசரப்படாதே ... முதல்ல மித்ராவை விசாரிப்போம்... அதுக்கப்புறம் அந்த பையன கூப்பிட்டு விசாரிப்போம்னு சொல்லி இருக்காரு....
அன்னைக்கு ராத்திரியே மித்ராவை கூப்பிட்டு விசாரிச்சு இருக்காங்க ....
" எனக்கு அவனை ரொம்ப பிடிச்சிருக்கு .... அவனை நான் கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன தப்பு...." என்றாள் மித்ரா அடாவடியாக.
" இங்க பாரு மித்ரா ... அவன் நல்லவன் இல்லை .... உன்ன வச்சி காப்பாத்த மாட்டான்....
அம்மா அப்பா சொல்றத கேளு....
19 வயசுல என்ன டி கல்யாணம் ...
ஒழுங்கா இந்த டிகிரியை முடி ....
மேற்கொண்டு படிக்க உனக்கு இன்ட்ரஸ்ட் இல்லன்னு எங்களுக்கு தெரியும் ... ஒரு நல்ல இடமா பார்த்து நாங்களே கல்யாணம் கட்டி வைக்கிறோம்...."
" நீங்க உங்க அப்பா அம்மா பேச்சை கேட்டீங்களா.... இல்லையே ..... உங்க அப்பா அம்மா செஞ்சு வச்ச கல்யாணத்துல, ஒரு குழந்தை பிறந்தும் கூட, அந்தக் குழந்தையை விட்டுட்டு
உங்களுக்கு பிடிச்சவரோட தானே ஊரை விட்டு ஓடி வந்தீங்க.... அப்ப நான் மட்டும் எப்படி உங்க பேச்சை கேட்கணும்னு எதிர்பார்க்கிறீங்க ...."
" மித்ரா ..... வில் யூ ஸ்டாப் திஸ் நான்சென்ஸ் .... எங்க நிலைமையும் பிரச்சனையும் வேற... உன் பிரச்சனையே வேற.... எந்த விஷயத்தோட எந்த விஷயத்தை சம்பந்தப்படுத்தி பேசுற ....? " என சுப்ரமணியம் கர்ஜிக்க, அவர் கையை பிடித்து அழுத்தி சமாதானம் செய்த கலைச்செல்வி
" பொதுவா அம்மா அப்பா நல்லவங்க .... ஆனா எல்லா அம்மா அப்பாவும் நல்லவங்களாங்கறது தான் இங்க பெரிய கேள்வியே...
என் அம்மா அப்பா எனக்கு நல்லது நினைக்கல .... ஆனா உன் அப்பா
எனக்கு நல்லது தவிர வேறு எதையும் நினைச்சதில்ல ... அவர் தான் எனக்கு அம்மா, அப்பா, கணவன் , கடவுள் எல்லாமே .... என் அப்பா, அம்மா சண்முகம் , கிருபானு எல்லார் மேலயும் இருந்த கோவதுல நான் மாதவியை வேணாம்னு விட்டுட்டு வந்துட்டேன்....
அப்ப எனக்கு மனமுதிர்ச்சி இல்ல ...
அத நெனச்சு இன்னைய வரைக்கும்
குற்ற உணர்வுவால செத்துகிட்டு இருக்கேன் ....
ஆனா உங்க அப்பா அப்பவே மாதவியை சண்முகத்து கிட்ட இருந்து வாங்கிட்டு வந்துடுனு தான் சொன்னாரு... இப்பவும் நான் மாதவியை நினைச்சு வருத்தப்படும் போதெல்லாம் ஆறுதல் சொல்லுவாரு...
ஆனா உங்க அப்பா மாதிரி அந்த பையன் கிடையாது மா ... உங்கப்பா குடிச்சு தம் அடிச்சு பாத்திருக்கியா .... இல்லை என் கூட சண்டை போட்டு பார்த்திருக்கியா....
இப்ப வரைக்கும் என்னை ஒரு வார்த்தை கடிஞ்சு அவர் சொன்னதே இல்ல ... இத நான் சொல்ல வேண்டிய அவசியமே இல்ல.... உங்க எல்லாருக்குமே நல்லா தெரியும் ....
காதல் , கல்யாணத்தோட முடியறது இல்ல .... கல்யாணத்துக்கு அப்புறம் தான் காதலே ஆரம்பிக்குது.....
உனக்கு உடம்புக்கு முடியலன்னா அவர் பாத்துக்கணும்..... அவருக்கு உடம்புக்கு முடியலன்னா நீ பார்த்துக்கணும் ....
சில சமயம் வருமானம் கம்மியா இருக்கும் ஏன் வருமானமே வராது ... அந்த சூழ்நிலையிலயும் ஒருத்தர ஒருத்தர் விட்டுக் கொடுக்காம ஒருத்தருக்காக ஒருத்தர் வாழனும் ....
காதலோடு டெபினிஷன் என்ன தெரியுமா .... டிரஸ்ட் அண்ட் கமிட்மெண்ட் .... நம்பிக்கை இருக்கணும் .... ஒருத்தரை ஒருத்தர் மனசார 100% அர்ப்பணிப்போட ஏத்துக்கணும் ....
சகிச்சிக்கிட்டு வாழறது என்னிக்காவது ஒரு நாள் வாழ்க்கையில சலிப்ப கொண்டு வந்துடும் ....
எப்படி கண்ணுல தூசி விழுந்தா கை தன்னிச்சையா போய் துடைக்குதோ அந்த மாதிரி திருமண பந்தமும் அனிச்சையா இருக்கணும் ....
அவங்களுக்கு ஒண்ணுன்னா நாம கலங்கணும் நமக்கு ஒன்னொன்னா அவங்க கலங்கணும் .... இதெல்லாம் புரிஞ்சுக்க உனக்கு வயசு பத்தாது மித்ரா ... அவன் உன்னை உண்மையா லவ் பண்ணல....
அவன் கஞ்சா குடிச்சிட்டு வந்ததை நான் சேர்மன், பிரின்ஸ்பல் கிட்ட சொன்னதால, என்னை பழிவாங்கணும்னு உன்னை லவ் பண்றா மாதிரி நடிக்கிறான்....
என்கிட்டேயே வந்து உன்னை நித்தம் நித்தம் கலங்கடிப்பேனு
சவால் விட்டுட்டு போனான் மித்து ....
அதனால இது காதல் இல்ல ... என்னை கலங்கடிக்கிறதுக்காக
அவன் செய்ற சூழ்ச்சி .. புரிஞ்சுக்கோ ..." என தன் மகளைக் காப்பாற்ற எண்ணி , அவர் அறிவுரையும் நடந்ததையும் கூறி முடிக்க, கிண்டலாக சிரித்தவள்
" நீங்க இப்படி எல்லாம் சொல்லுவீங்க... நம்பாதேனு ஏற்கனவே தாமஸ் சொல்லிட்டான் ....
ஏன் இப்படி பொய் சொல்றீங்க ....
அவன் கேங்ல இருக்கிற அசோக் குடிச்சிட்டு வந்ததை, தாமஸ் குடிச்சிட்டு வந்ததா பிரின்ஸ்பல் சேர்மன் வரைக்கும் போய் பொய் சொல்லி இருக்கீங்க.... உங்களுக்கு தாமஸை பர்சனலா பிடிக்காது... அதுக்காக
என்ன வேணாலும் பொய் சொல்லுவீங்களா ...
என் பொண்ணு கிட்ட உன்ன பத்தி இல்லாத பொல்லாத சொல்லி
உன்னை நித்தம் நித்தம் கலங்கடிக்கிறேன் பாருனு நீங்க அவனை பாத்து சொல்லிட்டு இப்ப அவன் உங்க கிட்ட சொன்னதா பொய் சொல்றீங்க ...." என்று மித்ரா சொன்ன போதுதான், மிகவும் தெளிவாக அந்த இளைஞன் காய் நகர்த்துகிறான் என்பதே கலைச்செல்விக்கு உரைக்க,
" மித்து.... உனக்கு தெரியும் இல்ல அம்மா பொய் சொல்ல மாட்டேன்னு....
அவனை நம்பாதம்மா ப்ளீஸ் ...." என கலைச்செல்வி கண்கலங்க, உடனே சுப்பிரமணியம்
" மித்து, இந்த ஒரு வருஷ படிப்ப முடிச்சு டிகிரி வாங்கு ... அப்புறம் நீ அவனை கல்யாணம் பண்ணிக்கிறத பத்தி யோசி... ஒருவேளை கல்யாணத்துக்கு அப்புறம் அவனே உன்னை விட்டுட்டு போனாலும், நீ படிச்ச படிப்பு அடுத்தவங்க கிட்ட கையேந்த விடாம உன்னை காப்பாத்தும்.... ஏன்னா படிப்போட அருமை என்னனு என்னை மாதிரி
ரொம்ப பிற்படுத்தப்பட்ட, சமுதாயத்தோட அடித்தட்டு நிலைல இருந்து இன்னைக்கு
மேல் தட்டு வர்க்கமா மாறி இருக்கிறவளுங்களுக்கு தான் தெரியும் ..." என முற்றுப்புள்ளி வைத்து முடித்தவர், கலைச்செல்வியின் கண்களைத் துடைத்து, அவர் தோள் மீது கை போட்டு அணைத்தபடி தன் அறைக்கு அழைத்துச் சென்றார்.
தாய் தந்தையரின் கண்ணீர் மற்றும் அறிவுரை
மித்ராவை ஓரளவிற்கு மாற்ற, அவள் தாமஸை அறவே தவிர்க்கலானாள்.
இப்படியே ஒரு மாதம் கழிந்தது.
ஒரு நாள் மாலை கலைச்செல்வி வகுப்பறையில் பாடம் எடுத்து முடித்துவிட்டு, சேர்மனை சந்திப்பதற்காக அவரது சேம்பருக்கு சென்று கொண்டிருக்கும் போது
ஒரு பெண் திடீரென்று ஓடிவந்து
" மேம் .... என் பேரு நித்யா... பி ஏ இங்கிலீஷ் செகண்ட் இயர் படிக்கிறேன் மேம்... ஒருத்தன் என் பின்னாடியே ரொம்ப நாளா சுத்திக்கிட்டு இருக்கான் ... இன்னைக்கு காலையில காலேஜ் கேம்பஸ்ல என் துப்பட்டாவை புடிச்சு இழுத்து, அவனை லவ் பண்ணியே ஆகணும்னு மிரட்டினான் ....
இப்ப நான் வீட்டுக்கு போகணும் ...
என் வண்டி நிறுத்தி இருக்கிற இடத்துல, அவன் பிரண்ட்ஸோட நின்னுகிட்டு இருக்கான் மேம்...எனக்கு ரொம்ப பயமா இருக்கு ...." என சொன்னதும் கலைச்செல்வி அந்த பெண்ணுடன்
இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் பகுதியை நோக்கி போகும் போது,
அங்கு தாமஸ் தன் ரேசர் பைக் உடன் நட்பு வட்டத்தோடு அரட்டை அடித்துக் கொண்டிருந்தான்.
கலைச்செல்விக்கு கோபம் தீயாய் தலைக்கேற, என்ன செய்கிறோம் எனப் புரியாமல் வேகமாக அவனிடம் சென்று,
" பிரின்ஸ்பால், சேர்மன் கிட்ட ஒரு முறை திட்டு வாங்கி அப்பாலஜி லெட்டர் எழுதி கொடுத்து அவமானப்பட்டது பத்தாதா ....
அன்னைக்கே சேர்மன் சொல்லிட்டாரு... உன் மேல இன்னொரு கம்ப்ளைன்ட் வந்ததுச்சின்னா உன் சீட்டு கிழிஞ்சிடும்னு.... இந்த பொண்ணு உன் மேல கம்ப்ளைன்ட் பண்ணி இருக்கா....இன்னியோட உன் காலேஜ் வாழ்க்கை முடிஞ்சதுன்னு நினைச்சுக்கோ ...." என்றவளை இடைவெட்டி
" ஐயோ மேம் .... இவங்க இல்ல ....
அந்த மரத்தடி கீழ நின்னுகிட்டு இருக்காங்க பாருங்க.... அந்த மூணு பேரு தான் .....இன்ஃபேக்ட் இவரு தான் காலையில அவன் கிட்ட இருந்து என்னை காப்பாத்தினதே...." என அந்தப் பெண் கூறும் போது கலைச்செல்வியின் முகம் கருத்து விழுந்து விட , எதுவும் பேச முடியாமல் அந்தப் பெண்ணோடு
அந்த வாலிபர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை கண்டித்தார்.
நடந்த அனைத்தையும் மரத்தின் பின்புறம் நின்றபடி கேட்டுக் கொண்டும் பார்த்துக் கொண்டும் இருந்த மித்ராவை அவர் கவனிக்கவில்லை.
" பாத்தியா .... உங்க அம்மாவுக்கு என் மேல எவ்ளோ வன்மம் இருக்குன்னு ....
என்னை நம்பு மித்ரா....
நீ என் உயிர் மித்ரா ...
என் உயிரை விட்டாலும் விடுவேனே ஒழிய உன்னை விட மாட்டேன்..."
அவன் போட்ட திட்டப்படி அனைத்தும் நடந்தேறி இருக்க , அவன் காத்திருந்த தருணமும் கிட்ட, அந்த சமயத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டு காதல் வசனங்களை கட்டவிழ்த்து விட்டு
அவள் மனதை கரைக்க ஆரம்பித்தான்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பார்கள் ....
இதுவரை தன் தாய் அழுது கண்டிராததால் தாயின் முதல் கண்ணீர், அவள் மனதை லேசாக மாற்றி இருந்ததால் கடந்த ஒரு மாதம் அவனிடமிருந்து விலகி இருந்தாள்.
அவளது விலகலை கண்டு அவனும் விலகி இருந்தது தான், அவளை வெகுவாக பாதித்திருக்க உள்ளுக்குள் தவித்து துவண்டும் போயிருந்தாள்.
ஏற்கனவே உள்ளுக்குள் உருகி கரைந்திருந்தவளுக்கு, அவனது மேம்போக்கான காதல் வார்த்தைகளே போதுமானதாக போக, காந்தத்தை நோக்கிச் செல்லும் இரும்பு போல்,
அவன் பின்னே செல்லத் தயாரானாள்.
அவனது உயரம், நிறம், ஆஜானுபாகுவான உடல் சரீரம், மலையாள வாசனையுடன் பேசும் ஹிந்தி , அவன் இருசக்கர வாகனம் ஓட்டும் அழகு, நேர்த்தி, வேகம் , அவன் உடுத்தும் ஆடை, காலணிகளில் தெரியும் பணத்தின் செழுமை, ஆகியவற்றால் அவன் அந்த கல்லூரியின் கதாநாயகனாகவே வலம் வர , தன்னை திரும்பி பார்க்க மாட்டானா என்ற ஏக்கத்தோடு சில சில்வண்டுகள் அவன் பின்னேயே சுற்ற , இவை அனைத்தையும் கண்டு
கிறங்கி இருந்தவளிடம் அவனாகவே வந்து காதலைச் சொன்னதும்
ஏதோ சொர்க்கமே தன்னை கரங்கள் விரித்து அழைத்துக் கொண்டது போல், அவனது காதல் வலையில் விரும்பியே விழுந்திருந்தாள்.
தான் பேரழகி, நல்ல பெற்றோரால்
நற்பண்போடு வளர்க்கப்பட்டவள் என்பதையெல்லாம் அடியோடு மறந்தே போனாள்.
எப்பொழுதுமே ஒருவர் தன் அருமை பெருமைகளை முதலில் காதலிக்க வேண்டும். சரியாகச் சொன்னால் முதலில் நாம் நம்மை காதலிக்க வேண்டும். இப்படிச் செய்வதனால் சுய பரிசோதனை மூலம் நம்முடைய பலம், பலவீனம் , அணுகுமுறை, நேர்மறை, எதிர்மறை அனைத்தும் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் பொழுது,
நம்முடைய தராதரம், தேவை, நம் வாழ்க்கையின் இலக்கு, லட்சியம் ஆகியவை வெட்ட வெளிச்சமாகி,
விடிவெள்ளியை நோக்கி நம் செயல்கள் தானாகவே நம்மை பயணிக்க வைக்கும் ....
ஆனால் பெரும்பாலான இளம் வயது காளையர்கள் கன்னியர்கள்,
தன் கண்கள் விரும்புவதையே மனம் விரும்புவதாக எண்ணிக் கொள்கிறார்கள் ....
அவர்களுக்கு தன்னைப் பற்றிய புரிதலே இல்லை என்கின்ற நிலையில், எப்படி சரியான நபரை தேர்ந்தெடுக்க முடியும்.... அப்படியே தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் அந்த நபரிடம் மட்டும் எப்படி புரிதல் பிறக்கும் ....
பெரும்பாலான காதல்கள், கல்யாணங்கள் பிரிவதற்கும் முடிவதற்கும் மேற்கூறியவை தான் காரணம் ....
இதனை எல்லாம் புரிந்துகொள்ள மனமுதிர்ச்சி தேவை ... பெரும்பாலும் இளம் வயதிலேயே அளவுக்கதிகமான வறுமையும் துன்பங்களையும் சந்தித்தவர்களுக்கு
வாலிபப் பருவத்தை மனமுதிர்ச்சியோடு அணுகும் தெளிவு பிறக்கும் .... மற்றவர்களுக்கு
அது குளிர் சாதனப்பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும் ஐஸ்கிரீம் போன்றது தான்.
இடம் மாறினால் உருகி கரைந்து ஓடும் என்ற மனமுதிர்ச்சியே இடம் மாறிய பின்பு தான் தெரியவரும் ....
அவளுக்கும் தெரிய வந்தது, அவனைத் திருமணம் செய்து கொண்ட பிறகு.
அன்றிலிருந்து கலைச்செல்விக்கும், மித்ராவுக்கும் வாக்குவாதங்கள் அதிகமாகிப் போனது.
அவன் மீது மயக்கத்தில் இருப்பவளுக்கு , கலைச்செல்வியின் வார்த்தைகள் வேப்பங்காயாய் கசந்தது
அன்பும், பாசமும் , அமைதியும் நிறைந்திருக்கும் அவர்கள் இல்லத்தில், சோகமும் தர்க்கமும் குரோதமும் மெல்ல மெல்ல குடியேறத் தொடங்கின.
மதுரா தீவிரமாக CBI அதிகாரியாகும் முயற்சியில் SSC-CGL
தேர்வுக்காக தயார்படுத்திக் கொண்டிருந்த நேரம் என்பதால், மித்ராவை பற்றிய செய்திகள் எதையும் கலைச்செல்வி, சுப்பிரமணியம் மூச்சு விடவில்லை.
மித்ராவுக்கும் மதுராவை தொடர்பு கொண்டு தன் காதல் விவகாரத்தை சொல்வதில் தடை இருக்கத்தான் செய்தது.
மித்ரா மதுராவை நன்கு அறிவாள்.
கலைச்செல்வியிடம் இருக்கும் கம்பீரம், அணுகுமுறை , தெளிவு அவளிடமும் உண்டு.
சுருங்கச் சொன்னால் அவள் ஜூனியர் கலைச்செல்வி என்பதால்
அவளிடம் மித்ரா பேச விரும்பவில்லை.
இப்படி சண்டை பூசலிலேயே ஒரு மாதம் கழிய, திடீரென்று ஒரு நாள்
மித்ரா, தன் தாய் தந்தையரை பார்த்து,
" நாங்க அடுத்த வாரம் கல்யாணம் பண்ணிக்க போறோம்.... விருப்பம் இருந்தா எங்க கல்யாணத்துக்கு வாங்க ...." என்றாள் விட்டேற்றியாக.
பெற்றோர் இருவரும் அதிர்ச்சியில் உரைய,
" மித்து, உன் படிப்பு முடிய இன்னும் அஞ்சு மாசம் தான் இருக்கு.....
நீ உன் படிப்ப முடி... அந்த பையனுக்கும் படிப்பு முடிஞ்சிடும் ...
அப்புறம் அந்த பையனை கூப்பிட்டு பேசலாம் ...." என்றார் சுப்பிரமணியம் சமாதானமாக.
" இல்லப்பா, அதுவரைக்கும் என்னால காத்துக்கிட்டு இருக்க முடியாது .... "
" ஏன், ஒரு அஞ்சு மாசம் உன்னால காத்துக்கிட்டு இருக்க முடியாதா ..."
" என்னால முடியும் ... ஆனா என் குழந்தையால முடியாது ...."
அவள் கூறியது செவியில் இறங்கி நரம்பு நாளங்களில் பயணித்து மூளையை அடைந்து மனதில் உணரும் போது , கலைச்செல்வி துடித்து உறைந்து விட்டார்.
- மாயோனின் மாயங்கள் தொடரும்