Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

My books published in Amazon Kindle

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
640
வணக்கம் நட்புகளே,


நான் எழுதிய கதைகளைப் பற்றிய சிறு குறிப்பு மற்றும் அமேசான் கதை திரியை இங்கு பகிர்ந்து இருக்கிறேன் ... கதையை தேடும் வாசக கண்மணிகள் பயன்படுத்திக் கொள்ளவும் .


1. ராதையின் கண்ணன்
( STORY ABOUT INDIAN FIGHTER PILOT)

கதை சுருக்கம் :


இந்திய போர் விமானியை பற்றிய கதை ....


முந்தைய காதல் மற்றும் காதலியின் மரணித்தால் திருமணத்தை வெறுக்கும் நாயகன் ...


நாயகியோ நாயகனை விட பத்து வயது சிறியவள் . புகைப்படத்தில் கூட அவனை பார்க்காமல் அவனை பற்றிய செய்திகளை கேட்டே அவன் மீது காதல் கொள்கிறாள் .


இக்கட்டான சந்தர்ப்ப சூழ்நிலையில் தாயின் வற்புறுத்தலால் பிடித்தமே இல்லாமல் நாயகியின் முகத்தை கூட பார்க்காமல் திருமணம் செய்கிறான் நாயகன்.


திருமணத்திற்கு பின்பு நாயகன் காதலை உணர்ந்த தருணத்தில் இந்திய எல்லையிலிருந்து போருக்கான அறிவிப்பு வருகிறது ... தான் கொண்ட காதலை தெரிவிக்காமலேயே போர் முனைக்கு செல்கிறான் ...


இருவரும் ஒருவரையொருவர் மனமார நேசித்தும் வெளியே கூறிக்கொள்ள முடியாத நிலையில், நாயகி அவன் மகவை சுமக்கிறாள்...


போர் முனையில் வெற்றி பெற்று நாயகன் வீடு திரும்புகிறானா...
நாயகியிடம் தான் கொண்ட காதலை
தெரிவிக்கின்றனா.... என்பது தான் கதை ..( Based on real incidents)


Link:
https://www.amazon.in/dp/B0B6S241M4/ref=cm_sw_r_apan_GH7YXP38QNY0WFAJK3KNl


2. அக்னி-ஸ்ரீ ( STORY ABOUT RAW AGENT AND AN INTELLIGENCE BUREAU (IB) OFFICER))


இந்திய உளவாளியை பற்றிய கதை.


இந்திய உளவுத்துறையின் உட்பிரிவு Intelligence Bureau மற்றும் இந்திய உளவுத்துறையின் வெளி பிரிவு RAW Agent பற்றிய கதை.


அக்னி - crime laboratory analyst ஆக Forensic departmentல் பணி புரிபவள்.


ஸ்ரீ - கல்லூரியில் படிக்கும் பெண்.


மகாராஷ்டிரா புலனாய்வு துறை அதிகாரியான அர்ஜூன், கணவனை இழந்து ஒரு ஆண் குழந்தையோடு வசிக்கும் அக்னியை மறுமணம் செய்து கொள்கிறான்.


அப்பொழுதுதான் மும்பையில் பெரும் தீவிரவாத சதிவேலை ஒன்று நடக்க இருப்பதாக உளவுத்துறையில் இருந்து தகவல் கிடைக்கிறது.


Intelligence Bureauவில் பணிபுரியும் விஷ்ணு, அர்ஜுனுடன் இணைந்து செயல்பட்டு எவ்வாறு அந்த தீவிரவாத சதி வேலையை முறி அடிக்கின்றனர் என்பதே கதை.


விஷ்ணுவை மணந்து கொண்ட ஸ்ரீயை கல்லூரியில் படிக்கும் பொழுது தீவிரவாத குழு தங்களது சதித் திட்டத்திற்காக பயன்படுத்த பார்க்கிறது.


அவள் எதற்காக குறி வைக்கப்படுகிறாள்.... அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் யார் ....


அக்னியின் முதல் கணவன் யார் .... எப்படி இறந்தான் .... அவனுக்கும் நடக்கவிருக்கும் மும்பை தீவிரவாத சதிக்கும் என்ன தொடர்பு ....
என்பதே மீதிக்கதை.


பல எதிர்பாராத முடிச்சுகளுடன் கூடிய சுவாரசியம் நிறைந்த கதை.
(Based on real incidents).


link:


அக்னி-ஸ்ரீ : Agni-Sri(Tamil Edition) (அக்னி-ஸ்ரீ(பாகம்-1)) https://www.amazon.in/dp/B0B4XWP84Q/ref=cm_sw_r_apan_G8PQT1R7VWJX9D0WYD35


அக்னி-ஸ்ரீ(பாகம்-2): Agni-Sree(Tamil Edition) https://www.amazon.in/dp/B0B4ZY4R9C/ref=cm_sw_r_apan_9GAH7Z0TVPZDXE579TGG


அக்னி-ஸ்ரீ(பாகம்-3): Agni-Sri(part-3) Tamil Edition (அக்னி-ஸ்ரீ(பாகம்-1)) https://www.amazon.in/dp/B0B511WYYL/ref=cm_sw_r_apan_5V5BHDR0TM0SQW40F4HY


3. அவள் ஒரு மேனகை
( STORY ABOUT LIFE JOURNEY OF AN IAS OFFICER)


Indian Link:


கதை சுருக்கம் :


கிராமத்தில் விஏஓவாக பணிபுரியும் நாயகன், IAS தேர்வில் இரண்டு படிகளை முடித்துவிட்டு, கடைசி படியான நேர்முகத் தேர்வுக்காக காத்துக்கொண்டிருக்கும் வேளையில்,
சந்தர்ப்ப சூழ்நிலையால், யாரென்றே தெரியாத பெண்ணை மணந்து கொள்ள வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.


அவளை மணந்து தன் குடும்பம் வசிக்கும் கிராமத்துக்கு அழைத்து வருகிறான். பிறகு நேர்முகத் தேர்விற்கு
அழைப்பு வர, மனம் முழுக்க மனையாளின் மீது காதல் இருந்தாலும் அதை தெரிவிக்காமலேயே டெல்லி சென்றுவிடுகிறான்.


திரும்பி வந்து பார்க்கையில் நாயகி அவளாகவே வீட்டைவிட்டு வெளியேறி விட்டதாக அவன் குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கிறார்கள் ....


நாயகன் கலெக்டர் பதவியில் அமர்ந்தானா...?


நாயகி ஏன் வீட்டை விட்டு சென்றாள்...


நாயகன் அவளை சந்திக்கும் சூழ்நிலை அமைந்ததா ..?


பல முடிச்சுகளுடன் கூடிய சுவாரசியம் நிறைந்த கதை.


(Based on real incidents)


Link:


அவள் ஒரு மேனகை ( பாகம்-1) Aval Oru Menagai(Part-1) Tamil Edition https://www.amazon.in/dp/B0B9JP2Y6P/ref=cm_sw_r_apan_BGBX1D0HKXZT39EBE0GH


அவள் ஒரு மேனகை ( பாகம்-2) Aval Oru Menagai(Part-2) Tamil Edition https://www.amazon.in/dp/B0B9JQTP9P/ref=cm_sw_r_apan_M8TGVZ8XPVN2Y84FJ3FC


4. மாதவியின் மாயோன்
(STORY ABOUT GEOLOGIST)


கதை சுருக்கம் :


இந்த கதைக்களம் முற்றிலும் புனைவு. கதை மாந்தரும் தான்.
அதே போல் சித்தர்கள், அமானுஷ்யம் , மாயங்கள் போன்ற கற்பனை சூழ் உலகில் வாழப் போகிறீர்கள் .


கதை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் நடைபெறுகிறது. அதாவது இந்த கதையை படிக்கும் பொழுது நீங்கள் அனைவரும் 2015ல் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்...


இந்த வருடத்தை தேர்ந்தெடுத்தற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு.
கதையோட்டத்தில் அறிந்து கொள்ள நேரும்.


நாயகன் பெரும் அரசியல் பின்புலம் கொண்ட குடும்பத்தை சார்ந்தவன். நாயகி, அவனுடைய அத்தை பெண்.


இருவரும் இளம் வயதிலிருந்தே, மானசிகமாக காதலித்து வருகிறார்கள்.
குடும்பப் பகை காரணமாக
மனம் திறக்க தயங்கிய நிலையில்
எதிர்பாராத ஒரு சந்தர்ப்பத்தில் அவர்களது திருமணம் நடந்தேறுகிறது.


அன்னியோன்யமான திருமண வாழ்க்கையில் ஒரு நாள் சரியான காரணத்தை கூறாமல் திடீரென்று நாயகி விவாகரத்து கோருகிறாள்.


விவாகரத்து ஆனபின் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் கழித்து நாயகன் தன் குழந்தையோடு தன் சொந்த ஊரான மாயோன் மங்கலத்திற்கு வருகிறான்.


அந்த ஊர் மாயோன் மங்கலம் பல அதிசயங்களையும், மர்மங்களையும் உள்ளடக்கிய பகுதி. அங்குதான்
எதிர்பாராமல் மீண்டும் நாயகியை சந்திக்கும் சந்தர்ப்பம் அமைகிறது.


நாயகி விவாகரத்துக்கோறியதற்கான உண்மையான காரணத்தை நாயகன் அறிகின்றானா....


அந்த ஊரில் புதைந்து கிடைக்கும் மர்ம்ம தான் என்ன ....


கதையில் தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே....


மாயம், மர்மம், அமானுஷ்யம் ஆச்சரியம் , திரில்லர் சஸ்பென்ஸ் உடன் ஒரு காதல் கதை ...


India link👇


மாதவியின் மாயோன் (Tamil Edition)


https://amzn.in/d/bMsgUm6


5. ஸ்ரீ-ராமம்


ஸ்ரீ-ராமம் புதினம் தற்போது Kindleல் படிக்கலாம் ... கதை திரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது 👇.


ஸ்ரீ-ராமம் (பகுதி -1)


https://amzn.in/d/dGBCfqc


ஸ்ரீ-ராமம் (பகுதி-2)


https://amzn.in/d/5rBYoMY


கதை பற்றி :


ஸ்ரீ-ராமம் இரு ஜோடிகளின் கதை.


பல எதிர்பாராத திருப்பங்களுடன் விறுவிறுப்பான பெரிய கதை ... பெரிய கதைகளை படிக்க விரும்புபவர்கள் நிச்சயம் நம்பி படிக்கலாம் ....


கதையின் முடிவு சற்றும் எதிர்பார்க்காத ஒன்றாக இருக்கும் .... உங்களது மனதை நிச்சயம் கனக்கச் செய்யும் ...


காதல், குடும்பம் , குடும்ப அரசியலை மையமாகக் கொண்ட முற்றிலும் மாறுபட்ட கதை.


இரு வேறு வித்தியாசமான வில்லன்கள் ...


முதல் ஜோடி: ராம்சரண் - ஸ்ரீ லக்ஷ்மி


தாய் தங்கையின் அவதூறு பேச்சைக் கேட்டு மனைவிக்கு விவாகரத்து கொடுக்க விரும்பும் நாயகன் ... பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு உண்மை தெரிந்ததும் மனைவியை தேடி இணையும் நாயகன்


இரண்டாவது ஜோடி : அதிவீர ராம பாண்டியன் - ஸ்ரீ ப்ரியா


குடும்பச் சூழல் மற்றும் எதிர்பாராத
சூழ்நிலை காரணமாக விரும்பி மணந்தவனை பிரிய விரும்பும் நாயகி ...


அத்தகைய அசாதாரணமான சூழ்நிலையிலும், மங்கையின் மீது கொண்ட காதலால் மண வாழ்க்கையை தொடர விரும்பும் நாயகன்...


கதை சற்று பெரியது என்பதால் இரண்டு பாகங்களாக பிரித்து பதிவேற்றியுள்ளேன்.


படித்துவிட்டு உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.


AUDIO LINK:


மேற்கண்ட கதைகளை என் YOUTUBE சேனலில் ஆடியோ வடிவில் கேட்டு மகிழலாம்.


https://youtube.com/@mayuripriyajagannathannovels?si=3FfVoBVlmbA0g8Z3


ப்ரியமுடன்
ப்ரியா ஜெகன்நாதன்
 
Back
Top