Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

அத்தியாயம் 99

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
681
அத்தியாயம் 99

தனலட்சுமி பேச பேச மதுராவுக்கு மேலும் ஒரு சந்தேகம் எழுந்தது.

என் குடும்பத்தாருக்கு ஏதோ ஒரு வகையில் அஞ்சி தான் மாதவி என் வாழ்க்கையை விட்டே வெளியேறியிருக்கிறாள் , இன்னமும் அதற்கான காரணத்தை சொல்ல மறுக்கிறாள் என கிருஷ்ணா ஒரு முறை சொன்னதும்,
மாதவியும் அவ்வப்போது பயத்தை கண்களில் விதைத்த படி வலம் வருவதும் அவள் நினைவுக்கு வர,

" ஏய் உண்மைய சொல்லு ... உங்க குடும்பத்து ஆளுங்க எல்லாம் சேர்ந்து மாதவியை என்ன பண்ணீங்க.... எதுக்காக அவ வாசுதேவ் மேல இல்லாத பழியை போட்டு விவாகரத்து வாங்கிட்டு போனா..."

".............."

" சொல்லுடி ...."

" நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதுக்கு நீ முதல்ல பதில் சொல்லு...."
என்றாள் தனலட்சுமி கோபத்தோடு.

" கேளு ...."

" வாசு, உன்னைய இரண்டாம் தாரமா கட்டிக்கிட்டான் இல்லையா ...."

அரை கணத்துக்கும் குறைவான தருணம் யோசித்து விட்டு

" ஆமா...." என்றாள் உண்மை தன்மையை அறிய.

" வாசுக்கும் உனக்கும் ஒரு பெண் குழந்தை இருக்கு இல்லையா ....."

" ஆமா .... உனக்கு எப்படி தெரியும் .."

" நான் அந்த குழந்தைய பார்த்ததில்ல... என் வீட்டு வேலைக்காரி தாமரை டிபார்ட்மென்டல் ஸ்டோர்ல, வாசு தன் குழந்தையோட பொருள் வாங்க வரும் போது பார்த்திருக்கா... மாதவியும் அப்ப அங்க வந்திருக்க அவளையும் பார்த்திருக்கா ..."

" சரி அதுக்கு என்ன இப்போ...."

" வாசு உன்னை சந்தோசமாதான வச்சிருக்கான் .... உங்க கல்யாண வாழ்க்கை நல்லாத்தானே போவுது ..."
என்ற போது தான் அதுவரை பிடிபடாமல் இருந்த தனலட்சுமியின் பேச்சு நுணுக்கமாக புரிய

" அதுக்காகத்தான் உன்கிட்ட கேட்கிறேன் .... நான் அவரோட பொண்டாட்டி .... நான் அவரோட சந்தோஷமா வாழ்ந்து ஒரு பொண்ண பெத்துருக்கேன்... இன்னொரு ஆம்பள குழந்தைய பெத்துக்கணும்னு ஆசையா இருக்கு ....
ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா தானே குழந்தை பொறக்கும்...
அவரு மலை மடுவுனு சுத்திக்கிட்டு இருக்காரு .... நான் குற்றவாளி கொலையாளின்னு சுத்திகிட்டு இருக்கேன் .... பின்ன எப்படி அடுத்த குழந்தை பெத்துக்கிறது... ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்......ஷப்ப்ப்ப்ப்பா....

அது என் கதை...அது எதுக்கு உனக்கு ....

நான் நேரடியா விஷயத்துக்கு வரேன் .... பொண்டாட்டி எனக்கு தெரியாதா ....நல்ல அருமையான ஆம்பள மேல எதுக்காக மாதவி அப்படி ஒரு பொய் குற்றச்சாட்டு சொல்லி விவாகரத்து வாங்கிட்டு போவணும் ...
நீங்க யாராச்சும் அவளை அப்படி சொல்ல சொல்லி விவாகரத்துக்கு வாங்க வச்சீங்களா ..."

" இல்ல, நாங்க யாரும் ஒண்ணுமே பண்ணல .... அவளாத்தான் திடீர்னு விவாகரத்து வாங்கினு போனா..."

" அய்.... வீணா அடிவாங்கி சாகாத ....
நீங்க ரெண்டு பேரு , அந்தப் பரிமளம் கிழவி மூணு பேருமா சேர்ந்து தான் ஏதோ பண்ணி இருக்கீங்க ... மூர்த்தியாருக்கு வச்ச மாதிரி மாதவிக்கும் ஏதாச்சும் மருந்து, மாயம் வச்சீங்களா ... அதனாலதான் அவ
இல்லாததையும் பொல்லாததையும் பைத்தியம் மாதிரி உளறிக்கொட்டி விவாகரத்து வாங்கிட்டு போனாளா ..."

ஒரு கணம் அங்கு அமைதி நிலவ,

" நாங்க வசிய மருந்து வச்சதென்னமோ உண்மைதான் ....
ஆனா அவங்க ரெண்டு பேரும் பிரியனும்னு வைக்கல ....
அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்து குழந்தை பொறக்கனும்னு வெச்சோம் ...."

" என்னாது..... அவங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கணும்னு வசிய மருந்து வச்சிங்களா .... ஏய் .... யாருகிட்ட கத விடற.... உங்க எல்லாருக்கும் தான் வாசுதேவ் மாதவியை கட்டிக்கிட்டதே சுத்தமா பிடிக்காதே.... பின்ன எப்படி நீ சொல்றது நான் நம்ப முடியும் ..."

இம்முறை தனலட்சுமி தன் தலையை திருப்பிக் கொள்ள

" ஏய் சொல்லுடி ..." என ஓங்கி அறைந்தாள் மதுரா .

வலியில் துடித்துப் போனவர், தன் கன்னத்தைப் பற்றிக் கொண்டு , கோப ரேகையோடு மதுராவின் முகத்தை ஆழ்ந்து நோக்கி

" மாதவியால ஒரு உயிர் போச்சு தெரியுமா ...." என்றார் தனலட்சுமி ...
முதன்முறையாக பெருங்குரலெடுத்து.

" என்னாது... அவளால ஒரு உயிர் போச்சா .... வழக்கமா உங்க குடும்பத்து ஆளுங்க தானே எல்லாரையுமே கொன்னு பொதைப்பீங்க... திடீர்னு ஏன் இப்படி ஒரு பழிய அவ மேல போடற... சொல்லுடி ..." என்றாள் மதுரா அரற்றி.

மீண்டும் அங்கு அமைதி நிலவ,

" மாதவியால யாரோ செத்துப் போனாங்கன்னு சொன்னியே... யாரது... சொல்லு ...." என மீண்டும் ஊக்கினாள்.

" ஆதிகேசவ நம்பூதிரி ..."

" என்னாது..... புதுசு புதுசா புதிர் போடற ...
விளக்கமா சொல்லு ..."

" என் அண்ணன் மக சுஜாதாவை வாசுக்கு கட்டிக் வைக்கணும்னு தான் நாங்க எல்லாரும் ஆசைப்பட்டோம் ....
அவன் வேலைக்கு சேர்ந்து ட்ரைனிங் முடிச்சதும் கல்யாணம் வைக்கலாம்னு
இருக்க சொல்ல, திடீர்னு அவன்
மங்கள மண்டபத்துல மாதவிக்கு தாலிய கட்டி வீட்டுக்கே கூட்டியாந்துட்டான்....
அன்னைக்கு வீடே கலவர பூமி ஆயிடுச்சு .... உடனே நான் என் அண்ணனுக்கு போன் பண்ணி
வாசு மாதவியை கல்யாணம் கட்டி வீட்டுக்கு கூட்டி வந்துட்டான்னு சொன்னேன் ....

அப்ப என் அண்ணன் ,
ஆதி கேசவ நம்பூதிரி ஆசிரமத்துக்கு மரகதலிங்கத்தை எப்ப எடுக்குறது எப்படி எடுக்கறதுன்னு தெரிஞ்சுக்க ஜாமக்கோள் ஆருட பிரசன்னம், ஓரை பிரசன்னம் பார்க்க போய் இருந்திருக்காரு...

அப்பதான் நான் போன் போட்டு திடீர்னு வாசு மாதவியை கல்யாணம் கட்டிக்கிட்டு வந்திருக்கான்னு சொல்ல
ரொம்ப வருத்தப்பட்டாரு....
கொஞ்ச நேரத்துக்கெல்லாம் நம்பூதிரி கூப்பிடுறாருனு யாரோ வந்து சொல்ல,
அப்புறம் பேசுறேன் தனம்னு போனை வச்சுட்டாரு ....


அன்று ....


" வாங்க தனசேகர் ...." என்றார் ஆதிகேச நம்பூதிரி மிடுக்கான புன்னகையோடு.

" ஜான் ஏறினா முழம் சருக்குது சாமி .... ஒரு நல்ல விஷயமும் நடக்கவே மாட்டேங்குது ...."

" நீங்க இங்க வந்து இருக்குற ஓரையை வச்சே சொல்றேன் .... அருமையான செய்தி உங்க காதுல விழுந்திருக்கணுமே ...."

" என்ன அருமையான சேதி....
என் பொண்ண என் தங்கச்சி பையனுக்கு கட்டி வைக்கனும்னு ரொம்ப ஆசையில இருந்தேன்....
அவன் ....அவன் அத்த பொண்ணை
திடீர்னு கல்யாணம் கட்டிக்கிட்டு வீட்டுக்கே கூட்டிக்கிட்டு வந்துட்டானாம்.... என் தங்கச்சி போன் போட்டு இப்பதான் அழுவுது ...
நான் ஆசைப்பட்டது எதுவுமே நடக்க மாட்டேங்குதே ....
நான் ரொம்ப நாளா மரகதலிங்கம் நவபாஷாண லிங்கத்தை எடுக்கனும்னு ஆசைப்படறேன் .... முடிய மாட்டேங்குது ....
இப்ப என் பொண்ணு வாழ்க்கைல நான் போட்டு வச்சிருந்த திட்டமும் ஒன்னும் இல்லாம போயிடுச்சே சாமி ..."

ஒரு சில நொடிகள் கண்களை மூடி தியானித்தவர் பிறகு
ஒருவித தீட்சண்ய பார்வையோடு தனசேகரனை நோக்கி

" மரகதலிங்கம், நவபாஷாண லிங்க விஷயத்துல இவ்ளோ நாளா பிடிபடாம இருந்த பிரசன்னம்... இப்பதான் பிடிப்பட்டிருக்கு ...."

" புரியலையே ..."

" இப்ப கல்யாணம் முடிச்சு வந்தவங்க பேரை சொல்லுங்க ...."

" வாசுதேவ கிருஷ்ணன் , மாதவி ..."

மீண்டும் தியானித்துவிட்டு,
சோழியை உருட்டிப் போட்டவர்,
அருகில் இருந்த பஞ்சாங்கத்தை எடுத்து நீரால் தரையில் கோலம் போட்டு பார்த்துவிட்டு,

" 100% அடிச்சு சொல்றேன் ...
இந்த வாசுதேவ கிருஷ்ணன் அவனோட மனைவி மாதவி ரெண்டு பேரும் சேர்ந்து போனா மட்டும் தான் மரகதலிங்கம், நவ பாஷாண லிங்கத்தை ரகசிய அறையில் இருந்து வெளியே எடுத்துட்டு வர முடியும் ....

நீங்க அவங்க ரெண்டு பேர் கிட்டயும் மரகதலிங்கம் நவபாஷாண லிங்கத்தை பத்தி சொல்லுங்க ... ஒரு பௌர்ணமி தினத்தை குறித்துக் கொடுக்கிறேன் ... அன்னைக்கு அவங்க ரெண்டு பேரும் விரதம் இருந்து போனா சுலபமா கொண்டுகிட்டு வந்துடலாம் ..."

" இல்ல .... இல்ல ...வாசு இதுக்கெல்லாம் சம்மதிக்க மாட்டான் ... அவனை எனக்கு நல்லா தெரியும் ...
இந்த விஷயத்துக்காக நான் இவ்ளோ பாடுபடறேன்னு தெரிஞ்சாலே, மூர்த்தியார் காதுக்கு விஷயம் போயிடும் ... அப்புறமா அவ்ளோ தான் ..."

உடனே நம்பூதிரி கரியால் வெற்றுத் தரையில் ஏதேதோ கட்டங்கள் வரைந்து, அதில் நீர்க்கோளமிட்டு,
கருப்பு துணியில் முடியப்பட்ட எள் பொட்டலத்தை அந்தக் கட்டங்களில் மீது வைத்து பார்த்து யோசித்தவர்

" உண்மைய சொல்லுங்க ....
இந்த வாசுதேவ கிருஷ்ணன் உங்க தங்கச்சி பையனா .... உங்க தங்கச்சிக்கு பொறந்த மகனா ..." என்றார் அழுத்தமாக.

" இல்ல ..." என்றவர் அது சம்பந்தமான கதையை பகிர,

" அதான பார்த்தேன் .... இந்த பையனோடது
தேவ மூர்த்திகளுக்கு இணையான ஜாதகம் .... அந்தப் பொண்ணோட ஜாதக அமைப்பும்
தேவ வர்க்கத்தை சேர்ந்தது...
அதனால தான் ஆயிரம் வருஷத்து பழமையான இந்த மாயோன் கோவில்ல ரகசிய அறையில் இருக்கிற மரகத லிங்கம், நவபாஷாண லிங்கத்தையும் பாதுகாத்து வர வாசுகிங்கிற பஞ்சமுக நாகமும்
ஆதி பைரவர், உக்கிர பைரவர் என்ற நாய்களும் அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் அடிபணிஞ்சு லிங்கங்களை தொட அனுமதிக்கும் .... மற்ற யாரையும் தொட அனுமதிக்காது ....."
என்று நிறுத்தியவர்

" கணவன் மனைவி தம்பதி சமேதராய் போக முடியாத நிலையில, வேற ஒரு வழியும் இருக்கு .....
இவங்க ரெண்டு பேரும்
சாட்சாத் ராதே கிருஷ்ணாவின் அம்சம் ...
இவங்க ரெண்டு பேருக்கும் பொறக்க போற தலைச்சன் குழந்தையை தூக்கிட்டு போனாலே, பிரவேச மந்திரம் இல்லாம ரகசிய அறையில் பிரவேசிக்கலாம் .... அந்த குழந்தைக்கு
அங்க இருக்கிற நாகங்களும் பைரவர்களும் கட்டுப்படுவாங்க ...
அப்படி ஒரு ஜாதக அமைப்பு ..."

" நீங்க சொல்றது புரியிற மாதிரியும் இருக்கு.... புரியாதது மாதிரியும் இருக்கு... இப்ப நான் என்ன பண்ணனும் சாமி ...."

" நீங்க ஒன்னும் பண்ண வேணாம் ...
நமக்கு எது தேவையோ அது சிறப்பா நடந்து முடிஞ்சிடுச்சு....
நீங்க போயி நடந்த கல்யாணத்தை அப்படியே ஏத்துக்குங்க.... அவங்களுக்கு ஒரு குழந்தை பொறக்கட்டும் மத்த வழிமுறைய அப்ப சொல்றேன் ...."

நம்பூதிரியின் வார்த்தைகளை மனதில் வைத்துக் கொண்டு,
கிருஷ்ணா மாதவியின் திருமணத்தை ஏற்றுக்கொள்வது போல் நாடகம் ஆடினார் தனசேகரன்.

அதோடு நம்பூதிரி சொன்னதை,
தனலட்சுமி, மீனாட்சி பரிமளம் பாட்டிக்கு சொல்ல, அவர்களும்
கிருஷ்ணா மாதவியின் மேல் கோபம் தணிந்தது போல் மறுதினம் நடித்தனர்.

இப்படியே 6 மாத காலம் கடந்தது.

மாதவி கருவுறுவாள் ..... என எண்ணியவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்ச, ஒரு கட்டத்தில் ஷில்லங்கிலிருந்து வீடு திரும்பிய மாதவியின் காது படவே ,
அவள் கருவுறாததை குற்றமாக பேசி
கடிந்தனர் வீட்டுப் பெண்கள்.

அப்போது மீண்டும் நம்பூதிரியை
சந்திக்க சென்ற தனசேகர்,

" நீங்க சொன்னது எதுவுமே நடக்கல...
மாதவி மாசமாவாள்....
வாசுக்கும் அவளுக்கும் பொறக்குற குழந்தையை கொண்டுகிட்டு போனா
ரகசிய அறையில் பிரவேசிக்கலாம்னு சொன்னிங்க .... கல்யாணம் முடிச்சு ஆறு மாசம் ஆச்சு ....தல தீபாவளியும் வந்திருச்சு ... இன்னும் அவ உண்டாவல..."

ஆதிகேசவ நம்பூரியின் முகத்தில் சிந்தனைய ரேகைகள் தீவிரமாய் விரிந்தோட,

உடனே பல தேவ வஸ்துக்களை எடுத்து வைத்து, அஷ்டமங்கலம் பிரசன்னம், தேவப்பிரசன்னம் பார்க்க ஆரம்பித்தார்.

அரை மணி நேரம் ஏதேதோ செய்து பார்த்தவர், குறி சொல்வது போல் கண்களை மூடிக்கொண்டு

" நான் ஒரு மூன்று தினங்களை குறித்து கொடுக்கிறேன் ....
அதாவது வர தீபாவளிக்கு முந்தய தினம் கரிநாள் ... அடுத்த நாள் தீபாவளி ...அதற்கு அடுத்த நாள் அமாவாசை சூரிய கிரகணம் ...

சந்திரன் மாத்ரு காரகன் .... தாயைக் குறிப்பவன் ...

சூரியன் பித்ரு காரகன் .... தந்தையை குறிப்பவன் ...

நான் மேல சொன்ன, மூணு தினங்களில் அவர்களது உடற் சேர்க்கை நடைபெறுமேயானால் நிச்சயம் அந்தப் பெண் கருத்தரிப்பாள் ....

இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால்,
முதல் இரண்டு தினங்களை காட்டிலும்
கடைசி தினமான அமாவாசையோடு கூடிய சூரிய கிரகணத்தன்று
சேர்க்கை நடந்து அந்தப் பெண் கருவுற்றால், நாம் நினைத்தது அனைத்தும் நடந்தேறும் ....

ஏனென்றால் அன்றைய இரவில் தந்தைக்கு காரகனான சூரியன்
மிகுந்த பாவத்துவம் அடைந்து,
தன் சக்தி முழுவதையும் இருள் கிரகங்களான ராகு கேதுக்களிடம்
இழந்து சூனியம் ஆகின்றான் ...

அப்படிப்பட்ட இரவில்
உருவாகும் சிசு, இந்த பூமியை அடைவதற்குள், அதன் பிறப்பிற்கு கர்த்தாவானவன் இந்த உலகை விட்டே செல்லும் நிலை ஏற்படும் ...

பிறகு என்ன .... யாதொரு தடையும் இல்லாமல், அந்தக் குழந்தையை பிறர் அறியாமல் கவர்ந்து வந்து ரகசிய அறையில்
நுழைந்து மரகத லிங்கத்தையும் நவ பாசன லிங்கத்தையும் சுலபமாக கைப்பற்றி விடலாம் ..." என்றவர்
கிருஷ்ணா மாதவிக்கு சூரிய தினத்தன்று கொடுக்கச் சொல்லி வசிய மருந்தையும் கொடுத்து அனுப்பினார்.

அதற்குப் பின் தான் கிருஷ்ணா மாதவியை விருந்துக்கு அழைப்பது போல் அழைத்து, அவர்களது உணவில் இந்த வசிய மருந்தை கலந்து கொடுத்தனர்.

மாதவி உணவில் இருந்த வசிய மருந்தை மட்டும் உண்டு விட்டு உறங்கச் சென்று விட,
கிருஷ்ணாவிற்கு
பாலிலும் கலந்து கொடுத்தார்
தனலட்சுமி.


" நினைச்சது நடக்க போகுதுன்னு நாங்க எல்லாம் சந்தோசமா இருந்த நேரத்துல தான், மத்தா நாள் காலையில
தூங்கி எழுந்து வந்த வாசு,

என் பொண்டாட்டி உடம்புல குறை இல்ல ....என் உடம்புல தான் குறை இருக்கு.... அதனால எப்ப குழந்தை பொறக்குதோ பொறந்துட்டு போவட்டும், எனக்கு குழந்தையை பத்தி அக்கறை இல்லன்னு சொல்லிட்டு போய்ட்டான் ...
எங்களுக்கு எல்லாம் ரொம்ப அதிர்ச்சியா போயிடுச்சு ...
உடனே என் அண்ணன் தனசேகரன்
ஆதிகேசவர் நம்பூதிரியை பார்க்க
அவரோட ஆசிரமத்துக்கு போனாரு...

அங்க அவரு தன் சிஷ்ய கோடிகளோடயும், தன்னைப் போல பெரிய மாந்திரீகர்களோடயும் பேசிகிட்டு இருந்திருக்காரு ...

உடனே அவரை பார்த்து , அவ்ளோ பேர் இருக்க சொல்ல
நீங்க சொன்னது எதுவுமே நடக்கல...
உங்களுக்கு மாந்திரீகமும் தெரியல மந்திரமும் தெரியல ....
நீங்க ஒரு பொய் பிம்பம்னு சொல்லிக் கோவப்பட்டு என் அண்ணன் நடந்ததை சொல்ல, அவரு ரொம்ப உக்ரம் ஆயிட்டாராம்..

" இப்பவும் சொல்றேன் ....
அந்த வாசுதேவ கிருஷ்ணன் அவனுடைய மனைவி மாதவியாலயும், இல்லேன்னா அவங்க ரெண்டு பேருக்கும் பிறக்க போற குழந்தையால மட்டுந்தான் அந்த ரகசிய அறையில பிரவேசிச்சி
மரகதலிங்கம் நவபாஷன லிங்கத்தை கொண்டுகிட்டு வர முடியும் ....

அதோட அவன் ஆண்மைக்கும் அழகுக்கும் இணையான இந்திரன் ....
தனக்கு குழந்தை பிறக்காதுன்னு அவனே ஏன் சொன்னான்னு தான் எனக்கு புரியல ...
இதுல நிச்சயம் ஏதோ ஒரு சூது இருக்கு .... கொஞ்சம் பொறுத்து இருந்து பார்ப்போம் ..."

" எவ்வளவு காலம் பொறுத்திருக்க சொல்றீங்க ...உங்களுக்கு லட்சக்கணக்குல நான் பணத்தை அழுது இருக்கேன் ....
இன்னும் பணம் வேணும்னா கேட்டு வாங்கிக்குங்க ... இப்படி பொய் சொல்லி எங்களை மாதிரியான ஆட்களை ஏமாத்தாதீங்க..."

நம்பூதிரியின் கண்கள் குருதிப்புனலாய் சிவக்க, அவரது உடம்பில் அளவுக்கு அதிகமான விரைப்புத்தன்மை ஏற்பட,

" இதுவரைக்கும் நான் சொன்னது பொய்த்துப் போனதா சரித்திரமே இல்லை ....
இப்பவும் சொல்றேன்.... வாசுதேவ கிருஷ்ணன் மாதவி இரண்டு பேரும் சேர்ந்து தம்பதி சமேதரா போனா பிரவேச மந்திரம் கிடைச்சி ரகசிய அறை தானா திறக்கும், இல்ல அவனுக்கு பொறக்க போற குழந்தையாலயும் மட்டும் தான்
ரகசிய அறையில பிரவேசிக்க முடியும் ...

நான் சொன்னதை உண்மைன்னு நிரூபிச்சி காட்ட வர பௌர்ணமி இல்ல அடுத்த பௌர்ணமி வரைக்கும் எனக்கு அவகாசம் கொடு ...
அப்படி நான் சொன்னது பொய்த்துப் போச்சின்னா, அன்னைக்கு ராத்திரியே
பொய் பிரசன்னம் சொன்ன இந்த நாக்கோட கழுத்தையும் சேர்த்து அறுத்துக்கிட்டு செத்துப் போயிடறேன்னு.... பகிரங்கமா நம்பூதிரி சவால் விட்டாரு...

உடனே என் அண்ணன் அங்க இருக்கிற பெரிய பெரிய மாந்திரீக வித்துவான்களை பார்த்து ,
உங்க முன்னாடி தான் இவர் சவால் விட்டிருக்காரு பாக்கலாம்னு சொல்லிட்டு வந்துட்டாரு ...

வந்து ஒரு மாசம் ஆகுறதுக்கு முந்தியே மாதவி
வாசுக்கு ஆண்மை இல்லைன்னு சொல்லி, விவாகரத்து வேணும்னு கோர்ட்டுக்கு போயிட்டா...

ஏற்கனவே வாசுவும் தன் உடம்புல தான் குறை இருக்குனு சொன்னான் ..
இப்ப மாதவியும் அதையே சொல்லி விவாகரத்துக்கு போக, என் அண்ணன்
அத போய் சொல்லி ஆதி கேசவ நம்பூதிரியை ரொம்ப அசிங்க படுத்திட்டாரு....
உடனே ஆதிகேசவ நம்பூதிரி அவர் சொன்ன மாதிரி
அந்த பௌர்ணமி நடுராத்திரியில கழுத்து அறுத்துக்கிட்டு இறந்து போயிட்டாரு ...." என முடித்த தனலட்சுமி ஓரிரு கணம் அமைதியை கடைப்பிடித்து விட்டு,

" இப்ப இல்ல தெரியுது .... இந்த மாதவி சொன்னது பொய்யின்னு ....
அவ சொன்ன பொய்யால அநியாயமா
நம்பூதிரி தற்கொலை பண்ணிக்கிட்டு செத்துப் போயிட்டாரு....
மாதவி சொன்ன பொய் ஒரு பக்கம் இருக்கட்டும் வாசு எதுக்காக தன்னைப் பத்தியே அப்படி ஒரு பொய்ய சொன்னான்னு இப்ப வரைக்கும் எங்களுக்கு புரியல ...

இப்ப ஒரு மாசத்துக்கு முந்தி அவன் தன் குழந்தையோட ஊருக்குள்ள வந்திருக்கான்னு விஷயம் வந்ததுமே
எங்க ஆளுங்களுக்கெல்லாம் ஒரு மாதிரி ஆயிடுச்சு ...
உடனே அவனை தீவிரமா நோட்டம் விட ஆரம்பிச்சோம் ...."


" எதுக்காக வாசுதேவ நீங்க வேவு பாத்தீங்க ..." என்றாள் மதுரா தன் பார்வையை கூர்மையாக்கி .



- மாயோனின் மாயங்கள் தொடரும்
 
Back
Top