Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 96

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
681
அத்தியாயம் 96

மாலை இருள் சூழத் தொடங்கியதும் அன்றைய பணி அதோடு நிறுத்தப்பட்டது.

முதல் தினமே கிட்டத்தட்ட 11 மண்டை ஓடுகள், ஏகப்பட்ட எலும்புகள் கிடைத்த செய்தி இந்தியாவையே உலுக்கி இருந்தது .

அனைத்து மொழி செய்தி ஊடகங்களும் இதே செய்தியையே
மாறி மாறி ஒளிபரப்பிக்
கொண்டிருந்தனர்.

வேறு மாநிலத்தில் காணாமல் போனவர்கள் கூட, அங்கு கொலை செய்யப்பட்டு புதையுண்டு இருக்கலாம் என்கின்ற நிலையில்,
மாநில அளவில் காவல் நிலையத்தில் தொலைந்து போனவர்கள் பற்றிய கணக்கெடுப்பு தீவிரமாக எடுக்கப்பட்டது.

காலையில் கல்குவாரி பகுதிக்கு சென்ற மதுரா மற்றும் கிருஷ்ணா குழுவினர் மாலையில் தான் வீடு திரும்பினர்.

இடையிடையே தண்ணீர் அருந்தி, பிஸ்கட் மற்றும் சிப்ஸ் வகையறாக்களை உண்டு அன்றைய தினத்தை கழித்திருந்தனர்.

மதுரா, கிருஷ்ணா இருவரும் வீடு வந்து சேரும் வரை, மாதவி கிருஷ்ணாவின் இல்லத்திலேயே
இருந்து, உணவு சமைத்து குழந்தைக்கு கொடுத்து, குழந்தையை பேணி காத்திருந்தாள்.

நொடிக்கு நொடி செய்தி ஊடகங்களில் தீயாய் வலம் வந்து கொண்டிருந்த தகவல்களைப் பார்த்து
ஆடித்தான் போயிருந்தாள்.

பிரம்ம பௌர்ணமிக்கு இடையில் இரு தினங்கள் இருந்த நிலையில், பதற்றம் அவளை அனிச்சையாய் பற்றிக்கொள்ள,
வீடு திரும்பிய மதுரா மறுதினம் மேற்கொள்ள வேண்டிய பணியில் மூழ்கி போக, கிருஷ்ணா மட்டும்
மாதவியின் கலக்கத்தைக் கண்டு
கேள்வி எழுப்பினான்.

" மது, எதுக்கு தேவையில்லாம பயப்படற.... இன்னைக்கே அவங்க எல்லாரையும் போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு வர ஏற்பாடு செஞ்சாச்சு ..." என்றான் தன் வீட்டு நபர்களை நினைத்து.

இத்துணை நாட்கள் அச்சத்தை கொடுத்துக் கொண்டிருந்த மனித மிருகங்களை கண்டு அஞ்சுகிறாள் என்றெண்ணி அவன் கூற, அதையெல்லாம் எப்பொழுதோ கடந்து
துஷ்ட சக்திகளை எண்ணி கலங்கிக் கொண்டிருப்பவள் அவனை ஆழ்ந்த பார்வை பார்க்க, உடனே சங்கையா சொன்னது அவன் நினைவிற்கு வந்தது.

" சரி, நான் இப்ப எதுவும் கேட்கல ...
நீ எதுவும் சொல்ல வேணாம்... நேரம் வரும் போது சொல்லு அது போதும் ..."

" ப்ளீஸ் , இன்னும் இரண்டு நாள் கொஞ்சம் கவனமா இருங்க...
சிவசாலிகிராமம் உங்க கூடவே இருக்கு இல்ல ..."

" கூடவே வச்சிருக்கேன் பாப்பா....
வர பிரம்ம பௌர்ணமி வரைக்கும் என் கூடவே இருக்கும் போதுமா ..."
என்ற போது நிம்மதி பெரும் மூச்சு விட்டவள், உடனே துணுக்குற்று,

" பிரம்ம பௌர்ணமியை பத்தி உங்களுக்கு எப்படி தெரியும் ..." என்றாள் ஆச்சரியத்தோடு.

லேசாக சிரித்தவன்,

" சங்கையா சொன்னாரு.... அவருக்கு அவரோட பட்சி சொல்லுச்சு .... போதுமா..." என்ற போது,
நிகழ்ந்ததை, நிகழப் போவதை பற்றி புரிந்து கொள்ளக் கூடிய பக்குவம் ஓரளவிற்கு அவனுக்கு வந்து விட்டது
என்பதை அறிந்து அமைதியானாள்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு மனையாளின் கைப்பக்குவத்தில் தயாரான உணவு, அவன் வயிற்றை மட்டுமல்ல மனதையும் நிறைய செய்திருந்தது.

குழந்தைக்கு உணவு ஊட்டியவள், மதுராவிற்கும் பரிமாறி உடன் தானும் உண்டு முடித்து,

" நான் நாளைக்கு காலைல வரேன் ...."
என்று பொதுப்படையாக கூறிவிட்டு விடை பெற்றாள்.

மறுநாள் காலை, முந்தைய தினத்தை விட பரபரப்பாக முடிந்தது.

காலையிலேயே மதுராவிற்கு ஏகப்பட்ட அலைபேசி அழைப்புகள்.

98 சதவீத அழைப்புகள், நேற்றைய பணி மற்றும் இன்றைய பணிக்கான
தகவல் பரிமாற்றமாக இருக்க, ஓரிரு அழைப்புகள் மட்டும் தோண்டும் பணியை கைவிடுமாறு மறைமுக மிரட்டலாக வர,

" ஏற்கனவே நியூஸ், இந்தியாவை கடந்து வேர்ல்ட் வைட்ல பேசுபொருள் ஆயிடுச்சு ..... இனிமே ஒன்னும் பண்ண முடியாது .... பண்ண முடியுங்கிற நிலை இருந்தாலும் நான் பண்ண மாட்டேன் ..." என்று சாடி விட்டு அழைப்பை துண்டித்தாள்.

தனசேகரனின் ஈரோடு இல்லத்திலிருந்து, மாயோன் மங்கலத்தில் உள்ள பெரிய வீடு வரை,
காவல்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.

தனசேகரனுக்கு அவர் குத்தகை எடுத்து இருந்த கல்குவாரி பகுதியில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்படுவதோடு, குத்தகைக்கு விடப்பட்ட நிலப்பரப்பை தாண்டி குவாரி பணிகள் நடைபெறுவதாக மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறை அமைச்சகம் புகார் ஒன்றை பதிவு செய்து கடிதம் மூலம் தெரிவித்திருந்தது.

வழக்கம்போல் தனசேகரன் பார்க்க வேண்டிய அதிகாரிகளை பார்த்து கொடுக்க வேண்டிய கையூட்டுகளை கொடுத்து வந்திருந்த புகாரை நமுத்துப் போக செய்தார்.

இது எப்பொழுதும் நடக்கும் விஷயம் என்பதால், அவர் பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் இருந்து விட்டார்.

ஆனால் எப்பொழுது கல்குவாரிக்கு அருகில் புதையுண்டிருக்கும் மண்டையோடுகளை செயற்கைக்கோள் படம் பிடித்து அனுப்பியதோ, அப்பொழுதிலிருந்தே
பிரச்சனையின் தீவிரம் அதிகரிக்க, பிறகு அயல்நாட்டில் இருந்து சுற்றுலாவிற்கு வந்த பெண் அதே இடத்தில் காணாமல் போனதும் தெரியவர காதும் காதும் வைத்தார் போல், சுரங்கத் தொலை உணர்வு கழகம் , சிபிஐ மற்றும் காவல்துறையோடு களம் இறங்கியது.


கிருஷ்ணாவின் குழு தங்களது கல்குவாரி பகுதிகளுக்கு அருகில் இருந்த இடத்தில் தேடுதல் வேட்டை நடத்தி ஆதாரங்களை சேர்க்கிறது என்பதை மோப்பம் பிடித்ததும் தான்,
தன் அடிமடியிலேயே கை வைக்க வந்திருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு
கிருஷ்ணாவையும் அவனது குழுவையும் தீர்த்துக்கட்ட ஆட்களை அனுப்பி இருந்தார் தனசேகரன்.

அதிலிருந்து கிருஷ்ணாவின் குழு தப்பித்ததுமே, பிரச்சனை பெரிது என்று உணர்ந்து அவரும் சுதாகரனும் வெளிநாடு தப்பிச் செல்ல திட்டம் போட்டிருந்தனர் அதற்குள் காவல் துறை முந்திக் கொள்ளும் என அறியாமல்.

மறு தினமே கல்குவாரி பகுதிகளில் தோண்ட போவதாக உள்ளூர் காவல் நிலையத்தில் கையூட்டுக்காக வேலை செய்யும் எட்டப்பன்களிடமிருந்து ரகசிய செவி வழி செய்து கிட்ட தந்தையும் மகனும் தலைமறைவாயினர்.

உடனே மாநில அளவில் மட்டுமல்ல, இந்திய அளவிலும் அவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் பணி முடக்கி விடப்பட்டது .

ஈரோடு வீடு மற்றும் பொது வீட்டில் இருந்த மடிக்கணினி, கணிப்பொறி ,
சிடிக்கள் என அனைத்து விதமான தகவல் பரிமாற்ற வஸ்துகளையும்
காவல்துறையினர் கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.

பெரிய வீட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்த தனலட்சுமியும், வைஷ்ணவியும் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் அழுவதையே காரியமாக வைத்திருக்க,
கடைசியில் காவல்துறையினர் தங்கள் பாணியை கையாள முயலும் போது தான், வாயையே திறந்தனர்.

அதே போல் ஈரோட்டு வீட்டில் வீட்டுக்காவலில் சிறை வைக்கப்பட்டிருந்த மீனாட்சி, சுஜாதாவை காவல்துறையினர் விசாரிக்க தொடங்கியிருந்தனர்.

அன்றைய தோண்டும் பணி முன் தினத்தை விட , துரிதமாக தொடங்க பட, வேலை முழு வீச்சில் நடைபெறத் தொடங்கியது.

இம்முறை அந்தப் பகுதியில் இருந்து காய்ந்து மண்ணோடு மண்ணாக மக்கிய நிலையில்
எலுமிச்சம்பழத் தோல், மெல்லிய கருப்பு நிற கயிறுகள், கருப்பு துணி, சிறு பூக்களின் துகள்கள்
போன்றவை
அடையாளம் கண்டுகொள்ள முடியாத அளவிற்கு தூசு மாசு போல் தெரிய , உடனே பாரன்சிக் நிபுணர்கள்
மேம்போக்கான சில ஆய்வுக்குப் பிறகு
அவைகளை கண்டறிந்ததும், கிருஷ்ணாவிற்கு மூர்த்தியாரின் இல்லத்தில் சுதாகரன் விட்டுச் சென்ற பையில் இருந்த பொருட்கள் நினைவுக்கு வர,

" என்ன இது என்னென்னமோ வருது....." என்றாள் மதுரா ஆராய்ச்சியோடு.

" இதெல்லாம் செய்வினை, பில்லி, சூனியத்துக்கு பயன்படுத்துற பொருள் போல இருக்கு .... " என்றான் கிருஷ்ணா ஊகித்து.

" ஓ காட்... நரபலியா ...." என மதுரா திகைக்க,

" இருக்கலாம் மது ..." என்றவன் தனலட்சுமி மற்றும் தனசேகரனின் மாந்திரீக ஈடுபாட்டை பற்றி பகிர்ந்தான்.

உடனே மதுரா பாண்டித்துரையை தொடர்பு கொண்டு,

" எனி டெவலப்மெண்ட் இன் கஸ்டடி ..."

" இல்ல மேம்... அந்த லேடீஸ் யாரும் எதையும் உருப்படியா சொல்லல .... ஆனா கிரபாகரன், சூரிய கிரண் ரெண்டு பேரும் வீட்லதான் இருக்காங்கனு தகவல் கிடைச்சிருக்கு ... அந்த வீட்டல சர்ச் போட்டுட்டு, அப்படியே அவங்களையும் கஸ்டடிக்கு கொண்டு வரலாம்னு இருக்கோம் மேம் ..."

" ப்ரோசீட் ..." என முடித்தவளிடம் ,
"பாண்டித்துரை எப்படி ..." என்றான்
கிருஷ்ணா சந்தேகமாக.

" ஹி ஈஸ் ஜெனியூன் .... இந்த கேஸ் எடுக்கும் போதே , உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன்ல இருக்கிறவங்க எல்லார பத்தியும் ஒரு டீடைல்டு அனாலிசிஸ் நடத்திட்டு தான் வந்தேன் ...
பாண்டித்துரை ரொம்ப நேர்மையான ஆசாமி .... இந்த ஸ்டேஷனுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி ஒரு மாசம் தான் ஆகுது ..."

" தென் குட் ..." என்றான் கிருஷ்ணா.

கல்குவாரி குத்தகை தனசேகரனின் பெயரில் இருப்பதால், காவல்துறையினர் அந்தப் பகுதிகளில் சோதனை நடத்தி, புதையுண்டிருக்கும் பிணங்களை கண்டறிய நேர்ந்தால்,
தனசேகரனும் அவரது மகன் சுதாகரனும் தான் சிக்குவார்கள்.

தனக்கும் அதற்கும் ஆதாரப்பூர்வமாக எந்த வகையிலும் தொடர்பில்லை என்பதால், தன்னைத் தேடி வர மாட்டார்கள் .... சுலபமாக தப்பி விடலாம்
என தனது மந்த மூளையை பயன்படுத்தி சிந்தித்ததால் , எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காமல், தலை மறைவும் ஆகாமல் இயல்பாக இருப்பது போல் வீட்டிலேயே இருந்தான் சூரிய கிரன்.

ஒரு வழக்கு சிபிஐக்கு மாற்றப்படுகிறது என்றால்,
அந்த வழக்குக்கு சம்பந்தப்பட்டவர்களும்,
அவர்களுடன் சம்பந்தப்பட்ட அனைவரும், வீட்டு வேலையாட்கள் உட்பட விசாரணை வட்டத்திற்குள் வருவார்கள் என்று அவன் அறிந்திருக்கவில்லை.

உள்ளூர் காவல் நிலையத்தில், அரசியல் பின்புலத்தோடு பணத்தை வாரி இறைத்து சட்டத்தை சட்டை பைக்குள் வைத்துக்கொண்டு செயல்பட்டது போல், சிபிஐயும் செயல்படும் என்ற மெத்தனப் போக்கில் இருந்து விட்டான்.

திட்டம் தீட்டி குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளில் இருவகை உண்டு.

முதலாம் வகை, செய்யப் போகும் குற்றத்திலிருந்து எவ்வாறு தப்பிக்கலாம் என்ற முன்னேற்பாடோடு களம் இறங்குவர்.

இரண்டாம் வகை, மாட்டிக்கொள்ளாத வரையில் ராஜா ..
மாட்டிக் கொண்ட பின்பு கூஜா என்ற வகையில் செயல்படுவர்.

இவன் இரண்டாம் வகையை சார்ந்தவன்.
அதோடு இவன் ஊரை விட்டு அல்ல நாட்டை விட்டே ஓடினாலும், உலகையே உலுக்கிய தொடர் கொலைகள் என்பதால் நிச்சயம் கைது செய்யப்பட்டு தண்டனைக்கு உள்ளாவான் என்பதையும் இவன் யோசிக்காமல் வழக்கம் போல் வீட்டில்
உல்லாசமாக வலம் வந்து கொண்டிருந்தான்.

மதுராவிடம் பேசி முடித்து அடுத்த 15-வது நிமிடத்தில், பாண்டித்துரையின்
குழு ராஜலட்சுமியின் இல்லத்தை முற்றுகையிட்டு , வீட்டிலிருந்த தகவல் தொடர்பு சாதனங்கள் அனைத்தையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர்.

குறிப்பாக சூரிய கிரனின் அறையில் இருந்த, கணினி, சிடிக்கள், பென்டிரைவ் ....என ஒன்றைக் விடாமல் கை பற்றியவர்கள்,
ராஜலட்சுமி, கிருபாகரன் , சூரிய கிரண் , சந்தியா நால்வரையும் பொட்டலம் கட்டுவது போல் அலேகாக தூக்கி காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரணையை தொடங்கினர்.

சண்முகம் வீட்டிற்கு சென்று சாந்தியையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்தனர்.

கல்குவாரிக்கு அருகில் நடைபெற்றுக் கொண்டிருந்த தோண்டுதல் பணி ஏறக்குறைய நிறைவுறும் நிலைக்கு
வந்திருந்தது.

அன்று மொத்தம் ஐந்து மண்டை ஓடுகள் மற்றும் எலும்பு துண்டுகள் கிடைக்க, மேற்கொண்டு தேடியதில்
எதுவும் கிடைக்காமல் போனதும்,
அந்தப் பணி நிறைவுற்றதாக அறிவித்ததோடு,
கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை, அவர்களது பாலினம், வயது,
கொலை செய்யப்பட்ட முறை, கொலை செய்யப்பட்ட கால அளவு ஆகியவற்றை கண்டறிய ஹைதராபாத்தில் பாரன்சிக் தலைமை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டு முடிவுக்காக காத்திருக்கலானார்கள்.

தனசேகரன் மட்டுமல்லாது மற்ற குத்தகைக்காரர்களையும் , அவர்களது குடும்ப உறுப்பினர்களையும்
காவல்துறை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விசாரிக்க தொடங்கியது.

தோண்டுதல் பணி நிறைவு பெற்றதை அடுத்து மாலையில் கிருஷ்ணா மற்றும் அவன் குழுவினர் (வேதாந்த் பிரகாஷை தவிர) வீடு திரும்பினர்.

அன்றைய செய்திகளும் ஊடகங்களால் மணிக்கு ஒரு முறை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட
அதனைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போயிருந்தாள் மாதவி .

" கிருஷ்ணா, அது என்ன ஏதோ மாந்திரீகம் .... அதான் செய்வினை செஞ்ச மாதிரி கருப்பு துணி, எலுமிச்சம்பழம் , நூல்னு ஏதேதோ கிடைச்சதா, பிரேக்கிங் நியூஸ் ல காட்டினாங்க ..." என்றாள் லேசான பதட்டத்துடன்.

" ஆமா மது... " என்றவன் யோசனையில் ஆழ,

" என்ன யோசனை கிருஷ்ணா ...."

" தனலட்சுமிக்கும் , தனசேகரனுக்கும்
இந்த மாதிரி மாந்திரீகத்துல நிறைய நம்பிக்கை உண்டுனு சின்ன வயசுலயே தெரியும் .... எப்பவும் வீட்டுல யாராச்சும் ஒரு நம்பூதிரி வந்து போய்கிட்டே இருப்பாங்க ...

கிருபாகரனுக்கு இதுல எல்லாம் நம்பிக்கை கிடையாது ....
சாமியாரு, நம்பூதிரி மாதிரியான ஆளுங்க யாராச்சும் வீட்டுக்கு வந்தா அந்தாளுக்கு
சரி கோவம் வரும் .... அதுக்காக வேண்டி கிருபாகரன் இல்லாத நேரத்துல தான், இந்த மாதிரியான ஆளுங்க எல்லாம் வீட்டுக்கு வந்துட்டு போவாங்க ... எதுக்காக வந்துட்டு போனாங்கன்னு எனக்கு அப்பவும் புரியல இப்பவும் புரியல ....
மாந்திரீகத்துல எவனோ சொன்னத நம்பி கொலை பண்ற அளவுக்கு போய்ட்டாங்களேனு ....
ரொம்ப அதிர்ச்சியா இருக்கு ...
எவ்ளோ சின்ன சின்ன குழந்தைங்க, வயசு பொண்ணுங்க செத்துப் போயிருக்காங்க தெரியுமா ....
ச்சே... இப்படி ஒரு கொலைகாரி வயித்துல பொறந்தத நினைச்சு
அருவருப்பா இருக்கு .... தனலட்சுமி கிட்ட இன்னைக்கு தான் இன்வெஸ்டிகேஷனை தொடங்கி இருக்காங்க ....
தனசேகரன் , சுதாகரன் தலைமறைவாயிட்டாங்க ... நேஷன் வைட் அலர்ட் போட்டிருக்காங்க ... சோ
கூடிய சீக்கிரமா புடிச்சிடுவாங்க ....
என்னைய பொறுத்த வரைக்கும்,
இன்வெஸ்டிகேஷனே வேண்டாம் ...
தனலட்சுமி தனசேகரன் ரெண்டு பேரும் தான் கல்ப்ரிட்டே...." என தன் ஆழ்மனதின் கோபத்தை புலம்பலாக அவன் வெளிப்படுத்திக் கொண்டே இருக்க, மாதவி சிறு குழந்தைகளுக்கு நடந்ததை நினைத்து கண்ணீர் வடித்தாள்.

" எதுக்குடி அழுவுற ..."

" அந்த குழந்தைகளுக்கு நடந்ததை என்னால தாங்கிக்கவே முடியல கிருஷ்ணா .... மனசெல்லாம் ரணமா இருக்குது ...." என்றாள்
நடந்து முடிந்த பழைய சம்பவத்தை சொல்ல முடியாமல் மறைத்து.

" இப்ப வரைக்கும் எனக்கு ஒன்னு புரியலடி ....
எதுக்காக இவ்ளோ பெரிய அட்டூழியத்தை செஞ்சிருக்காங்க ...
இப்படி செஞ்சா... அவங்களுக்கு என்ன கிடைக்கப் போகுது .... எதை எதிர்பார்த்தது இதெல்லாம் செய்றாங்க .... ஒண்ணுமே புரியல " என்றவனை பரிதாபமாக பார்த்தாள்.

இவையெல்லாம் எப்பொழுதோ புரிந்து தடுத்திருந்தால்,
ஐந்தாண்டு பிரிவே ஏற்பட்டிருக்காதே ..... என மனதில் எண்ணிக்கொண்டவளுக்கு , தனசேகரன் தனலட்சுமி சிறு குழந்தைகளை நரபலி கொடுத்ததற்கான காரணம் தெரிந்திருந்தாலும், தருணம் வருவதற்காக சொல்லாமல் அடக்கி வாசித்தாள்.

" ரொம்ப டயர்டா இருக்க கிருஷ்ணா .... வா சாப்பிடலாம் ...."

அவன் உணவு மேஜையில் அமர்ந்து உண்ண ஆரம்பிக்கும் போது, மித்ராவிடமிருந்து அழைப்பு வந்தது.

" என்ன மித்ரா ...."

" நாம சூரிய கிரனை ரொம்ப அண்டர் எஸ்டிமேட் பண்ணிட்டோம் அத்தான் ..."

" ஏன் என்னாச்சு ...."

" அவன் இன்டர்நேஷனல் கல்பிரிட் .."

" புரியல மதுரா... தெளிவா சொல்லு ..."

" அவன் வீட்டுல சீஸ் பண்ண சீடிஸ், பென்டிரைவ், கம்ப்யூட்டர்ஸ் எல்லாத்துலயும் அவனே எடுத்த
ஸ்நஃப் மூவிஸ்(Snuff movies) நிறைய இருக்கு ...."

" ஓ மை காட் ..... ஸ்நஃப் மூவிஸா... அதுக்காக தான் யங் கேர்ள்சோட பாடியும் கிடைச்சுதா ...
ஐயோ ...." என்றான் வலது கையை தன் தலையில் வைத்து அழுத்தி.

அவன் அருகில் நின்று கொண்டிருந்ததால் இருவரின் உரையாடல்களையும் தெளிவாக கேட்ட மாதவி,
நாயகனின் முக பாவத்தை கண்டு


" ஸ்நஃப் மூவிஸ்ன்னா என்ன என்றாள்....." பதறியபடி.

- மாயோனின் மாயங்கள் தொடரும்
 
Back
Top