- Joined
- Jul 21, 2025
- Messages
- 681
- Thread Author
- #1
அத்தியாயம் 89
கோபத்தில் கலைச்செல்வி மித்ராவை ஓங்கி அறைய, அவள் சுருண்டு விழுந்தாள்.
சுப்பிரமணியம் கலைச்செல்வியை பற்றி இழுத்து தடுக்க முயல, அதில் அடங்காமல் மீண்டும் மகளை தாக்கிய கலைச்செல்வி,
" இதுக்கு தாண்டி படிச்சு படிச்சு சொன்னேன் ... இப்ப எல்லாம் முடிஞ்சு போச்சு ... அவன் நல்லவன் இல்லங்கிறதுக்கு இந்த ஒரு ஆதாரம் போதாதா...."
" அம்மா... நாங்க அடுத்த வாரம் கல்யாணம் பண்ணிக்க போறோம் ...." என்றாள் மகள் கேவி அழுதபடி விடாப்படியாக.
" செஞ்ச தப்ப மறைக்க கல்யாணம் கட்டிக்கறீங்களா.... இல்ல கல்யாணம் கட்டிக்கிறதுக்காகவே தப்பு செஞ்சீங்களா ...." கலைச்செல்வியின் வார்த்தைகள் அம்புகளாய் பாய, மகள் கூனி குறுகி தலை குனிந்தாள்.
" இங்க பாரு மித்து .... ஒருத்தர் நம்மள உண்மையிலயே காதலிச்சா,
நம்மளோட சுகம், துக்கம், மானம், மரியாதை எல்லாத்துலயும் தனக்கும் பங்கு இருக்கிறதா நினைப்பாங்க ....
ஆனா நீயும் அவனும் செய்திருக்கிற காரியம் எப்படி பார்த்தாலும் உங்க ரெண்டு பேருக்கும் மரியாதையை வாங்கி கொடுக்காது .... குறிப்பா இந்த சமுதாயத்துல இந்த விஷயத்துல அதிகமா அவமானப்படறது பொண்ணுங்க தான் .... இப்ப நீதான் இந்த அவமானத்தை தூக்கி சுமக்க போற.... இப்பவாவது புரியுதா... என்னை நோகடிக்க அவன் உன்னை பயன்படுத்திக்கிட்டானு.."
" அவன் ஒன்னும் என்னை ஏமாத்தலையே.... கல்யாணம் பண்ணிக்கிறேன்னு தானேம்மா சொல்லி இருக்கான் ...." என்றாள் மகள் மீண்டும் பிரச்சனையின் தீவிரம் தெரியாமல்.
" இப்ப சொல்றேன் மித்து ... இவன் நல்லவன் இல்லை .... உன்ன நல்லபடியா வச்சு வாழ மாட்டான் .... தயவு செஞ்சு அவனை கல்யாணம் கட்டிக்காதே ...."
" அம்மா.... அவனை கல்யாணம் கட்டிக்கலைன்னா எனக்கு தான் மா பிரச்சனை ...."
" இப்ப கூடவா உனக்கு புரியல ...
இந்த மாதிரியான சந்தர்ப்பத்துல நிச்சயம் நானும் உங்க அப்பாவும் கல்யாணத்துக்கு சம்மதிப்போம்னு திட்டம் போட்டு தானே இதை எல்லாம் செய்து இருக்கான்.....இப்பவும் ஒன்னு கெட்டுப் போகல ... இந்த குழந்தையை கலைச்சிடு..."
" நோ.....நோ மா ... இது என் குழந்தை.... என்னால கலைக்க முடியாது .... என் குழந்தையை இழக்க நான் தயாரா இல்லை ...."
" வெறும் ரத்த பிண்டம் .....
அது மேலேயே உனக்கு இவ்ளோ ஆசையும் அக்கறையும் இருக்கும் போது , நீ எங்க குழந்தை ....உன்னை 19 வருஷமா பார்த்து பார்த்து வளர்த்தோமே .... உன்னை இழக்க எங்களால மட்டும் எப்படி முடியும் ...."
" அம்மா .... ப்ளீஸ்மா .... என்னை புரிஞ்சுக்கோங்க ... எனக்கு அவனை ரொம்ப புடிச்சிருக்கு .... அவனும் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி இருக்கான் .... நீங்க கல்யாணத்துக்கு வந்தா போதும் ..."
தான் விருப்பப்பட்ட பொம்மையை ஏதோ ஒரு வகையில் வாங்கிக் கொண்டால் போதும் என்ற குழந்தையின் மனநிலையில் மகள் இருப்பது தெரிய, இதற்கு மேல் பேசி ஒன்றும் ஆகப் போவதில்லை என முடிவெடுத்து சுப்ரமணியம்,
"சரி எங்க கல்யாணம்... எப்ப கல்யாணம் ...."
" சர்ச்ல கல்யாணம் ...." பெற்றவர்கள் இருவரும் அதிர்ந்து நோக்க,
" அதுக்கு முன்னாடி நான் மதம் மாறனும்னு அவங்க பாட்டி சொல்லி இருக்காங்க ..."
இப்பொழுது கலைச்செல்வியின்
தணிந்திருந்த கோபம் தலை தூக்க
"காதலுக்கு வேதம் இல்லனு சொல்லும் போது, கல்யாணத்துக்கு மட்டும் மதம் எங்கிருந்து வந்ததுச்சு ....
இங்க பாருடி ... மதங்கறது போட்டு கழற்ற சட்டை கிடையாது , கழட்டி கழட்டி மாட்ட... அது ஆன்மா .... உணர்வோட உறைஞ்சு போன ஒன்னு...
உன்னை பெத்த அப்பாவோட பேரை மாத்த முடியுமா....முடியாதுல்ல .... அது மாதிரி தான் ... நீ பொறந்த மதத்தையும் மாற்ற முடியாது ...
அப்படியே நீ மாறினாலும் பெரும்பாலான இடங்கள்ல உன் ஜாதியை சொல்லி தான் உன் மதத்தை சொல்லுவாங்க....
அப்படி சொல்லும் போது நீ பொறந்த மதம் எல்லாருக்கும் தெரியுமே....."
" அம்மா நான் ஒன்னும் ஒரேடியா மதம் மாறிட போறதில்ல .... சும்மா கல்யாணத்துக்காக மட்டும் தான் ....
அது தாமசுக்கும் நல்லா தெரியும் ...."
" இது ஒண்ணா நம்பர் அயோக்கியத்தனம் .... பேசாம ரெண்டு பேரும் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம் பண்ணிக்கலாமே ....
அந்த ஒரு நாளைக்காக எதுக்கு நீ மதம் மாறனும் ....
யாரை ஏமாத்த பாக்கறீங்க .... நம்ம கடவுளையா இல்ல அவங்க கடவுளையா .....
உண்மையான மதமாற்றங்கிறது மனமாற்றத்தோட நடக்கணும் ....
அந்த மதத்துல இருக்கிற கோட்பாடுகள், போதனைகள் , கருத்துகளுக்காக மதம் மாறினா,
மாறின மதத்துக்கும் மரியாதை... உனக்கும் மரியாதை ....
அத விட்டுட்டு பணம், பதவி, கல்யாணத்துக்காக மதம் மாறினா
அந்த மதத்துக்கு உன்னை நீயே விக்கிறனு அர்த்தம் .... அந்த மதம் விலை கொடுத்து உன்னை வாங்குதுன்னு அர்த்தம் ....
இதுக்கு பேரு வியாபாரம் ....
மதமாற்றம் இல்ல...." என முடித்தார்.
" நீங்க ரெண்டு பேரும் தானே ஜாதி, மதம் எல்லாம் இல்ல ... பார்க்கக் கூடாதுன்னு சொல்லி வளர்த்தீங்க ..."
"இப்பவும் அதையே தான் சொல்றேன் .... மனுஷங்களோட பழகும் போது
ஜாதி , மதம் பார்க்க கூடாது ... அதுக்காக மதம் மாற சொல்லல ...."
என கலைச்செல்வியும் விடாமல் பட்டிமன்றம் நடத்த,
உடனே சுப்பிரமணியம்,
" இங்க பாரு மித்து,
மனுஷனை புடிச்சிருந்தா மதம் எல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல ...
ஆனா எங்களுக்கு அந்தப் பையனையே புடிக்கல ....
படிக்கிற வயசுலயே கஞ்சா, போதை, பொண்ணுங்க சுத்திக்கிட்டு இருக்கான்... அவன கல்யாணம் கட்டிக்கிட்டா உன் வாழ்க்கையே சீர் அழிஞ்சு போயிடும்மா .... எவ்ளோ சொன்னாலும் நீ புரிஞ்சுக்க மாட்டேங்குற... அதுக்காக தான் உன் அம்மா இப்படி எல்லாம் பேசுறா ...
சரி, அவன் குடும்பத்துல யார் யார் இருக்காங்க ... அவன் வீடு எங்க இருக்கு .... " என்றார் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணி.
" தாமசோட அம்மா அப்பா அமெரிக்கால இருக்காங்க ....
இங்க அவரும் அவர் பாட்டி ரெஜினா மட்டும் தான் .... "
" அவங்க அம்மா அப்பா எப்ப வராங்களாம் ..."
" அவங்க கல்யாணத்துக்கு வர போறது இல்ல ... ரெண்டு பேருமே பெரிய பிசினஸ் பர்சன்ங்கிறதால, திடீர்னு டிராவல் பண்ண முடியாதுனு
சொல்லிட்டாங்க ..."
" என்ன குடும்பம் இது ....ச்சே...
அவன் மகாராஷ்டிரியனா...."
" இல்லப்பா .... அவனோட பூர்வீகம் கேரளால இருக்குற கண்ணூர் ...
தமிழ் நல்லா புரியும்... கொஞ்சம் பேசவும் செய்வான் .... அவனுக்கு அஞ்சு வயசு இருக்கும் போது, மும்பை வந்து செட்டில் ஆயிருக்காங்க ...."
" சரி, வீட்டு அட்ரஸ் கொடு உன் அம்மாவும் நானும் நாளைக்கு போய் பேசறோம் ...."
" வேணாங்க... நாம தனியா போ வேணாம்.... அதுக்கும் அவன் பொய் சொல்லுவான் ... உங்க அம்மா வந்து இப்படி பேசினாங்க .... அப்படி பேசினாங்கன்னு ... அதனால இவளையும் கூட வர சொல்லுங்க ..." என்றார் கலைச்செல்வி திட்டவட்டமாக.
" மித்து, அப்பா சொல்றேன் கேளும்மா ...
அவன் நல்லவனா தெரியல வேண்டாம்மா ..." என்றார் சுப்பிரமணியம் கடைசியாக கெஞ்சும் குரலில் .
" வாழ்க்கையை அப்பா அம்மாவை விட அனுபவம் தான் சொல்லிக் கொடுக்கும் .... அவனையே அவ கல்யாணம் கட்டிக்கட்டும் .... இதுக்கு மேல இத பத்தி அவகிட்ட பேசாதீங்க ..." என்று கலைச்செல்வி காட்டமாக கூற,
மௌனமாகி போனார் சுப்பிரமணியம்.
பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில்
பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்டது போன்ற வேலைபாடுடன் காணப்பட்டது அந்த பங்களா.
சிரிப்பு என்பது மருந்தளவிற்கு கூட இல்லாமல்
வரவேற்றார் ரெஜினா, தாமஸின் பாட்டி.
இறுகிப்போன முகத்தோடு காட்சியளித்தான் தாமஸ்.
வந்தவர்களை அமரச் சொன்னதோடு சரி. அவர்களுக்கு தண்ணீர் கூட வழங்கப்படவில்லை.
பேச்சை துவங்கும் எண்ணமும் அவர்களுக்கு இருப்பதாக தெரியவில்லை.
ரெஜினா தொலைக்காட்சியில் மூழ்கி போக, தாமஸ் தன் கைபேசியை நோண்டிக்கொண்டிருந்தான்.
வேறு வழி இல்லாமல் சுப்பிரமணியமே பேச்சை தொடங்கினார்.
" எப்ப கல்யாணம் வச்சிருக்கீங்க ..."
" இதை நாங்க உங்களை கேட்கணும் .... ஆனா நீங்க எங்களை கேக்குறீங்க ... காலக்கொடுமை ..."
என்றார் ரெஜினா வெடுக்கென்று .
சுப்ரமணியம் அமைதியாகி போக,
" இங்க பாருங்க, சர்ச்ல நாம நினைச்ச நேரம் எல்லாம் கல்யாணம் பண்ண முடியாது ... நிறைய ப்ரோசிஜர ஃபாலோ பண்ணி ஆகணும் ...
ஆனா எங்க குடும்பத்துக்காக
சில விஷயங்களை தளர்த்தி, அடுத்த வாரம் கல்யாணம் செய்யறதுக்கு பாதர் டேனியல் ஒத்துக்கிட்டாரு....
அதுக்கு முன்னாடி உங்க பொண்ணுக்கு ஞானஸ்தானம் பண்ணனும் ...."
" ஏன் கல்யாணத்தை ரிஜிஸ்டர் ஆபீஸ்ல வச்சிக்க கூடாதா ...." - கலைச்செல்வி.
" உங்களோட தர்க்கம் பண்ண எனக்கு நேரமில்ல...
நாங்க சொல்றதுக்கு ஒத்துக்கிட்டா இந்த கல்யாணம் நடக்கும் .... இல்லாட்டி போனா நீங்க உங்க வழிய பார்த்துகிட்டு போகலாம்..." என்றார் ரெஜினா விட்டேற்றியாக.
ரெஜினா பேசி முடித்ததும் கலைச்செல்வியின் பார்வை தாமசின் மேல் விழ, அவனும் கலைச்செல்வியையே பார்த்துக் கொண்டிருந்தான் .
தன் தாய் தந்தை தனக்காக அவமானப் படுகிறார்கள் என்பதை மித்ரா லேசாக உணர ஆரம்பிக்க,
அவள் முகப்போக்கை கண்டுகொண்டவன்,
" ஆன்ட்டி, என் பாட்டியோட ஆசைக்காக மட்டும் தான் சர்ச்ல கல்யாணம் வச்சிருக்கோம் ....
மத்தபடி கல்யாணத்துக்கு அப்புறம் மித்ரா மித்ராவாவே இருக்கலாம்...
இவங்களோட ஒரே பேரன் நான்...
வயசானங்களோட ஆசைய நிறைவேற்றனும்னு நினைக்கிறது தப்பா ...." என்றதும் கலைச்செல்வி ஆடிப் போய்விட்டார்.
எவ்வளவு அழகாக பேசி சமாளிக்கிறான் ... என ஆச்சரியம் ஒரு பக்கம் ஆதங்கம் ஒரு பக்கம் ...
இப்படிப் பேசி தானே தன் மகளை கவிழ்த்திருப்பான் என்றெண்ணி உள்ளுக்குள் வெதும்பிப் போனார்.
அவனுடைய இன்னொரு முகம் அவருக்கு நன்றாகத் தெரியும் ...
அதை அவன் மித்ராவின் முன்னிலையில் காட்ட அவன் தயாராக இல்லை என்பதை புரிந்து கொண்டவர்,
" இந்த கல்யாண விஷயத்துல நான் கொஞ்சம் யோசிக்கணும் ..."என்றார்.
" இனிமே யோசிக்க என்ன இருக்கு ...
அந்த லெவல் எல்லாம் உங்க பொண்ணு தாண்டி வந்துட்டாளே..."
என நடந்து முடிந்த அசிங்கத்திற்கு
மித்ரா மட்டுமே காரணம் என்பது போல ரெஜினா பேச, கோபத்தில் கொந்தளித்த கலைச்செல்வி
" நடந்ததுக்கு என் பொண்ணு மட்டும் காரணம் மாதிரி பேசுறீங்க ...ஏன் உங்க பேரன், ஒன்னும் தெரியாத குழந்தையா ... இப்ப சொல்றேன் கேட்டுக்குங்க....
இந்த கல்யாணம் நடந்தாலும் நடக்கலன்னாலும் எங்களுக்கு ஒன்னுமில்ல.... நாங்க கல்யாணத்துக்கு வரப்போறதும் இல்ல....
மித்ரா என்னைக்குமே எங்களுக்கு குழந்தை தான் ... அவளையே நாங்க நல்லா பாத்துக்கும் போது அவளோட குழந்தையை பார்த்துகிறதுல எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்ல..."
என படபடவென்று மொழிந்து விட்டு
யாருக்காகவும் காத்திராமல், கலைச்செல்வி வீட்டை விட்டு வெளியேற சுப்பிரமணியமும் மித்ராவும்
ஓட்டமும் நடையுமாய் அவரை பின் தொடர்ந்தனர்.
அதற்கு மேல் நடந்தது அனைத்தும் மின்னல் வேகம் தான்.
கலைச்செல்வி சொன்னது போல்,
அவரும் சுப்பிரமணியமும் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.
மித்ராவின் காதல், திருமணம் எதையுமே அவர்கள் மதுராவிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை.
மசக்கை அதிகம் வாட்ட, பெற்றவர்கள் இருந்தும் அனாதையாய் தாமஸை திருமணம் செய்து கொண்டாள்.
திருமணத்தின் போது தாமஸ் இறுகி போயிருக்க, ரெஜினா வெடுக்கு வெடுக்கென்று வார்த்தைகளை விட்டு மித்ராவை நோகடித்துக் கொண்டே இருந்தார் ..
ஆனால் பாதர் டேனியல் கருணையும் அன்பும் மிக்க தரமான மனிதராக இருந்தார். ஏற்கனவே அவர் ரெஜினா , தாமஸை பற்றி ஓரளவிற்கு அறிந்தவர் என்பதோடு
மித்ராவின் முகத்தில் காணப்படும் கலக்கத்தை வைத்தே அவள் நிலையை அறிந்து கொண்டு
அவளுக்கு ஆதரவாகவே செயல்பட்டார்.
திருமணத்திற்கு மித்ராவின் தோழிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள்,
அதே போல் தாமஸின் நட்பு வட்டங்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
தாமஸின் உறவுக்காரர்கள் என்று ஒருவரும் வரவில்லை .
தாய் தந்தையிடம் வீர வசனம் பேசும் போது இருந்த தைரியமும் துணிவும், தற்போது இருந்த இடம் தெரியாமல் போக, மித்ராவுக்கு முதன்முறையாக தான் ஏதோ தவறு செய்கிறோமோ என்ற குற்ற உணர்வு மேலெழும்ப தொடங்கியது .
தன் தோழிகள் அவர்களது தாய் தந்தையரோடு பேசி சிரித்து மகிழ்வதை கண்டதும், ஏனோ அவளது தாய் கலைச்செல்வி சொன்னதுதான் அவள் காதுகளில் ஒலிக்க தொடங்கியது.
" இன்னைக்கு உனக்கு கல்யாணம் செய்து வைக்க சப்போர்ட் பண்ற உன் பிரெண்ட்ஸ் கிட்ட, நான் மேற்கொண்டு படிக்க போறேன் ... என்கிட்ட பணம் இல்ல ...
எனக்கு பண உதவி செய்ய முடியுமான்னு கேட்டு பாரு .... ஒருத்தரும் செய்ய மாட்டாங்க ...
ஒரு திருட்டு கல்யாணத்துக்கு அவங்க கொடுக்கிற மரியாதையும் ஆதரவும், உன்னோட வாழ்க்கை முன்னேற்றத்துக்கு கொடுக்க மாட்டாங்க ....
உன் பிரண்ட்ஸோட ஆதரவுல நீ கல்யாணம் கட்டிக்கிட்டாலும், அந்த கல்யாணத்துல உனக்கு ஒரு பிரச்சனைன்னா, எந்த பிரெண்ட்சும் வர மாட்டாங்க .... பெத்தவங்களும் கூடப்பிறந்தவங்களும் தான் வரணும்.... வருவாங்க....
அதுக்காக நட்பு வட்டம் எல்லாமே பொய்யானதுனு சொல்லல ....
இப்ப உனக்கு கிடைச்சிருக்கிற நட்பு வட்டம் மனமுதிர்ச்சி இல்லாததுன்னு சொல்ல வரேன் ...
இதெல்லாம் ஒரு நாள் உனக்கு நிச்சயம் புரிய வரும் ... அப்ப அம்மா உன் கூட இருக்க மாட்டேன் ..."
" இங்க பாரு மித்து.... உங்கம்மா
எங்க காதல் கல்யாணத்த பத்தி பேசினது உனக்கு புரிஞ்சுதா புரியலையானு எனக்கு தெரியல ....
உன் அம்மா காதலுக்கு டெபினிஷன் செல்லும் போது நம்பிக்கையும் அர்ப்பணிப்பும்னு சொன்னா ....
ஆனா நான் சொல்றேன் .... காதல்ன்னா பாதுகாப்பு....
நீ யார் கூட இருக்கும் பொழுது ரொம்ப பாதுகாப்பா உணர்ரயோ அவங்க தான் உன்னோட காதல் ... அதுதான் காதல் ....
அது அம்மா அப்பா கிட்டயா இருக்கட்டும் .... சகோதர சகோதரிகளாக இருக்கட்டும் ...
நட்பு வட்டமா இருக்கட்டும் ....
இல்ல உன் காதலனாவே இருக்கட்டும்...
எனக்கு என்னமோ நீ பாதுகாப்பான சூழ்நிலையில இருக்கப்போறதில்லனு தோணுது ...
ஒரு அப்பாவா பேங்க்ல உன் அக்கவுண்ட்ல கொஞ்சம் பணம் போட்டு இருக்கேன் .... கையில இந்த பணத்தையும் வச்சுக்கோ ....
உன் வாழ்க்கை சந்தோஷமா, நிம்மதியா அமைஞ்சதுன்னா
அதைவிட ஒரு சந்தோஷம்
எங்களுக்கு கிடையாது ....
ஒருவேளை ஏதாச்சும் தப்பா போயி உன்னால அந்த வீட்டுல இருக்க முடியலங்கிற நிலை வரும் போது,
அப்பாவும் அம்மாவும் எப்பவும் உனக்காக காத்துக்கிட்டு இருப்போம் ..." என்று அவள் தந்தை சுப்பிரமணியம் சொன்னது
அவள் மனக்கண் முன் விரிந்து தொண்டை கனக்கச் செய்தது.
ஆதரவாகவும் அன்பாகவும் இருக்க வேண்டியவன் கடமைக்காக அருகில் நின்று கொண்டிருக்க, ஏதோ யாரும் இல்லாத அத்துவான காட்டில் சிக்கிக் கொண்டது போல் உள்ளுக்குள் பயமும், கலக்கமும் அவளுக்கு உதயமாக,
பாதிரியார் டேனியல் மௌனமாக அவளது நுண் உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டே அந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.
எத்தனையோ வாழ்த்துரைகள், பரிசுகள் .... ஆனால் எதிலும் ஜீவன் இருப்பதாக அவளுக்கு தோன்றவில்லை .....
அவனது தாய் தந்தையும் இல்லை அவளது தாய் தந்தையும் இல்லை ...
அவனுக்காவது அவன் தந்தையை பெற்ற அம்மா, பாட்டி ரெஜினா இருக்கிறார் ....
அவளுக்கு அதுவும் இல்லாத நிலை ....
இது நாள் வரை இல்லாத அளவிற்கு, இவையெல்லாம் ஏனோ தற்போது பூதாகரமாக தோன்றி அவளை இம்சிக்க தொடங்கியது.
அதே மனநிலையோடு, அவனது இல்லம் வந்து சேர்ந்தாள்.
பகலில் பார்ப்பதற்கு பழைய பிரிட்டிஷ் கால கட்டிடக்கலை போல் காட்சியளித்த அந்த பங்களா,
இரவில் பூத் பங்களா போல் காட்சியளிக்க, ஏதோ ஒரு உள்ளுணர்வு அளவுக்கதிகமாக
அவளை ஆட்டிப்படைக்க, உடலும் அதிகமாக களைத்துப் போனதால் அந்த வீட்டின் ஓர் அறையில் சென்று முடங்கினாள்.
- மாயோனின் மாயங்கள் தொடரும்