- Joined
- Jul 21, 2025
- Messages
- 681
- Thread Author
- #1
We-Time ( நமக்கே நமக்கான நேரம்)
அது ஒரு மயக்கும் மாலை.
கோவாவில், ஒரு ஐந்து நட்சத்திர விடுதியின் பிரம்மாண்ட அரங்கத்தில்,
இந்தியாவின் முதன்மை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் ஒன்றான
Sys-Smart, வெகு திறமையாக பணிபுரிந்த தனது ஊழியர்களுக்கு விருது வழங்கும் விழாவை வெகு விமர்சையாக நடத்திக் கொண்டிருந்தது.
அங்கு
Creativity and Diligence award goes to Mr. Raghavan, என அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருந்த தொகுப்பாளினி ஆரவாரமாய் அழைத்ததும், புன் சிரிப்பும் , சுறுசுறுப்புமாய், அரங்கத்தில் அமர்ந்திருந்த தன் குடும்பத்தினர் மற்றும் குழு உறுப்பினர்களை பார்த்து கையசைத்தபடி மேடை ஏறினான் நாற்பத்தைதே வயதான இளைஞன் ராகவன்.
அவன் மேடையில் போய் நின்று மைக்கை கையில் பிடித்தும், ஆரவாரம் அடங்க, சற்று நேரம் ஆனது.
அப்படி அந்நிறுவனத்தின் பெரும்பான்மை குழுக்களின் நன்மதிப்பை பெற்றிருந்தவனுக்கு, அந்த நிறுவனத்தின் சிஇஓ மைக்கேல் ஜான்சன், பெருமையாக அந்த விருதை வழங்க முற்படும் போது,
" May i invite my team on the stage ..." என புன்னகைத்தபடி அவன் வினவ,

" yah sure..." என இன்முகத்தோடு மைக்கேல் பதிலளித்ததும், தன்னுடன் பணியாற்றிய 10 நபர்கள் கொண்ட குழுவை மேடைக்கு வருமாறு ராகவன் கையசைக்க , இந்தியர்கள் ஆறு பேரும், வெளிநாட்டினர் நான்கு பேரும் கொண்ட அந்த குழு மறு கணமே, மேடையை ஆக்கிரமிக்க, விளக்குகளின் வெள்ளொளியும் , கேமராக்களின் நுண்ணோளியும் கொடுத்த ஒளி வெள்ளத்தில், தன் குழுவினர்கள் புடை சூழ பெருமையோடு விருதைப் பெற்றவனிடம்
" The stage is yours Raghav ... " என புன் சிரிப்போடு ஜான்சன் சொன்னதும், குறு நகையோடு உரையாற்றத் தொடங்கியவன்
முதலில் தன் குழுவிற்கு நன்றி தெரிவித்துவிட்டு பிறகு தன் மனைவி மைதிலியை மேடைக்கு அழைத்து , அருகில் நிறுத்தி, தன் கையில் இருந்த விருதை கொடுத்து
" Thanks மைத்தி ..." என்றான் சற்று உணர்ச்சி மிகுந்த குரலில்.
கணவன் , தான் பெற்ற விருதினை, சபை அறிய தனக்கு அர்ப்பணித்ததை எண்ணி,
அவளது மனம் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தாலும் , சமீப காலமாக அவர்களுக்கு இடையே கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு ஒரு நானோ மீட்டர் இடைவெளி ஏற்பட்டிருப்பதை எண்ணி, உள்ளுக்குள் கலங்கி தான் போயிருந்தாள்.
திருமணத்திற்காக காத்திருக்கும் பெரும்பாலான பெண்களின் கனவு கணவனின் தேர்வில் நிச்சயம் ராகவன் பொருந்தி வருவான் .
அப்படி பத்து பொருத்தமும் பக்காவாக இருக்கும் ஒரு ஜென்டில்மேன் அவன்.
பளிச்சென்ற தோற்றத்துடன், படிப்பு, பதவி , ஒழுக்கம் , அன்பு , நேர்மை , பொறுமை , தோழமை , சுறுசுறுப்பு போன்ற குண நலன்களுக்கு சொந்தக்காரன் .
அதோடு மனைவியாகிய அவள் மீது மாறா காதலும் பற்றும் கொண்டவன்.
இப்படிப்பட்டவனின் நடத்தையில் தான் கடந்த 6 மாதங்களாக, லேசர் ஓளி கதிர் அளவிற்கான விலகலை காண்கிறாள்..
உட்கார்ந்து பேசினால், அதற்கு நிச்சயம் தீர்வு காணலாம் ஆனால் இக்கணம் வரை அதற்கான சமய சந்தர்ப்பமே அமையவில்லை ... அவனே ஏற்படுத்திக் கொள்ள விழையவில்லையா அல்லது இயற்கையாகவே அமையாமலே போய்க் கொண்டிருக்கிறதா என்று கூட அவளுக்கு விளங்கவில்லை.
மைதிலி கல்லூரியில் பகுதி நேர பேராசிரியை ஆக பணிபுரிந்து வருகிறாள்.
அவளுக்கும் ராகவனுக்கும் திருமணம் முடிந்து 16 ஆண்டுகளாக போகிறது.
பெற்றோர்களால் பார்த்து நிச்சயிக்கப்பட்ட திருமணம்.
ஆனால் காதல் திருமணத்தை தூக்கி சாப்பிடும் அளவிற்கு, அவர்களது வாழ்க்கையில் நேசமும் புரிதலும் கரை புரண்டோடும்..
அவர்களது காதலுக்கு அடையாளமாக 15 வயதில் ஒரு புத்திசாலி மகனும் 10 வயதில் ஒரு சுட்டியான மகளும் இருக்கிறார்கள்.
இப்படி இளையராஜாவின் இசையும், மலைப்பிரதேச பேருந்தின் ஜன்னலோர இருக்கையுமாய் வாழ்க்கை
அழகாகவும், அன்னியோன்யமாகவும் கழிந்து கொண்டிருந்த நிலையில் , அலுவலகப் பணிக்காக கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு அவன் ரஷ்யாவிற்கு பணியாற்ற சென்றதற்குப் பிறகு தான் அவனிடத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டதாக முதலில் தோன்றியது.
ஆனால் தீவிர யோசனைக்குப் பின் தான் பயணத்திற்கு முன்பாகவே அவன் செய்கையில் மாற்றங்கள் இருந்திருக்கிறது .... தான் தான் கவனிக்க தவறி இருக்கிறோம் என்பதை மெல்ல புரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.
வழக்கமாக
விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன்பு , ஒரு சிறு அணைப்போடு விடை பெற்று விடுவான் ... ஆனால் அம்முறை பயணத்திற்கு முன்பாக
வழக்கத்திற்கு மாறாக அவளது இடைப்பற்றி இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டதோடு அவளது விழிகளை ஆழ்ந்து நோக்கி, உச்சி முகர்ந்து விட்டே விடைபெற்றான் ....
அப்போது அது இயல்பாகத்தான் தெரிந்தது .... அதற்குப் பின்பு ஆழ்ந்து யோசிக்கையில் தான் ஏதோ சரி இல்லை என்று அவளுக்கு லேசாக தோன்ற ஆரம்பித்தது.
இதுவரையில் எத்தனையோ நாடுகளுக்கு அலுவலக பணி நிமித்தமாக சென்று சில மாதங்கள் தங்கி இருந்து பணியாற்றி விட்டு வந்திருக்கிறான்.
அப்படி அங்கு இருக்கும் சமயங்களில் தினமும், அவனே அவளை அலைபேசியில் தொடர்பு கொண்டு, ஒரு மணி நேரமாவது மனம் விட்டு பேசி மகிழ்ந்திடுவான் ..
ஆனால் இந்த முறை ரஷ்யாவிற்கு சென்றிருந்த போது , அவளை அலைபேசியில் தொடர்பு கொள்ள அவன் விழையவே இல்லை.
இவளாகவே அழைத்துப் பேசினாலும், ஒரு சில வரிகள் மட்டுமே பேசினான் ... அதிலும் குழந்தைகள் மற்றும் அவளது நலனை சம்பிரதாயமாக கேட்டு அறிந்து கொண்டானே ஒழிய, மற்றபடி வழக்கம் போல் அவனது பேச்சில் தென்படும் இணக்கம் துளி கூட இல்லை.
அதுவும் இரண்டு மூன்று நிமிடங்கள் மட்டுமே உரையாடினான். பிறகு ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, அழைப்பை துண்டிப்பதிலேயே கண்ணாக இருந்தது போல் தோன்றியது.
வெறும் மூன்று மாதப் பணி என்று சொல்லிவிட்டு சென்றவன், அங்கு சென்றதும், ஆறு மாத பணியாக நீட்டிக்கப்பட்டிருப்பதாக சொன்னதோடு
முன்பெல்லாம், எந்நாட்டிற்கு சென்றாலும் , அங்கு தனக்கென்று ஒதுக்கப்பட்ட அறையை வீடியோ காலில் சுற்றி காட்டுவான். ஆனால் இப்பொழுதோ அவன் தங்கி இருந்த இடத்தை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் தவிர்த்தான்.
இப்படியாகவே கிட்டத்தட்ட ஆறு மாத காலம் கழிய , திடீரென்று இரண்டு
நாட்களுக்கு முன்பு தான் ஊர் திரும்பியிருந்தான்.
வந்தவன் முன்பு போல், அவளை மிகுந்த மகிழ்ச்சியோடு அணைத்து கொண்டு நலம் விசாரித்தான் ...
குழந்தைகளோடு நேரம் செலவழித்தான், கடை குட்டியை கொஞ்சி மகிழ்ந்தான்.
ஆனால் அவளுக்கோ குழந்தைகளுக்கோ எதுவுமே வாங்கிக் கொண்டு வரவில்லை ....
முன்பெல்லாம், நாடு திரும்பினால், குழந்தைகளுக்காக சாக்லேட்ஸ், அவளுக்காக பெர்ஃப்யூம், ஹேண்ட் பேக், லிப்ஸ்டிக்ஸ் என ஏதாவது ஒன்றை தானாகவே விரும்பி வாங்கிக் கொண்டு வந்த பரிசளிப்பான் ...
அவள் வீண் செலவு என்று சொன்னால்,
"எனக்காக இங்க மூணு பேர் காத்துக்கிட்டு இருக்கீங்கனு நினைக்கும் போதே, எதையாவது உங்களுக்கு வாங்கிட்டு வரணும்னு தோணுது டி .... " என்பான் மகிழ்ச்சியாக.
அதை எல்லாம் மனதில் நிறுத்திப் பார்த்தவளுக்கு, கணவனிடம் ஏதோ சரியில்லை என்று மட்டும் தெளிவாகத் தோன்ற தொடங்கியது.
அது குறித்து மதிய உணவிற்கு பிறகு அவனுடன் ஆற அமர அமர்ந்து உரையாட வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் போதே,
அவனது உடன் பிறந்த தமக்கை மற்றும் தமையனின் குடும்பங்கள் அவர்களது இல்லத்திற்கு வர, வீடு நிறைய உறவினர்கள் சூழ்ந்ததால்
கணவனோடு இணக்கமாக உரையாட நேரம் அமையாமலே போக, அவளது மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்விகளை சுமந்தபடியே கோவா வந்து சேர்ந்தாள்.
சாதாரண கருத்து வேறுபாடாக இருந்தாலும் பெரும்பாலும் குழந்தைகளுக்கு முன்னால் பகிர்ந்து கொள்வதில்லை என்ற வரையறையை கணவன் மனைவி இருவருமே இது நாள் வரை பின்பற்றி வருவதால் அன்றைய விமான பயணத்தின் போதும், அதற்கான தருணம் அவளுக்கு அமையாமலேயே போயிருந்தது.
இப்படி ஜெட் வேகத்தில் அவள் அனைத்தையும் அசை போட்டுப் பார்த்துக் கொண்டிருக்கும் போது,
கைத்தட்டல்கள் விண்ணை பிளந்து அவளை நிகழ்வு உலகிற்கு கொண்டு வர, மெல்லிய புன்னகையோடு , தன்னவனிடமிருந்து அவள் விருதை வாங்கிக் கொள்ள, அரங்கத்தில் பார்வையாளராக அமர்ந்திருந்த அவர்களது குழந்தைகளும் அதனைக் கண்டு மனம் மகிழ, அந்த பொன்னான தருணங்கள் அனைத்தும், வெகு அழகாக படமாக்கப்பட்டதும் விழா இனிதே முடிய, பஃபே முறையில் , அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு உணவு விருந்து விமர்சையாய் தொடங்கியது.
கணவன் மற்றும் குழந்தைகளோடு அவள் விருந்தில் கலந்து கொண்டதும்
" மைதிலி மேம், ராகவ் நிச்சயமா இந்த அவார்ட உங்களுக்கு டெடிகேட் பண்ணுவாருனு எனக்கு எப்பவோ தெரியும்...."
என ராகவனின் குழு உறுப்பினர்களின் ஒருவனான விக்னேஷ் பெருமிதத்தோடு சொல்ல,
" எப்படி ...." என்றாள் மைதிலி ஆச்சரியமாய் .
" நான் ஒரு முறை ராகவை பாத்து ,
How's lifeனு கேட்டேன் ... She is fineனு சொன்னாரு ... மொதல்ல எனக்கு புரியல ... அப்புறம் தான் அவரு உங்கள பத்தி சொல்றாருன்னு புரிஞ்சது... என் Wife நல்லா இருந்தான்னா, என் life எப்பவுமே நல்லா இருக்கும்னு விளக்கம் கொடுத்தாரு... ஏனோ அப்பவே எனக்கு ராகவ, பாஸ், மென்டாருங்கிற ரிலேஷன்ஷிப்ப தாண்டி, ரொம்ப பிடிச்சு போச்சு ..."
என வட்ட மேஜையில் உணவு உண்டு கொண்டிருந்த மற்ற குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு முன்பு, அவன் மகிழ்ச்சியோடு பகிர, பார்வையாளர்கள் ஆரவாரிக்க, ஏற்கனவே குமைந்து கொண்டிருந்த உள்ளம் கனக்க, கண்கள் லேசாக பனிக்க, அதனை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாமல் மென் புன்னகை பூத்தபடி தலை குனிந்து கொண்டாள் மைதிலி.
ஏனோ
இதயத்தில் ஏராளமான இரும்பு குண்டுகளை ஒருசேர எடையேற்றியது போல், அவளது நெஞ்சம் திணற, அதற்கு மேல் அங்கிருந்தால் , எங்கு விழி நீர் இமையை தாண்டி இதயத்தை காட்டி கொடுத்து விடுமோ என்று அஞ்சி ,
" excuse me, I will be back..."
அனைவரையும் ஒருசேர பார்த்து சொல்லிவிட்டு , கையில் இருந்த தட்டோடு மகளை அழைத்துக் கொண்டு, அவள் ஐஸ்கிரீம் கவுண்ட்டரை நோக்கி செல்ல, மனையாளின் முகம் மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டே நண்பர்களோடு பேசி சிரித்தபடி உண்டு கொண்டிருந்தான் ராகவன்.
விக்னேஷ் சொன்னதில் ஒரு சதவிகிதம் கூட பொய் கிடையாது.
அவளது மௌனத்தைக் கூட ராகவனால் மட்டுமே 100% சரியாக மொழிபெயர்க்க முடியும் ....
குழல் இனிது யாழ் இனிது என்பதம்
மழலை சொல் கேளாதவர் என்று திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை, ராகவனை எழுதச் சொன்னால்
தன் மனைவி சொல் கேளாதவர் என்று தான் எழுதுவான் ...
அப்படி அவள் மீது நேசம், பாசம் , காதல் , அன்பு என உலகில் உள்ள நல்லவைகள் அனைத்தையும் ஒரு சேர வைத்திருந்தவன் அவன் ...
அப்படிப்பட்டவன் கடந்த ஆறு மாதங்களாக,
அவளை முற்றிலும் தவிர்க்க, கலங்கி தான் போனாள் காரிகை .
இத்துணை ஆண்டு கால திருமண வாழ்க்கையில் ஒரு முறை கூட, அவன் இப்படி நடந்து கொண்டதே இல்லை என்பதால், காரணம் புரியாமல் துடித்துப் போனாள்.
அவனது பணிச்சுமையை நன்கு அறிவாள்.
விடுமுறையாக இருந்தாலும் சில அதி முக்கிய நாட்களில், உறங்கும் நேரத்தை தவிர்த்து, மற்ற நேரங்களில் மடிக்கணினி மற்றும் ப்ளூடூத் ஸ்பீக்கர் உடன் தன் அலுவலகக் குழுவோடு இணைப்பில் இருந்துக்கொண்டே , அவள் கேளாமலேயே சமையல் வேலை, தோட்ட வேலைகளில் அவளுக்கு உதவியபடியே வீட்டில் வலம் வருவான்.
குடும்பத் தலைவியாகவும், பேராசிரியையாகவும் பணியாற்றிக்கொண்டு, குழந்தைகளுக்கு கடினப்பட்டு நேரத்தை ஒதுக்குகிறாள் என புரிந்து கொண்டு, தன் அலுவலகப் பணிகளோடு மகனின் கல்வி சார்ந்த கூடுதல் பயிற்சி வகுப்புகள், மற்றும் மகளின் கால்பந்து பயிற்சிக்கு , தன்னால் இயன்ற வரை பாதி நாட்களுக்கு மேல் பணியை பகிர்ந்து கொண்டிருக்கிறான்.
அதேபோல் எவ்வளவு அழுத்தமான பணிச்சுமை கொண்ட நாட்களாக இருந்தாலும், ஒரு வேளையாவது அவளுடன் பேசி சிரித்தபடி தேநீர் அருந்துவதை, வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.
இப்படி எல்லாம் இருந்தவனுக்கு திடீரென்று என்னவாயிற்று .... ஏன் இப்படி அந்நியனை போல் நடந்து கொள்கிறான் ... என்று யோசித்தவளுக்கு , வேறு பெண்ணுடன் தொடர்பு இருக்குமோ ... என்ற சந்தேகம் மட்டும் துளிகூட எழவே இல்லை ...
விழிகள் அலைபாய்ந்தால் மனம் அலைபாயும் என்பார்கள் ...
இத்துணை ஆண்டு கால திருமண பந்தத்தில் அவனது பார்வை அலைந்து அவள் பார்த்ததே இல்லை.
அவனது கண்ணும் காதலும், அவளைச் சுற்றியே இருந்து தான் பார்த்திருக்கிறாள்...
ஆதலால் தான் யாதொரு முடிவுக்கும் வர முடியாமல், உள்ளுக்குள்ளேயே தளும்பிப் போனாள்.
உலகிலேயே பெரும் பலம் வாய்ந்தது நினைவுகள் மட்டும் தான் ...
அதனை யாராலும் அழிக்கவும் முடியாது, ஆக்கவும் முடியாது ... வேண்டுமானால் அவ்வப்போது புரட்டிப் பார்த்துக் கொள்ளலாம் ...
மற்றபடி எத்துணை கோடிகளை கொடுத்தாலும் அந்த காலகட்டத்தையும் , அப்பொழுது சுகித்த உணர்வுகளையும் மீண்டும் பெறவே முடியாது ....
என்பதற்ககேற்ப , சமைத்துக் கொண்டிருந்தவளின் கூந்தலை குறும்பாக பிடித்து இழுத்து அவன் வம்பு செய்தது... மழலையாய் அவளை மடியில் அமர்த்தி கொஞ்சி மகிழ்ந்தது... வீம்புக்கு என்றே அவளுடன் சின்னஞ்சிறு சந்தர்ப்பங்களில் சண்டையிட்டு கேலி பேசி மகிழ்ந்தது ...
போன்ற பொக்கிஷ காட்சிகள் மனதில் விரிந்து மயிலிறகாய் வருட , மனம் கலங்கி போனவள், தன் கணவனின் குழு இருக்கும் பக்கம் கூட திரும்பாமல், மகன் மகளை அழைத்துக் கொண்டு வேறொரு உணவு மேஜைக்கு சென்றமர்ந்து 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளில்
வெறும் இரண்டே சப்பாத்தியை எடுத்துக்கொண்டு வந்து கொறித்துவிட்டு , குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் மற்றும் பேன் கேக்குகளை எடுத்துக் கொடுத்து உண்ண செய்துவிட்டு , அறைக்கு செல்வதாக நண்பர் ஒருவர் மூலம் அவனுக்கு தகவல் அனுப்பி விட்டு, குழந்தைகளோடு அவர்களுக்கென்று அந்த நட்சத்திர விடுதியில் ஒதுக்கப்பட்டிருந்த அதிநவீன இரு படுக்கை அறை வசதி கொண்ட டீலக்ஸ் காட்டேஜூக்கு விறு விறுவென வந்து சேர்ந்தாள்.
தொடரும் ....