- Joined
- Jul 21, 2025
- Messages
- 681
- Thread Author
- #1
அத்தியாயம் 92
அவன் எந்த காரணத்திற்காக தயங்கினானோ அதை எல்லாம்
கலைச்செல்வி வெட்ட வெளிச்சமாக சொன்னதால், மேற்கொண்டு மறுக்க மாட்டாமல், கலைச்செல்வி வீட்டின் மேல் தளத்திற்கு இடம் பெயர்ந்தான் கிருஷ்ணா.
மித்ராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அழைத்து வருவதை கலைச்செல்வி சுப்பிரமணியம் தங்கள் பொறுப்பாக ஏற்றுக் கொண்டிருந்தனர்.
ஆறாவது வாரத்தில் குழந்தையின் இதயத்துடிப்பை கேட்க மட்டும் கிருஷ்ணா உடன் சென்றிருந்தான்.
மித்ராவின் வெற்று வயிற்றின் மேல் ஸ்கேன் செய்யும் உபகரணத்தை வைத்து மருத்துவர் சுழற்றிக்கொண்டே, திரையில் குழந்தையின் அசைவை பார்த்தபடி
" குழந்தையோட ஹார்ட் பீட் கேக்குதா ..." என்றார்.
லப்டாப்... லப்டாப்... லப்டாப்... என்ற ஒலி இது நாள் வரை அவன் உணர்ந்திராத பூரிப்பையும் சிலிர்ப்பையும் அவன் உணர்வுகளில் உதிக்கச் செய்ய, அசைவற்று நின்று ஆனந்தமாகக் கேட்டான்.
அந்த மாதத்திற்கான மாதாந்திர பரிசோதனை முடிந்ததும் மருந்து மாத்திரைகளை எழுதி கொடுத்த மருத்துவர்,
" மித்ரா உங்க உடம்பு ரொம்ப வீக்கா இருக்கு .... வேளா வேளைக்கு காய்கறி, பழங்கள், சத்தான ஆகாரங்கள நல்லா சாப்பிடணும் ....
மருந்து மாத்திரைய வேளா வேளைக்கு கரெக்டா எடுத்துக்கணும் ... சரியா .." என்று அறிவுரை கூறி அனுப்பினார்.
அவன் குழந்தை அவள் கருவில் உருவாகிவிட்டது என்ற செய்தி அறிந்ததும்
மகிழ்ச்சி அடைந்தானே ஒழிய, ஒரே வீட்டில் இருந்தாலும் எந்த காரணத்தைக் கொண்டும் அவளை சந்திக்கும் வாய்ப்பை மட்டும் ஏற்படுத்திக் கொள்ளவேயில்லை.
அலுவலகத்திற்கு சென்று வருவதோடு தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்தான்.
உணவு கூட மேல் தளத்திற்கு சென்று கலைச்செல்வி கொடுத்து விட்டு வந்தாள்.
இப்படி போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், மருத்துவரின் அறிவுரையால் அன்று அலுவலகம் விட்டு திரும்பும் பொழுது காய்கறிகள், பழங்கள் ,உலர் கனிகள் என வாங்கி வந்து குவித்தவன்,
" மித்ரா இதையெல்லாம் தவறாம சாப்பிடு... சரியா ...." என்றான் இறுக்கமான குரலில்.
" எதுக்கு இதெல்லாம் வாங்கிட்டு வந்த... எல்லாம் வீட்ல இருக்கு ..
மசக்கை அதிகமாக இருக்கிறதால சாப்பிட முடியாம கஷ்டப்படறா..." என்றார் கலைச்செல்வி.
ஒரு கணம் அவன் பார்வை அவள் பார்வையை தொட்டு விட்டு விலக,
" மருந்து மாத்திரைய வேளா வேளைக்கு சாப்பிடு ..." என்றவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் மேல் தளத்தில் இருக்கும் தன் அறைக்குச் சென்று விட்டான்.
நாட்கள் வேகமாக நகர்ந்தது.
அவள் உடலில் மட்டுமல்ல மனதிலும் மாற்றங்கள் ஏற்பட தொடங்கியது.
கர்ப்ப காலத்தில் ஏற்படும் உணர்வு மாற்றங்கள் அவளை அதிகம் உணர்ச்சி வசப்பட செய்ய,
அவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும், அவனுடன் பேச வேண்டும்
என்றெல்லாம் நொடிக்கு ஒரு தரம் தோன்ற ஆரம்பித்து உள்ளுக்குள்ளேயே மருகி தவித்தாள்.
அவன் இயல்பாக சுப்ரமணியம், கலைச்செல்வி, மதுரா மற்றும் குழந்தை மாதேஷுடன் பழகினாலும் ,மித்ராவிடம் மட்டும் அளந்து தான் பேசினான்.
விடுமுறை நாட்களில் அவன் வீட்டில் இருந்து, குழந்தை மாதேஷை மாதாந்திர பரிசோதனைக்காக
சுப்ரமணியம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதை பார்த்தால்
உடன் சென்று உதவுவான்.
அதே போல் விடுமுறை தினங்களில் அவளுடைய மாதாந்திர பரிசோதனைகக்கும் கலைச்செல்வியோடு சென்று வருவான்.
மற்றபடி அவளுடனான உறவில் எந்த வகையிலும் அவன் முன்னேற்றத்தைக் ஏற்படுத்திக் கொள்ள விரும்பவில்லை.
ஆனால் மித்ராவின் சிந்தனை முழுவதும் அவனே நிரம்பி வழிந்தான்.
அடித்து சொல்லுவாள்.
அவள் முதல் முறை கருவுற்றிருக்கும் போது , அவளுக்கு தாமஸின் மீது இப்படி ஒரு எண்ணம் தோன்றயதே இல்லை.
அவன் மிருகத்தை விட அவளிடம் கேவலமாக நடந்து கொண்டது ஒரு காரணம் என்றாலும், அவள் கருத்தரித்த முதல் மாதம் கூட தற்போது கிருஷ்ணாவிடம் உணரும் நெருக்கமான பிணைப்பை அவள் உணரவே இல்லை என்பது உரைக்க ஆரம்பிக்க,
ஆசை வார்த்தை பேசாமல், கட்டி அணைத்து காதல் புரியாமல், விலகி நின்ற நிலையிலேயே அவன் மீது
நேசமும் ஈர்ப்பும் உருவாக , இதுதான் தன் தாய் கூறிய இனக்கவர்ச்சி இல்லாத காதலோ என்று எண்ண ஆரம்பித்தாள் .
இருந்தாலும் இந்த புது வகையான உணர்வுகளுக்கு இடம் தரக் கூடாது
என்ற வைராக்கியம் உதித்த மாத்திரத்தில்,
அவன் குழந்தையை சுமப்பதால், மனம் அவன் மீது தரிகெட்டு அலைபாய்கிறது.
10 மாதத்தில் குழந்தையை இறக்கி வைக்கும் பொழுது, அவனும் தன் மனதை விட்டு தன்னிச்சையாய் வெளியேறி விடுவான் ...எனவே இந்த உணர்வு தற்காலிகமானது என தனக்குள்ளே உரு போட்டுக்கொண்டாள்.
ஆனால் அந்த எண்ணங்கள் வெகு சில தினங்களிலேயே மங்கி காணாமல் போக, மீண்டும் அவள் மனதை
காரணமின்றி அவன் ஆக்கிரமிக்க தொடங்கினான்.
அவன் அறிவுறுத்தலின் பேரில்
மருத்துவமனையில் உள்ள சரோகேட் ஏஜென்சி உடன்படிக்கை செய்து கொள்ளும் ஆவணங்களில்
எல்லாவிதமான நிபந்தனைகளையும்
குறிப்பிட்டே அவளிடம் கையொப்பம் பெற்றது.
ஒப்பந்தத்தில் குறிப்பிட்டது போலவே,
அவன் அவளை தன் குழந்தையை சுமக்கும் வாடகைத்தாய் என்ற
நிலையிலேயே உறவு பாராட்ட,
அவளது மனம் மட்டும் அவன் மீது பித்து பிடித்து அலையத் தொடங்கியது.
அவன் அலுவலகம் விட்டு வந்து கலைச்செல்வி, சுப்பிரமணியம் மாதேஷ், மதுரா ஆகியோருடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது
மித்ராவின் ஏக்க பார்வை எப்பொழுதும் அவனிடத்திலேயே குடி கொண்டிருக்கும் .
அதற்கு மேல் அவன் மேல் தளத்திற்கு சென்று விட்டால், அதோடு மறுநாள் தான் அவன் தரிசனம் என்பதால் சொற்ப நேரத்தில்
அவனையே விழுங்குவது போல் தன்னிலை மறந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.
அதனை கலைச்செல்வி மட்டுமல்ல மதுரா, சுப்பிரமணியம் கூட பல தருணங்களில் உணர்ந்தனர்.
அவன் மீது உண்டான உணர்வுகளை வெளி காட்ட முடியாமல் , தூக்கி சுமக்கவும் முடியாமல், உள்ளுக்குள்ளேயே வைத்து அவள் மருகிக் கொண்டிருப்பது ஓரளவிற்கு அனைவருக்கும் புரியத் தொடங்கியது.
இந்நிலையில் ஒரு விடுமுறை தினத்தன்று மருத்துவமனைக்கு சென்று விட்டு திரும்பும் பொழுது, அவள் காரில் இருந்து இறங்க முற்பட்ட நிலையில் கால்கள் இடற, தடுமாறி விழபோனவளை அவன் தன்னோடு சேர்த்து தாங்கி நிறுத்தி,
" மித்ரா, கீழ பாத்து இறங்க மாட்டியா .... ரெண்டு உயிரா இருக்க ம்மா... நான் வந்து கார் கதவை திறக்க மாட்டேனா...
இனிமே காரை விட்டு இறங்கும் போது,
யார் கூட வராங்களோ அவங்கள கார் கதவை திறக்க சொல்லி இறங்கு ... சரியா ..." என்றவன் பேச்சு தோரணையில்
அவள் கரத்தைப் பற்றிக் கொண்டே நெருங்கி நடக்க, அவள் முகத்தில் சந்தோச அலை வீச, அதனை தொலைவில் இருந்தே உள்வாங்கிக் கொண்டிருந்தாள் மதுரா .
அன்று இரவு மேல் தளத்தில் இருக்கும் அவன் அறைக்கு மதுரா போனதும்
" கங்கிராஜுலேஷன்ஸ்..." என மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்றான்.
" தேங்க்ஸ் ....நாளைக்கு காலையில நான் SI ட்ரெய்னிங்கு கிளம்பறேன்...
உங்ககிட்ட சொல்லிட்டு போலாம்னு வந்தேன் ...." என்றவளிடம்
அவளது பணி நிமித்தமான கேள்விகளை அவன் முன் வைக்க , அவளும் அசராமல் பதிலளிக்க உரையாடல்கள் வெகு சுவாரசியமாக சென்றது.
கிட்டத்தட்ட 15 நிமிட உரையாடலுக்கு பிறகு அவள் கிளம்பும் தருவாயில்,
" உங்க கிட்ட ஒன்னு சொல்லணும் ....
நான் பேசப் போற விஷயம் ரொம்ப பர்சனல் ..... நீங்க அதை எப்படி எடுத்து பீங்கன்னு எனக்கு தெரியாது...
ஆனா எனக்கு வேற வழி தெரியல ..." என பலத்த பீடிக்கையோடு தொடங்கியவள்,
" இன்னைக்கு நீங்க ரெண்டு பேரும் ஹாஸ்பிடல் போயிட்டு ஒன்னா திரும்பி வரும் போது பார்க்க
அவ்ளோ அழகான ஜோடியா தெரிஞ்சிங்க .... நீங்க ரெண்டு பேரும் உங்க கசப்பான கடந்த காலத்தை மறந்துட்டு ஏன் கல்யாணம் பண்ணிக்கிட்டு
புது வாழ்க்கை வாழ கூடாது ...
மித்ராவும் 90% மாதவி மாதிரியே தானே இருக்கா .... உங்களுக்கு அவளை பார்க்கும் போதெல்லாம் மாதவி ஞாபகம் வரவே இல்லையா ... "
என்றவளை ஒரு மென் புன்னகையோடு நோக்கியவன்,
" மாதவி என்னை வேணாம்னு விட்டுட்டு போகல...
நான் அவளுக்கு வேணும்னு தான் விட்டுட்டு போயிருக்கா....
அவ விட்டுட்டு போன இடத்துல தான் இன்னமும் நின்னுகிட்டு இருக்கேன் .... அதிலிருந்து அரை அடி விலகக் கூட எனக்கு மனசில்ல ...
சொல்லுவாங்களே... மந்திரவாதியோட உயிர் ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி இருக்கிற கிளி கிட்ட இருக்குன்னு ...
அது மாதிரி என்னோட அகமும் ஆன்மாவும் மாதவிகிட்ட இருக்கு
இங்க இருக்கிறது வெறும் கூடு தான்...
கூடுக்கு ஏது உணர்வு ...
மித்ரா மாதவி மாதிரி இருக்கலாம் ...
ஆனா மாதவியாக முடியாது ....
சிலர் சிலரை நினைவு படுத்தலாம் ...
ஆனா அவங்க இடத்தை நிரப்ப முடியாது ....
அதுக்காக மாதவி மேல் கோபம் இல்லைன்னு சொல்ல மாட்டேன் ....
கழுத்து வரைக்கும் இருக்குது ....
ஆனா வேற காரணத்துக்காக இருக்கு ...
நான் வாழற இந்த வாழ்க்கைக்கு ஒரு ஆதாரம் வேணும் ....
அதுக்காகத்தான் குழந்தை வேணும்னு யோசித்தேன் ...
முதல்ல ஏதாச்சும் அனாதை ஆசிரமத்திலிருந்து குழந்தையை தத்து எடுத்துக்கலாம்னு யோசிச்சேன்... போய் விசாரிக்கவும் செஞ்சேன்....
அங்க கவர்மெண்ட் ப்ரோசீஜரை ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ பண்றாங்க .... முதல்ல வெயிட்டிங் லிஸ்ட் ரொம்ப பெருசா இருக்கிறதால அடாப்ஷனுக்கு ஒரு வருஷம் வெயிட் பண்ணி ஆகணும்னு சொன்னாங்க .... அப்புறம் என்னை நான் சிங்கிள் மேன்னு சொன்னதும், சிங்கிள் மேனுக்கு குழந்தையை தத்து கொடுக்க மாட்டோம்னு சொல்லிட்டாங்க ....
அதான் குழந்தைக்காக இந்த வழியை தேர்ந்தெடுத்தேன் ...
மத்தபடி வாழ்க்கையில வேற எதையும் எதிர்பார்க்காம அதன் போக்கிலேயே வாழ்ந்துட்டு போயிடனும்னு இருக்கேன் ... " என்றவன் பேசிக் கொண்டே செல்ல, படியில் நின்றபடி அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்த மித்ராவுக்கு யாரோ தலையில் ஓங்கி குட்டி காதல் என்றால் என்ன என்று சொல்லிக் கொடுத்தது போல் இருந்தது..
மாதவி மீதான அவன் காதலில் தான் எத்தனை நேர்மை, உண்மை , விசுவாசம் ....
உலகிலேயே விலை மதிக்க முடியாதவர்கள் நேர்மையானவர்கள் ஏனென்றால் நேர்மையானவர்களை எந்த விலை கொடுத்தும் வாங்க முடியாது....
இத்துணை நேர்மையோடும் கம்பீரத்தோடும் தன் காதலை பறைசாற்றிக் கொண்டிருப்பவனை விட்டுச் சென்ற மாதவியை உள்ளுக்குள் கரித்துக் கொட்ட ஆரம்பித்தாள்....
அவளுக்கு கிட்டிய நேர்மையான காதலனை எண்ணி பொறாமை உணர்வு தலைத் தூக்கியது.
அப்போதுதான் கலைச்செல்வி அன்று கூறிய காதலுக்கான வரையறை விளங்க ஆரம்பித்தது.
அவள் தாமஸோடு சுற்றித்திரிந்த நாட்கள் அவள் மனக்கண் முன் விரிய, மலத்தில் உழன்ற பன்றியின் நினைவும் உடன் வர, அவளது உடல் அருவிருப்பால் சிலிர்த்தது.
இத்தனை நேர்மையும் உண்மையுமாய் இருப்பவனை அடையும் பாக்கியம் இந்த பிறவியில் தனக்கு இல்லை என்று புரிந்ததும், அவள் கண்களில் கண்ணீர் உருவாகி கோடாய் அவள் கன்னத்தில் வழிய,
இணைந்து வாழும் வாழ்க்கை அமையாவிட்டால் என்ன,
நினைத்து வாழும் வாழ்க்கையிலே காலம் தள்ளிவிடலாம் என முடிவெடுத்தவள் அதற்கு மேல்
வந்த தடம் தெரியாமல் படியிறங்கி சென்றுவிட்டாள்.
" சரி நான் வரேன் அத்தான் ..." என மதுரா திடீரென்று அழைக்க, அது அவன் முகத்தில் இறுக்கத்தை தர, அதை புரிந்து கொண்டவள்,
" நீங்க என் மாமன் மகன் ....
அது யாராலயும் எப்பவும் மாத்த முடியாது ரைட் .... நீங்க மாதவி மேல வச்சிருக்க காதலை பார்க்க பார்க்க உங்க மேல தனி மரியாதையே வருது ...
ஒருவேளை நீங்க எனக்கு பெரியப்பா மகனாக இருந்தா, நிச்சயம் அண்ணானு கூப்பிடுவேன் ....
ஏன்னா சில பேரை மட்டும்தான் உன்னதமான உறவு முறைய வச்சு கூப்பிட பிடிக்கும்.... நீங்க எனக்கு இந்த வகையில உறவுனு சொல்லிக்க எனக்கு ரொம்ப பெருமை... அதனாலதான் இப்படி கூப்பிடறேன் ....
மத்தபடி வேற எதுக்காகவும் நான் உங்களை இப்படி கூப்பிடல நீங்க பயப்படாம இருக்கலாம் ..."
என்று வழக்கம் போல் பொரிந்துவிட்டு அவள் நடையை கட்டினாள் .
அவன் முடிவு எதிர்மறையாய் இருந்ததால் தன் சகோதரியிடம் எதுவும் கூறாமல் மறுநாள் மதுரா பணி நிமித்தமாக பயணப்பட, அதன் பின் வாழ்க்கை அதன் போக்கில் மென்மையாய் நகர்ந்து சென்றது.
ஏமாற்றங்களை சுமந்தே பழகியவளுக்கு இந்த ஏமாற்றமும் பழகிப் போக ,
அவன் வரும் போதும் போகும் போது கீழ்கண்களால் பார்ப்பதோடு நிறுத்திக் கொண்டாள்.
மாதங்கள் கடந்து அவளது பிரசவ நேரமும் வந்தது.
ஒரு நாள் காலை அவன் அலுவலகத்திற்கு பரபரப்பாக தயாராகிக் கொண்டிருக்கும் போது,
கீழ் தளத்திலிருந்து யாரோ பலமாக கதறும் சத்தம் கேட்க, பதறி அடித்துக் கொண்டு கீழே வந்தவன் மித்ரா வயிற்றை பற்றி கொண்டு அழுவதை கண்டு நிலைமையை புரிந்து கொண்டு அவளை அள்ளி காரில் கிடத்தி உடன் கலைச்செல்வியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு பயணப்பட்டான்.
மருத்துவமனையை அடைந்த அரை மணி நேரத்திலேயே , தாயாருக்கு அதிக சிரமத்தை கொடுக்காமல் அம்சமாக பூமிக்கு அடியெடுத்து வைத்தாள் அவனது பெண்ணரசி.
பெரும்பாலும் மித்ராவின் உருவத்தைக் கொண்டு பிறந்த குழந்தை அவன் கண்களுக்கு மட்டும் மாதவியாய் தெரிந்தாள்.
வாடகை தாய் வெளிநபராக இருக்கும் பட்சத்தில், குழந்தை பிறந்ததும் தாய்ப்பால் கூட கொடுக்க விடாமல், மருத்துவமனை நிர்வாகம்
குழந்தையைப் பிரித்து தாய் தந்தையரிடம் சேர்த்து விடுவார்கள்.
வாடகைத்தாய் உறவாக இருக்கும் பட்சத்தில், இரு சாராரின் விருப்பத்திற்கேற்ப கூடி பேசி அவர்களே முடிவு செய்து கொள்ளலாம்
என்கின்ற நிலையில் குழந்தைக்கு தாய்ப்பால் வேண்டும் என்பதற்காக
சில மாதங்கள் மித்ராவுடன் குழந்தையை விட்டு வைக்க முடிவு செய்தான்.
குழந்தை பிறந்ததும் அதன் தொப்புள் கொடியை கத்தரித்து எடுத்து அதில் இருக்கும்
குருத்தணுக்களை பயன்படுத்தி குழந்தை மாதேஷுக்கு ரத்த புற்று நோய்க்கான சிகிச்சை அளிக்கப்பட்டது.
பிறந்த குழந்தை ஒரு புறம், மற்றொரு குழந்தையின் சிகிச்சை மறுபுறம் எனப் போராடிக் கொண்டிருந்தவளுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு உதவினான்.
நாட்கள் வாரங்களாக வாரங்கள் மாதங்களாயின.
மாதேஷின் உடல்நிலை ஏறக்குறைய 100 சதவீதம் தேறி இருந்த நிலையில்
குழந்தைக்கு பெயர் சூட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்தவன் செர்ரி மற்றும் சங்கையாவிற்கு அழைப்பு விடுத்தான்.
சங்கையா அவர் தாயின் உடல் நிலையை காரணம் காட்டி விழாவிற்கு வராமல் போக, செர்ரி மட்டும்
ஏகப்பட்ட பரிசுகளை வாங்கிக் கொண்டு வந்து சேர்ந்தான்.
தன் வீட்டு நபர்களுக்கு சொல்ல அவனுக்கு மனமில்லை.
தனலட்சுமி மட்டும்தான் அவனுடன் ஓரளவிற்கு சுமூக போக்கை கடைப்பிடிப்பவர்.
இருந்தாலும் அவரிடம் பெரிய ஒட்டுதல் இல்லாததால்
அவருக்கு தெரியப்படுத்தவில்லை.
மதுராவும் விடுப்பு எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.
செர்ரி கீழ் தளத்தில் நடைபெறும் பெயர் சூட்டும் விழாவிற்காக கம்பீரமாக வேட்டியில் தயாராகி கிருஷ்ணாவுக்காக காத்திருக்க, கிருஷ்ணாவை சந்திக்க மேல் தளத்திற்கு வந்த மதுரா, செர்ரியை கண்டதும் ,
" ஆப் கோன் ஹா ... ஆப் கஹான் ஸே ஹ...." என அவள் ஹிந்தியில் கேள்விகளை அடுக்கி கொண்டே செல்ல ,
" ஏய் நிறுத்து .... என்ன... நீ வாட்டுக்கு ஹிந்தில பேசிட்டு போறா...
எதிர நிக்குற மனுஷனுக்கு புரியுமா புரியாதானு யோசிக்கவே மாட்டியா....
இங்க பார்.... எனக்கு தமிழே சுமாரா தான் வரும் ... இங்கிலீஷ் அதைவிட சுமாரா தான் வரும் ....
இந்த இந்தியெல்லாம் பேசி என்னை கடுப்பாகாது ...." என அவன் கோபத்தில் படபடக்க, ஏற்கனவே கலாட்டாவிற்கு பெயர் போன மதுராவுக்கு சிரிப்பு பொத்திக்கொண்டு வர, அதை மறைத்து
" ஓ... நீங்கதான் அந்த அய்யனாரா ....
உங்கள பத்தி கேள்விப்பட்டிருக்கேன்.... இப்பதான் பார்க்கிறேன்... சும்மா சொல்ல கூடாது ... ஆள் தேவர் மகன் கமல் மாதிரி கம்பீரமான மீசையோட அம்சமா தான் இருக்கீங்க. அய்யனாரே..."
" ஏய் ஒழுக்கமா செர்ரினு கூப்பிடு..."
" அது என்ன செர்ரீ, ஊட்டி ஆப்பிள்னு அசிங்கமா .... அழகா சொரிமுத்து அய்யனார் கூப்பிட்டா தானே அம்சமா இருக்கும் ..."
அவனுக்கு சரளா ஒரு கணம் மனதோரம் வந்துவிட்டு செல்ல,
" சரி என்னைய பத்தி, தேவா சொன்னானா ...."
" இல்ல சங்கையா சொன்னாரு.... "
அவன் கடந்த கால வாழ்க்கையை நினைத்து அவள் ஸ்ருதி குறைந்து சொல்ல
" ஆமா... நீ யாரு ...."
" ம்ம்ம்ம்.... பொறந்த குழந்தைக்கு சித்தியாக்கும்...."
கேட்டுக்கொண்டே வந்த கிருஷ்ணாவுக்கு அவள் உறவுமுறை கொண்டாடியது பிடிக்கவில்லை .
ஏதோ வேலை செய்வது போல் பாசாங்கு செய்து கொண்டு அவர்களுக்கிடையேயான உரையாடலை கண்ணுற்றான்.
" சரி, கிளம்பு கிளம்பு .... எங்களுக்கு நிறைய வேலை இருக்கு ... உன்னோட வெட்டியா டைம் பாஸ் பண்ண நேரமில்ல..."
" ஹலோ நான் யாருன்னு தெரியுமில்ல .... சிபிஐ ஆஃபீஸர் ....
உங்க ஊர்ல தோட்டம், தொறவு , கரும்பாலை, காய்கறி கடை,
டிபார்ட்மெண்டல் ஸ்டோர்னு அம்புட்டையும் ஆட்டைய போட்டு இருக்கீங்கனு வருமான வரி ரைடு வருவேன் .... "
"நாங்க எல்லாம் நேர்மையா ஐடி கட்றவங்க... எல்லாத்துக்கும் கணக்கு வச்சிருக்கோம் இல்ல ..."
" ஆமா...உங்க சொத்து மதிப்பு எத்தனை கோடி தேறும்...." பொங்கி வரும் சிரிப்பை மறைத்து, கண்களில் குறும்போடு அவள் கேட்க
" என்ன நீ .... சிபிஐ ஆபிஸர் மாதிரி பேசாம, சொத்த ஆட்டைய போட வந்த ஈட்டுக்காரன் மாதிரி பேசற..."
என்றதும் மதுராவும் கிருஷ்ணாவும் குலுங்கி நகைக்க,
" என்ன மதுரா, கீழே எல்லாம் ரெடி ஆயிடுச்சா ...."
" எல்லாம் தயாரா இருக்குன்னு சொல்லிலிட்டு போக தான் வந்தேன் அத்தான் ...
சீக்கிரம் வாங்க ...." என அவள் விடைபெற்றதும்,
" இதுதான் மித்ராவோட ஒட்டி பிறந்த ரெட்டையா .... மித்ரா எல்லாத்துலயும் மாதவி மாதிரியே இருக்கு ....
இது சுத்த தேஞ்சு போன ரெக்கார்ட் பிளேயர் மாதிரி பேசிக்கிட்டே இருக்கு...
இங்க உன் கூட நிம்மதியா இருக்கலாம்னு வந்தா... இந்த சில்லு வண்டு தொல்லை தாங்க முடியல .... இவ எப்ப டா ஊருக்கு போவா..."
" ம்ம்ம்ம், நீ ஊருக்கு போற மத்தா நாள் ..."
"அதுவரைக்கும் இந்த தொல்லையை தாங்கி ஆகணும் போல..."
என்றவனோடு புன்னகைத்துக் கொண்டே கீழ் தளம் வந்தான் இக்கட்டான சூழ்நிலையை சந்திக்கப் போவது தெரியாமல்.
- மாயோனின் மாயங்கள் தொடரும்