Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 97

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
681
அத்தியாயம் 97



" அது , எப்படி உனக்கு சொல்றது ..." என மிகுந்த அதிர்ச்சியோடும் குழப்பத்தோடும் அவன் யோசிக்க,

" ஒரு வேளை அந்த மாதிரி மூவிஸா கிருஷ்ணா ..."

" ஸ்நஃப் மூவிஸ், போர்ன் மூவிஸ்(Porn) மாதிரி தான் இருக்கும்.... ஆனா அதுல ஆணும் பெண்ணும் உறவு கொள்ளும் போது,
அந்த ஆண், அந்த பொண்ண செக்ஸுவலா டார்ச்சர் பண்ணிக்கிட்டே வந்து ஒரு கட்டத்துல உண்மையாவே கொன்னுடுவான் ...

அந்த பொண்ணு முழுக்க முழுக்க போதையோட பிடில இருக்கிறதால,
அவ உடம்புல அந்தரங்க பாகங்கள
கத்தி, கண்ணாடி, ஆணி இதையெல்லாம் கொண்டு வித விதமா கிழிக்கும் போது
வலிய உணர்வா... ஆனா அவளால நகர முடியாது .... அவ கை கால்களை அசைய முடியாத அளவுக்கு போதை மருந்துகளை பயன்படுத்தி கட்டுப்படுத்தி இருப்பாங்க ....

இந்த மாதிரி செக்ஸுவல் டார்ச்சர் பண்ணி நடக்கிற ஒரிஜினல் கொலைய, ரத்தம் சொட்ட சொட்ட வீடியோவா எடுத்து நல்ல விலைக்கு வித்துருவாங்க ....

பெரிய பெரிய பணக்கார சைக்கோ பேத்ஸ் (psychopaths) கோடி கணக்குல பணம் கொடுத்து, இந்த மாதிரியான வீடியோஸை வாங்கி ரசிச்சு பாப்பாங்க ...
அந்த வேலையைத்தான் சூரிய கிரன் செஞ்சிருக்கான்....

பொதுவா யாராச்சும் வலில அழுதாலே,
மனசு கஷ்டப்படும் ...
ஆனா இதுங்க மிருகத்தை விட கொடுமையான ஜந்துங்க...
இதுங்களுக்கு அடுத்தவங்கள விதவிதமா அதுவும் குறிப்பா பொண்ணுங்களை செக்ஸுவலா டார்ச்சர் பண்ணி
கொலை செஞ்சதை என்ஜாய் பண்ணி
பார்க்கப் பிடிக்கும் ...." என அவன் பேச்சில் கவனம் வைத்து சொல்லிக்கொண்டே செல்ல மாதவியின் உடல் பயத்தில் நடுங்கியதோடு, அவள் முகம் எங்கும் முத்துக்களாய் வியர்க்க, நிற்க சுவாதீனம் இல்லாமல் அருகில் இருந்த நாற்காலியில் சரிந்தமர்ந்தாள்.

மதுரா சொன்னதை கேட்டதும், முதலில், அவனும் அதிர்ச்சியின் எல்லைக்கே சென்றது உண்மைதான். ஆனால்
இயற்கையிலேயே மிகுந்த தைரியமான ஆண்மகன் என்பதால், அதிலிருந்து மெதுவாக தன்னை மீட்டு எடுத்துக் கொண்டு
ஓரளவிற்கு நிலைமையை இயல்பாக கையாள தன்னை தயார்படுத்திக் கொண்டான்.

அவன் காவல் துறையிலோ ராணுவத்திலோ பணி புரியவில்லை என்றாலும், இரு தினங்களாக
மண்டையோடுகள், எலும்புகள் போன்ற
புதையூண்ட பிணங்களோடு இருந்ததால் ஓரளவிற்கு அந்த சூழ்நிலைக்கும் பழகி இருந்தான்.

ஆனால் மாதவியோ இயற்கையிலேயே
மென்மையான சுபாவம் கொண்டவள்.
கேள்விப் படாத இம்மாதிரியான மனித மிருகங்களின் ஆட்டங்கள்
அவளை அடியோடு புரட்டிப்போட்டு ஆட்டம் காண வைக்க, ஆடிப் போய்விட்டாள் பாவை .

உடனே மனையாளின் நிலையறிந்தவன்

" மது, முதல்ல தண்ணி குடி ..."
என தண்ணீரை பருக செய்து முத்துக்களாய் வேர்த்திருக்கும் அவளது முகத்தை
தண்ணீர் கொண்டு துடைத்தும் விட்டான்.

ஓரிரு கணம் தன் தலையை இரு கைகளால் தாங்கி அமர்ந்திருந்தவளிடமிருந்து
கேவல் சத்தம் வெளியாக, அவள் அழுவதை உணர்ந்தவன், அதற்கான காரணத்தையும் புரிந்து கொண்டு,

" சரளாவையும் இதே மாதிரி கொடுமைப்படுத்தி கொன்னுருப்பாங்கனு தானே அழுவுற..."

அதனை ஆமோதிப்பது போல் அவளிடமிருந்து பதில் இல்லாமல் கேவல் அதிகமாக,

" நடந்து முடிஞ்சத நெனச்சு வருத்தப்படாத மது ....
சூரிய கிரன் ஆதாரத்தோட மாட்டிக்கிட்டான் .... இனி அவன் கதை முடிஞ்சது...
இன்னொரு விஷயம், உன்னை அன்னைக்கு சூரிய கிரன் சுதாகரன் ரெண்டு பேரும் சேர்ந்து கடத்த பார்த்தாங்க இல்லையா....
சோ, இந்த க்ரைம்ல சுதாகரனும் சம்பந்தப்பட்டிருப்பானு தோணுது ...
சிபிஐ எல்லாத்தையும் தோண்டி எடுத்துட்டாங்க ....
மாந்திரீகத்துக்காக நரபலி கொடுக்க சின்ன குழந்தைங்க,
ஸ்நஃப் மூவிஸ் எடுக்க வயசு பொண்ணுங்கனு இஷ்டத்துக்கும் கொன்னு புதைச்சிருக்காங்க போல ....
இனிமே சூரிய கிரன், சுதாகரன் , தனலட்சுமி, தனசேகரன் யாருமே தப்ப முடியாது ....
கிருபாகரன், ராஜலட்சுமிக்கு இந்த நரபலி சமாச்சாரம் தெரியுமா தெரியாதானு தெரியல...
ஆனா நிச்சயமா சூரிய கிரன் க்ரைம்ல ரெண்டு பேருக்கும் பங்கு இருக்கும்...
எப்படி பார்த்தாலும் இனிமே அவங்க எல்லாரும் ஜெயில்ல கலி தின்ன போறது உறுதி ...." என முடித்தான்.


" கிருஷ்ணா, இந்த விஷயத்தை எப்படித்தான் செர்ரி தாங்கிக்கப் போறாரோ.." என்றாள் கமரிய குரலில் .

" ஆமா மது ....நெனச்சா எனக்கும் கவலையா தான் இருக்கு ..." என்றபடி அவன் சாப்பிட்டு முடித்து கை கழுவவும், மதுரா வாகனத்தில் வந்திறங்கவும் சரியாக இருந்தது.

வந்தவள் குளியல் அறைக்குச் சென்று புத்துணர்வு பெற்று, இரவு உடைக்கு மாறி உணவு உண்ண மேஜைக்கு வந்ததும் , மாதவி உணவு பரிமாற

" என்னாச்சு மது ..." என்றான் மதுராவிடம்.

" என்னால மட்டுமில்ல எங்க டீமால கூட ஒரு சிடிய பார்க்க முடியல .... மனசெல்லாம் பதறுது ... தல சுத்துற மாதிரி ஆயிடுச்சு ...
அவ்ளோ கேவலமாவும் வக்கிரமாவும் இருந்துச்சு ... நிச்சயமா அந்த சூரிய கிரன் மனுஷனே கிடையாது.... ராட்சசன் தான் .... அவனை கஸ்டடில எடுத்து கிட்டத்தட்ட நாலு மணி நேரத்துக்கு மேல ஆகுது ஒரு வார்த்தை பேச மாட்டேங்குறான்...

கிருபாகரன், ராஜலட்சுமி சத்தியம் பண்றாங்க நடந்த எதுவுமே எங்களுக்கு தெரியாதுனு....

இருக்கிறதுலயே ரொம்ப பாவப்பட்ட ஜென்மம், அந்த பொண்ணு சந்தியா தான் .... அந்த பொண்ணு உடம்புல உயிர் மட்டும் தான் இருக்குது ....
அவ்ளோ ஒல்லியா இருக்குது ....
அந்த வீட்ல அதை முழு நேர வேலைக்காரியா தான் வச்சிருந்தாங்க போல ....
நடந்த விஷயம் எதுவுமே அந்த பொண்ணுக்கு தெரியல.... அது உடம்புல ஏகப்பட்ட இடங்களல சிகரெட் சூடு வேற..... பார்க்க பரிதாபமா இருந்துச்சு ... உன் வீட்டுக்கார், உன் மாமனார், மாமியார்
எல்லாரும் எப்படி உன்னை பார்த்துக்கிறாங்கனு கேட்டதுக்கு முதல்ல நல்லா பாத்துக்கிறாங்க நான் நல்லபடியா இருக்கேனு தான் சொன்னா....

அப்புறம் அவளோட ரொம்ப நேரம் பேச்சு கொடுத்ததுல, அவ குழந்தை உண்டாகலன்னு குடிச்சிட்டு நித்தம் நித்தம் அடிக்கிறான்.... சிகரெட்டால
சுடறான்னு சொல்லி அழுதா.....
ஏன் இவ்ளோ ஒல்லியா இருக்கனு கேட்டதுக்கு, ஒருவேளை தான் சாப்பாடு போடுவாங்க மேம் ....
அதுவும் ரொம்ப கம்மியா போடுவாங்க ... நல்லா சாப்பிட்டே நிறைய வருஷம் ஆச்சு....
கஷ்டத்தை தாங்கிக்க முடியாம, ஒரு தடவை என் வீட்டுக்கு ஓடிட்டேன் ....
என் வீட்டுக்கு வந்து என்னை அடிச்சு, என் அம்மாவையும் அடிச்சு கொடுமைப்படுத்தி என்னை மறுபடியும் கூட்டிட்டு வந்துட்டாங்க மேம்னு சொன்னா ..." என மதுரா பேசிக் கொண்டே செல்ல மாதவியிடமிருந்து லேசான விம்மல் வெளிப்பட, மற்ற இருவரும்
அவளை ஆச்சரியமாய் பார்த்தனர்.

" உனக்கு சின்ன வயசுல இருந்து, சரியா சாப்பாடு போடாம, படிக்க விடாம, கிடைச்ச சந்தர்ப்பத்துல எல்லாம் சுடு வார்த்தையால சுட்டவங்களுக்கா பரிதாபப்பட்டு அழறா..." என்றாள் மதுரா .

" ஆமா மதுரா, இவ எப்பவுமே இப்படித்தான் .... ஆதி காலத்துல சண்முகம் ரொம்ப பாரபட்சமா நடந்துகிட்டாரு.... அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்த போது ரொம்ப அழுதுட்டா... அவரோட கடைசி காலத்துலயும் இவதான் அவரை கண்ணும் கருத்துமா பாத்துக்கிட்டா ..."
என்ற போது தான் தன்னை பற்றி அனைத்து தகவல்களையும் சங்கையா மூலம் தெரிந்து கொண்டு விட்டான் என்பதே மாதவிக்கு விளங்கியது.

" மாதவி, உன் பேர்ல சண்முகம் எழுதி வச்ச வீடு, நிலத்தை தவிர மத்த எல்லாத்தையும் சூரிய கிரன் வந்த விலைக்கு வித்துட்டானாம்...
அதை எதிர்த்து கேள்வி கேட்ட மணியை ஆக்சிடென்ட்ல போட்டு தள்ளிட்டானாம்...."
என்ற போது மாதவியின் கண்களில் திடீரென ஒரு பயம் தெரிய, அவள் முக உணர்வுகளை கிருஷ்ணா உள்வாங்கிக் கொண்டே இருந்தான்.

" சாந்திய விசாரிச்சோம் .... எனக்கும் என் பொண்ணுக்கும் எதுவுமே தெரியாது .... அந்த சூரிய கிரன் கொலைகார பாவி .... அவனை ஜெயில்ல போடுங்க ... அப்பதான் என் பொண்ணுக்கும் எனக்கும் விடுதலைனு திட்டி தீத்துட்டா .... என் பேர்லயும் என் பொண்ணு பேர்லயும் இருந்த மொத்த சொத்தையும் வித்து தொலைச்சுட்டான் ...
மாதவி பேர்ல வீடு இருக்கிறதால தான் அந்த பாவியால விக்க முடியல ...
இல்லாட்டி போனா என்னைக்கோ நான் நடுத்தெருவுக்கு வந்திருக்கணும்னு சொன்னா ..." என்றவள் சாப்பிட்டு முடித்து கை கழுவிக்கொண்டே,

" ஈரோட்ல ஹவுஸ் அரெஸ்ட்ல இருக்குற மீனாட்சியும் சுஜாதாவும்
எங்க குடும்பத்தை ஆளுங்களுக்கும்,
கல்குவாரில கிடைக்கிற பொணத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது ....
கல்குவாரிய குத்தகைக்கு எடுத்திருந்தாலயே , அங்க புதைஞ்சிருக்கிற பொணத்துக்கெல்லாம் நாங்க பொறுப்பேத்துக்க முடியுமானு வீர வசனம் பேசினாங்களாம் ...
இன்னும் ஒரே நாள்ல எப்படி தொடர்புனு நாங்க காட்டுறோம்னு...எங்க ஆளுங்க பதில் சொல்லி இருக்காங்க ..." என முடித்தாள்.

சற்று நேரம் அங்கு அமைதி நிலவ, வாசலில் இருசக்கர வாகனம் வந்து நிற்கும் சத்தம் கேட்க, மாதவி கிருஷ்ணா இருவரையும் பார்த்து

" செர்ரிக்கு போன் பண்ணி வர சொன்னேன் .... வந்திருக்காரு போல ..." என்றபடி மதுரா வாயிலை எட்டிப் பார்க்க, செர்ரி வந்து கொண்டிருந்தான்.

வந்தவன் இயல்பாக மாதவி கிருஷ்ணாவிடம் நலம் விசாரித்துவிட்டு,

" இங்க வரணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன் தேவா ... வேலை அதிகமாயிடுச்சு... இப்ப சிபிஐ ஆபிசர் போன் பண்ணி கூப்பிட்டாங்களா ... வராட்டி போனா கோவிச்சுப்பாங்க... அதான் வந்தேன் ..." என்றவன் மதுராவை காதலோடு நோக்க,
பரிதாபமாய் அவனைப் பார்த்தவள்,

" செர்ரி, நான் ஒரு முக்கியமான விஷயத்தை சொல்ல போறேன் .... ரொம்ப கஷ்டமான விஷயம் தான் .... என் மேல நம்பிக்கை வையுங்க ....
கலங்காதிங்க.... முக்கியமா கோபப்பட கூடாது சரியா ..."

" என்ன நீ புதிர் போட்டுக்கிட்டே இருக்க .....விஷயத்தை சொல்லு ..."

" நியூஸ் பார்த்தீங்க இல்ல ..." என்றாள் இறுகிய குரலில்.

" ஆமா எலும்புக்கூடுங்க நிறைய கிடைச்சிருக்கு..... ஏதோ நரபலி பில்லி சூனியம்னு.... பிரேக்கிங் நியூஸ் பார்த்தேன் ..." என்றவனிடம்
அது குறித்த தகவல்களை கூறிவிட்டு
அதில் இளம் பெண்கள் கொலை செய்யப்பட்ட முறை அதற்குக் காரணமான சூரிய கிரன் ... என
அனைத்தையும் ஒன்றன்பின் ஒன்றாக தேர்ந்தெடுத்த வார்த்தைகளை பயன்படுத்தி அதிக தீவிரத்தை சேர்க்காமல் அவள் சொல்ல சொல்ல,
கேட்டுக் கொண்டிருந்தவனின் முகம் உணர்வுக்குவியல்களால் கொப்பளிக்க தொடங்கியது.

அதிர்ச்சி, ஆற்றாமை , அழுகை,
போன்ற உணர்வுகள் ஒன்றின் பின் ஒன்றாக கூடிக் கொண்டே செல்ல, ஒரு கட்டத்தில்
கையால் வாயை பொத்திக்கொண்டு
உடல் குலுங்கி துடித்து அழுதான்.

மற்ற மூவரும் கையறு நிலையில், கண் கலங்கி பரிதாபமாக நோக்க,
ஓரிரு கணத்திற்கு பிறகு தன்னை சுதாரித்துக் கொண்டவன்,

" சரளா செ.... செத்துட்டாங்கிற உண்மையை ஏத்துக்கவே எ... எனக்கு ரொம்ப நாளாச்சு..... என்ன தான் போலீஸ் என்கொயரி, போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்னு நடந்தத ஓரளவுக்கு தெரிஞ்சுக்கிட்டாலும் அவ கொலைக்கு பின்னாடி இப்படி ஒரு கொடூரம் இருக்கும்னு கனவுல கூட நினைச்சு பார்த்ததில்ல டா தேவா ..." என மீண்டும் கதறி துடித்தான்.

" அந்த அரக்கனை விசாரணைங்கிற பேர்ல
பாதுகாப்பா உள்ள உட்கார வச்சி தீனி போட்டுக்கிட்டு இருக்கீகளா.... இப்ப அவன் என் கண்ணுல படாட்டாலும்
கோர்ட், ஸ்டேஷன்னு மாத்தி மாத்தி கூட்டுக்கிட்டு போவீங்க இல்ல ....
அப்ப அருவாளால கண்ட துண்டமா
வெட்டாம விடமாட்டேன் பாரு....." என செர்ரி கர்ஜிக்க, உடனே மதுரா

" எங்களை நம்புங்க செர்ரி.... " என பேச முயல, அதை இடைவெட்டி

" இந்த விஷயத்துல நீங்களும் போலீஸ் டிபார்ட்மென்டும் என்ன செய்யப் போறீங்கன்னு எனக்கு அக்கறை இல்ல... நான் அந்த
சூரிய கிரனை என் கையால செதில் செதிலா வெட்டி போட்டா தான் என் ஆத்திரம் அடங்கும் ..." என குமுறினான்.

" செர்ரி.... அஞ்சு வருஷத்துக்கு முந்தி நடந்த கொலையா இருந்தாலும்
இப்ப தான் ஆதாரத்தோட ஆளுங்களும் பிடிப்பட்டு இருக்காங்க.... இப்ப போய் இந்த மாதிரி கோவப்பட்டு ஏடாகூடமா ஏதாச்சும் செஞ்சு வைக்காதீங்க...
எல்லாத்தையும் நாங்க பாத்துக்கிறோம் .... ப்ளீஸ் ... இந்த கொடுமையால ஒரு சரளா மட்டும் இல்ல ஒரு 100 சரளா பாதிக்கப்பட்டிருக்காங்க....
இந்த கேஸையே எடுத்துக்கோங்க ,
யாரோ ஒரு ரஷ்யன் பொண்ணு, அப்புறம் வடநாட்டுல பொறந்த இன்னொரு பொண்ணு .... இவங்க காணாம போனதால தானே, கேஸ் சூடு பிடிச்சு, உண்மை எல்லாம் தோண்டி எடுத்து வெளிய வர ஆரம்பிச்சிருக்கு ..... அதனால பொறுமையா இருந்தா,
இறந்து போன எல்லாருக்குமான நீதி நிச்சயம் கிடைக்கும் ....
ப்ளீஸ் செர்ரி, நான் உன்னை இழக்க தயாரா இல்ல..... "

என கெஞ்சிய பார்வையில் முடித்தாள் மதுரா .

செர்ரியின் கோபம் தணியவில்லை என்றாலும் , மதுராவின் முகத்தைப் பார்த்து அடக்கிக் கொண்டான்.

ஓரிரு கணத்திற்கு பிறகு,

" ஹசீனாவையும் இப்படி தான் கடத்திக் கொன்னு வீடியோ எடுத்து சூரிய கிரன் வித்திருப்பான்னு தோணுது....அதோட சுதாகரனும் இதுக்கெல்லாம் உடந்தையா இருந்திருப்பான்னு தோணுது ... எதுக்கும்
பாரன்சிக் ரிப்போர்ட் வந்தா எல்லாம் தெரிஞ்சிடும் ..."
என்ற கிருஷ்ணா , எதையோ யோசித்து விட்டு,

" எனக்கு ரெண்டு சந்தேகம் இருக்கு ..." என்றான்.


என்ன என்பது போல் மற்ற மூவரும் அவனையே நோக்க,

"1. சரளாவை மட்டும் ஏன் கல் குவாரிக்கு பக்கத்துல பொதைக்காம,
மலை அடிவாரத்துல இருக்கிற புதர்ல பொதைக்கணும் ...." உடனே மதுரா,

" ரீசன் வெரி கிளியர் அத்தான் .... அது தீபாவளி சமயம் .... ஊர்ல ஜே ஜேனு கூட்டம் ...
உள்ளூர் வாசிங்க வெளியூர் வாசிங்கனு நிறைய பேர் இருப்பாங்க .... கிரவ்ட கண்ட்ரோல் பண்ண மலையடிவாரத்துல டெம்ப்ரவரி செக் போஸ்ட் போட்டிருக்காங்க ...
கல்குவாரிக்கு போகணும்னா அந்த செக் போஸ்ட்ட தாண்டி தான் போய் ஆகணும் .... அப்படி செஞ்சா நிச்சயம்
மாட்டுவாங்கன்றதால, மலையடி வாரத்துல குறுக்குல இருக்கிற புதர்க்குள்ள அவசர அவசரமா பொதச்சிட்டு போய்ட்டாங்க ...
நான் கேஸ் பைலை தரோவா படிச்சதால இந்த விஷயம் எனக்கு தெரிய வந்துச்சு ..."

" குட் ...... எனக்கு இன்னொரு டவுட்டும் இருக்கு ...
மைதீன் பொண்ணு ஹசீனாவை யாரும் கடத்தல, யாரோ ரெண்டு பேர் வந்து சாதாரணமா பேசி அந்த பெண்ணை ஆம்னி வேன் கிட்ட கூட்டிகிட்டு போயிருக்காங்க .... அதோட
வேன்குள்ளயும் அவளுக்கு தெரிஞ்சங்க இருந்ததால ,
அவ அமைதியா அதுல ஏறி போய் இருந்திருக்கா இல்லையா ....
அப்ப வேன்குள்ள அவளுக்கு நல்லா தெரிஞ்சவங்க தானே இருந்திருக்கணும் ..."

" ஆமா சுதாகரன் சூர்ய கிரனும் இருந்திருப்பாங்க ...." என்றாள் மதுரா.

" இல்ல மது, மைதீன் ஐயாவுக்கும் அவர் குடும்பத்துக்கும் சூர்ய கிரனை சுத்தமா பிடிக்காது. கிருபா, ராஜலஷ்மி, சூரிய கிரன் இவர்களை பார்த்தாலே அவரு ஒதுங்கிப் போயிடுவார் .... அது எனக்கு நல்லாவே தெரியும் .... ஆம்னி வேன்குள்ள சுதாகரன் நிச்சயமா இருந்திருப்பான், அவன் கூட வேற யாராச்சும் அந்த பொண்ணுக்கு நல்லா தெரிஞ்சவங்களா இருந்திருக்கணும் .... "

" மைதீன் ஐயா இந்த தொகுதில நிற்க கூடாதுனு தானே அவரு பொண்ணை கடத்தி இருக்காங்க ... அப்ப கிருபாவோட விசுவாசிங்க யாராச்சும் தான் சுதாகரனோட இருந்து கடத்தி இருக்கணும் ..." --செர்ரி


" அங்க தான் தப்பு நடந்திருக்கு ... புரியற மாதிரி சொல்றேன்..... யோசிங்க ... ஆம்னி வேன்ல சுதாகரன் கூட
மூர்த்தியாரோட நெருங்கிய விசுவாசி யாராச்சும் இருந்திருக்கும் ....
இன்னும் சரியா சொன்னா, அந்த நபர் மைதீன் ஐயாவுக்கு ரொம்ப நெருக்கமான ஆளா இருந்திருக்கணும் ... அதனால தான் ஹசீனா இயல்பா ஏறி போயிருக்கா....மத்தபடி கிருபாவோட விசுவாசிங்க யாராச்சும் இருந்தாளோ , இல்ல சுதாகரன் மட்டும் தனியா இருந்தாளோ நிச்சயம் போயிருந்திருக்க மாட்டா..."


" வேதாச்சலம் , நாகேந்திரன், டேனியல் இவங்கதான் மைதீன் ஐயாவுக்கு மட்டுமல்ல மூர்த்தியாருக்கும் ரொம்ப நெருக்கம் ... அப்ப
இவங்க மேல சந்தேகப்படறியா ..."- செர்ரீ

" எஸ் ... மைதீன் ஐயா வேட்பாளரா நிக்கலனு பின் வாங்கின உடனே, அடுத்த ஆப்ஷனா நினைச்சு
இவங்க மூணு பேத்தையும் தான் மூர்த்தியார் கேட்டாரு.... மூணு பேருமே மறுத்துட்டாங்க அதுல குறிப்பா மைதீன் ஐயாக்கு அடுத்த அதிகாரத்துல இருந்த வேதாச்சலம் திட்டவட்டமா மறுத்துட்டாரு...
ஆனா இப்ப யோசிக்கும்போது தெரியுது ... அவங்க எல்லாரும் உண்மையா மறுக்கல .... மறுக்கிற மாதிரி நடிச்சிருக்காங்கனு ....ஏன்னா
தொகுதியில முகம் தெரிஞ்ச ஆளுங்க எல்லாம் பின் வாங்கிட்டா,
மூர்த்தியார் வேற வழி இல்லாம கட்சி தலைமை கிட்ட கிருபாவை தான் வேட்பாளரா நிறுத்த ரெகமெண்ட் பண்ணியாகணும் ....அப்படி ஒரு இக்கட்டான நிலைக்கு மூர்த்தியாரை கொண்டு வர்றதுக்கு தான் இப்படி
தலைய சுத்தி மூக்க தொட்டு இருக்காங்கனு தோணுது ....
அதாவது மூர்த்தியார் கிட்ட விசுவாசமா இருக்க மாதிரி நடிச்சுக்கிட்டே கிருபா கிட்ட தன் விசுவாசத்தை காட்டி இருக்காங்க...."

" சூர்ய கிரன் சுதாகரனோட இவங்க மூணு பேரும் விசாரிக்கணும்னு சொல்றியா ..."

" நிச்சயமா ....இவங்க மூணு பேரோ இல்ல இதுல யாரோ ஒருத்தரோ ஹசீனாவை கடத்த நிச்சயம் உதவி இருக்கணும் ... மூர்த்தியார் இருக்கும் போது ரொம்ப யோக்கிய சிகாமணி மாதிரி நடிச்சானுங்க ... இவனுங்க நடிக்கிறாங்கன்னு
தெரிஞ்சுக்காமயே மைதீன் ஐயாவும் மூர்த்தியாரும்
போய் சேர்ந்துட்டாங்க ..."

என கிருஷ்ணா கூறிக் கொண்டே செல்ல, பிறர் அறியா மாதவியின் கண்கள் ஆச்சரியத்தையும் அதிசயத்தையும் ஒரு சேரப் பிரதிபலித்ததோடு, ஏதோ ஒரு சாதித்த உணர்வும் அதில் மின்னி மறைந்தது.

- மாயவனின் மாயங்கள் தொடரும்
 
Back
Top