Welcome!

By registering with us, you'll be able to discuss, share and private message with other members of our community.

SignUp Now!

We-Time-2

வணக்கம் நட்புகளே, நீங்கள் இந்த தளத்தில் எழுத விரும்பினால் preeyamoorthy@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளுங்கள் or Send Mail

Priya Jagannathan

Admin
Staff member
Joined
Jul 21, 2025
Messages
640
We-Time சிறுகதையின் தொடர்ச்சி....


அடுத்த 15 நிமிடத்திலேயே, ராகவனும் அறைக்கு திரும்ப, தாயுடன் UNO cards விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் தந்தையை கண்டதும், விளையாட அழைக்க, இதுதான் தருணம் என மகனுக்கும் மனைவிக்கும் இடையே அமர்ந்து கொண்டு விளையாடத் தொடங்கியவன், மனையாளைப் பார்த்துக் கொண்டே அவளுக்கு சாதகமான அட்டைகளை போடத் துவங்கினான்.

கணவனின் எண்ணத்தைப் புரிந்து கொண்டு வேண்டுமென்றே , அவள் வேறு அட்டைகளை தேர்வு செய்ய, மகனும் மகளும் தந்தையின் தந்திரத்தை கண்டுபிடித்து விவாதிக்க, அவனும் விடாமல் சிரித்தபடி சமாளிக்க, ஒரு வழியாக சட்டமன்ற அமளி துமிளி போல் விவாதங்கள் தொடங்கி , கடைசியில் விளையாட்டு முற்று பெற்று போனது.

பிறகு களைப்பின் காரணமாக , குழந்தைகள் தங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட அறைக்கு உறங்க சென்றுவிட, தன் மடிக்கணினியை எடுத்துக்கொண்டு பால்கனியை நோக்கி மைதிலி செல்ல எத்தனிக்கும் போது ,

" மைத்தி, வா ... ஒரு வாக் போயிட்டு வரலாம் ..." என்றான், அவளது வாடிய முகத்தைப் பார்த்தபடி.

" எனக்கு நிறைய எழுத்து வேலை இருக்கு ...."

" நான் எழுதி தரேன் டி..."

" ஆமா.... எழுதிட்ட்ட்டாலும் ..." அவள் வெகு சன்னமாக சொல்ல ...

" மைத்தி.... ப்ளீஸ் வா .. ரொம்ப அடம் பிடிச்ச .. தூக்கிட்டு போயிடுவேன் ..."

" நான் ஒன்னும் முன்ன மாதிரி இல்ல ... இப்ப குண்டு ஆயிட்டேன் ... உங்களால என்னை தூங்க முடியாது ..."

" தூக்க முடியலன்னா ... என்ன ... உருட்டிக்கிட்டே போனா போகுது ..."

மென் புன்னையோடு, சொல்லிக்கொண்டே , நின்று கொண்டிருந்தவளை அவன் அலேக்காக தூக்கியபடி வாயிற் கதவை திறந்து கொண்டு வெளியேற, அவர்களது அறைக்கு எதிரில் அமைந்திருந்த நீச்சல் குளத்தில் இரவு குளியலில் இளைப்பாறி கொண்டிருந்தவர்களின் பார்வை, அவர்களின் மீது சுவாரசியமாய் படிந்ததும், வெடுக்கென்று
அவனது கரத்தை விட்டு இறங்கியவள், வேகமாக முன்னோக்கி நடக்க, அவளை இரண்டே அடியில் நெருங்கி, அவள் தோள் மீது கை போட்டு தன்னோடு இறுக்கியபடி நடக்கத் தொடங்கினான் ராகவன்.

அந்தப் பிரமாண்ட விடுதியின் முன்பக்கத்தில் அமைந்திருந்த பரந்து விரிந்த தோட்டத்தை அப்படியே இருவரும் அமைதியாக கடக்க, விடுதியின் முதன்மை வாயிலுக்கு அருகில் நின்று கொண்டிருந்த பாதுகாப்பு காவலர், அவர்களை பார்த்து மரியாதை நிமித்தமாக தலை அசைக்க, அதுதான் தருணம் என கணவனின் கைச்சிறையில் இருந்து விலகி நடந்து வேகமாக விடுதியை விட்டு வெளியேறினாள்.

கோவாவின் தலைநகரமான பன்ஜிம் நகரம், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை முன்னிட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது.

நகரத்தின் மையத்தில் அழகாக தவழ்ந்தோடிய மாண்டவி ஆற்றில் கண்களைக் கவரும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சிறிதும் பெரிதுமான சகல வசதிகளையும் கொண்ட நவீன ரக சுற்றுலா கப்பல்கள் பாட்டும் நடனமுமாய் சுற்றுலா பயணிகளை நிரப்பிக் கொண்டு, மயில் இறகு போல் மெல்ல மிதந்து செல்ல, அதனைச் சுற்றி அமைந்திருந்த நடைபாதையில் பகலா இரவா என பிரித்தறிய முடியாத அளவிற்கு, உலகில் ஏதேதோ மூலையிலிருந்து வந்த மக்கள் கூட்டம் , குதூகல மனப்பான்மையோடு மகிழ்ச்சியாக உலா வர, அதனை எல்லாம் பார்த்தபடி விடுதியை ஒட்டி அமைந்திருந்த நடைமேடையில் மெல்ல நடக்க ஆரம்பித்தாள் மைதிலி.

முதலில் சிறு மணித்துளிகள் , மனையாளை பின் தொடர்ந்தவன் , பிறகு வேகமாய் முந்தி நடந்து, அவளை வழி மறைத்து நின்றான்.

கணவனின் முகத்தை பார்க்க விரும்பாமல், அவள் திரும்ப முயல,

" மைத்தி ... என்ன ஆச்சு டி ..." என்றபடி அவளது கரத்தைப் பற்றி அவன் வேகமாக இழுத்ததும் , வேரறுந்த கொடியாய் அவன் மீதே விழுந்து பற்றுகோளாய், சட்டையைப் பற்றிய படி, அவன் மார்பில் முகம் புதைத்து கொண்டு குலுங்கிய அழ ஆரம்பித்தாள்.

ஆறு மாத பிரிவு அழுகையாய் வெளியேறும் வரை, அவளைப் பாந்தமாய் அணைத்தபடி அமைதி காத்தான்.

ஓரிரு கணங்களுக்குப் பிறகு அவளது அழுகை, விம்மலாய் குறைந்ததும்,

" இப்ப சொல்லு ... உன் மனசுல அப்படி என்ன தான் டி இருக்கு ..." என்றான் வாஞ்சையாய்.

1000708317.jpg

" I'm missing my man..."

உதடுகள் துடிக்கச் சொல்லிவிட்டு, அவள் மீண்டும் உடைந்து அழ,

" நான் ரஷ்யாவுக்கு போனதிலிருந்து உன்னோட சரியாவே பேசல... உன்னை கண்டுக்கவே இல்லனு நினைக்கிற.. அதானே ..."

அவள் தன் மௌனத்தால் சம்மதத்தை தர,
அவளை தன்னிடமிருந்து மெல்ல பிரித்தெடுத்தவன்,

" நீங்க தான் டீச்சரம்மாவாச்சே... இந்நேரம் அதை அனலைஸ் பண்ணி ஏதாவது கன்குளுடு பண்ணியிருப்பீங்களே ... அது என்னன்னு தெரிஞ்சுக்கலாமா ..." என்றான் குறு நகையோடு.

"நிச்சயமா உங்களுக்கு இல்லீகல் அஃபேர் இருக்குன்னு சொல்லவே மாட்டேன் ...."

அதனைக் கேட்டு வாய்விட்டே சிரித்தவன் ,

" அது தான் பெரும் பிரச்சனையே ... அதுவே இல்லன்னு முடிவு பண்ணிட்ட .... பின்ன வேற என்ன டி பிரச்சனை ..."

" ஃபர்ஸ்ட், எனக்கே தெரியாம, நான் உங்களை ஏதாவது ஹர்ட் பண்ணிட்டேனோ... அதனால தான் என்னை அவாய்டு பண்றீங்களோனு நெனச்சேன் ...
ஆனா ஊருக்கு போறதுக்கு முன்னாடி, நம்ம ரெண்டு பேருக்குள்ள ஒரு சின்ன சண்டை கூட வரலையே ... பின்ன எப்படினு யோசிச்சேன் ...

செகண்ட் , அங்க போனதுக்கு அப்புறம் உங்களுக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு போல ... எங்க என்கிட்ட பேசினா அதை நான் கண்டுபிடிச்சிடுவேனோனு நெனச்சு, அவாய்டு பண்றிங்களோனு நினைச்சேன் .."


" நீ சரியாகாத லூசு டி ... நீ என்னை ஹர்ட் பண்ணி இருந்தா ஒரு நாள் இல்ல ரெண்டு நாள் வேணா பேசாம இருப்பேனே ஒழிய, ஆறு மாசம் எல்லாம் என்னால உன்னை அவாய்ட் பண்ணவே முடியாது .. அது கூடவா உனக்கு தெரியாது .... அதே மாதிரி எனக்கு தலைவலின்னா கூட உனக்கு தெரியாம ஒரு மாத்திரை கூட போட்டுக்க மாட்டேனே ...ஏதாவது ஹெல்த் இஷ்யூனா உன்கிட்ட சொல்லாம இருப்பேனா ...."

" அப்ப வேறு என்ன தான் பிரச்சனை ... ப்ராஜக்ட்ல ஏதாவது பிரச்சனையா ..."

" அம்மா தாயே ... இப்ப தான் உனக்கு இந்த பிரச்சனையே ஞாபகத்துக்கு வருதா ... ..."

" அப்ப ப்ராஜெக்ட்ல தான் பிரச்சனையா ..."
அவள் மீண்டும் அழுத்தமாகவும் ஆச்சரியமாகவும் கேட்க,

"ஆமா ..."

" என்னை அவாய்ட் பண்ற அளவுக்கு, அப்படி ப்ராஜெக்ட்ல என்ன தான் பிரச்சனை ..."

" நம்ம கண்ட்ரி இந்தியா-ரஷ்யா கம்யூனிகேஷன் அண்ட் கொலாபரேஷன்காக மட்டும் ஒரு ஜீரோ டிஜிட்டல் புட் பிரிண்ட் ஆப்ப(zero digital footprint app) பிரிப்பேர் பண்ணனும் அவுட்சோர்சிங் பண்ணி இருந்தாங்க ... இது கவர்மெண்ட் ப்ராஜெக்ட்ங்கிறதால நிறைய கம்பெனிஸ் போட்டி போட்டாங்க ... ஆனா கடைசில இந்த ப்ராஜெக்ட் எங்க கம்பெனிக்கு தான் கிடைச்சது....

அது ஹைலி கான்ஃபிடென்ஷியல் அண்ட் இன்டர்நேஷனல் செக்யூரிட்டி பேஸ்ட்(based) ப்ராஜெக்ட்ங்கிறதால இதுல வொர்க் பண்றதுக்கு , ரொம்ப லாயல் அண்ட் எபிஷியன்ட் பர்சன்ஸ மட்டும் ஹேன்ட் பிக் பண்ணி டீன் ஃபார்ம் பண்ணாங்க ....

என்னோட போர்ட்ஃபோலியோ அண்ட் ப்ரொஃபைல், அவங்க ரெக்குயர்மென்ட்க்கு மேட்ச் ஆனதோட , எனக்கு எக்ஸ்பீரியன்சும் இருந்ததால எனக்கு அந்த டீமை லீட் பண்ற ஆப்பர்சுனிட்டி கிடைச்சது ...

இது இந்தோ- ரஷ்யா செக்யூரிட்டி பேஸ்ட் ப்ராஜெக்ட், அதோட ஜீரோ டிஜிட்டல் புட் பிரிண்ட் ஆப்ங்கிறதால , மூணு மாசங்கிறது ஆறு மாசம் கூட ஆகலாம்னு தோணுச்சு ... உன் கிட்ட சொன்னா, ரொம்ப வருத்தப்படுவ .... இந்த ப்ராஜெக்ட்டே வேணாம்னு கூட சொல்லிடுவங்கிறதால தான், இந்த ஆப்பர்சுனிட்டிய மிஸ் பண்ண மனசு இல்லாம, உன்கிட்ட எதுவுமே சொல்லாம கிளம்பிட்டேன் ...

ஆனா அங்க போனதும் தான், ப்ராஜெக்டோட டியூரேஷனை விட, புதுசு புதுசா நிறைய பிரச்சனைகளை ஃபேஸ் பண்ண வேண்டிய நிலைமை வர ஆரம்பிச்சது ...


ரஷ்யா-உக்கரைன் வார்ல அமெரிக்கா உக்ரைன சப்போர்ட் பண்ணத மனசுல வச்சுக்கிட்டு ரஷ்யா, இந்தியா கூட மட்டும் டிபன்ஸ் , ட்ரேட் , டெக்னாலஜினு எல்லா விஷயத்திலயும் கொலாபிரேட் ஆகணும் அதே சமயத்துல, அவங்களுக்குள்ள நடக்கிற எந்த கம்யூனிகேஷனையும் மத்த நாடுகள் , குறிப்பா அமெரிக்கா ட்ரேஸ் பண்ணிட கூடாதுன்னு தான் இந்த ஜீரோ டிஜிட்டல் ஃபுட் பிரிண்ட் பிளாட்பார்ம இந்த ப்ராஜெக்ட்டுக்காக பிளான் பண்ணி இருந்தாங்க...

அதுக்காக இந்தியால இருந்து போன எங்க 10 பேரோட, அவங்களோட இருவது பேரையும் சேர்த்து, புதுசா ஒரு ஹைலி கான்ஃபிடென்ஷியல் கொலாபிரேட்டட் லீடிங் டீம ஃபாம் பண்ணாங்க ...

முதல் ரெண்டு நாள், ஒர்க் லோட் ஹெவியா இருந்தது ... நிக்க கூட நேரம் இல்லாம ஹெக்டிக் ஸ்கெடியூல்...

எப்பவும் இருக்குறது தானேனு , நாங்க வேலையை பார்க்க ஆரம்பிச்சிட்டோம் ..

மூணாம் நாள்ல இருந்து தான் கெடுபிடிகள் அதிகம் ஆச்சு .... எங்களுக்கான செக்யூரிட்டி டைட்டன் பண்ணி இருக்கிறதா, அபிஷியல் மெயில் வந்தது.

ஏன் இப்படி திடீர்னு ஒரு அனௌன்ஸ்மென்ட்னு விசாரிக்கும் போது தான்,
எப்போதையும் விட CIA ( அமெரிக்கன் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி) ரஷ்யாவோட மூமென்ட்ட தீவிரமா கவனிக்க ஆரம்பிச்சிருக்காங்கனு நியூஸ் கிடைச்சது ...

அதிலிருந்து நாங்க எல்லாரும் on the radarல வந்துட்டோம் ... மூணு நிமிஷத்துக்கு மேல ஃபோன்ல பேசக்கூடாது ... எங்களோட பர்சனல் மெயில் கம்யூனிகேஷன் முதற்கொண்டு எல்லாமே அண்டர் சர்வே லென்ஸல வந்துடுச்சு ... நாங்க ஸ்டே பண்ணி இருக்கிற இடத்தை கூட எந்த வகைலயும் யாருக்கும் தெரிய படுத்த கூடாதுனு அபிஷியல் நோட்டிபிகேஷன் அனுப்பிட்டாங்க ...

சேஃப்டி மேஷர்ஸ்காக அந்த ப்ராஜெக்ட்ல ஒர்க் பண்ணின கிட்டத்தட்ட 100 பேருமே, அலர்ட்ல தான் இருந்தோம் ....

வீக் எண்டு ஷாப்பிங்ல, கிரோசரீஸ தாண்டி மத்த எல்லாத்தையும் அவாய்ட் பண்ண சொல்லிட்டாங்க ..."

" ஆமா, ஏன் திடீர்னு CIA ரஷ்யாவோட மூவ்மென்ட்ட அதிகமா, கண்காணிக்க ஆரம்பிச்சாங்க ..." அவள் தீவிரமாய் கேட்க

"உக்கரைன் வார்க்கு அப்புறம், இந்தியா ரஷ்யா கூட ஆயில் ட்ரெடுல ஸ்ட்ராங்கா கமிட் ஆகிடுச்சு .... அது அமெரிக்காவுக்கு பிடிக்கல .... என்ன பண்ணா அந்த பாண்ட உடைக்கலாம்னு தீவிரமா
இந்தியாவையும் ரஷ்யாவையும் கண்காணிக்க ஆரம்பிச்சு ஏதாவது சின்ன விஷயம் கிடைச்சா கூட அது மூலமா புதுசு புதுசா குடைச்சல் கொடுக்க ஆரம்பிச்சது ... அந்த சிச்சுவேஷன்ல எங்களோட பிளாட்பார்ம் டெவெலப்மென்ட் வேற அவங்க கண்ண உறுத்த, ஏதாவது செஞ்சு அதை தடுக்கணும்னு அவங்க என்னென்னமோ செய்ய , கடைசில அதோட சைட் எஃபக்ட்ஸ நாங்க வேற மாதிரி அனுபவிக்க வேண்டியதாயிடுச்சு ...

இப்படி பட்ட கிரிட்டிக்கல் சிச்சுவேஷன்ல இருந்ததால தான், என்னால உனக்கு கால் பண்ணவும் முடியல .... நீயே பேசினாலும், ரெண்டு நிமிஷத்துக்கு மேல பேசவும் முடியல ....

சர்வேலென்ஸ்ல இருக்கிறதால நாம பேசிறது ரெக்கார்ட் ஆகறதோட, அதை லெட்டர் பை லெட்டரா டிகோட் பண்ணி அனலைஸ் பண்ணுவாங்க ...

அதனால தான் ஜஸ்ட் நீயும் குழந்தைகளும் எப்படி இருக்கீங்கன்னு என்கொயர் பண்ணிட்டு விட்டுட்டேன் ...

இன்னொரு விஷயத்தை கவனிச்சியா ... இன்னைக்கு நடந்த அவார்டு ஃபங்ஷன்ல கூட செக்யூரிட்டி ரிசன்ஸ்காக மொபைல் ரெஸ்ட்ரிக்ஷன்னு அனவுன்ஸ் பண்ணி இருந்தாங்களே பாத்தியா ..."


" ஆமா ... ஏன் அப்படி ..."

" ரஷ்யன் கொலாபிரேட்டட் டீமையும் இன்வைட் பண்ணி இருந்ததால அப்படி அனவுன்ஸ் பண்ணி இருந்தாங்க ..."

" அப்போ இன்னைக்கு எடுத்த போட்டோஸ் கிடைக்காதா ??? ..."

" எவ்ளோ பெரிய விஷயத்தை பத்தி பேசிக்கிட்டு இருக்கேன் ... நீ போட்டோஸ் பத்தி கேட்டுகிட்டு இருக்க ..."

" உங்க பிரச்சனை உங்களுக்கு ... என் பிரச்சனை எனக்கு ..."

" வேணும்னா கேட்டா எடிட் பண்ணி கொடுப்பாங்கடி .... என் பட்டு குட்டி ..."

என சிரித்துக் கொண்டே, அவன் அவளை அணைத்துக் கொள்ள, அதிலிருந்து திமிரியவள்,

" அப்ப நீங்க என் கூட பேசாம இருந்ததுக்கு அமெரிக்கா தான் காரணமா ...." என்றாள் குறுகுறு பார்வையில்.

" ம்ம்ம்.... ஆப்பிரிக்கா காரணம் .... ஏண்டி ஒரு மணி நேரமா ரஷ்யா உக்ரைன் வார பத்தி எல்லாம் பாடம் எடுத்துக்கிட்டு இருக்கேன் ... உனக்கு புரியலையா ..."

" அதெல்லாம் புரிஞ்சது ... நான் இவ்ளோ பிரச்சனைல இருக்கேன்னு உங்களுக்கு தெரிஞ்சும் வந்ததுமே இதை எல்லாம் ஏன் சொல்லல ...." அவளது கண்கள் குளம் கட்ட, குரல் லேசாக கமர,

ஒரு கணம் பௌர்ணமி ஒளி வெள்ளத்தில் அவளது முகத்தையே ஆழ்ந்து பார்த்தவன்,

" சுத்தி பாரு.... இவ்ளோ அழகான இடத்துல, அருமையான நேரத்துல, நீயும் நானும் மட்டும் இப்படி க்ளோசா நின்னுகிட்டு , நீ சரியா பேசாததால ஆறு மாசம் ரொம்ப கஷ்டப்பட்டு போயிட்டேன் ... im missing my manனு அழுதுகிட்டே , அதுவும் என்னை இறுக்கி அணைச்சிகிட்டே நீ சொன்ன பாத்தியா ... அந்த சந்தோஷத்தை எல்லாம் அனுபவிக்காம, எவனாவது கிச்சன்லயோ ஹால்லயோ, ரெண்டே வரில விஷயத்தை சொல்லி முடிக்க பார்ப்பானா ...

My wife is addicted to meனு எக்ஸ்பிரஸ் ஆகுற எந்த ஒரு சிச்சுவேஷனையும் எந்த ஒரு ஹஸ்பண்டுமே மிஸ் பண்ண விரும்ப மாட்டான் ... அதுக்காகத்தான் நமக்கே நமக்கான இந்த We-Timeகாக காத்துகிட்டு இருந்தேன் டி .... "

அவன் அவளது தோள்களை பற்றி, விழிகளை பார்த்து சொல்ல,
அவள் லேசாக முறைத்துப் பார்க்க, உடனே

"Of course , I'm also addicted to you... அதுக்கு தான் கிட்டத்தட்ட 36 அவர்ஸா காத்துக்கிட்டு இருக்கேன் .... " என அவன் மென் புன்னகை பூக்க, அவள் தன் பொய் கோபத்தை விட்டுக் கொடுக்காமல்,

" சரி ... என்னோட We-Time Wishlistல என்ன என்னெல்லாம் இருக்குன்னு சொல்லுங்க பார்ப்போம் ..." என்றாள் வீராப்பாய்.

" அதுல நான் மட்டும் தான் டி இருப்பேன்... வேற எதுவுமே இருக்காது ... எத்தனை தடவை எக்ஸ்பீரியன்ஸ் பண்ணி இருக்கேன் .... ஷாப்பிங் போலாம்னு கூப்பிடுவ .... மால்ல ஷாப்பிங் போலாமானு கேட்டா , வேணாம்னு சொல்லுவ ... ஜஸ்ட் ரோடு ஷாப்பிங்னு கூட்டிக்கிட்டு போவ, என் கைய புடிச்சுகிட்டு , ஏதேதோ கதை பேசிகிட்டு, ஐஸ்கிரீம் சாப்பிட்டுக்கிட்டே நடப்ப ... கடைசில கால் கிலோ தக்காளி அரை கிலோ கத்திரிக்கா வாங்கிட்டு வீட்டுக்கு போலாம்னு சொல்லுவ ...

உனக்கு என் கூடவே இருக்கணும்... என்னோட டீ சாப்பிடணும் ... சாப்பாடு சாப்பிடணும் ... கோயிலுக்கு போகனும்... இல்ல எங்கேயாச்சும் லாங் டிரைவ்வாது போகணும் ... இவ்ளோ தான் உன்னோட மேக்ஸிமம்
விஷ் லிஸ்டே... உன்னோட We-Time wishlistக்கு பணம் தேவையில்ல... டைம் தான் தேவை ... அதுக்காக தான் கஷ்டப்பட்டு அவார்டு ஃபங்ஷன்னோட லாங் வீக் எண்டு இருக்கிற இந்த வாரத்துல இந்த ட்ரிப்பா அரேஞ்ச் பண்ணேன் ... ஒரு வாரம், நோ ஆபீஸ், நோ ஃபோன் கால்ஸ், நோ ஸ்கூல், நோ கிச்சன் , ஜஸ்ட் நார்த் கோவா , சவுத் கோவானு ஒரு இடம் விடாம சந்தோஷமா சுத்த போறோம்.. போதுமா ..."

கலகலப்பாக அவன் சொல்ல,
அவள் நிறைவாய் பார்க்க, அதனை ரசித்தபடி நெருங்கியவன் அவளது இடைப்பற்றி இழுத்து இதழ் நோக்கி குனிய ,

" ஐயோ... இது ரோடு ..... " அவள் லேசான வெட்கத்தோடு விலக முயல,

" பாரு... இங்க யாருமே நம்மள பார்க்கல ... நாமளும் யாரையும் பார்க்க வேணாம்.."

" ஆனா எனக்கு ஒரு மாதிரி இருக்கு ..."

" அத பத்தி எனக்கு கவலை இல்லை ... இதெல்லாம் என்னோட We- Time
Wish listல இருக்கு .... இதுக்கு மேலயும் இருக்குது ... Lets start now..." என அவன் நெருங்க, அவள் விலகி ஓட, மிகுந்த குதூகலத்தோடு ஒரே பாய்ச்சலில் அவளது இடைப்பற்றி தூக்கியவன் , அவளது பின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டு முன்னேற .....................

அவர்களுக்கான We-Time தொடங்கிவிட்டது ....


எதையெதையோ தேடி அலைய வேண்டாம்...
எத்துணை ஆண்டு காலம் ஆனாலும் உண்மையான காதலை தேடுங்கள் ....
அது உலகையே உங்களது கையில் கொண்டு வந்து கொடுத்து விடும் ...


ப்ரியங்களுடன்
ப்ரியா ஜெகன்நாதன்



வணக்கம் நட்புகளே,

" இன்று தான் பெண்மைக் கொண்டேன் " புதினத்தின்
அடுத்த அடுத்த பதிவுகள் நாளை இரவு எதிர்பார்க்கலாம்.


ப்ரியா ஜெகன்நாதன்
 
Back
Top