- Joined
- Jul 21, 2025
- Messages
- 681
- Thread Author
- #1
அத்தியாயம் 95
கணவர் திடீரென்று நெஞ்சை பிடித்துக் கொண்டு லேசான கதறலுடன் மயங்கி விழுந்ததை கண்டு இந்திரா செய்வதறியாமல் தவிக்க, உடனே அவர்களை பின் தொடர்ந்து வந்த மேஜர் சமயோகிதமாக செயல்பட்டு
தரையில் சரிந்திருந்த ராகவனுக்கு முதலுதவியாக CPR சிகிச்சை அளிக்க தொடங்கினார்.
அதற்குள் திவாகரன் உட்பட அனைவரும் அங்கு குழும, மேஜர் கொடுத்த தீவிரமான மற்றும் பலமான முதலுதவியின் பயனாக கர்னல் ராகவனிடம் லேசாக அசைவு தெரிய, உடனே திவாகரன் அவரை அள்ளித் தன் தோளில் போட்டுக் கொண்டு ஓட்டமும் நடையுமாய் நடந்து சென்று தன் காரின் பின்புறத்தில் அவரை கிடத்தி விட்டு, உடன் இந்திராவை அழைத்துக் கொண்டு மருத்துவமனையை நோக்கி காரை செலுத்த,
உடன் வந்திருந்த மூன்று பெண்மணிகள் மற்றும் ராஜுவுடன் மேஜர், தன் காரில் அவனைப் பின்தொடர , அடுத்த 15 நிமிடத்தில் உலகத் தரம் வாய்ந்த சிறந்த மருத்துவமனையில் ராகவன் அனுமதிக்கப்பட்டார்.
முதலுதவியாக CPR அளிக்கப்பட்டதோடு, Golden hour எனப்படும் உயிர் காக்கும் நேரத்திற்குள் ராகவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் தொடர்ந்து நடந்த சிகிச்சையில், அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாகவும் , இனி அவர் எதிர்கொள்ள வேண்டிய சிகிச்சைகளை பற்றியும் மருத்துவர்கள் விளக்க அவர்களுக்கு நன்றி தெரிவித்த இந்திரா உடனே
கண்ணீர் மல்க, மேஜர் மற்றும் திவாகரனுக்கும் மனமார நன்றி தெரிவிக்க
"கர்னலோட தம்பி மாதவன் சார், உங்க மாப்ள இவங்க எல்லாம் இங்க இருந்திருந்தா என்ன செஞ்சு இருப்பாங்களோ .... அதைத்தான் நாங்க ரெண்டு பேரும் செஞ்சிருக்கோம் .... இதுக்கு போய் தேங்க்ஸ் எல்லாம் சொல்லாதீங்க மாமி ..."
என மேஜர், திவாகரனுடன் இணைந்து நின்றபடி சொல்ல,
" என் ஆத்துக்காரர் இப்ப நன்னா இருக்கேர்... நான் இப்ப நன்னா திடமா நின்னுண்டு பேசிண்டு இருக்கேன்னா அதுக்கு நீங்க ரெண்டு பேரும் தான் காரணம் ..... அதுக்காக உங்க ரெண்டு பேருக்கும் எவ்ளோ தேங்க்ஸ் சொன்னாலும் தகும் .... "
என உணர்வுபூர்வமாக அவர் பதில் அளித்துக் கொண்டிருக்கும் போது அவரது மகள் சந்தியாவிடமிருந்து , அலைபேசி அழைப்பு வந்தது.
அழைப்பை அனுமதித்ததும்
" அம்மா... அப்பா இப்ப எப்படி இருக்கேர்..."
எடுத்த எடுப்பில் மகள் ஆவலாக வினவ,
" அவர் அபாய கட்டத்தை தாண்டிட்டதா இப்ப தான் டாக்டர்ஸ் வந்து சொன்னா ... வர்ற சாட்டர்டே வரைக்கும் அப்சர்வேஷன்காக ஹாஸ்பிடல்ல தங்கணுமாம் ... ஹார்ட்ல மூணு ப்ளக்கேஜ் இருக்கிறதால அடுத்த மாசமே பைபாஸ் சர்ஜரி பண்ணிட்டா நல்லதுன்னு சொல்றா ..."
மட மட வென மகளிடம் இந்திரா பகிர
" சரிம்மா... நெக்ஸ்ட் மந்த் அப்பாவோட ஆபரேஷன்க்கு முன்னாடி நானும் என் ஆத்துக்காரரும் ஊருக்கு வந்துடறோம்... தைரியமா இரும்மா ... "
இப்படியாக தாய்க்கு மகளுக்கும் இடையே தொடர்ந்த சம்பாஷணைகள் ஒரு கட்டத்தில் முடிவுக்கு வர, அன்றைய இரவு தனி அறைக்கு மாற்றப்பட்ட ராகவனுடன் இந்திரா உதவிக்கு தங்கிக் கொள்ள, மற்றவர்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்த டார்மிட்ரியில் தங்கிக் கொண்டனர்.
மறுநாள் காலை அனைவருக்கும் நன்றாகவே விடிய, படுக்கையில் சாய்ந்தமர்ந்தபடி லேசாக திக்கி திணறி பேசும் நிலைக்கு ராகவன் உடல்நலம் தேறி இருக்க, அனைவரும் அவரிடம் ஆத்மார்த்தமாக நலம் விசாரித்து முடித்ததும்
"நேத்து சாயங்காலத்திலிருந்து இப்ப வரைக்கும் நீங்க எல்லாரும் எங்க கூடவே இருந்தது எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பெரிய மாரல் சப்போட்டா இருந்தது ...." என்ற இந்திரா, மேஜர் மற்றும் திவாகரனை பார்த்து
" உங்க ரெண்டு பேரோட டைம்லி ஹெல்ப்பால தான் கர்னல் இப்ப ஓரளவுக்கு உடம்பு தேறி இருக்கேர்... அதுக்காக உங்க ரெண்டு பேருக்கும் நான் நிறைய கடமைப்பட்டிருக்கேன் ... இப்ப என் மனசுல ஒரு அளவுக்கு தைரியம் வந்துடுத்து .... நீங்க எல்லாரும் ஆத்துக்கு கிளம்புங்கோ ... இனிமே
நான் இவரை பார்த்துக்கறேன் ..." என்றார் புது தெம்புடன்.
அப்போது
" மாமி, நான் வீட்டுக்கு போய் ஃபிரஷ் ஆயிட்டு உங்களுக்கு மாத்து உடுப்பும் சாப்பாடும் கொண்டு வரேன் ..." என தாமரை சொல்ல ,
" நானும் வீட்டுக்கு போய்ட்டு ஃப்ரெஷ் ஆயிட்டு, செல்வியோடயே வந்துடறேன்...."
என பரமுவும் இணைந்து கொள்ள, உடனே அந்த இரு குடும்பங்களும் தங்களது இருப்பிடம் நோக்கி பயணப்பட்டன.
திவாகரன் அமைதியாக காரை செலுத்த, அவன் அருகில் சோகமே உருவாய் அவனது கண்ணாட்டி அமர்ந்திருக்க,
" ஏண்டி இவ்ளோ சோகமா இருக்க ... அதான் கர்னல் இப்ப நல்லா ஆயிட்டாரு இல்ல ..."
என அவன் மௌனத்தை உடைக்க ,
"இருந்தாலும் கர்னல் சார் நல்லபடியா வீடு திரும்பற வரைக்கும் ஒரு சின்ன பயம் இருந்துகிட்டே இருக்குங்க .... சின்ன குழந்தையிலிருந்து வயசானவங்க வரைக்கும் யாருக்குமே பாதுகாப்பு இல்லங்கிற இந்த சமுதாயத்துல, என் சூழ்நிலையை புரிஞ்சுகிட்டு, பெத்த தாய் தகப்பன் மாதிரி எனக்கு பாதுகாப்பு கொடுத்தவங்க மாமியும் , கர்னல் சாரும் தான் ... என் அப்பா இறந்ததுக்கு அப்புறம், எனக்குள்ள இருந்த பாதுகாப்பு உணர்வு கொஞ்சம் கொஞ்சமா குறைய ஆரம்பிச்சது ... அதுவும் நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் நம்ம முதல் குழந்தை கருவுலயே கலைஞ்சு போன சமயத்துல என் வீட்டுலயே எனக்கு பாதுகாப்பு இல்லாத நிலைமை கூட வந்துச்சு.... அதனால தான் டிவோர்ஸ் வாங்கிக்கிட்டு நம்ம வீட்டை விட்டு வெளிய போனா என் நிலைமை என்ன ஆகுமோனு ஒரு பயம் இருந்துகிட்டே இருந்தது ... அப்ப தான் மாமி, பயப்படாத ... என் வீட்டுக்கு வா உன்னை என் பொண்ணு மாதிரி பார்த்துக்கிறேனு சொன்னாங்க ... அவங்க பேச்சை நம்பி இங்க கிளம்பி வந்தேன் ...
இந்தக் கணம் வரைக்கும் என்னை அவங்க தன் சொந்த பொண்ணு மாதிரி தான் பாத்துக்கிறாங்க ... இந்த மாதிரியான மனுஷங்க எல்லாம் இந்த காலத்துல கிடைக்கிறது ரொம்ப அபூர்வம் ... நல்ல வேளையா கர்னல் பொழச்சிகிட்டாரு ... அவருக்கு மட்டும் ஏதாச்சும் ஆயிருந்தா, மாமிய உயிரோடையே பார்த்திருக்க முடியாது ... என் அம்மா அப்பாவுக்கு அப்புறம், நான் மோசமான சூழ்நிலையில இருந்தப்ப என்னை ஆதரிச்ச ஒரே உறவு அவங்க தான்... அதனால தான் அவங்க ரெண்டு பேரும் நல்லபடியா வீடு திரும்பனும்னு கடவுளை வேண்டிக்கிட்டு இருக்கேன் ......"
அவள் லேசான கமரிய குரலில் சொல்லி முடித்ததும் , எந்த சம்பவத்தை குறிப்பிடுகிறாள் என்பதை புரிந்து கொண்டவனுக்கு, சற்றே மறந்திருந்த அவனது தவறுகள் எல்லாம் மீண்டும் மனதில் மையம் கொள்ளத் தொடங்க , குற்ற உணர்ச்சியில் வாயடைத்துப் போனான்.
பதின் பருவத்தில் , அவளது
தந்தை இறந்த மறு வருடமே, நான் தான் வாழ்க்கை என நம்பி என்னை மணந்து கொண்டு வந்தவளின் வயிற்றில் வளர்ந்த எனது கருவை கண்மூடித்தனமாக சந்தேகித்ததோடு, சற்றும் இரக்கமில்லாமல் அவளையும் நான் அவளது வீட்டிற்கு அனுப்பியதால் தான் குலசேகரன் என்ற கயவனால் அவள் தன் சொந்த இல்லத்திலேயே பாதுகாப்பற்ற சூழ்நிலையை அனுபவிக்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறாள் ...
அதற்கு முழுக்க முழுக்க நான் தான் காரணம் .... என அவன் மனம் இடிந்து உரைக்க, உள்ளுக்குள் உருகிப் போனான்.
கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, அவர்கள் இருவரும் சந்தித்த அந்த கடைசி இரவில் நடந்த விவாதத்தில் கூட,
" நான் திருந்திட்டேன்னு தெரிஞ்சும் இத்தனை வருஷ வாழ்க்கைல இன்னும் உனக்கு என்னை மன்னிக்கணும்னு தோணல இல்ல ...." என்று கேட்டானே ஒழிய, அவனால் அவள் அனுபவித்த கொடுமைகளுக்கு வெளிப்படையாக இக்கணம் வரை அவன் மன்னிப்பு கேட்டதே இல்லை .... ஆதிகாலத்தில் இப்படி அவனால் பட்ட துன்பங்கள் எல்லாம்
ஆறாத ரணமாக அவளது அடி மனதில் அமர்ந்து கொண்டு பாடாய்படுத்தியதால் தான், விவாகரத்திற்கு பிறகும் அந்த பாதுகாப்பின்மையை உணர்நது பயந்திருக்கிறாள் போலும் என்று புரிந்து கொண்டவனுக்கு, உடனே பழையவைகளை எல்லாம் கூறி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தோன்ற, வேகமாய் திரும்பி அவள் முகம் பார்த்தான்.
ஆனால் அவளோ கர்னலின் உடல்நிலை குறித்து பெரும் கவலையில் இருக்க, இந்நிலையில் தேவையில்லாமல் பழையவைகளை தற்பொழுது கிளற வேண்டாம் என்று தோன்ற , அமைதியாகிப் போனான்.
பிறகு தொடர்ந்து வந்த தினங்களில் காலையில் தொழிற்சாலைக்கு செல்லும் போது பரமு மற்றும் தாமரையை மருத்துவமனையில் விட்டுவிட்டு, உடன் ஓரிரு கணம் இருந்து கர்னலின் உடல் நலம் குறித்து விசாரித்து விட்டு செல்வதை அவன் வழக்கமாக்கிக் கொள்ள,
புதிய கிளை என்பதால் பணிச்சுமை காரணமாக அவன் பெரும்பாலும் இரவு 10 மணிக்கு மேல் வீடு திரும்புவதால் , மாலை வேளைகளில் பெண்களை மருத்துவமனையில் இருந்து அழைத்து வரும் பணியினை மேஜர் ஏற்றுக்கொள்ள அவ்வப்போது லிண்டாவும் ராஜும் அவருடன் இணைந்து கொண்டனர்.
இப்படியாக நான்கைந்து நாட்கள் கழிய, ஒரு நாள் மாலை மேஜர்
இந்திராவிடம்,
" மாமி, இவங்க அம்மாவுக்கு (பரமுவை காட்டி) உடம்பு சரியில்லன்னு ஃபோன் வந்திருக்கு ... நாங்க எல்லாரும் இப்பவே மதுரைக்கு கிளம்பலாம்னு இருக்கோம் ...."
என தொக்கி நிறுத்த,
" ஐயோ பகவானே .. இது என்ன சோதனை ..... நீங்க எல்லாரும் இப்பவே கிளம்புங்கோ .... இப்ப கிளம்பினா தான் ராத்திரிக்குள்ள உங்களால மதுரைக்கு போய் சேர முடியும் ... கர்னலோட ஹெல்த் நன்னா இம்ப்ரூவ் ஆயிடுத்து ... நாங்களும் நாளன்னைக்கு காலைல டிஸ்சார்ஜ் ஆயிடுவோம் .... அதனால எங்களை பத்தி யோசிக்காம, பரமுவோட அம்மாவை பார்க்க உடனடியா கிளம்புங்க ..."
என உணர்வுபூர்வமாக பேசிய இந்திரா , உடனே தாமரையிடம்,
" நீயும் இவாளோடயே ஆத்துக்கு கிளம்பி போய் ரெஸ்ட் எடுத்துக்கோ ... நாளைக்கு மதியத்துக்கு மேல கிளம்பி வந்தா போதும்... ச்சரியா ..."
என்று சொல்லி, அவளை அவர்களோடு
அனுப்பி வைக்க, ஓரளவிற்கு நிம்மதியான மனநிலையில் வீடு வந்து சேர்ந்தாள் தாமரை.
கடந்து சென்ற தினங்களில் கணவனிடம் குறுஞ்செய்திகளில் , அன்றாட நிகழ்வுகளை பற்றி மேம்போக்காக பகிர்ந்திருந்தாளே ஒழிய,
மற்றபடி முன்பு போல் நின்று பேசுவதற்கு, இருவருக்குமே பணி சுமை அதிகமாக இருந்ததால் சந்தர்ப்பம் அமையாமலேயே போய் இருக்க , பணி நேரங்களில் அழைத்துப் பேசி அவனுக்கு தொல்லை தர மனம் இல்லாததால், அன்று இரவு அவன் வீடு திரும்பியதும், அலைபேசியில் தொடர்பு கொண்டாவது ஓரிரு வார்த்தைகள் பேசி விட வேண்டும் என்று எண்ணியபடி இரவு சமையலில் ஈடுபட்டவளை , லதா நாயர் தன் வீட்டு சுற்றுச்சுவரை பற்றிய படி அழைக்க
" லதா அக்கா ... எதுக்காக கூப்பிடறாங்க ..."
தனக்குள்ளே பேசியபடி பால்கனிக்கு சென்று எட்டிப் பார்த்து,
" என்னக்கா ...." என்றாள் யோசனையாய் .
" செல்வி, இன்னைக்கு ராத்திரி பத்து மணிக்கு நான், என் வீட்டுக்கார், லூசி, தாமஸ் (பிஜூவின் பெற்றோர்கள்), ரமணிம்மா எல்லாரும் தெய்யம் பாக்க போறோம் ... வர்றீயா ... " என மலையாளம் கலந்த தமிழில் பெரும் குரலில் அவர் ஆர்வமாய் வினவ,
" இல்லக்கா, மாமி ஹாஸ்பிடல்ல இருக்காங்க ... பரமு அக்காவும் அவங்க அம்மாவ பாக்க மதுரைக்கு போய் இருக்காங்க .... எனக்கு மனசே சரியில்லக்கா ... அடுத்த முறை வரேனே... "
" இந்த தடவை ரொம்ப சிறப்பா ஏற்பாடு பண்ணி இருக்காங்க செல்வி ... நம்ம காலனியே இன்னைக்கு ராத்திரி அங்க தான் இருக்கும் ... நீயும் வாயேன்... நல்லா என்ஜாய் பண்ணலாம் ..."
விடாமல் லதா நாயர் அழைக்க,
" அக்கா, ஒரு வாரமா ஹாஸ்பிடல் வீடுன்னு அலைஞ்சுகிட்டு இருக்கிறதால, ரொம்ப களைப்பா இருக்கு ... கொஞ்சம் தூங்கி ரெஸ்ட் எடுக்கலாம்னு இருக்கேன் ... அடுத்த முறை நிச்சயமா வரேன் .."
சிறு சங்கடத்தோடு அவரது அழைப்பை மறுத்தவள் மீண்டும் விடுபட்ட பணியில் மூழ்கிப் போனாள்.
கணவனின் வரவை எதிர்பார்த்தபடி
இரவு உணவை முடித்தவள் தேங்கியிருந்த ஒரு சில பணிகளையும் முடித்துவிட்டு கடிகாரத்தை பார்க்க, அது மணி பத்தை காட்ட
" மணி பத்து ஆகுது .... இன்னும் இவரை காணமே .... ஃபோன் பண்ணி விசாரிக்கலாமா ..."
என்று எண்ணியபடி அவள் அலைபேசியை
எடுக்கும் போது , வீட்டு அழைப்பு மணி ஒலிக்க, அலைபேசியை உணவு மேஜையின் மேல் வைத்துவிட்டு
" இந்த டைம்ல யாரு .... ஒரு வேளை அவரா இருக்குமோ .... ஆனா அவரோட கார் இன்னும் வரலையே ..."
என்று பலவாறு யோசித்து கொண்டே சென்று அவள் கதவினை திறக்க,
அங்கு பிஜு மென் புன்னகையோடு அவளை விழுங்குவது போல் பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்.
---- பெண்மை மலரும் ....