- Joined
- Jul 21, 2025
- Messages
- 681
- Thread Author
- #1
அத்தியாயம் 95
மறுநாள் மதுரா, கிருஷ்ணாவின் குழுவில் இருக்கும் பிரகாஷ் , வேதாந்த் ஆகியோர் காலை மணி ஒன்பதை தொடுவதற்கு முன்,
பரபரப்பாக கிளம்பி, அன்று செய்ய வேண்டிய பணிகளை ஒன்றன் பின் ஒன்றாக திட்டமிட்டுக் கொண்டிருந்தனர்.
" மீடியாவுக்கு சொல்லலாமா மேம்...." என வேதாந்த் கேட்க,
" இது ஒன்னும் பிரைவேட் இன்வெஸ்டிகேஷன் கிடையாது ...
கல்குவாரி பக்கத்துல தோண்டும் போது நிச்சயமா உள்ளூர் வாசிகளுக்கு தெரிஞ்சிரும்....
மீடியா டெஃபினட்டா ஸ்மெல் பண்ணிகிட்டு அங்க வந்துருவாங்க ....
அதைவிட அஸ்பர் GPR ரிப்போர்ட்,
நாலஞ்சு ஸ்கல்சோட (மண்டை ஓடு) இமேஜஸ் கிடைச்சதால,
நாலஞ்சு பாடி இருக்கும்னு எதிர்பார்க்கிறோம் ....
உண்மையிலேயே அங்க எவ்ளோ இருக்குன்னு
தோண்ட தோண்ட தான் தெரிய வரும்....
சோ நிச்சயமா இட்ஸ் கோயிங் டு பி எ பர்னிங் இஷ் யூ...
ரஷ்யன் பொண்ணு லாரா, உதய்பூர் குடும்பத்தை சேர்ந்த பொண்ணு ஷில்பா மாயோன் மங்கலத்துல காணாம போனதும் அந்த பொண்ணோட அப்பா சிபிஐ இன்வெஸ்டிகேஷனுக்கு டிமாண்ட் பண்ணி சுப்ரீம் கோர்ட் வரைக்கும் போய் ஆர்டர் வாங்கிட்டு வந்திருக்காரு....
இத பத்தி எல்லாம் ஏற்கனவே வடநாட்டு பேப்பர்ல வந்துடுச்சி...
இங்க தான் மீடியாவை விலை கொடுத்து வாங்கிடறாங்க.... அதனால இந்த மாதிரியான நியூஸ்
வர்றதில்ல...
நாம தோண்ட ஆரம்பிச்சா விஷயம் தானா பரவ ஆரம்பிக்கும்.... மீடியா
தானா வரும் ..."
என மதுரா தீவிரமாக பேசிக் கொண்டிருக்கும் போது, மாதவி வந்தாள்.
மற்ற இருவரும், புவியியல் வரைபடத்தை பார்த்து மும்மரமாக எதையோ செய்து கொண்டிருக்க ,
வந்தவள் மதுராவை பார்த்த பார்வையிலே, அனைத்தையும் அறிந்து கொண்டு விட்டாள் என்பது வெட்ட வெளிச்சமாக,
" சாரி ...." என்றாள் மதுராவை நெருங்கி.
முகம் கொள்ளாத புன்னகையோடு,
" எனக்கு இந்த மாதவிய பிடிக்கல ...
அதிரடியா பறந்து பறந்து வந்த அடிச்ச மாதவிய தான் பிடிச்சிருக்கு ..." என்றாள் குறும்போடு.
மாதவி லேசாக வெட்கி தலை குனிய ,
" அத்தான், எதுக்காக மாதவி மாதவின்னு பைத்தியமா இருந்தாரு, இருக்காருனு இப்ப இல்ல புரியுது ..."
" அப்படியா இருந்தாரு ..." ஆசையாக கேட்டவளின் முகத்தில் தெரிந்த குழந்தைத்தனமும், கிருஷ்ணாவின் மீதான காதலும் அவளை மேலும் அழகுறச் செய்ய,
" ஆமா .... சில பேர் சிலரை நினைவுபடுத்தலாம் ... ஆனா அவங்க இடத்தை நிரப்ப முடியாதுனு சொன்னாரே ..."
மித்ராவுக்காக தான் இப்படி ஒரு பதிலை சொல்லி இருப்பான் என புரிந்து கொண்டவளுக்குள் பிரவாகமாய் தன்னவன் மீது காதல் ஊற்றெடுக்க, அதனைக் கண்டு கொண்ட மதுரா
" மாதவி நீ ரொம்ப அழகா இருக்க.... ரொம்ப பாசமா இருக்க... ரொம்ப காதலா இருக்க .... ரொம்ப தைரியமா இருக்க ...ரொம்ப பொசசிவ்வாவும் இருக்க.... கூடவே குழந்தைத்தனமாவும் இருக்க ...
இப்படி ஒரு பொண்ணை யாராவது மிஸ் பண்ணுவாங்களா என்ன ..."
தன் சகோதரிக்கு மதுரா புகழாரம் சூட்ட,
அதனைக் கேட்டுக் கொண்டே,
தோட்டத்திலிருந்து வந்த கிருஷ்ணா, மாதவியை ரசனையோடு பார்த்து,
" இப்ப அடிக்கவும் ஆரம்பிச்சிருக்கா ...
அத சொல்ல மறந்துட்டியே ...." என்றான் குறும்போடு.
மாதவி முறைத்துப் பார்க்க,
" ரொம்ப கோவம் வந்தா தான் அடிப்பா.... மத்தபடி அடிக்க மாட்டா... இல்ல பாப்பா ..."
என அவனே அதற்கு முட்டும் கொடுக்க ,
" இதத்தான் சொன்னேன் ... இப்ப புரிஞ்சுதா " என மதுரா சிரிக்க, உடன் மாதவி வெட்கத்தோடு நகைக்க
அப்போது குழந்தை மயூரி ஓடி வந்து மாதவியை கட்டிக் கொண்டு ,
" ஹாய் ஆன்ட்டி ..." என்றது.
மாதவியின் முகம் லேசாக சுருங்க,
அதற்கான காரணம் மற்ற இருவருக்கும் தெளிவாக விளங்க,
" மயூக்குட்டி , இவங்கள ஆன்ட்டினு கூப்பிடாத... அம்மானு கூப்பிடனும் .... சரியா ..." என கிருஷ்ணா கூறியதும் மாதவியின் கண்கள் லேசாக கலங்கின.
"ஏய், எதுக்கு எமோஷனல் ஆவுற..."
" அப்புறம் சொல்றேன் கிருஷ்ணா ..."
என்றாள் அர்த்த புஷ்டியான பார்வையில் .
" அம்மா அங்க இருக்கா ...
இது ஆன்ட்டி தானே ..." என்றது குழந்தை.
அது அம்மா என்று குறிப்பிட்டது கலைச்செல்வியை என மாதவி புரிந்து கொள்ள,
" அவங்க அம்மம்மா ... இவங்க தான் அம்மா சரியா ...." என மதுரா விளக்கம் கொடுக்க,
" நான் அம்மா கிட்ட பேசணும்..." என்றாள் மாதவி லேசாக தயங்கியபடி.
" உன்னை நினைச்சு அம்மா அழாத நாளே கிடையாது .... உன் போட்டோவ ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும் போது ரொம்ப அழுதுட்டாங்க .... மித்ராவை பார்த்து நீ மாதவி மாதிரியே இருக்கனு சொல்லுவாங்க ... மாதவியும் இருந்திருந்தா இன்னும் நல்லா இருக்கும்னு சொல்லுவாங்க ..." என்றவள் ஒரு கணம் நிறுத்தி,
" இன்னைக்கு ஒரு பெரிய பிரச்சினையை தோண்ட போறோம் ...
அது நிச்சயமா, பெரிய விஸ்வரூபமா வெடிக்கும் .... அது முடிஞ்சதும் அம்மா கிட்ட நிம்மதியா பேசலாம் ... அம்மாவும் உன்கிட்ட பேச காத்துகிட்டு இருக்காங்க ..."
அவள் சொல்வது மாதவிக்கு சுத்தமாக விளங்கவில்லை.
சங்கையா மித்ராவின் இறப்பு வரை மட்டும் தான் மாதவியிடம் பகிர்ந்து இருந்தார். அவருக்குமே செயற்கைக்கோள் தகவல் கொடுத்து கல்குவாரிக்கு சுற்றியுள்ள பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள
பிணங்கள் கண்டெடுக்கத்தான்,
கிருஷ்ணாவும் மதுராவும் வந்திருக்கிறார்கள் என்பது தெரியாததால், அவரும் சொல்லவில்லை.
அதோடு மதுரா தொலைபேசியில் கிருஷ்ணாவுடன் உரையாடும் பொழுது, உடல்நிலை சரியில்லாத குழந்தையை பார்க்க வருவதாக சொன்னதை கேட்டிருந்ததால்
அதற்காகத்தான் வந்திருக்கிறாள் என்ற எண்ணத்தில் இருந்தாள் மாதவி.
அவள் முகத்தைப் பார்த்தே, புரிதல் இல்லை என்று புரிந்ததும்,
அனைத்தையும் மதுரா விளக்க, மாதவி
மிகுந்த அச்சத்தோடு அதிர்ச்சியில் உறைந்தே போய்விட்டாள்.
தனசேகரன் கல்குவாரியை குத்தகைக்கு எடுத்திருக்கும் பகுதியை ஒட்டி மண்டையோடுகள் புதையூண்டிருக்க,
இறந்தவர்களின் அடையாளம் காண , தோண்டி எடுக்கும் பணி நடைபெற போவதாக மதுரா கூறியதுமே,
பித்து சித்தரின் வாக்கு அவள் காதுகளில் மீண்டும் ஒலிக்கத் தொடங்கியது .
" மாதேவி..... பிரம்ம பௌர்ணமியை நெருங்க நெருங்க பிணங்கள் தோண்டி எடுக்கப்பட்டு ஆன்மாக்கள் பேயாட்டம் ஆடும் ....
அலை கழிக்கும் அந்த ஆன்மாக்களிடமிருந்து
நின் கொற்றவனின் ஜீவனைப் பிடித்து நிறுத்தும் சக்தி சிவசாலி கிராமமே...."
பித்து சித்தரின் வாக்கு இன்று வரை அட்சர சுத்தமாய் அரங்கேறியுள்ளது.
இத்துணை நாட்களாக காலனிடமிருந்து கணவனை காப்பாற்றியதை விட, உச்ச காலத்தில் செய்யும் காபந்து தான் அவன் மிச்சத்தையும் மீட்டெடுக்க உதவும் ....
என்றெண்ணியவளுக்கு
சுதாகரன், சூரிய கிரண் அவளைக் கடத்த முயன்ற போது அந்த கருப்பு கால பைரவர்கள் மட்டும் வராமல் இருந்திருந்தால் இன்று அவளும் காணா பிணமாகியிருப்பாள் என்பதே கலக்கத்தை கொடுக்க, தன்னவனை காக்கும் பொருட்டு வழக்கம் போல் பித்து சித்தரின்
வார்த்தைகளை வழு மாறாமல் தொடர முடிவெடுத்தாள் .
" நீ எல்லாத்துலயும் அப்படியே அம்மா மாதிரியே இருக்க .... அம்மா தைரியமானவங்க தான் இருந்தாலும் இந்த மாதிரியான விஷயத்துக்கெல்லாம் கொஞ்சம் பயப்படுவாங்க ... ஆனா அப்பா ரொம்ப தைரியமா இருப்பாரு ..." என மதுரா முடிக்கும் போது ,
குழந்தையை வாங்கிட்டு வா கலைச்செல்வி .... அது என் குழந்தை... என்னையே நினைச்சு நீ சுமந்த குழந்தை ... " என சுப்பிரமணியம் சொன்னதாக கிருஷ்ணா பகிர்ந்தது நினைவுக்கு வர, காணாத தந்தையின் மீதும் அளவுக்கு அதிகமான மரியாதை உற்றெடுத்தது.
மனைவியை இயந்திரங்களை போல் வெறும் கலவிக்காக மட்டுமே பயன்படுத்தும் கேடுகெட்ட சில ஆண்களுக்கு மத்தியில், தன் தாய் கலைச்செல்வியை அவரது உடலை தாண்டி நேசித்தது தான், அந்த முகமறியா மனிதனின் மீது அளவு கடந்த பாசத்தை பற்றையும் அவளுள் விதைத்திருக்க,
" அப்பா கிட்டயும் பேசணும் ..." என்றவளை புன்னகையோடு அணைத்துக்கொண்டாள் மதுரா.
தாயை ஏற்றுக் கொண்டவள், தந்தையை ஏற்பாளா என்ற சந்தேகத்தில் இருந்த மதுராவிற்கு
மாதவியின் ஆசை உவப்பை தர ,
" ரொம்ப சந்தோஷமா இருக்கு மாதவி ....
எல்லாரும் ஒன்று சேர்ந்துட்டோம் ...
மித்ரா மட்டும் இருந்தா நல்லா இருந்திருக்கும் ..." என முடித்தாள் கமரிய குரலில்.
அப்போது மதுராவிற்கு அலைபேசி அழைப்பு வர,
" மேம், ஃபாரன்சிக் டீம் வந்துட்டாங்க... நம்ம டீமும் ரெடி மேம் ...." என்ற காவல்துறைய ஆய்வாளர் பாண்டித்துரையிடம், அவள் வேறு சில தகவல்களை கேட்க
அதற்கு அவர் பதில் அளித்ததும்,
" இன்னும் ஹாஃப் அன் ஹவர்ல ஸ்பாட்ல இருப்போம் ..." என அழைப்பை முடித்தாள்.
கூடத்தில் மதுரா, வேதாந்த் பிரகாஷ் உடன் பேசிக் கொண்டிருக்க
கிருஷ்ணா அலுவலக உடையில் கிளம்பி வர,
" கிருஷ்ணா கொஞ்சம் அப்படி வரியா ..." என்றாள் லேசான படபடப்போடு.
" ஏய்... என்னடி....." என்றான் மையலாய்.
" அய்ய..... சாமி ரூமுக்கு வாங்க ..."
என அழைத்துச் சென்றவள் , எப்பொழுதுமே உடன் வைத்திருக்கும் சிறு பணப்பையில் இருந்து
சிவசாலிகிராமத்தை எடுத்து ,
" இது உங்க கூடவே இருக்கட்டும் ....எங்க போனாலும் கூடவே வச்சுக்குங்க ...."
அவன் புரியாமல் பார்க்க,
" ப்ளீஸ் ..." என்றாள் நயந்து .
அவள் விழிகளில் ஒரு கணம் மூழ்கியவன், தெய்வத்தை கண் மூடி வணங்கி விட்டு தன் சட்டையின் மேல் அணிந்து கொள்ளும் ஓவர் கோட்ல் வைத்துக்கொள்ள
" நீங்க எல்லாரும் பத்திரமா போயிட்டு வாங்க... நான் நம்ம மயூ குட்டியை பார்த்துக்கறேன்..." என்றவளை காதலாக பார்த்துவிட்டு , கடமையை செய்ய மதுரா குழுவினரோடு
பயணமானான் கிருஷ்ணா .
இரண்டு நாட்களுக்கு முன்பு
அந்த கல்குவாரியை குத்தகை எடுத்த நபர்களின் தகவல்களை முதலில் திரட்டினர்.
அனுமதிக்கப்பட்ட பகுதிகளை 4 நபர்கள் குத்தகைக்கு எடுத்திருந்தனர் .
அதில் இருவர் தங்களை வியாபாரிகள் போல் காட்டிக் கொண்டு, பெரும் அரசியல்வாதிகளுக்கு பினாமிகளாக இருந்தனர் .
மீதம் இருந்த இருவர் நேரடி அரசியலில் இல்லை என்றாலும் அரசியல் பின்புலம் கொண்டவர்கள்.தங்கள் பெயரிலேயே குத்தகை எடுத்து இருந்தனர் .அதில் தனசேகரனும் ஒருவர்.
தான் ஈரோட்டின் வணிக தலைமையின் அடையாளம் என்பதை காட்டிக் கொள்வதற்காக, மூர்த்தியாரின் அரசியல் அந்தஸ்தை பயன்படுத்தி தன் பெயரிலேயே குத்தகை எடுத்திருந்தார்.
தகவல்கள் திரட்டப்பட்டதும் அவர்கள் அனைவரையும் கண்காணிக்க, மஃப்டியில் காவல்துறையினர் அவர்களது இல்ல பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்தனர்.
தோண்ட போகும் பகுதி பெரும்பாலும் தனசேகரனுக்கு சொந்தமான பகுதிக்கு அருகில் வருவதால்,
அவரது ஈரோட்டு இல்லம்,
மற்றும் மாயோன் மங்கலத்தின்
பெரிய வீட்டின் முன்பும் மறைமுக கண்காணிப்பு
அதிகப்படுத்தப்பட்டிருந்தது.
மதுரா போய் இறங்கியதும் ,
செயற்கைக்கோள் எடுத்து அனுப்பிய புகைப்படங்களை வைத்து,
புவியியல் வரைபடத்தில் பகுதிகளைக் கண்டறிந்து தோண்டுதல் பணி தொடங்கியது .
முதல் ஒரு மணி நேரம் ஒன்றுமே பிடிபடவில்லை.
போகப்போக லேசான துர்நாற்றம் வீசத் தொடங்க, அனைவரும் கைகுட்டையை முகத்தில் கட்டிக்கொள்ள, வேகமாக மீதம் இருக்கும் பகுதிகள் தோண்டப்பட்டது.
கிருஷ்ணா வரைபடத்தை பார்த்து
வழிமுறைகளை அறிவுறுத்திக் கொண்டே வர, மற்றவர்கள்
பின் தொடர்ந்தனர்.
முதலில் ஒரு மண்டை ஓடும் சில எலும்புகளும் கிடைக்க, தொடர்ந்து உத்வேகமாக அவர்கள் தோண்ட தோண்ட ஆறு மண்டை ஓடுகளும் எலும்புகளும் கிடைக்க, அனைவரும் அதிர்ச்சியில் ஒரு கணம் திண்மமாய் நின்று விட்டனர் .
நேரலைகள் ஏதுமில்லாமல், முதலில் செய்திகளை வெகு சாதாரணமாக திரட்டிய அங்கு வந்திருந்த ஊடகங்கள்
நேரம் செல்ல செல்ல,
எதிர்பார்த்ததை விட மனிதக் கூடுகள் அதிகம் கிடைக்க ஆரம்பித்ததும்,
உடனுக்குடன் புகைப்படங்களை எடுத்து தங்களது செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தொடங்கினர்.
மதுரா கூறியிருந்தது போல்,
உள்ளூர்வாசிகளுக்கு மெதுவாக விஷயம் தெரிய ஆரம்பித்து, பிறகு தொலைக்காட்சி மூலம் காட்டு தீ போல் பரவ, அங்கு கூட்டம் சேர ஆரம்பித்தது.
" பேரிகேட்ஸ் தாண்டி வராம பாத்துக்கோங்க ..." என அவள் பாதுகாப்பிற்காக வந்திருந்த காவல்துறைனரிடம் அறிவுறுத்திக் கொண்டிருக்கும் போது
" மேம், இன்னும் தோண்ட தோண்ட வரும் போல இருக்கு ..." என்றார் தடவியல் அதிகாரி.
" ஓ மை காட், நொய்டா சீரியல் மர்டர் மாதிரியே இருக்கே..."என்று அதிர்ச்சியில் உரைத்தவள்
" கோ எ ஹெட் ..." என்றதும்,
தொடர்ந்து தோண்டுதல் பணியில்,
மேலும் நான்கு மண்டை ஓடுகள் கிட்ட,உடனே மதுரா ஃபாரன்சிக் குழுவிடம் ,
" தோண்ட தோண்ட கிடைச்சுக்கிட்டே இருக்கு... விக்டிம்ஸ் எவ்ளோனு
ஃபிகர் அவுட் பண்ண முடியல .... DNA test எடுத்தா தான் தெரியும் போல ..."
" எஸ் மேம் ... கிடைச்ச ஸ்கல்ஸ் அண்ட் போன்ஸல (Skulls and bones) இருந்த டிஎன்ஏ சாம்பிள்ஸ் எடுத்து ஹைதராபாத் ஃபாரன்சி லேப்கு இப்பவே அனுப்பிடறோம்...
அவங்க ஃபாரன்சி சாம்பிள்காக ஆக்ரா லேப்க்கு அனுப்புவாங்க ... நமக்கு உடனே
இறந்தவர்களோட ஏஜ், காஸ் ஆப் டெத் ஜெண்டர் ,எல்லாம் தெரிய வந்துடும் மேம்..."
" ஆல் டு கெதர் இந்த ப்ராசஸ் முடிய எவ்ளோ நாள் ஆகும் ..."
" மினிமம் ஒரு வாரம் ஆகும் மேம்..."
" என்னால ஒரு வாரம் எல்லாம் தாக்குப் பிடிக்க முடியாது...
அதுக்கு முன்னாடி எவ்ளோ சீக்கிரம் முடிக்க முடியுமோ முடிங்க... ஏன்னா நாளைக்கும் டிக்(Dig) பண்ண போறோம் .... நாளைக்கும் இதே மாதிரி கிடைக்க சான்சஸ் இருக்கு ... சோ வேலையை
சீக்கிரம் முடிங்க அப்பதான்
ரிப்போர்ட் கொடுக்க முடியும் ..." என அவள் முடிக்கும் போது,
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் (SP) அவளை அழைத்திருந்தார்.
செய்தி தொலைக்காட்சியில் தீவிரமாக ஒளிபரப்பப்பட்டதால்
அவருக்கு உள்துறை அமைச்சகம் மற்றும் வெளி உறவுத் துறை அமைச்சகத்தில் இருந்து அழுத்தம்
கொடுக்கப்பட , சில தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டு சில கட்டளைகளையும் பிறப்பித்து முடித்தார்.
மண்டையோடுகளும், எலும்புகளும் கிடைத்த நிலையில்
மதுரா காவல் ஆய்வாளர் பாண்டித்துரையை அழைத்து
" இம்மீடியேட்டா யார் யார் குத்தகை எடுத்து இருந்தாங்களோ அவங்க சம்பந்தப்பட்ட ஒருத்தர் கூட விடாம போலீஸ் கஸ்டடி எடுங்க ... வீட்ல லேடீஸ் இருந்தாங்கன்னா ஹவுஸ் அரெஸ்ட்லயே என்கொயரி பண்ண சொல்லுங்க .... " என அவள் ஆணை பிறப்பித்துக்கொண்டிருக்கும் போதே
காவல் துணை ஆய்வாளர் அவளை நோக்கி வேகமாக ஓடி வந்தார் .
" மேம், டிவில நியூஸ் பார்த்த உள்ளூர் வாசிங்க, இங்க இருக்கிற தனசேகரன்
வீட்ல கல் எரிஞ்சுக்கிட்டு இருக்காங்களாம் .... வீட்டு இரும்பு கேட்டை அடிச்சு ஓடச்சு இருக்காங்க.... அதோட வெளிய நிறுத்தி இருந்த பைக் எல்லாத்தையும் கொளுத்திவுட்டாங்களாம்... இப்ப அவங்க வீட்டு ஆளுங்க வீட்டை விட்டு வெளியே வர முடியலையாம் ..."
" ஓ காட் .... ஏன் அப்படி ..."
" மேம் , நாம வேலை செய்ற பகுதி பெரும்பாலும் தனசேகரனோடது...
ஏற்கனவே உள்ளூர் வாசிங்க நிறைய பேர் அவங்க பெண்டு பிள்ளைங்க மிஸ்ஸிங் கேஸ்ல தனசேகரன், அவங்க பையன் சுதாகரன் மேல சந்தேகத்தின் பேர்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காங்க .... லோக்கல் போலீஸ் நடவடிக்கை எடுக்காததால குமுறி போய் இருந்தவங்க இப்ப அந்த பழியை தீர்த்துக்கிறாங்க ...."
" தனசேகரன் இஸ் நாட் அ சஸ்பெக்ட் ...ஹீ இஸ் த கல்ப்ரிட் ....
இம்மீடியட்டா தனசேகரன் வீட்டயும், தனசேகரனுக்கு மாமன், மச்சான், பொண்ணு கொடுத்தவன் ,பொண்ணு எடுத்தவனு ஒருத்தர் விடாம எல்லா உறவுக்காரங்க வீட்டிலயும் உடனே சர்ச் போட சொல்லுங்க ... அவரையும் அவர் மகன் சுதாகரனை அரெஸ்ட் பண்ணி போலீஸ் கஸ்டடி எடுங்க ..." என்றாள் வேகமாய்.
சற்று முன் மதுராவிடம் பேசிய மாவட்ட கண்காணிப்பாளர்
நிலைமை கை மீறுவதை அறிந்து பாண்டித்துரையை தொடர்பு கொண்டு,
" பாண்டித்துரை, இதுக்கு முன்னாடி இந்த மிஸ்ஸிங் கேஸ யார் யாரெல்லாம் ஹாண்டில் பண்ணாங்கன்னு பார்த்து,அவங்களுக்கு எல்லாம் சஸ்பென்ட் ஆர்டரை இஷ்யூ பண்ணிடுங்க...".என்றார் தான் தப்பித்துக் கொள்ளும் எண்ணத்தில்.
ஃபாரன்சிக் அதிகாரிகளில் மூத்த அதிகாரி ஒருவர்,
" மேம், கிடைச்ச ஸ்கலஸ் அண்ட் போன்ஸ்ச வச்சு பார்த்தா, சின்ன குழந்தைங்க, வயசு பொண்ணுங்களோடது மாதிரி இருக்கு ... கில்லிங் பேட்டன்(Killing pattern)
குழந்தைகளுக்கு ஒரு மாதிரியாவும் பொண்ணுங்களுக்கு ஒரு மாதிரியாவும் இருக்கு ....
இது என்னோட அனுபவத்துல நான் சொல்றது ....
லேப் ரிப்போர்ட் வந்தா இன்னும் தெளிவா தெரியும்..."
" இந்த மாதிரியான சீரியல் மர்டருக்கு என்ன காரணமா இருக்கும் ....
ஒருவேளை ஆர்கன் ட்ரேடாக இருக்குமோ ...." என்றவளுக்கு தெரியாது , அவள் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத, ஏன் நினைத்தே பார்க்காத காரணங்கள் அவளுக்காக காத்துக் கொண்டிருப்பது.
- மாயோனின் மாயங்கள் தொடரும்