- Joined
- Jul 21, 2025
- Messages
- 681
- Thread Author
- #1
அத்தியாயம் 91
தாமஸின் ஈமச்சடங்கை முடித்துவிட்டு ஜீவனிற்று வீடு திரும்பிய மகளை தேம்பி அழுதபடி இருகரம் கொண்டு ஆறத் தழுவி வரவேற்றார் கலைச்செல்வி.
இரண்டு மாதம் கூட தாளாத அற்பமான திருமண வாழ்க்கை மகளுக்கு அமைந்ததை எண்ணி மனம் துடித்தார்.
ஆனால் அதற்குள் தன் மகள் ஏழேழு பிறவிக்குமான துன்பங்களை சந்தித்து அனுபவங்களை பெற்று விட்டாள் என்பதை உணர்ந்து கொண்டவர்
மகள் உயிரோடு வீடு திரும்பியதே போதும் என்ற மனநிலைக்கு வந்திருந்தார்.
ஆனால் மித்ராவின் மனதில் ரெஜினா
கடைசியாக பேசியது, கனலாய் கொதித்துக் கொண்டிருந்தது.
தாமஸின் சொத்துக்களுக்கு அவள் வாரிசு என நிரூபித்தால் தான், அவளுடைய குழந்தை அவனுடைய வாரிசு என்பது நிரூபணமாகும்.
அவன் பல பூக்களில் கள் உண்ட வண்டாக இருக்கலாம். ஆனால் அவள்
அவனுக்கு நேர்மையாகவும் உண்மையாகவும் இருந்து அவனுக்கு மட்டுமே தன் கன்னித்தன்மையை காணிக்கையாக்கி இருந்தவள்.
அப்படிப்பட்டவளின் நடத்தையை பலர் அறிய கேள்விக்குள்ளானதை பொறுத்துக் கொள்ள முடியாமல்
எப்படியாவது போராடி முயன்று தனக்கான அங்கீகாரத்தை பெற்றே தீர வேண்டும் என்று உறுதிப் பூண்டவள்
ஓரிரு மாதத்தில் வழக்கறிஞரை சந்திக்க வேண்டும் என்று முடிவு செய்தாள்.
நிலைமை ஓரளவிற்கு சுமூகமானதும்,
மித்ராவின் வாழ்வில் நடந்து முடிந்தவைகள் அனைத்தும் மதுராவுக்கு தெரியப்படுத்தப்பட, கேட்டதும் துடித்து விட்டாள் அவள் அணுவை பகிர்ந்து பிறந்தவள்.
அவள் செய்வதற்கோ சொல்வதற்கோ ஒன்றும் இல்லாமல் போனதால் நடந்த அனைத்தையும் ஒரு செய்தியாக தான் அவளால் எடுத்துக் கொள்ள முடிந்தது.
இருந்தாலும் அதனை ஜீரணிக்க, அவளுக்கு
கிட்டத்தட்ட ஒரு மாத காலத்திற்கு மேலாகி போனது.
இந்நிலையில் ரெஜினாவை சந்தித்து பேசினார் பாதிரியார் டேனியல்.
" உனக்கு என்ன பிரச்சனை ரெஜினா ... ஏன் அன்னைக்கு வாய்க்கு வந்தபடி பேசின..."
" ம்ம்ம்... கல்யாணத்துக்காக மதம் மாறச் சொன்னதுக்கு அந்த பொண்ணோட அம்மா மாற முடியாதுனு எடுத்தெறிஞ்சு பேசினா ... அப்பவே நான் கொஞ்சம் சுதாரிச்சிருந்தா, இன்னைக்கு என் பேரன் உயிரோட இருந்திருப்பான் ..."
" உன் பேரன் தண்ணி அடிச்சிட்டு பைக்ல ராஷ் ட்ரைவ் பண்ணி ஆக்சிடென்ட்ல இறந்ததுக்கும் மதத்துக்கும் என்ன சம்பந்தம்...
அதோட மதம் மாறறதும், மாறாததும் அவங்களோட தனிப்பட்ட விஷயம் .... முதல்ல நீ அதை நிர்பந்திச்சதே தப்பு .... எல்லா மதத்துலயும் தீவிர மதப் பற்றாளர்கள் இருப்பாங்க ... அது இயல்பு தானே ...
இங்க பாரு ரெஜினா,
கர்த்தரின் ரத்தம் பாவத்தை கழுவுங்கிறதால நாம பாவம் செய்யணும்னு பைபிள்ல சொல்லல...
உன் மனசாட்சிக்கு நல்லா தெரியும் அந்த பொண்ணு சுமந்துகிட்டு இருக்கிறது உன் பேரனோட வாரிசுனு ....
உன் பேரன் இப்ப உயிரோட இல்ல
ஆனா உன்னோட வரட்டு பிடிவாதம், வன்மத்துக்காக உன் கொள்ளு பேரனை நடுத்தெருவுல நிறுத்தி பார்க்கணும்னு ஆசைப்படறியா...
உன் பையனும் மருமகளும் பிளைட் கிராஷ்ல இறந்ததுக்கு அப்புறம்
தனி பொம்பளையா நின்னு
உன் பேரனை வளர்த்த... நீ அவனை சரியா வளர்த்தியா தப்பா வளர்த்தியானு எனக்கு தெரியாது ...
ஆனா உன்னோட முதுமைல அப்படி ஒரு பொறுப்பை ஏத்துக்கிட்டு செஞ்சது கஷ்டமான விஷயம் .....
அதுக்காக தான் உன் மேல எனக்கு தனி மரியாதையே இருந்துச்சு...
ஆனா அன்னைக்கு நடு வீட்ல உன் பேரனோட பெணத்தை வச்சிக்கிட்டு நீ பேசின பேச்சு எல்லாத்தையும் ஒடச்சி எறிஞ்சிடுச்சு ...
அந்த பொண்ணு லீகலா கேஸ் போட்டா, நிச்சயம் அந்த பொண்ணு தான் ஜெயிப்பா .... என்ன ஒன்னு சிவில் கேஸ் கொஞ்ச காலம் இழுக்கும்...
அதைவிட நீயே பிரச்சனை பண்ணாம விட்டுக் கொடுத்திடலாமே ....
உனக்கும் வேற யாரும் கிடையாது ...
நீ செத்ததுக்கு அப்புறம் சொத்து யாருக்கோ போகப்போகுது...
அதைவிட உன் கொள்ளு பேரனுக்கு போகட்டுமே .... அதுதான் நியாயம்.. அதுதான் முறை ...
தினமும் வீட்டுல பிரேயர் பண்ணி,
ஞாயிற்றுக்கிழமையான சர்ச்சுக்கு வந்து பைபில்ல சொல்லி இருக்கிற வாசகத்தை படிச்சா மட்டும் போதாது .... அது படி நடக்கணும் ....
முதல்ல மனிதத்தை கத்துக்கோ அப்புறம் மதத்தை பத்தி பேசலாம் ...." என்றார்.
என்ன தான் பாதிரியார் நல்ல விஷயங்களை போதித்தாலும், ரெஜினாவின் மனதில் இருந்த சாத்தான் அதனை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்ளவில்லை.
பாதிரியார் தன் நண்பர்கள் மற்றும் தேவாலயத்தின் மூத்த உறுப்பினர்களை வைத்து மறுபடியும் ரெஜினாவிற்கு அறிவுரையும் அழுத்தமும் கொடுக்க,
வேறு வழியில்லாமல் அவர் பேச்சுக்கு இசைந்தார் ரெஜினா.
பிறகு பாதிரியார் டேனியலே முன் நின்று அதற்கான ஆவணங்களை சட்ட ரீதியாக தயார் செய்து பெற்று
மித்ரா மற்றும் சுப்பிரமணியத்தை அழைத்து ஒப்படைத்து விட்டு,
" தாமஸஸை பத்தி தெரிஞ்சும், உனக்கு அவனைக் கல்யாணம் கட்டி வச்சது.... இத்தனை நாளா எனக்குள்ள குற்ற உணர்ச்சியா இருந்து கொல்லாம கொன்னுகிட்டு இருந்துச்சு ....
இன்னைக்கு அதற்கான பரிகாரத்தை தேடிட்டேன்.... இப்பதான் மனசுல பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும்மா....
இனிமே உன் வாழ்க்கை நல்லா இருக்கும் .... ஆண்டவர் என்னைக்கும் உன்னை வழி நடத்துவாரு...." என்று ஆசி கூற, நன்றியோடு அவரைப் பார்த்து விட்டு விடை பெற்றனர் தந்தையும் மகளும்.
" அதுக்கப்புறம் மித்ராவுக்கு குழந்தை பொறந்துச்சு ... வாழ்க்கை ஓரளவுக்கு சந்தோஷமாகவே போச்சு...
ஆனா இந்த ஆதரிப்புதிரி எல்லாம்
முடிய கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் ஆயிடுச்சு ... போன வருஷம் ஹார்ட் அட்டாக்ல ரெஜினா இறந்து போயிட்டா.. குழந்தை மாதேஷோட மித்ரா தான் எல்லாத்தையும் செஞ்சு கடைசி யாத்திரையை முடிச்சா ... அதுக்கப்புறம் மித்ராவோட வாழ்க்கையை சரி செய்யாம மூர்த்தியாரை சந்திக்கிறதுல கலைச்செல்விக்கு ஒரு தயக்கம் இருந்துச்சு .... சரி ஏதாச்சும் ஒரு வழில மித்ராவுக்கு வாழ்க்கை அமைச்சு கொடுக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்த நேரத்துல தான்
இப்ப ஆறு மாசத்துக்கு முன்னாடி
குழந்தைக்கு இப்படி ஆயிப்போச்சு ...
மறுபடியும் குடும்பத்துல நிம்மதியே இல்லாம போயிடுச்சு .... அதுக்குள்ளே மூர்த்தியார் இறந்தே போயிட்டாரு ..." என முடித்தார் சங்கையா.
அலைப்பேசி அழைப்பை துண்டித்தவனின் மனதில் மித்ரா சிரித்தாள்.
மாதவியை விட சிறியவள் ....
ஆனால் அவள் தன் வாழ்க்கையில் செய்த தவறுக்கு வாழ்க்கை அவளுக்கு கொடுத்த அனுபவங்கள் மிக மிகப் பெரியது ....
தவறான நபரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்தால்,
வாழ்க்கை என்னவாகும் என்பதற்கு இவள் வாழ்க்கை ஒரு உதாரணம் ...
அவளுக்கு கிடைத்த அனுபவங்கள்,
அவளுக்கான தண்டனைகள் என்று எடுத்துக் கொண்டாலும், பாவம் அந்த சின்னஞ்சிறிய சிசு அது என்ன செய்தது ... இவ்வளவு சிறிய வயதில் எவ்வளவு பெரிய வியாதியோடு போராடுகிறதே...
என்றெண்ணியவனுக்கு அவள் மீது பரிதாபம் பிறந்தது.
அதன்பின் ஒரு நாள் அவன் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டு சாலையை கடக்கும் பொழுது, மித்ராவிடமிருந்து அலைபேசி அழைப்பு வந்தது.
" ஹாஸ்பிடல் போயிட்டு வரீங்களா.... "
" ஆமா.... உங்களுக்கு எப்படி தெரியும் ... நீங்க.... நீ எங்க இருக்க ..."
" உங்க லெப்ட் சைடு திரும்பி பாருங்க... காபி ஷாப்ல நானும் மாதேஷூம் இருக்கோம் ....
வாங்க ஒரு காபி சாப்பிடலாம் ..."
சாலையை கடந்து, அந்த காபி ஷாப்பில் அவளுக்கு எதிர் நாற்காலியில் அமர்ந்தவனின் விழிகள் அவளை பரிதாபமாக பார்க்க,
" என்ன.... அப்பா எல்லாத்தையும் சொல்லிட்டாரா ..."
" இல்லையே, உங்க அப்பா எதுவும் சொல்லலையே...."
" பின்ன ... பரிதாபமா பாக்கறீங்களே... அதான் கேக்கறேன் ... அப்பா சொல்லலைன்னா வேற யாரு சொன்னாங்க ... நிச்சயமா உங்களுக்கு என் விஷயம் தெரியும்னு எனக்கு தெரியும்... சொல்லுங்க ..."
" சங்கையா சொன்னாரு..." என்றான் மென்மையாக.
அதற்குள் குழந்தை அவனைப் பார்த்து
சிரித்து வைக்க, ஆசையாய் அதை அள்ளித் தன் மடியில் கிடத்திக்கொண்டவனுக்கு ,
உள்ளுக்குள் ஏகத்துக்கும் மன அழுத்தம்.
அவன் தன் வாழ்வின் ஆதாரத்தை தேடிக் கொண்டிருக்கும் வேளையில், அவளுடைய ஆதாரமோ அந்தரத்தில் ஆயுளுக்காக அல்லாடிக் கொண்டிருப்பது அவன் இதயத்தில்
ஈரத்தை கசியச் செய்தது.
இரண்டு பேருமே வாழ்க்கையில் தோற்றவர்கள்.
ஆனால் அவன் நிலைமையை விட அவள் நிலைமை படு மோசம்.
கண் முன்னே நித்தம் நித்தம் தன் சின்னஞ்சிறு மழலை செத்து செத்து பிழைத்து துடித்து துவண்டு நாட்களை எண்ணிக் கொண்டிருப்பதை எந்தத் தாயால் தான் சகித்துக் கொண்டிருக்க முடியும் ....
ஆனாலும் சகித்துக் கொண்டுதான் வாழ்கிறாள் .... என்றாவது ஒருநாள் தனக்கும் தன் குழந்தைக்குமான சாபம் தீரும்...
என்ற நம்பிக்கையில், வீறு கொண்டு வலம் வருகிறாள் ...
என எதிரே அமர்ந்திருப்பவளின் வாழ்க்கையை பற்றிய வர்ணனைகள்
அவன் மனதில் வலம் வர,
" உங்களுக்கு ஒரு காபி ஆர்டர் பண்ணட்டுமா ..." என்றவளின் குரல் அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது.
" ம்ம்ம்..." என்றதும், சிப்பந்தியிடம் மேலும் ஒரு காபிக்கு சொல்லிவிட்டு
" ஆமா , அன்னைக்கும் உங்கள இதே இடத்துல தான் பார்த்தேன் .... இன்னைக்கும் இங்கே தான் பாக்குறேன் .... இங்க என்ன வேலை ..." என்றாள் நேரடியாக .
முதலில் தயங்கியவன், பிறகு அவன் மருத்துவமனை வந்ததற்கான காரணங்களை சொல்லி முடிக்க, அங்கு ஒரு பெருத்த அமைதி நிலவியது.
இருவரின் மன ஓட்டமும் ஒரே திசையில் பயணிக்க,
அடுத்து எப்படி பேச்சை துவங்குவது என அவன் தயங்கிய நிலையில்
" நான் ஒன்னு சொல்லட்டுமா ....
என் குழந்தை உயிர் வாழனும் .... உங்களுக்கு குழந்தை வேணும் ...
நானே உங்க குழந்தைக்கு சரோகேட் மதரா இருந்துட்டு போறேனே..." என்றவளின் கண்கள் ஏகத்துக்கும் கெஞ்ச,
" எனக்கு ஓகே ... இன்பாக்ட் எனக்கு ரொம்ப சந்தோஷம்.... சரோகேட் மதர் கிடைக்க இன்னும் ரெண்டு மாசம் ஆகும்னு இப்பதான் டாக்டர் சொன்னாங்க ....
நீ சரோகேட் மதரா இருந்தா லீகல் காம்ப்ளிகேஷன்ஸ் வர வாய்ப்பே இல்ல... ஏன்னா கமர்சியல் சரோகசிய விட, அல்ட்ருஇஸ்டிக் சரோகசில (Altruistic surrogacy) உறவுக்காரங்களே, தட் மீன்ஸ் நோன் பர்சனே சரோகேட் மதரா இருக்கிறதால, எல்லா விதங்கள்லயும் பெஸ்ட்... எதுக்கும் அத்தை மாமா கிட்ட டிஸ்கஸ் பண்ணு.... ஒருவேளை அவங்களும் ஒத்துக்கிட்டா , நம்ப லீகலா ஹாஸ்பிடல் மூலமா டாகுமெண்ட்ட ப்ரிப்பேர் பண்ணிக்கலாம் ...." என்றான் அழுத்தமாக.
" நான் என் வாழ்க்கையோட கடைசி படில நின்னு போராடிக்கிட்டு இருக்கேன் .... எனக்கு என் குழந்தையை காப்பாத்தணும் அவ்ளோ தான்...
எந்த லீகல் டாகுமெண்ட் இல்லைனாலும் உங்க குழந்தை உங்க கைக்கு வந்துடும் ...."
" ஹாஸ்பிடல்ல டாக்குமெண்ட்ஸ் இல்லாம எதுவும் நடக்காது ...
அதோட என் குழந்தை லீகலா எனக்கு வேணும் அதான் ..." என்றான் வியாபாரி போல்.
அதற்கு மேல் நடந்தது அனைத்தும் மின்னல் வேகம் தான்.
குழந்தை மாதேஷ்காக கலைச்செல்வி, சுப்பிரமணியம் சம்மதித்தனர். உடனே மதுரா
" எதுக்கு தலையை சுத்தி மூக்க தொடுவானேன்.... நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கையை தொலைச்சவங்க... நீங்க ரெண்டு பேரும் பேசாம கல்யாணம் பண்ணிக்கோங்க ....
உங்க ரெண்டு பேருக்கும் துணை கிடைச்சா மாதிரியும் ஆயிடும்... மாதேஷ்க்கும் நல்லது...
இன்னொரு குழந்தையும் பொறக்கும் ... எப்படி என் ஐடியா .."
" ஔராத மதும்மா.... என் முதல் கல்யாணத்துல பட்ட அடியையே இன்னும் மறக்கல ....
இப்ப என் மனசுல இருக்கிறதெல்லாம் என் குழந்தையை நல்லபடியா குணமாக்கணும்... அவ்ளோ தான்....இனிமே இந்த மாதிரி எல்லாம் என்கிட்ட வந்து பேசாத ..." என்று படபடத்துவிட்டு இந்த இடத்தை காலி செய்தாள் மித்ரா.
" நான் ஒரு ஐடியா மணி ... என்கிட்ட ஐடியாக்கள் டிப்போ கணக்குல இருக்குது ... தேவையில்லாம டாக்டருக்கு பணம் கொடுக்க வேணாமேனு சொன்னா....இவ கடிச்சிட்டு போற ...
மது ... உன் அறிவை பத்தி இவங்களுக்கு எல்லாம் தெரியாது ....
இவங்க கிட்ட உன் அறிவை வீணடிக்காம, நாட்டுக்காக மட்டும் செலவழி...
நீ வருங்கால சிபிஐ ஆபிசர் இப்படியே தெளிவா இரு ..." என தனக்குத்தானே முதுகை தட்டிக்கொண்டு தன் அறைக்குச் சென்றாள் மதுரா .
அதற்குப்பின் மித்ராவும் கிருஷ்ணாவும் மருத்துவரை சென்று சந்தித்தனர்.
" குட் மிஸ்டர் வாசுதேவ்.... நீங்களே
உங்க ரிலேட்டிவ சரோகேட்டா சூஸ் பண்ணினதுக்கு ....
இவங்க உங்களுக்கு பிளட் ரிலேடிவ்ங்கிறதால குழந்தை மாதேஷ்க்கு ஃபியூச்சர்ல டிரான்ஸ்பிளன்ட் நடக்கும் போது செல் அக்செப்ட்டன்ஸ் நிறையவே இருக்கும் ... அதோட உங்களோடது
ட்ரெடிஷனல் சரோகசிங்கிறதால மெடிக்கல் ப்ரொசீஜர் ரொம்ப சிம்ப்பல்... சிலருக்கு IUI ப்ராசஸ் ஃபர்ஸ்ட் டைமே வொர்க் அவுட் ஆகும் ... சிலருக்கு
ரெண்டு மூணு தடவைக்கு அப்புறம் வொர்க் அவுட் ஆகும் .... அவ்ளோ தான்..." என்றவர்
ஒரு கணம் நிறுத்தி,
" உங்க ரிலேடிவ்வே சரோகேட் மதரா இருக்கிறதால லீகலா பிரச்சனை வராதுன்னு நீங்க நினைக்கிறீங்க... அது தப்பு .... இன்ஃபேக்ட் இதுல தான் லீகல் பிரச்சனைகள் அதிகம் வர வாய்ப்பு இருக்கு ...
கெஸ்டேஷனல் சரோகசின்னா (Gestational surrogacy) உங்க குழந்தையை சுமக்கிற சரோகேட் மதருக்கும், உங்க குழந்தைக்கும்
எந்த ஒரு பயாலஜிக்கல் ரிலேஷன்ஷிப்பும் இருக்காது .... குழந்தையை பெத்து கொடுக்கிறதோட அவங்க வேலை முடிஞ்சது ... வேர்அஸ்
ட்ரெடிஷனல் சரோகசின்னா(traditional surrogacy) உங்க குழந்தையை சுமக்கிற சரோகேட்க்கும், பொறக்க போற குழந்தைக்கும் பயாலஜிக்கல் ரிலேஷன்ஷிப் இருக்கும் .... ஏன்னா அவங்க கருமுட்டையை தான் யூஸ் பண்றோம் ....
அது ஃபியூச்சர்ல எமோஷனல் ரிலேஷன்ஷிப்பா மாற சான்சஸ் இருக்கு ....
எப்படியும் லீகல் காண்ட்ராக்ட் போடப் போறோம் ...
இருந்தாலும் ட்ரெடிஷனல் சரோகசிஸில ஷி வில் பி பயோலஜிக்கல் மதர் ஆஃப் யுவர் சைல்ட்(She will be biological mother of your child .... )அதை மாற்றவும் முடியாது மறுக்கவும் முடியாது ...
சுருக்கமா சொன்னா, எதிர்காலத்துல
என் குழந்தை எனக்கு வேணும்னு இவங்க கோர்ட்டுக்கு கூட போகலாம் ...
இதெல்லாம் சொல்லி உங்களை பயம் காட்டல ... ஏன்னா இந்த மாதிரி பல கேசஸ் நடந்திருக்கு .... அதனால லீகல் காண்ட்ராக்ட போடும் போது ரொம்ப ரிஜிட்டா போட்டீங்கன்னா பிரச்சனை வராது ..."
" டாக்டர், உங்களுக்கே தெரியும் ...கேன்சர்ல கஷ்டப்படற என் குழந்தையை காப்பாத்த தான்
இந்த சரோகஸிக்கே நான் ஒத்துக்குறேன் .... மத்தபடி பொறக்கப் போற குழந்தை மேல நான் எப்பவும் உரிமை கொண்டாட மாட்டேன் .... இது ப்ராமிஸ் ..." என மித்ரா முடித்ததும் லேசாக புன்னகைத்த மருத்துவர்,
" இந்த மாதிரி எத்தனையோ ப்ராமிசிஸஸ் நான் பார்த்திருக்கேன் ....
நீங்க பொறக்க போற குழந்தைக்கு பயாலஜிக்கல் மதர் .... ஏதாச்சும் ஒரு சந்தர்ப்பத்துல நிச்சயம் அந்த குழந்தை மேல உங்களுக்கு எமோஷனல் பாண்டிங் வர வாய்ப்பு இருக்கு .... உங்களை சந்தேகப்படல ஒரு பிரகாஷனுக்காக சொல்றேன் ..." என முடித்தார்.
அதற்குப் பின் செயற்கை கருத்தரிப்பு மருத்துவ முறைகள் பின்பற்றப்பட்டு முதல் முறையிலேயே கருத்தரித்தாள் மித்ரா.
கிருஷ்ணாவின் சந்தோஷத்திற்கு அளவே இல்லாமல் போனது.
கலைச்செல்வி, சுப்பிரமணியம்
இந்த சர்க்கரை செய்தியை கேட்டு மனம் மகிழ்ந்தாலும், ஏதோ ஒரு நெருடலும், சோகமும் அவர்களது மனதில் இழையோடிக் கொண்டு தான் இருந்தது.
மித்ராவிற்கு ஒரு வாழ்க்கை அமைந்து,
அவள் கர்ப்பம் தரித்து இருந்தால்,
மனப்பூர்வமாக மனம் மகிழ்ந்திருப்பர்.
இப்படி தாமரை இலை தண்ணீர் போல், எந்த ஒரு உறவு முறையோ உணர்வுகளுக்கோ இடமில்லாமல் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பிறக்கப் போகும் குழந்தை , என்னதான் குழந்தை மாதேஷை காக்க வரும்
ஆபத்பாண்டவனாக இருந்தாலும் ,
அவர்களால் ஆத்மார்த்தமாக அதனைக் கொண்டாட முடியவில்லை.
ஒரு நாள் சுப்பிரமணியம்,
" வாசு, நீங்க எதுக்காக வெளியே வீடு எடுத்து தங்கனும் .... நம்ம வீடே பெருசா இருக்கு இங்கேயே தங்கிக்கலாமே.."
" நான் தங்கி இருக்கிற இடம்... என் ஆபீஸ்க்கு கிட்ட....அதான் " என்று இழுத்தான் .
" என்ன பெருசா டிராவல் டிஸ்டன்ஸ் இருக்க போவுது .... இங்கிருந்து போனா பத்து நிமிஷம் கூடுதலா இருக்கும் அவ்ளோ தானே ..."
கிருஷ்ணாவின் முகம் இறுகிப்போக,
" இங்க பாரு வாசு, இங்க நீ கெஸ்ட்டா தங்கனும்னு நான் கூப்பிடல ...
என் வீட்டு மேல் போர்ஷன்ல பேயிங் கெஸ்டா தங்கு ....
சாப்பாட்டுக்கும், தங்குறதுக்கும் வெளிய பணம் கொடுக்கிற இல்ல ...
அது எனக்கு கொடுத்துட்டு போ ...
போன ரெண்டு வாரத்துல ரெண்டு தடவை ஸ்டமக் இன்ஃபெக்ஷனால டாக்டருக்கு போயிட்டு வந்திருக்க ...
நீ ஆரோக்கியமா இருந்தா தானே பொறக்க போற உன் குழந்தைய பாத்துக்க முடியும்....
எனக்கு உன்னை நல்லா தெரியும் ....
மித்ரா உன் குழந்தைக்கு சரோகேட், ஜஸ்ட் எ கஸ்டோடியன் ...
உங்க ரெண்டு பேருக்குள்ளேயும் இருக்கிறது ஜஸ்ட் எ பிசினஸ் டீலிங் மாதிரினு அவளுக்கும் தெரியும் எங்களுக்கும் தெரியும் ....
அதனால நீ அதை பத்தி கவலைப்பட வேண்டாம் .... " என வழக்கம் போல்
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டாக அவனிடம் இருக்கும் தயக்கத்திற்கு
பதில் அளித்து முடித்தார் கலைச்செல்வி.
- மாயோனின் மாயங்கள் தொடரும்